<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

ஐ - முதல் சொற்கள்
ஐ 18
ஐ_வகை 1
ஐ_வகையர் 1
ஐ_வினை 1
ஐ_அறிவு 1
ஐ_இருவரோடும் 1
ஐ_ஐம் 1
ஐங்கணை 3
ஐங்கணையொடு 1
ஐஞ்ஞாற்றுவர் 1
ஐஞ்ஞாறு 1
ஐஞ்ஞூற்றுவர் 3
ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் 1
ஐஞ்ஞூற்றொடு 1
ஐஞ்ஞூறு 5
ஐஞ்நூற்று 1
ஐது 2
ஐந்தனுள் 2
ஐந்தாம் 1
ஐந்தாய் 1
ஐந்தால் 2
ஐந்தில் 3
ஐந்திற்கு 2
ஐந்திற்கும் 3
ஐந்தின் 1
ஐந்தினில் 1
ஐந்தினும் 2
ஐந்தினுள் 2
ஐந்தினொடு 1
ஐந்து 34
ஐந்து_நூறாம் 1
ஐந்துகளும் 3
ஐந்துகளுள் 1
ஐந்தும் 6
ஐந்துமே 2
ஐந்தே 1
ஐந்தொடு 1
ஐந்தோடு 1
ஐந்நூற்றுவர் 1
ஐப்பசி 2
ஐம் 15
ஐம்_கந்தம் 2
ஐம்_கந்தமும் 1
ஐம்_கூந்தல் 1
ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் 1
ஐம்_பூதங்களே 1
ஐம்_பூதம் 1
ஐம்_பொறி 1
ஐம்_பொறியோடு 1
ஐம்பத 1
ஐம்பதமும் 1
ஐம்பதிற்றிருவர்-தம்முடன் 1
ஐம்பது 1
ஐம்பதும் 1
ஐம்பால் 7
ஐம்புலம் 1
ஐம்பொறி 1
ஐம்மையார் 1
ஐம்மையும் 1
ஐமை 1
ஐய 17
ஐயத்தை 1
ஐயதாம் 1
ஐயது 1
ஐயம் 6
ஐயம்_இல் 2
ஐயம்பதின் 1
ஐயம்பதின்_இரட்டி 1
ஐயமுறு 1
ஐயமே 1
ஐயர்க்கு 1
ஐயவே 1
ஐயற்கு 2
ஐயன் 4
ஐயன்மார் 1
ஐயன்மார்கள்-தம் 1
ஐயனது 1
ஐயனால் 1
ஐயனும் 1
ஐயனையே 1
ஐயா 2
ஐயாயிரம் 1
ஐயால் 1
ஐயுற்றல் 1
ஐயென 2
ஐயை 1
ஐயோ 5
ஐவகை 1
ஐவகையர் 1
ஐவர் 5
ஐவருள் 1
ஐவனம் 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஐ (18)
ஐ வகை ஒழுக்கம் என்னும் அரும் கலம் ஒருங்கு அணிந்தார் - யசோதர:1 54/1
அம் கயல் பிறழ்வ போலும் ஐ அரி அடர்த்த வாள் கண் - சூளாமணி:5 350/2
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் - சூளாமணி:6 555/2
காள் ஐ வண்ணத்த களி வண்டு கதுவிய துகளால் - சூளாமணி:7 730/1
மால் ஐ தண் கேழ் மால் கடல் வட்டம் வளாயிற்றே - சூளாமணி:9 1523/4
அயில் கலந்து இலங்கு வேல் கண் ஐ அரி பிறழ ஓடி - சூளாமணி:10 1665/3
ஐ ஆண்டு எல்லை ஐயன் அணைந்தான் அவனோடும் - சூளாமணி:10 1743/1
ஐ ஆர் இன்ப காதலி நாவின் மகள் ஆக - சூளாமணி:10 1743/2
இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்_ஐ ஞாள்களும் - சூளாமணி:10 1766/1
ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும் - சூளாமணி:12 2119/1
இயங்குவனவும் இரு பொறி ஐ_அறிவு எல்லையவாய் - நீலகேசி:1 78/1
அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர் - நீலகேசி:1 89/1
ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண் - நீலகேசி:2 153/3
ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் - நீலகேசி:4 311/4
பன்னிய ஐ ஐம்பத பொருள் என்றான் - நீலகேசி:7 735/4
அன்றியும் ஐ_வகை பூதமும் அன்றே - நீலகேசி:7 737/4
ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது - நீலகேசி:7 738/1
ஆய்ந்த கேள்வியினாளை ஐ ஆய் என - நீலகேசி:10 894/3

