<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

எ - முதல் சொற்கள்
எங்கட்கு 1
எங்கள் 4
எங்கும் 1
எங்குமாய் 1
எங்குமே 1
எங்கே 1
எங்ஙனே 1
எட்டாத 1
எட்டாமல் 1
எட்டு 1
எட்டும் 1
எண்ணம் 1
எண்ணாத 1
எண்ணிய 2
எண்ணில் 1
எண்ணிலர் 1
எண்ணிறந்த 1
எண்ணுதற்கு 1
எந்தன் 1
எந்தை 1
எந்தை-தன் 1
எந்நாளும் 1
எப்போதும் 3
எம் 2
எம்பிராட்டி 1
எம்பிரான் 1
எம்பெருமாட்டி-தன் 1
எம்பெருமாட்டியை 1
எமக்கு 1
எமக்கென்று 1
எமையும் 1
எய்தார் 1
எய்தியவா 1
எய்துமோ 1
எய்துவரோ 1
எரி 1
எரிய 1
எல்லாம் 13
எவரும் 2
எழ 1
எழு 1
எழுதரிய 1
எழுதா 1
எழுதிவைத்தேன் 1
எழுந்த 1
எளிதாம் 1
என் 28
என்-கண் 2
என்கை 1
என்தன் 3
என்பது 1
என்பவர்க்கே 1
என்பன் 1
என்பாய் 2
என்றால் 1
என்று 11
என்றும் 4
என்றே 1
என்ன 4
என்னும் 2
என்னே 1
என்னை 4
என 3
எனக்கு 3
எனக்கே 1
எனது 1
எனினும் 1
எனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    எங்கட்கு (1)
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் - அபிராமி-அந்தாதி: 35/2

 TOP
 
    எங்கள் (4)
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை - அபிராமி-அந்தாதி: 38/2
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - அபிராமி-அந்தாதி: 44/1
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி - அபிராமி-அந்தாதி: 84/3
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 101/1

 TOP
 
    எங்கும் (1)
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை - அபிராமி-அந்தாதி: 55/3

 TOP
 
    எங்குமாய் (1)
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
  நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே - அபிராமி-அந்தாதி: 56/1,2

 TOP
 
    எங்குமே (1)
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    எங்கே (1)
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே
  மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 98/2,3

 TOP
 
    எங்ஙனே (1)
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - அபிராமி-அந்தாதி: 82/4

 TOP
 
    எட்டாத (1)
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் - அபிராமி-அந்தாதி: 87/1

 TOP
 
    எட்டாமல் (1)
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் - அபிராமி-அந்தாதி: 47/3

 TOP
 
    எட்டு (1)
பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு
  திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே - அபிராமி-அந்தாதி: 37/3,4

 TOP
 
    எட்டும் (1)
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் - அபிராமி-அந்தாதி: 47/3

 TOP
 
    எண்ணம் (1)
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே - அபிராமி-அந்தாதி: 40/4

 TOP
 
    எண்ணாத (1)
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - அபிராமி-அந்தாதி: 3/3

 TOP
 
    எண்ணிய (2)
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 40/2
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே - அபிராமி-அந்தாதி: 40/4

 TOP
 
    எண்ணில் (1)
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா - அபிராமி-அந்தாதி: 16/2

 TOP
 
    எண்ணிலர் (1)
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே - அபிராமி-அந்தாதி: 97/4

 TOP
 
    எண்ணிறந்த (1)
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் - அபிராமி-அந்தாதி: 35/2

 TOP
 
    எண்ணுதற்கு (1)
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு
  சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - அபிராமி-அந்தாதி: 31/2,3

 TOP
 
    எந்தன் (1)
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ - அபிராமி-அந்தாதி: 20/3

 TOP
 
    எந்தை (1)
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் - அபிராமி-அந்தாதி: 8/1

 TOP
 
    எந்தை-தன் (1)
கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின் - அபிராமி-அந்தாதி: 9/1

 TOP
 
    எந்நாளும் (1)
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - அபிராமி-அந்தாதி: 4/4

 TOP
 
    எப்போதும் (3)
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி:/3
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே - அபிராமி-அந்தாதி: 62/4
உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே - அபிராமி-அந்தாதி: 100/4

