<<முந்திய பக்கம் சிலப்பதிகாரம், மணிமேகலை -
கூட்டுத் தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூ 5
கூஉம் 2
கூஉய் 13
கூகையின் 1
கூட்ட 1
கூட்டத்தில் 1
கூட்டத்தொடு 1
கூட்டம் 4
கூட்டமும் 1
கூட்டி 2
கூட்டிய 1
கூட்டில் 1
கூட்டுண்டு 2
கூட்டுண்ணும் 1
கூட்டும் 1
கூட 3
கூடம் 1
கூடமும் 1
கூடல் 18
கூடலான் 1
கூடலில் 1
கூடலும் 1
கூடலை 1
கூடவே 1
கூடா 3
கூடாது 3
கூடார் 1
கூடார்-பால் 1
கூடி 19
கூடிய 10
கூடின் 1
கூடினர் 2
கூடினார்-பால் 1
கூடு 3
கூடு-மின் 1
கூடுபு 1
கூடும் 3
கூடேன் 1
கூடை 3
கூடையில் 1
கூடையின் 1
கூடையும் 1
கூத்த 1
கூத்தர் 2
கூத்தரும் 1
கூத்தி 1
கூத்தியர் 4
கூத்தியும் 2
கூத்தின் 1
கூத்தினோடு 1
கூத்து 7
கூத்தும் 2
கூதாளம் 1
கூதாளமும் 1
கூதாளமொடு 1
கூதிர் 1
கூதிர்-காலையும் 1
கூதிர்_பள்ளி 1
கூந்தல் 37
கூந்தலர் 1
கூந்தலில் 1
கூந்தலும் 1
கூந்தலை 3
கூப்பி 1
கூப்பிடும் 1
கூம்பு 1
கூர் 8
கூர்த்து 1
கூர்ந்த 2
கூர்ந்து 3
கூர 6
கூராது 3
கூரின் 1
கூரினும் 3
கூரும் 3
கூல 8
கூலம் 3
கூவல் 1
கூவி 1
கூவியர் 4
கூவும் 1
கூவை 1
கூழின் 3
கூளி 1
கூற்ற 2
கூற்றம் 9
கூற்று 6
கூற்று-கண் 1
கூற 16
கூறப்பட்டன 1
கூறப்படுமே 1
கூறல் 2
கூறலின் 1
கூறலும் 5
கூறார் 2
கூறி 5
கூறிட்டு 2
கூறிய 13
கூறியது 1
கூறில் 1
கூறினர் 1
கூறினன் 2
கூறினும் 1
கூறினை 1
கூறு 5
கூறு_மின் 1
கூறும் 15
கூறும்-காலை 1
கூறுவல் 1
கூறுவன் 1
கூறுழி 1
கூறை 1
கூறையும் 1
கூனி-தன்னொடு 1
கூனும் 5

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
 
    கூ (5)
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு - சிலப்.புகார் 10/235
நிறை அழி யானை நெடும் கூ விளியும் - மணி 7/67
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப - மணி 7/115
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப - மணி 7/116
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு - மணி 13/17

 மேல்
 
    கூஉம் (2)
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
   தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் - மணி 3/110,111
தாய் ஒழி குழவி போல கூஉம்
   துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ - மணி 25/111,112

 மேல்
 
    கூஉய் (13)
கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை - சிலப்.புகார் 0/29
வசந்தமாலையை வருக என கூஉய்
   தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் - சிலப்.புகார் 8/69,70
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய்
   யாது நீ உற்ற இடர் ஈது என் என - சிலப்.மது 15/63,64
ஐயை தன் மகளை கூஉய்
   கடை_கயிறும் மத்தும் கொண்டு - சிலப்.மது 17/8,9
வாயிலாளரின் மாடலன் கூஉய்
   இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் - சிலப்.வஞ்சி 27/158,159
வயந்தமாலையை வருக என கூஉய்
   பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என - மணி 2/8,9
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி - மணி 8/37
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் - மணி 19/98
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய்
   அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் - மணி 22/32,33
வாய் வாள் விஞ்ஞயன் தன்னையும் கூஉய்
   விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என - மணி 22/199,200
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு - மணி 23/37
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய்
   வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் - மணி 23/43,44
கலம் செய் கம்மியர் வருக என கூஉய்
   இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி - மணி 25/124,125