 TOP
 
    ஐ_வகை (1)
அன்றியும் ஐ_வகை பூதமும் அன்றே - நீலகேசி:7 737/4

 TOP
 
    ஐ_வகையர் (1)
அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர்
  சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய் - நீலகேசி:1 89/1,2

 TOP
 
    ஐ_வினை (1)
ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் - நீலகேசி:4 311/4

 TOP
 
    ஐ_அறிவு (1)
இயங்குவனவும் இரு பொறி ஐ_அறிவு எல்லையவாய் - நீலகேசி:1 78/1

 TOP
 
    ஐ_இருவரோடும் (1)
ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும்
  தாங்கி ஈர்_இருவர் தாக்கி தலை துணிப்புண்ட பின்னை - சூளாமணி:12 2119/1,2

 TOP
 
    ஐ_ஐம் (1)
ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது - நீலகேசி:7 738/1

 TOP
 
    ஐங்கணை (3)
அறவி பணி பண அரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணை வில் மன்மதனை அகன்றாய் நீயே - நாககுமார:1 16/3
ஆங்கு அவள் அணைந்த போழ்தின் ஐங்கணை குரிசில் தந்த - யசோதர:2 91/1
முனிபவேல் இவர் அனங்கன் ஐங்கணை என முனிவார் - சூளாமணி:6 460/4

 TOP
 
    ஐங்கணையொடு (1)
குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி - சூளாமணி:6 461/3

 TOP
 
    ஐஞ்ஞாற்றுவர் (1)
இந்திரன் இறைமையும் ஈர்_ஐஞ்ஞாற்றுவர் - சூளாமணி:4 237/3

 TOP
 
    ஐஞ்ஞாறு (1)
கணம் நிரைத்து இலங்கும் காய் பொன் முடி மிசை ஈர்_ஐஞ்ஞாறு - சூளாமணி:6 543/3

 TOP
 
    ஐஞ்ஞூற்றுவர் (3)
இன் இசை வீணை வேந்து இளையர் ஐஞ்ஞூற்றுவர்
  அன்னவர் கண்டு மிக்கு அண்ணல் உரைத்தனன் - நாககுமார:3 87/3,4
நங்கைமார் ஐஞ்ஞூற்றுவர் நாள்-தொறும் ஒலிசெய்வார் - நாககுமார:4 134/3
ஆயிடை சுதத்தன் ஐஞ்ஞூற்றுவர் அரும் தவர்களோடும் - யசோதர:1 23/1

 TOP
 
    ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் (1)
வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள்
  ஈனோர் உட்கும் இரத்தினகண்டன் என நின்றான் - சூளாமணி:5 316/1,2

 TOP
 
    ஐஞ்ஞூற்றொடு (1)
முழு வில் ஐஞ்ஞூற்றொடு மு காவதமே - சூளாமணி:11 1946/4

 TOP
 
    ஐஞ்ஞூறு (5)
ஆயிரத்து ஐஞ்ஞூறு ஏற்றி அடித்தனள் அகல அப்பால் - உதயணகுமார:4 224/3
ஒருங்கு முன் கையின் மீதில் ஓர் ஐஞ்ஞூறு அடித்துவிட்டாள் - உதயணகுமார:4 226/3
செறியும் ஐஞ்ஞூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை - நாககுமார:2 61/3
முழம் ஒரு மூன்றில் தொட்டு மூரி வெம் சிலைகள் ஐஞ்ஞூறு
  எழு முறை பெருகி மேன்மேல் எய்திய உருவம் எல்லாம் - யசோதர:1 37/1,2
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் - நீலகேசி:1 92/2