 TOP
 
    எம் (2)
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/4
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக - அபிராமி-அந்தாதி: 79/3

 TOP
 
    எம்பிராட்டி (1)
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே - அபிராமி-அந்தாதி: 14/4

 TOP
 
    எம்பிரான் (1)
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே - அபிராமி-அந்தாதி: 11/4

 TOP
 
    எம்பெருமாட்டி-தன் (1)
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே - அபிராமி-அந்தாதி: 70/4

 TOP
 
    எம்பெருமாட்டியை (1)
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 40/2

 TOP
 
    எமக்கு (1)
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க - அபிராமி-அந்தாதி: 79/2

 TOP
 
    எமக்கென்று (1)
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த - அபிராமி-அந்தாதி: 73/2

 TOP
 
    எமையும் (1)
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு - அபிராமி-அந்தாதி: 31/2

 TOP
 
    எய்தார் (1)
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அபிராமி-அந்தாதி: 51/4

 TOP
 
    எய்தியவா (1)
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் - அபிராமி-அந்தாதி: 35/2

 TOP
 
    எய்துமோ (1)
இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் - அபிராமி-அந்தாதி: 35/3

 TOP
 
    எய்துவரோ (1)
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
  குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - அபிராமி-அந்தாதி: 48/3,4

 TOP
 
    எரி (1)
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே - அபிராமி-அந்தாதி: 43/4

 TOP
 
    எரிய (1)
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் - அபிராமி-அந்தாதி: 88/3

 TOP
 
    எல்லாம் (13)
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம்
  வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் - அபிராமி-அந்தாதி: 8/1,2
அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
  துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி - அபிராமி-அந்தாதி: 17/1,2
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் - அபிராமி-அந்தாதி: 27/3
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
  குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே - அபிராமி-அந்தாதி: 33/2,3
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
  உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால் - அபிராமி-அந்தாதி: 57/1,2
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே - அபிராமி-அந்தாதி: 69/3
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து - அபிராமி-அந்தாதி: 76/1
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
  தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் - அபிராமி-அந்தாதி: 85/2,3
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
  பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - அபிராமி-அந்தாதி: 87/3,4
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - அபிராமி-அந்தாதி: 93/1
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
  தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி: 94/3,4
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
  அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண - அபிராமி-அந்தாதி: 95/2,3
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
  பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க - அபிராமி-அந்தாதி: 101/1,2

 TOP
 
    எவரும் (2)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு - அபிராமி-அந்தாதி: 3/1
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
  பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் - அபிராமி-அந்தாதி: 83/2,3

 TOP
 
    எழ (1)
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே - அபிராமி-அந்தாதி: 91/4

 TOP
 
    எழு (1)
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே - அபிராமி-அந்தாதி: 96/4

 TOP
 
    எழுதரிய (1)
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
  சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் - அபிராமி-அந்தாதி: 96/2,3

 TOP
 
    எழுதா (1)
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் - அபிராமி-அந்தாதி: 10/2

 TOP
 
    எழுதிவைத்தேன் (1)
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - அபிராமி-அந்தாதி: 78/4

 TOP
 
    எழுந்த (1)
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
  புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே - அபிராமி-அந்தாதி: 29/3,4

 TOP
 
    எளிதாம் (1)
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே - அபிராமி-அந்தாதி: 14/4

 TOP
 
    என் (28)
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி:/3
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - அபிராமி-அந்தாதி: 4/4
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே - அபிராமி-அந்தாதி: 5/4
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் - அபிராமி-அந்தாதி: 7/1
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் - அபிராமி-அந்தாதி: 8/1
கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே - அபிராமி-அந்தாதி: 8/4
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் - அபிராமி-அந்தாதி: 11/1
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே - அபிராமி-அந்தாதி: 12/4
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே - அபிராமி-அந்தாதி: 18/4
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் - அபிராமி-அந்தாதி: 19/1
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே - அபிராமி-அந்தாதி: 23/4
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என்
  நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே - அபிராமி-அந்தாதி: 26/3,4
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் - அபிராமி-அந்தாதி: 30/2
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - அபிராமி-அந்தாதி: 30/4
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே - அபிராமி-அந்தாதி: 32/4
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து - அபிராமி-அந்தாதி: 36/2
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் - அபிராமி-அந்தாதி: 39/3
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே - அபிராமி-அந்தாதி: 56/4
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் - அபிராமி-அந்தாதி: 58/1
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே - அபிராமி-அந்தாதி: 62/4
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - அபிராமி-அந்தாதி: 71/4
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் - அபிராமி-அந்தாதி: 72/1
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - அபிராமி-அந்தாதி: 78/4
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 85/2
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் - அபிராமி-அந்தாதி: 86/3
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - அபிராமி-அந்தாதி: 89/4
வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து - அபிராமி-அந்தாதி: 90/1