 மேல்
 
    கூகையின் (1)
சாவோர் பயிரும் கூகையின் குரலும் - மணி 6/75

 மேல்
 
    கூட்ட (1)
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு - மணி 27/265

 மேல்
 
    கூட்டத்தில் (1)
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு - மணி 27/212

 மேல்
 
    கூட்டத்தொடு (1)
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை - மணி 30/151

 மேல்
 
    கூட்டம் (4)
கலவை கூட்டம் காண்வர தோன்றி - சிலப்.மது 13/129
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று - மணி 27/261
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே - மணி 29/386
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
   புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி - மணி 30/149,150

 மேல்
 
    கூட்டமும் (1)
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
   ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது - மணி 27/243,244

 மேல்
 
    கூட்டி (2)
கானம் போன கணவனை கூட்டி
   ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து - சிலப்.மது 15/73,74
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள - சிலப்.வஞ்சி 27/10

 மேல்
 
    கூட்டிய (1)
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் - மணி 27/269

 மேல்
 
    கூட்டில் (1)
குமரி கூட்டில் கொழும் பல் உணவு - சிலப்.புகார் 10/123

 மேல்
 
    கூட்டுண்டு (2)
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த - சிலப்.வஞ்சி 25/179
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
   வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த - மணி 7/47,48

 மேல்
 
    கூட்டுண்ணும் (1)
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்
   நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி - சிலப்.மது 12/10,11

 மேல்
 
    கூட்டும் (1)
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என - சிலப்.புகார் 7/225

 மேல்
 
    கூட (3)
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி - சிலப்.மது 22/70
கூட வைக்கும் கொட்பினள் ஆகி - மணி 21/77
இயைந்துரை என்பது எழுத்து பல கூட
   சொல் என தோற்றும் பல நாள் கூடிய - மணி 30/205,206

 மேல்
 
    கூடம் (1)
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே - சிலப்.புகார் 8/29

 மேல்
 
    கூடமும் (1)
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் - மணி 28/66

 மேல்
 
    கூடல் (18)
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய - சிலப்.புகார் 0/35
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்
   ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - சிலப்.மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - சிலப்.மது 14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல்
   பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் - சிலப்.மது 14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட - சிலப்.மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல்
   வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் - சிலப்.மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் - சிலப்.மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட - சிலப்.மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் - சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - சிலப்.மது 16/131
நல் தேரான் கூடல் நகர் - சிலப்.மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் - சிலப்.மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத - சிலப்.மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் - சிலப்.மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் - சிலப்.மது 23/123
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை - சிலப்.வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட - சிலப்.வஞ்சி 30/149

 மேல்
 
    கூடலான் (1)
கூடலான் கூடு ஆயினான் - சிலப்.மது 20/101

 மேல்
 
    கூடலில் (1)
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
   தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் - சிலப்.மது 19/58,59

 மேல்
 
    கூடலும் (1)
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து - சிலப்.புகார் 6/109

 மேல்
 
    கூடலை (1)
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை
   தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - சிலப்.வஞ்சி 24/110,111

 மேல்
 
    கூடவே (1)
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை - சிலப்.வஞ்சி 29/151

 மேல்
 
    கூடா (3)
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் - சிலப்.புகார் 5/182
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் - மணி 27/139
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு - மணி 29/101

 மேல்
 
    கூடாது (3)
கோவலன் ஊட கூடாது ஏகிய - சிலப்.புகார் 8/15
குல_முதல் தேவி கூடாது ஏக - சிலப்.மது 16/136
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் - சிலப்.வஞ்சி 27/60

 மேல்
 
    கூடார் (1)
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த - சிலப்.வஞ்சி 25/179

 மேல்
 
    கூடார்-பால் (1)
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் - சிலப்.புகார் 4/85