 TOP
 
    ஐஞ்நூற்று (1)
நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி - நாககுமார:5 167/1

 TOP
 
    ஐது (2)
ஐது உலாம் கவர் கணை அரும்புவைத்தவே - சூளாமணி:3 74/4
ஐது ஆய காற்றும் அவை யாரும் அறிப என்றால் - நீலகேசி:4 399/2

 TOP
 
    ஐந்தனுள் (2)
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றதாமோ - நீலகேசி:6 690/2
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றும் இல்லேல் - நீலகேசி:6 690/3

 TOP
 
    ஐந்தாம் (1)
நீர் என உருக்கிடும் நில புரைய ஐந்தாம்
  ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் - யசோதர:5 288/2,3

 TOP
 
    ஐந்தாய் (1)
இலம்படல் இன்றி இ வையகத்து ஐந்தாய் இயன்றனவே - நீலகேசி:1 77/4

 TOP
 
    ஐந்தால் (2)
பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய - நீலகேசி:10 870/1
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ - நீலகேசி:10 870/2

 TOP
 
    ஐந்தில் (3)
தொக்கன ஐந்தில் சொலும் மூன்றில் நான்கினில் - சூளாமணி:11 2001/2
ஐந்தில் யான் சொன்ன பலகளும் அமைவு_இல எனினும் - நீலகேசி:5 481/1
கொன்றதே கொலை என்று ஐந்தில் கூறினாய் - நீலகேசி:5 541/4

 TOP
 
    ஐந்திற்கு (2)
அளித்த ஐந்திற்கு அறிவு இன்பம் ஆக்குவான் - நீலகேசி:10 866/1
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ - நீலகேசி:10 870/2

 TOP
 
    ஐந்திற்கும் (3)
கலையா விழு பொருள் கந்தங்கள் ஐந்திற்கும் காட்டுதலான் - நீலகேசி:4 382/3
ஆசு ஒன்றும் இல்லை அ ஐந்திற்கும் அன்னது - நீலகேசி:5 579/2
வியலகத்து ஐந்திற்கும் வேறொன்று காட்டாய் - நீலகேசி:5 580/2

 TOP
 
    ஐந்தின் (1)
ஐந்தின் இயன்றவர் பிண்டத்தர் ஆகிய - நீலகேசி:5 578/1

 TOP
 
    ஐந்தினில் (1)
இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும் - யசோதர:5 295/2

 TOP
 
    ஐந்தினும் (2)
ஆய்ந்த ஐந்தினும் ஆம் வினை ஆர்ப்பு எனின் - நீலகேசி:5 546/1
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும் - நீலகேசி:10 881/3

 TOP
 
    ஐந்தினுள் (2)
முறை செப்பிய ஐந்தினுள் முன்னை உரு - நீலகேசி:5 485/1
உருவு உடை அட்டகம் அன்றியும் ஐந்தினுள் பட்ட எல்லாம் - நீலகேசி:5 504/1

 TOP
 
    ஐந்தினொடு (1)
ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி - யசோதர:5 265/2