 TOP
 
    என்-கண் (2)
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 80/2
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/4

 TOP
 
    என்கை (1)
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை
  நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் - அபிராமி-அந்தாதி: 30/1,2

 TOP
 
    என்தன் (3)
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே - அபிராமி-அந்தாதி: 1/4
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே - அபிராமி-அந்தாதி: 56/2
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
  விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை - அபிராமி-அந்தாதி: 87/1,2

 TOP
 
    என்பது (1)
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் - அபிராமி-அந்தாதி: 93/3

 TOP
 
    என்பவர்க்கே (1)
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
  கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - அபிராமி-அந்தாதி: 69/3,4

 TOP
 
    என்பன் (1)
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே - அபிராமி-அந்தாதி: 33/4

 TOP
 
    என்பாய் (2)
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/2
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
  நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி: 49/3,4

 TOP
 
    என்றால் (1)
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி: 94/4

 TOP
 
    என்று (11)
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - அபிராமி-அந்தாதி: 15/1
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே - அபிராமி-அந்தாதி: 27/4
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
  ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - அபிராமி-அந்தாதி: 50/3,4
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 51/1
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே - அபிராமி-அந்தாதி: 59/1
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - அபிராமி-அந்தாதி: 63/4
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் - அபிராமி-அந்தாதி: 74/3
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் - அபிராமி-அந்தாதி: 81/3
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - அபிராமி-அந்தாதி: 88/1
தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் - அபிராமி-அந்தாதி: 88/2
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண - அபிராமி-அந்தாதி: 95/3

 TOP
 
    என்றும் (4)
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே - அபிராமி-அந்தாதி: 6/4
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
  துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே - அபிராமி-அந்தாதி: 7/3,4
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் - அபிராமி-அந்தாதி: 10/2
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - அபிராமி-அந்தாதி: 13/3

 TOP
 
    என்றே (1)
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
  செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - அபிராமி-அந்தாதி: 77/3,4

 TOP
 
    என்ன (4)
துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன
  விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே - அபிராமி-அந்தாதி: 1/3,4
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ - அபிராமி-அந்தாதி: 19/3
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் - அபிராமி-அந்தாதி: 61/3
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே - அபிராமி-அந்தாதி: 79/4

 TOP
 
    என்னும் (2)
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி-அந்தாதி: 25/3
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
  வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட - அபிராமி-அந்தாதி: 32/2,3

 TOP
 
    என்னே (1)
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - அபிராமி-அந்தாதி: 25/4

 TOP
 
    என்னை (4)
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து - அபிராமி-அந்தாதி: 18/3
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை - அபிராமி-அந்தாதி: 30/1
கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை - அபிராமி-அந்தாதி: 80/1
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி - அபிராமி-அந்தாதி: 84/3

 TOP
 
    என (3)
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் - அபிராமி-அந்தாதி: 28/1
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/3
முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் - அபிராமி-அந்தாதி: 65/3

 TOP
 
    எனக்கு (3)
கொடியே இள வஞ்சி கொம்பே எனக்கு வம்பே பழுத்த - அபிராமி-அந்தாதி: 22/1
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு
  பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு - அபிராமி-அந்தாதி: 90/2,3
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் - அபிராமி-அந்தாதி: 95/2

 TOP
 
    எனக்கே (1)
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே
  அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் - அபிராமி-அந்தாதி: 27/2,3

 TOP
 
    எனது (1)
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் - அபிராமி-அந்தாதி: 81/3

 TOP
 
    எனினும் (1)
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
  பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி: 59/3,4

 TOP
 
    எனை (1)
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க - அபிராமி-அந்தாதி: 33/1

 TOP