 மேல்
 
    கூடி (19)
குன்ற குறவர் ஒருங்குடன் கூடி
   பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் - சிலப்.புகார் 0/3,4
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை - சிலப்.புகார் 3/142
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
   வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து - சிலப்.புகார் 10/19,20
கரும் கை வினைஞரும் களமரும் கூடி
   ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் - சிலப்.புகார் 10/125,126
இரு கையும் கூடி ஒரு வழி குவியா - சிலப்.புகார் 10/203
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி
   நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி - சிலப்.மது 16/7,8
தலைவனை வானோர் தமராரும் கூடி
   பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த - சிலப்.வஞ்சி 24/105,106
வானவர் போற்ற மன்னொடும் கூடி
   வானவர் போற்ற வானகம் பெற்றனள் - சிலப்.வஞ்சி 25/59,60
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
   அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என - சிலப்.வஞ்சி 26/160,161
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி
   தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற - சிலப்.வஞ்சி 28/183,184
தேவந்தியும் உடன் கூடி
   சே_இழையை காண்டும் என்று - சிலப்.வஞ்சி 29/55,56
மாடல மறையோன்-தன்னொடும் கூடி
   தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற - சிலப்.வஞ்சி 30/168,169
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி
   மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணி 3/84,85
தீவதிலகை தன்னொடும் கூடி
   கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் - மணி 11/55,56
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி
   மார்பிடை முந்நூல் வனையா முன்னர் - மணி 13/22,23
மட மயில் பேடையும் தோகையும் கூடி
   இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன - மணி 19/62,63
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடி
   கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை - மணி 19/109,110
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் - மணி 27/115
சீவன் உடம்போடு ஒத்து கூடி
   தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் - மணி 27/195,196

 மேல்
 
    கூடிய (10)
கூடிய நெறியின கொளுத்தும்-காலை - சிலப்.புகார் 3/17
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம் - சிலப்.புகார் 3/138
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய
   மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து - சிலப்.புகார் 4/86,87
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து - சிலப்.மது 14/151
கூனும் குறளும் ஊமும் கூடிய
   குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - சிலப்.மது 20/24,25
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது - சிலப்.வஞ்சி 28/166
எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில் - மணி 6/191
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று - மணி 7/45
தாரை தவ்வை தன்னொடு கூடிய
   வீரை ஆகிய சுதமதி கேளாய் - மணி 7/104,105
சொல் என தோற்றும் பல நாள் கூடிய
   எல்லையை திங்கள் என்று வழங்குதல் - மணி 30/206,207

 மேல்
 
    கூடின் (1)
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் - சிலப்.வஞ்சி 29/152

 மேல்
 
    கூடினர் (2)
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
   அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை - மணி 10/74,75
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
   ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் - மணி 12/18,19

 மேல்
 
    கூடினார்-பால் (1)
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் - சிலப்.புகார் 4/85

 மேல்
 
    கூடு (3)
கூடலான் கூடு ஆயினான் - சிலப்.மது 20/101
கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும் - சிலப்.வஞ்சி 26/129
கூடு இசை குயிலுவ கருவியாளரும் - சிலப்.வஞ்சி 26/142

 மேல்
 
    கூடு-மின் (1)
கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய - சிலப்.புகார் 8/124

 மேல்
 
    கூடுபு (1)
கொலை தலைமகனை கூடுபு நின்றோள் - சிலப்.மது 23/166

 மேல்
 
    கூடும் (3)
குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்
   குறுநர் இட்ட குவளை அம் போதொடு - சிலப்.புகார் 10/85,86
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்
   எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் - சிலப்.புகார் 10/89,90
குலாம் மலை பிறவா கூடும் பலவும் - மணி 27/133

 மேல்
 
    கூடேன் (1)
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே - மணி 22/98

 மேல்
 
    கூடை (3)
கூடை செய்த கை வாரத்து களைதலும் - சிலப்.புகார் 3/20
கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு - சிலப்.புகார் 3/48
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி - சிலப்.புகார் 3/152

 மேல்
 
    கூடையில் (1)
வாரம் செய்த கை கூடையில் களைதலும் - சிலப்.புகார் 3/21

 மேல்
 
    கூடையின் (1)
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே - சிலப்.வஞ்சி 26/69

 மேல்
 
    கூடையும் (1)
காய் பொன் உலையும் கல் இடு கூடையும்
   தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் - சிலப்.மது 15/210,211

 மேல்
 
    கூத்த (1)
கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன் - சிலப்.வஞ்சி 28/77

 மேல்
 
    கூத்தர் (2)
ஆடு கூத்தர் ஆகி எங்கணும் - சிலப்.வஞ்சி 26/228
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி - சிலப்.வஞ்சி 28/165

 மேல்
 
    கூத்தரும் (1)
கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் - சிலப்.வஞ்சி 26/106