 TOP
 
    ஐந்து (34)
அங்கு ஐந்து பல்லம் ஆயுள் அமரனாய் சுகித்துவிட்டு - நாககுமார:5 150/1
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே - நாககுமார:5 151/4
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே - நாககுமார:5 151/4
ஆகும் நல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி - நாககுமார:5 167/2
இந்திர உலகம் எய்தி ஏழொடு ஈர்_ஐந்து முந்நீர் - சூளாமணி:5 354/3
அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் ஆடரங்கு - சூளாமணி:10 1777/1
இரண்டு ஆகும் முதலவர்கட்கு ஏழ் ஈர்_ஐந்து ஈர்_ஏழாய் - சூளாமணி:11 2062/1
பொறி எனும் வாயில் ஐந்து பொன் கதவு அடைத்து மாற்றி - சூளாமணி:12 2111/2
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய - நீலகேசி:1 80/3
ஐந்து உரைப்பில் உரு உழப்பு அறிவோடு குறி செய்கை - நீலகேசி:2 177/2
சத்தி-தான் சென்றதே என்றியேல் ஐந்து அன்றி - நீலகேசி:2 203/1
அத்தி ஐந்து எனின் அல்ல அறு பொருளும் அவை ஆகா - நீலகேசி:4 292/1
கந்தம் ஐந்து இவை கணிகத்த ஆம் என கரைந்தும் - நீலகேசி:5 478/1
ஓதினீர் சொன்ன கந்தம் ஐந்து உள எனின் உருவே - நீலகேசி:5 480/1
எள்ளின்துணையும் அஃது இன்மையின் ஐந்து என - நீலகேசி:5 588/2
மன் பெறு நுண் பொருள் ஐந்து இயல்பாய் அவை - நீலகேசி:6 671/3
உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே - நீலகேசி:6 674/4
அணு மேயின ஐந்து அவை-தாம் அனைத்தும் - நீலகேசி:6 677/1
கொணர்ந்து நீ ஐந்து என்ற கோள் அழியும் அன்றே - நீலகேசி:6 689/5
பொருள்-தாம் இ ஐந்து ஒழிய போத்தந்து உரைப்பாய் - நீலகேசி:6 690/1
எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து - நீலகேசி:6 712/2
என்னவும் இந்தியம் ஐந்து ஐந்து ஒரு மனம் - நீலகேசி:7 735/2
என்னவும் இந்தியம் ஐந்து ஐந்து ஒரு மனம் - நீலகேசி:7 735/2
அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும் - நீலகேசி:7 735/3
அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும் - நீலகேசி:7 735/3
அந்தர ஆத்துமன் ஐந்து என வேண்டினை - நீலகேசி:7 755/2
ஐந்து தன் மாத்திரை-தாம் அணுவால் தொடர் - நீலகேசி:7 758/1
கூடிய ஐந்து குணத்தினன் ஆதலின் - நீலகேசி:7 766/3
இருபதின் மேலும் ஐந்து ஆக இசைத்தனை - நீலகேசி:7 778/2
பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய - நீலகேசி:10 870/1
அறிந்த ஆறு என்-கொலோ ஐந்து பூதமும் - நீலகேசி:10 874/3
ஐந்து பூதம் அவற்று அவற்றால் ஐந்து - நீலகேசி:10 879/1
ஐந்து பூதம் அவற்று அவற்றால் ஐந்து
  இந்தியங்கள் இயையும் இவை எனும் - நீலகேசி:10 879/1,2
வேறு வேறு ஐந்து பூதமும் மெய்ம்மையால் - நீலகேசி:10 882/1

 TOP
 
    ஐந்து_நூறாம் (1)
எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து - நீலகேசி:6 712/2

 TOP
 
    ஐந்துகளும் (3)
கடன் ஆகிய கந்தம் இ ஐந்துகளும்
  உடனே அவை தோன்றி ஒரு கணத்துள் - நீலகேசி:5 491/1,2
கவை ஒப்பன கை_விரல் ஐந்துகளும்
  இவை இப்படி கைப்பிடி என்றது போல் - நீலகேசி:5 492/1,2
அவை அப்படி கந்தங்கள் ஐந்துகளும்
  நவையைப்படு நல் உயிராம் எனவும் - நீலகேசி:5 492/3,4

 TOP
 
    ஐந்துகளுள் (1)
ஓர் இணராய மும்மூன்று ஒன்பது ஐந்துகளுள் உறைவோர் - நீலகேசி:1 90/3

 TOP
 
    ஐந்தும் (6)
ஆதிநாள் அரசர்-தங்கள் அரும் குலம் ஐந்தும் ஆக்கி - சூளாமணி:6 535/1
நல்லவே என நாட்டிய கந்தம் இ ஐந்தும்
  இல்லவே என தெருட்டுவன் எடுத்து உரை என தான் - நீலகேசி:5 483/1,2
ஐந்தும் இருபதும் ஆகிய சொற்பொருள் - நீலகேசி:7 782/1
ஐந்தும் கூடி அறிவு இன்பம் ஆதியாய் - நீலகேசி:10 858/1
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ - நீலகேசி:10 870/2
அறைந்த பூதங்கள் ஐந்தும் அங்கு இல் எனின் - நீலகேசி:10 876/3

 TOP
 
    ஐந்துமே (2)
அனையன காட்சி_இல் அளவை ஐந்துமே - நீலகேசி:1 119/4
சத்தி-தான் அது அன்றி ஐந்துமே ஆயினும் - நீலகேசி:2 203/3

 TOP
 
    ஐந்தே (1)
கொண்டு நின்றாம் பிற கூறின் ஐந்தே என - நீலகேசி:5 552/2

 TOP
 
    ஐந்தொடு (1)
பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர் - நீலகேசி:8 786/1

 TOP
 
    ஐந்தோடு (1)
மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி - யசோதர:4 242/3

 TOP
 
    ஐந்நூற்றுவர் (1)
உறு வயந்தகன் உற்ற ஐந்நூற்றுவர்
  மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் - உதயணகுமார:1 50/3,4

 TOP
 
    ஐப்பசி (2)
என்றும் இ பருவத்தினோடு ஐப்பசி
  சென்று தேவி சிறப்பு-அது செய்தும் அஃது - யசோதர:1 15/1,2
ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம்-தன்னில் - யசோதர:2 136/1

 TOP
 
    ஐம் (15)
புற்றினில் உறையும் பொறி வரி ஐம் தலை - உதயணகுமார:1 79/1
ஐம் மிகும் கணை மதன் அம்பு மீ குளிப்பவும் - உதயணகுமார:2 123/2
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம் - நாககுமார:1 8/1
ஐம் பெரும் குலத்தராய அரசரும் பிறரும் ஆங்கண் - சூளாமணி:10 1790/1
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் - நீலகேசி:1 118/2
ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால் - நீலகேசி:2 194/1
ஞானம் ஈர்_ஐம் பாரமீதை நாடும்கால் இவைகளும் - நீலகேசி:4 354/4
அறிவு ஆவன-தாம் இனி யா எனின் ஐம்_பொறியோடு - நீலகேசி:5 489/1
பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் - நீலகேசி:5 494/1
அறியும் மெய்ம்மையும் ஐம்_கந்தம் மாட்சிய்யும் அல்லவையும் - நீலகேசி:5 571/1
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் - நீலகேசி:5 649/2
ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது - நீலகேசி:7 738/1
துணிவு ஐம்_பூதங்களே தொழில் சொல்லுவேன் - நீலகேசி:10 856/4
யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி - நீலகேசி:10 865/4
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் - நீலகேசி:10 868/3

 TOP
 
    ஐம்_கந்தம் (2)
ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால் - நீலகேசி:2 194/1
அறியும் மெய்ம்மையும் ஐம்_கந்தம் மாட்சிய்யும் அல்லவையும் - நீலகேசி:5 571/1

 TOP
 
    ஐம்_கந்தமும் (1)
பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் - நீலகேசி:5 494/1

 TOP
 
    ஐம்_கூந்தல் (1)
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் - நீலகேசி:5 649/2

 TOP
 
    ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் (1)
யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி - நீலகேசி:10 865/4

 TOP
 
    ஐம்_பூதங்களே (1)
துணிவு ஐம்_பூதங்களே தொழில் சொல்லுவேன் - நீலகேசி:10 856/4

 TOP
 
    ஐம்_பூதம் (1)
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் - நீலகேசி:10 868/3

 TOP
 
    ஐம்_பொறி (1)
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் - நீலகேசி:1 118/2

 TOP
 
    ஐம்_பொறியோடு (1)
அறிவு ஆவன-தாம் இனி யா எனின் ஐம்_பொறியோடு
  மனம் இவை புல்லினவேல் - நீலகேசி:5 489/1,2