 மேல்
 
    கூத்தி (1)
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் - மணி 24/22

 மேல்
 
    கூத்தியர் (4)
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
   பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் - சிலப்.புகார் 5/50,51
ஆடும் கூத்தியர் அணியே போல - மணி 12/51
அனையேன் ஆகி அரங்க கூத்தியர்
   மனை_அகம் புகாஅ மரபினன் என்றே - மணி 18/35,36
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் - மணி 28/47

 மேல்
 
    கூத்தியும் (2)
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் - சிலப்.மது 14/156
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும்
   நால் வேறு வகையின் நய_தகு மரபின் - சிலப்.மது 14/156,157

 மேல்
 
    கூத்தின் (1)
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து - சிலப்.புகார் 3/12

 மேல்
 
    கூத்தினோடு (1)
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் - மணி 19/79

 மேல்
 
    கூத்து (7)
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை - சிலப்.புகார் 3/19
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் - சிலப்.புகார் 3/177
குமரி கோலத்து கூத்து உள்படுமே - சிலப்.மது 12/115
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் - சிலப்.வஞ்சி 26/125
தண்டா களிப்பின் ஆடும் கூத்து
   கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி - மணி 6/126,127
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் - மணி 18/6
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் - மணி 28/47

 மேல்
 
    கூத்தும் (2)
பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து - சிலப்.புகார் 3/13
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் - மணி 2/19

 மேல்
 
    கூதாளம் (1)
சண்பகம் கருவிளை செம் கூதாளம்
   தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை - சிலப்.மது 22/40,41

 மேல்
 
    கூதாளமும் (1)
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும்
   குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் - சிலப்.மது 13/156,157

 மேல்
 
    கூதாளமொடு (1)
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு
   நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து - சிலப்.மது 14/88,89

 மேல்
 
    கூதிர் (1)
கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து - சிலப்.புகார் 4/61

 மேல்
 
    கூதிர்-காலையும் (1)
குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும்
   வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி - சிலப்.மது 14/101,102

 மேல்
 
    கூதிர்_பள்ளி (1)
கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து - சிலப்.புகார் 4/61

 மேல்
 
    கூந்தல் (37)
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை - சிலப்.புகார் 0/50
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் - சிலப்.புகார் 1/62
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் - சிலப்.புகார் 2/65
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று - சிலப்.புகார் 2/80
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப - சிலப்.புகார் 4/56
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல்
   பாண் வாய் வண்டு நோதிறம் பாட - சிலப்.புகார் 4/74,75
ஆர பேரியாற்று மாரி கூந்தல்
   கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை - சிலப்.புகார் 5/2,3
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி - சிலப்.புகார் 6/79
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல்
   கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் - சிலப்.புகார் 8/100,101
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து - சிலப்.புகார் 10/39
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு - சிலப்.புகார் 10/43
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல்
   கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து - சிலப்.மது 11/109,110
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு - சிலப்.மது 12/3
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி - சிலப்.மது 12/23
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி - சிலப்.மது 13/84
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்
   உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - சிலப்.மது 13/167,168
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி - சிலப்.மது 14/87
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த - சிலப்.மது 15/97
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து - சிலப்.மது 15/133
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் - சிலப்.மது 17/107
வால் நரை கூந்தல் மகளிரொடு போத - சிலப்.மது 22/131
வார் ஒலி கூந்தல் நின் மணமகன்-தன்னை - சிலப்.மது 23/173
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என - சிலப்.வஞ்சி 27/216
அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
   முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் - சிலப்.வஞ்சி 28/17,18
பூ விரி கூந்தல் புகார் - சிலப்.வஞ்சி 29/132
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ - சிலப்.வஞ்சி 30/38
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப - மணி 2/51
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் - மணி 4/106
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப - மணி 5/18
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ - மணி 8/36
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா - மணி 10/32
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று - மணி 17/82
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் - மணி 19/89
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் - மணி 20/42
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு - மணி 21/61
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி - மணி 23/2
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணி 26/62

 மேல்
 
    கூந்தலர் (1)
நரை விரைஇய நறும் கூந்தலர்
   உரை விரைஇய பலர் வாழ்த்திட - சிலப்.மது 20/26,27

 மேல்
 
    கூந்தலில் (1)
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
   சூடிய மாலையும் தொல் நிறம் வழாது - மணி 16/31,32

 மேல்
 
    கூந்தலும் (1)
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன - மணி 22/130