 TOP
 
    ஐம்பத (1)
பன்னிய ஐ ஐம்பத பொருள் என்றான் - நீலகேசி:7 735/4

 TOP
 
    ஐம்பதமும் (1)
உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே - நாககுமார:1 20/2

 TOP
 
    ஐம்பதிற்றிருவர்-தம்முடன் (1)
அரைசர்கள் ஐம்பதிற்றிருவர்-தம்முடன்
  உரை செய அரும் தவத்து உருவு கொண்டு போய் - யசோதர:2 84/2,3

 TOP
 
    ஐம்பது (1)
அறுநூற்றின் மீதில் ஐம்பது ஆன நல் சேரி-தானும் - உதயணகுமார:1 90/1

 TOP
 
    ஐம்பதும் (1)
செயம் தரு வள நல் நாடு சிறந்த ஐம்பதும் அளித்து - உதயணகுமார:4 207/3

 TOP
 
    ஐம்பால் (7)
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால்
  கொவ்வை துயில் கொண்ட துவர் வாய் கொடியொடு ஒப்பாள் - சூளாமணி:8 863/1,2
வண்டே மடந்தை மணி ஐம்பால் மேவி இருந்து - சூளாமணி:8 1120/1
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம் - சூளாமணி:9 1335/1
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின் - சூளாமணி:9 1536/4
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் - சூளாமணி:9 1539/3
வண்டு ஆர் ஐம்பால் மங்கையர் காப்ப வளர்கின்றான் - சூளாமணி:10 1738/4
நின்று நீல ஐம்பால் பெயராளும் அங்கு - நீலகேசி:3 236/3

 TOP
 
    ஐம்புலம் (1)
பொரு_இல் ஐம்புலம் அடக்கி பொருந்தி அவா அச்சம் மூவிரு - உதயணகுமார:6 363/3

 TOP
 
    ஐம்பொறி (1)
புலம் கொண்ட ஐம்பொறி ஈறா புணர்ந்த - சூளாமணி:11 1956/3

 TOP
 
    ஐம்மையார் (1)
அம் சுடர் இணர்க்கு ஒசிந்த அனைய ஐம்மையார் - சூளாமணி:2 60/4

 TOP
 
    ஐம்மையும் (1)
மூத்தல் வகையும் முதல் அதன் ஐம்மையும்
  ஆத்த கணம்-தோறு அலர்ந்த நிகழ்ச்சியும் - நீலகேசி:5 613/1,2

 TOP
 
    ஐமை (1)
ஐமை அமைந்தார்க்கு எழுமை அமைந்தவர் - சூளாமணி:11 1993/1

 TOP
 
    ஐய (17)
அந்தம்_இல் குணத்து ஐய நீர் ஆர் என - உதயணகுமார:5 270/2
இன்று இவண் ஐய என்-கண் அருளிய பொருள் இது எல்லாம் - யசோதர:1 48/1
ஐய ஆசனத்தின் உம்பர் அரசவை இருந்து கண்டாய் - யசோதர:2 121/3
பிணி என எனது நெஞ்சில் பெரு நவை உறுக்கும் ஐய
  துணியலென் உணர சொல்வாய் தோன்றல் நீ என்று சொன்னாள் - யசோதர:2 133/3,4
இன்னும் ஈது ஐய கேட்க இசோமதி தந்தை ஆய - யசோதர:4 250/1
மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய
  துக்கமே தொடர நோற்று துணை அறம் துறந்த பெற்றி - யசோதர:5 303/2,3
அறியலர் வினைகளாலே அரு நவைபடுநர்க்கு ஐய
  சிறிய நல் வதங்கள் செய்தே தீ_வினை அகல்வர் காணாய் - யசோதர:5 308/3,4
ஆர் உயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு ஐய நீயும் - யசோதர:5 312/2
ஐய நின் அருளால் உயிர்_கொலையினில் அரு வினை நரகத்து ஆழ்ந்து - யசோதர:5 322/1
ஐய தாரினான் அருளின் வண்ணமே - சூளாமணி:7 598/4
ஐய நுண் மருங்கு நோவ அடி கொண்ட குவவு கொங்கை - சூளாமணி:7 673/2
ஆங்கு அ வெம் கடம் சேர்ந்த பின் ஐய காண் - சூளாமணி:7 778/1
ஐய தலத்தும் மெல விரிந்து அது அயலார் செல்லும் ஆணையாய் - சூளாமணி:9 1478/3
ஐய தசை ஆர்ந்த அடியின் அழகினாலே - சூளாமணி:10 1607/2
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் - சூளாமணி:10 1648/3
ஐய விசயனும் ஆழி வலவனும் - சூளாமணி:11 2019/2
ஐய நன்மை என்றீர் அவற்று புடை - நீலகேசி:5 531/4