 மேல்
 
    கூந்தலை (3)
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி - சிலப்.புகார் 2/84
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை
   வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி - சிலப்.புகார் 6/80,81
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை
   இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி - சிலப்.மது 12/46,47

 மேல்
 
    கூப்பி (1)
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி
   நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து - சிலப்.வஞ்சி 24/7,8

 மேல்
 
    கூப்பிடும் (1)
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
   இடிதரும் உளியமும் இனையாது ஏகு என - சிலப்.மது 13/31,32

 மேல்
 
    கூம்பு (1)
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து - மணி 4/30

 மேல்
 
    கூர் (8)
கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி - சிலப்.புகார் 3/52
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் - சிலப்.புகார் 7/147
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப - சிலப்.மது 14/129
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் - சிலப்.மது 18/43
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் - சிலப்.மது 22/156
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை - சிலப்.வஞ்சி 27/144
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை - மணி 18/163
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து - மணி 29/8

 மேல்
 
    கூர்த்து (1)
முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் - மணி 18/71

 மேல்
 
    கூர்ந்த (2)
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து - மணி 6/208
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர - மணி 12/85

 மேல்
 
    கூர்ந்து (3)
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து
   புறம்பெற வந்த போர் வாள் மறவர் - சிலப்.வஞ்சி 27/41,42
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் - மணி 11/112
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
   துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் - மணி 16/54,55

 மேல்
 
    கூர (6)
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட - சிலப்.புகார் 6/10
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே - சிலப்.புகார் 7/184
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ - சிலப்.புகார் 7/215
மண்ணக மடந்தை வான் துயர் கூர
   காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் - சிலப்.மது 16/215,216
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர
   மண மனை மறுகில் மாதவி ஈன்ற - மணி 15/70,71
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் - மணி 21/41

 மேல்
 
    கூராது (3)
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
   வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது - மணி 14/13,14
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
   ஏடா அழியல் எழுந்து இது கொள்க என - மணி 25/144,145
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது
   பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த - மணி 28/200,201

 மேல்
 
    கூரின் (1)
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை - மணி 7/10

 மேல்
 
    கூரினும் (3)
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது - மணி 14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது - மணி 25/144
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது - மணி 28/200

 மேல்
 
    கூரும் (3)
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி - சிலப்.புகார் 8/85
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து - சிலப்.மது 21/30
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
   மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை - மணி 7/9,10

 மேல்
 
    கூல (8)
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் - சிலப்.புகார் 0/89
கூலம் குவித்த கூல வீதியும் - சிலப்.புகார் 5/23
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் - சிலப்.புகார் 6/132
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப - சிலப்.புகார் 8/73
கூலம் குவித்த கூல வீதியும் - சிலப்.மது 14/211
கூல மறுகும் கொடி தேர் வீதியும் - சிலப்.மது 22/109
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் - மணி 0/96
கூலம் குவைஇய கூல மறுகும் - மணி 28/49

 மேல்
 
    கூலம் (3)
கூலம் குவித்த கூல வீதியும் - சிலப்.புகார் 5/23
கூலம் குவித்த கூல வீதியும் - சிலப்.மது 14/211
கூலம் குவைஇய கூல மறுகும் - மணி 28/49

 மேல்
 
    கூவல் (1)
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த - சிலப்.வஞ்சி 29/74

 மேல்
 
    கூவி (1)
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் - சிலப்.மது 16/150

 மேல்
 
    கூவியர் (4)
காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் - சிலப்.புகார் 5/24
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் - சிலப்.புகார் 6/138
முட்டா கூவியர் மோதக புகையும் - சிலப்.மது 13/123
கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர்
   மை நிண விலைஞர் பாசவர் வாசவர் - மணி 28/32,33

 மேல்
 
    கூவும் (1)
நீள் முக நரியின் தீ விளி கூவும்
   சாவோர் பயிரும் கூகையின் குரலும் - மணி 6/74,75

 மேல்
 
    கூவை (1)
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் - சிலப்.வஞ்சி 25/42

 மேல்
 
    கூழின் (3)
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் - சிலப்.புகார் 10/255
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் - சிலப்.மது 23/211
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் - சிலப்.வஞ்சி 30/210