 TOP
 
    ஐயத்தை (1)
ஐயத்தை இன்றி அடுபவாலோ அழல் நரகத்துள்ளே படுபவாலோ - நீலகேசி:3 257/4

 TOP
 
    ஐயதாம் (1)
ஐயதாம் அதிசயமுற அடங்கினன் உடம்பினை இவண் இட்டே - யசோதர:5 324/2

 TOP
 
    ஐயது (1)
வலிது ஆம் நிலம் ஐயது நீர் வெய்து தீ - நீலகேசி:5 487/1

 TOP
 
    ஐயம் (6)
மருவி ஐயம் மனத்திடை நீங்கினார் - உதயணகுமார:3 168/4
ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் - யசோதர:4 238/4
அளந்து அறிவு அரிய சீரோற்கு ஐயம் ஈது அகற்றுக என்று ஆங்கு - சூளாமணி:6 530/3
அருமை கொள் திகிரி ஆள்தற்கு ஐயம் ஒன்று இல்லை என்றான் - சூளாமணி:8 986/4
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே - சூளாமணி:11 2040/4
ஐயம்_இல் தீ_கதி செலுத்துவது அது என்னை ஆவது என்றாள் - நீலகேசி:9 828/4

 TOP
 
    ஐயம்_இல் (2)
ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் - யசோதர:4 238/4
ஐயம்_இல் தீ_கதி செலுத்துவது அது என்னை ஆவது என்றாள் - நீலகேசி:9 828/4

 TOP
 
    ஐயம்பதின் (1)
ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி - யசோதர:5 265/2

 TOP
 
    ஐயம்பதின்_இரட்டி (1)
ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி
  செம் தசைகள் சென்று கவர்க என்று உடன் விடுத்தான் - யசோதர:5 265/2,3

 TOP
 
    ஐயமுறு (1)
கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில் - சூளாமணி:11 2040/3

 TOP
 
    ஐயமே (1)
ஐயமே ஒழிந்தனம் அனலும் வேலினாய் - சூளாமணி:5 426/2

 TOP
 
    ஐயர்க்கு (1)
அரிவை கண்டு தன் ஐயர்க்கு உரைத்தனள் - உதயணகுமார:5 280/4

 TOP
 
    ஐயவே (1)
ஐயவே அவிர் கதிர் அரும்பு வந்தது - சூளாமணி:8 1042/3

 TOP
 
    ஐயற்கு (2)
அங்கை உள்ளன ஐயற்கு ஆதலால் - சூளாமணி:3 114/2
மாதவசேனை காட்ட வல்லையோ என்ன ஐயற்கு
  ஓதுவது உணரின் அன்றே அடிகள் யாம் உருவம் என்றாள் - சூளாமணி:8 1013/3,4

 TOP
 
    ஐயன் (4)
அன்பினால் ஐயன் தங்கை அஞ்சுதல் அஞ்சி நெஞ்சில் - யசோதர:1 31/3
ஐயன் ஆங்கு எய்தலும் அதிர ஆர்த்தது - சூளாமணி:9 1414/2
ஐ ஆண்டு எல்லை ஐயன் அணைந்தான் அவனோடும் - சூளாமணி:10 1743/1
ஐயன் தானும் அவ்வகையாலே வளர்வு எய்த - சூளாமணி:10 1746/1