 மேல்
 
    கூளி (1)
கழல் கண் கூளி கடு நவை பட்டோர் - சிலப்.புகார் 5/125

 மேல்
 
    கூற்ற (2)
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த - சிலப்.மது 16/115
கூற்ற கொண்டி சேனை செல்வது - சிலப்.வஞ்சி 26/162

 மேல்
 
    கூற்றம் (9)
பல் உயிர் பருகும் பகு வாய் கூற்றம்
   ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது - சிலப்.புகார் 5/219,220
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது - சிலப்.புகார் 7/55
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் - சிலப்.புகார் 7/62
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே - சிலப்.புகார் 7/63
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் - சிலப்.புகார் 7/100
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம்
   கள் வாய் நீலம் கையின் ஏந்தி - சிலப்.புகார் 7/100,101
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் - சிலப்.மது 20/94
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம்
   இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய - சிலப்.வஞ்சி 25/164,165
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் - மணி 25/49

 மேல்
 
    கூற்று (6)
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் - சிலப்.புகார் 0/55
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி - சிலப்.மது 11/211
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் - சிலப்.வஞ்சி 27/40
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் - சிலப்.வஞ்சி 28/140
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி - சிலப்.வஞ்சி 30/76
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் - மணி 24/152

 மேல்
 
    கூற்று-கண் (1)
கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை - மணி 1/30

 மேல்
 
    கூற (16)
படையுள்படுவோன் பணி மொழி கூற
   மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் - சிலப்.புகார் 8/13,14
கோசிக மாணி கூற கேட்டே - சிலப்.மது 13/53
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி - சிலப்.மது 15/200
நெடியாது அளி-மின் நீர் என கூற
   இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா - சிலப்.மது 16/21,22
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற
   குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் - சிலப்.மது 16/83,84
அமைக நின் சினம் என ஆசான் கூற
   ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று - சிலப்.வஞ்சி 26/24,25
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற
   தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள - சிலப்.வஞ்சி 28/109,110
காதலன் உற்ற கடும் துயர் கூற
   பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - மணி 2/63,64
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற
   ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் - மணி 19/2,3
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் - மணி 19/156
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து - மணி 21/79
அணி மணி நீள் முடி அரசன் கூற
   மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி - மணி 25/96,97
முதுமொழி கூற முதல்வன் கேட்டு - மணி 25/119
கண்டனர் கூற தையல் நின் கணவன் - மணி 26/24
அற்புத கிளவி அறிந்தோர் கூற
   சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் - மணி 28/145,146
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
   அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை - மணி 29/29,30

 மேல்
 
    கூறப்பட்டன (1)
கூறப்பட்டன இங்கண் அவற்றுள் - மணி 29/328

 மேல்
 
    கூறப்படுமே (1)
குலவிய குற்றம் என கூறப்படுமே
   அவாவே பற்றே பேதைமை என்று இவை - மணி 30/169,170

 மேல்
 
    கூறல் (2)
கொள்ள தகுவது காந்தம் என கூறல்
   எட்டு உள பிரமாண ஆபாசங்கள் - மணி 27/56,57
கருத்து அளவையை மாறாக கூறல்
   அநித்திய கடத்தை நித்தியம் என்றல் - மணி 29/158,159

 மேல்
 
    கூறலின் (1)
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
   வாயிலாளரின் மட_கொடி தான் சென்று - மணி 19/140,141

 மேல்
 
    கூறலும் (5)
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
   உதயகுமரன் உள்ளம் கலங்கி - மணி 19/6,7
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் - மணி 19/145
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து - மணி 20/127
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
   வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் - மணி 22/161,162
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
   இணை வளை நல்லாள் இராசமாதேவி - மணி 24/93,94

 மேல்
 
    கூறார் (2)
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் - சிலப்.புகார் 1/18
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு - சிலப்.புகார் 9/8

 மேல்
 
    கூறி (5)
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி
   அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் - சிலப்.மது 23/115,116
உலறிய நாவினள் உயர் மொழி கூறி
   தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் - சிலப்.வஞ்சி 30/44,45
குறிக்கோள் கூறி போயினன் வாரான் - சிலப்.வஞ்சி 30/91
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் - மணி 7/34
கொண்ட விரதம் தன்னுள் கூறி
   வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி - மணி 22/110,111

 மேல்
 
    கூறிட்டு (2)
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் - மணி 30/236
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் - மணி 30/243

 மேல்
 
    கூறிய (13)
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் - சிலப்.புகார் 3/9
கூறிய ஐந்தின் கொள்கை போல - சிலப்.புகார் 3/155
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
   மாதவி மரபின் மாதவி இவள் என - சிலப்.புகார் 6/68,69
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி - சிலப்.மது 11/7
கோவலன் நாவில் கூறிய மந்திரம் - சிலப்.மது 11/196
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என - சிலப்.மது 13/54
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி - சிலப்.மது 15/174
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி - சிலப்.மது 15/192
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என - சிலப்.வஞ்சி 27/55
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் - சிலப்.வஞ்சி 27/141
ஏனை மன்னர் இருவரும் கூறிய
   நீள்_மொழி எல்லாம் நீலன் கூற - சிலப்.வஞ்சி 28/108,109
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் - மணி 6/32
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என - மணி 22/151

 மேல்
 
    கூறியது (1)
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் - மணி 6/16

 மேல்
 
    கூறில் (1)
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் - மணி 29/189

 மேல்
 
    கூறினர் (1)
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
   பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை - சிலப்.வஞ்சி 30/34,35

 மேல்
 
    கூறினன் (2)
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன்
   மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் - சிலப்.வஞ்சி 30/94,95
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன்
   அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் - மணி 24/175,176

 மேல்
 
    கூறினும் (1)
நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்
   அறியாமை என்று அறியல் வேண்டும் - சிலப்.புகார் 10/237,238

 மேல்
 
    கூறினை (1)
நகை திறம் கூறினை நான்மறையாள - சிலப்.வஞ்சி 27/54

 மேல்
 
    கூறு (5)
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து - சிலப்.புகார் 5/135
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் - சிலப்.மது 11/59
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு
   தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் - சிலப்.மது 15/176,177
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது - மணி 27/244

 மேல்
 
    கூறு_மின் (1)
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114

 மேல்
 
    கூறும் (15)
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை - சிலப்.புகார் 2/37
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு - சிலப்.மது 14/25
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் - சிலப்.மது 15/95
யாது இவன் வரவு என இறையோன் கூறும்
   எட்டி சாயலன் இருந்தோன்-தனது - சிலப்.மது 15/162,163
கொலைப்படு மகன் அலன் என்று கூறும்
   அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து - சிலப்.மது 16/163,164
திருந்து வேல் தட கை இளையோன் கூறும்
   நிலன் அகழ் உளியன் நீல தானையன் - சிலப்.மது 16/203,204
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
   இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய - சிலப்.வஞ்சி 26/8,9
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி - சிலப்.வஞ்சி 29/93
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
   குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு - மணி 3/17,18
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ - மணி 6/36
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
   இரவிவன்மன் ஒரு_பெரு மகளே - மணி 11/132,133
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
   கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி - மணி 18/6,7
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ - மணி 18/141
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும்
   காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை - மணி 21/46,47
மன்னவன் யார் என மாதவன் கூறும்
   நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் - மணி 24/168,169

 மேல்
 
    கூறும்-காலை (1)
கோவலன்-தனக்கு கூறும்-காலை
   அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய - சிலப்.மது 15/114,115

 மேல்
 
    கூறுவல் (1)
முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல்
   என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து - மணி 24/146,147

 மேல்
 
    கூறுவன் (1)
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன்
   மாதவி மகளொடு வல் இருள் வரினும் - மணி 6/34,35

 மேல்
 
    கூறுழி (1)
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி
   தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து - சிலப்.மது 15/10,11

 மேல்
 
    கூறை (1)
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் - சிலப்.மது 15/98

 மேல்
 
    கூறையும் (1)
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது - மணி 16/30

 மேல்
 
    கூனி-தன்னொடு (1)
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு
   மண_மனை புக்கு மாதவி-தன்னோடு - சிலப்.புகார் 3/171,172

 மேல்
 
    கூனும் (5)
கூனும் குறளும் ஊமும் செவிடும் - சிலப்.புகார் 5/118
கூனும் குறளும் ஊமும் கூடிய - சிலப்.மது 20/24
சிறு குறும் கூனும் குறளும் சென்று - சிலப்.வஞ்சி 27/214
கூனும் குறளும் கொண்டன ஒருசார் - சிலப்.வஞ்சி 28/58
கூனும் குறளும் ஊமும் செவிடும் - மணி 12/97

 மேல்