 TOP
 
    ஐயன்மார் (1)
ஐயன்மார் போந்தது என்று அசதியாடினான் - சூளாமணி:9 1384/4

 TOP
 
    ஐயன்மார்கள்-தம் (1)
ஐயன்மார்கள்-தம் அழகின் வண்ணமே - சூளாமணி:7 601/4

 TOP
 
    ஐயனது (1)
ஐயனது அழகு கண் பருக அவ்வழி மை அணி - சூளாமணி:10 1736/1

 TOP
 
    ஐயனால் (1)
ஐயனால் பிற ஆர் அஞர் நீங்கி இ - சூளாமணி:5 339/3

 TOP
 
    ஐயனும் (1)
அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் ஐயனும் அணைந்தான் - சூளாமணி:11 2030/4

 TOP
 
    ஐயனையே (1)
ஐயனையே அடங்கான் என்றது ஆதன் வண்ணக்கால் - நீலகேசி:4 301/4

 TOP
 
    ஐயா (2)
அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ - சூளாமணி:7 773/4
நினைத்து காண் அன்றி நேடியும் காண் ஐயா
  எனக்கு நீ செய்வது இத்துணையே இனி - நீலகேசி:10 872/3,4

 TOP
 
    ஐயாயிரம் (1)
பதியுடை ஐயாயிரம் பரு மத களிற்றுடன் - உதயணகுமார:3 174/2

 TOP
 
    ஐயால் (1)
குளம் ஐயால் நற விரி குவளை கண்ணியான் - சூளாமணி:10 1760/3

 TOP
 
    ஐயுற்றல் (1)
ஐயுற்றல் வேட்கை உவர்ப்பே மயக்கு யாதும்_இன்மை - நீலகேசி:1 123/1

 TOP
 
    ஐயென (2)
ஐயென அங்கி தோன்றி அதனையும் எரிக்கலுற்றது - யசோதர:4 236/3
ஐயென அகன்றன அணைந்தனர் கனிந்தார் - சூளாமணி:11 2032/3

 TOP
 
    ஐயை (1)
விலங்கு வேல் கொண்டு ஐயை உந்தி வேற்றவர் - சூளாமணி:9 1386/1

 TOP
 
    ஐயோ (5)
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே - யசோதர:1 57/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே - யசோதர:1 58/4
வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகி - யசோதர:2 120/2
கறுப்பு உடை மனத்து எழு கதத்து அரசன் ஐயோ
  மற படை விட கருதி வாள் உருவுகின்றான் - யசோதர:5 266/3,4
ஆ அலறி அது உருகி அலமரினும் ஐயோ
  சாவ அரிது இவண் அரசி தகவு_இல் வினை தரும் நோய் - யசோதர:5 292/2,3

 TOP
 
    ஐவகை (1)
ஐவகை அடிசில் கொண்டே ஆன நாற்படையும் சூழ - உதயணகுமார:1 119/3

 TOP
 
    ஐவகையர் (1)
மற்றவர்க்கு மேலவர் ஐவகையர் அவர் மேலவர்கள் - சூளாமணி:11 2041/2

 TOP
 
    ஐவர் (5)
ஈர்_ஐவர் பவணர்களும் இரு_நால்வர் வியந்தரரும் - சூளாமணி:11 2040/1
ஒர் ஐவர் சோதிடரும் ஒரு பதின் மேல் அறுவர் எனும் - சூளாமணி:11 2040/2
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர்
  மேல் படை செய்ய செல்லும் வினைவரை விலக்க வைத்தான் - சூளாமணி:12 2109/3,4
வேமானியர் என ஐவர் இ தேவர் விரித்து உரைப்பின் - நீலகேசி:1 87/2
தீ மாண் குமரரோடு ஈர்_ஐவர் முன்னவர் அன்னவர் பின் - நீலகேசி:1 87/3

 TOP
 
    ஐவருள் (1)
அல்லவர் உள்ளுறுத்து ஆடவர் ஐவருள் ஆதியினார் - நீலகேசி:1 82/2

 TOP
 
    ஐவனம் (1)
ஐவனம் கலந்த சாரல் அருகு வந்து அணைவதே போல் - சூளாமணி:10 1664/2

 TOP