<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெட்ட 3
கெட்டக்-கண் 1
கெட்டது 1
கெட்டமைக்கேல் 1
கெட்டவன் 1
கெட்டன 1
கெட்டனன் 1
கெட்டால் 1
கெட்டு 5
கெட்டேன் 1
கெட 14
கெடல் 2
கெடல்-தான் 1
கெடலும் 1
கெடா 2
கெடாத 1
கெடின் 1
கெடினும் 1
கெடு 1
கெடுக 3
கெடுகின்றார் 1
கெடுத்தவனும் 1
கெடுத்தற்கு 1
கெடுப்பன் 1
கெடும் 5
கெடுமால் 1
கெடுமே 1
கெடுமேல் 1
கெடுமோ 1
கெடுவதன் 1
கெடுவது 1
கெடுவர் 1
கெடுவன 2
கெடுவார்களை 1
கெடூஉ 1
கெண்டிகை 1
கெண்டை 3
கெண்டையோடு 1
கெணிகை 1
கெர்ப்பமாதல் 1
கெழீஇயினர் 1
கெழு 33
கெழும 1
கெழுமி 2
கெழுமிய 1
கெழுமும் 1
கெழுவல் 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கெட்ட (3)
கெட்ட திரட்சியும் தோன்றிய சாந்தும் பொருள் எனவும் - நீலகேசி:4 389/1
ஆற்று அ மகன் கெட்ட போழ்தே அமரில் - நீலகேசி:5 604/1
கெட்ட பின் ஆற்றல்கள் எல்லாம் வழியதற்கு - நீலகேசி:5 618/1

 TOP
 
    கெட்டக்-கண் (1)
கந்தங்கள் எல்லாம் கடை அற கெட்டக்-கண்
  அந்தம்_இலா குற்றம் ஆம் என சொல்லும் - நீலகேசி:5 603/1,2

 TOP
 
    கெட்டது (1)
இன்மை முடியின் என் இட்டம் உரைப்பினும் கெட்டது என்னோ - நீலகேசி:5 501/2

 TOP
 
    கெட்டமைக்கேல் (1)
விரியும் என அது வேண்டுகின்றாய் அற கெட்டமைக்கேல்
  கரியும் உடையன் பயறொடு நீரும் கலந்து பெய்தால் - நீலகேசி:4 390/2,3

 TOP
 
    கெட்டவன் (1)
அன்னணம் செய்தான் அறம் கெட்டவன் வழி - நீலகேசி:5 602/1

 TOP
 
    கெட்டன (1)
குணங்களும் தொழில்களும் குழுமி கெட்டன
  புணர்ந்து உடன் பொருள்-வயின் போந்தவாறும் நீ - நீலகேசி:8 810/2,3

 TOP
 
    கெட்டனன் (1)
கெட்டனன் இது கேட்க வினை நிலை - நீலகேசி:5 545/4

 TOP
 
    கெட்டால் (1)
அ வினை அற கெட்டால் அது விளையும் என்பதூஉம் - நீலகேசி:4 311/2

 TOP
 
    கெட்டு (5)
மான் கடியும் நோக்கினாய் வழி அற கெட்டு ஒழிவதோ - நீலகேசி:2 181/4
உள்ளம்-தான் நின்றவற்றை உணர்ந்து அவற்றோடு அற கெட்டு இங்கு - நீலகேசி:2 196/2
இருமையும் கெட்டு உடன் ஆயின் கும்மாயமும் இல் அற்கல் நும் - நீலகேசி:4 391/3
அரக்கொடு பீசம் அற கெட்டு அ ஆற்றல் - நீலகேசி:5 601/1
தண் மதி கெட்டு அதன் சாயை உடன் பெறல் - நீலகேசி:5 608/1

 TOP
 
    கெட்டேன் (1)
கேள் ஒருவன் வந்து இடை புகுந்து அரச கெட்டேன்
  வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான் - யசோதர:5 267/3,4

 TOP
 
    கெட (14)
ஈனகத்து இருள் கெட இன்பம் எய்துமே - சூளாமணி:4 224/2
தான் அகத்து இருள் கெட தயங்குகின்றதே - சூளாமணி:4 224/4
சூழ் துயர் பல கெட சோதி மூர்த்தியாய் - சூளாமணி:5 394/2
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ - சூளாமணி:6 522/2
முறை கெட முளைப்பது ஓர் முனிவின் ஒள் எரி - சூளாமணி:7 681/3
அரி விசயம் கெட நின்ற ஆணை வேலான் - சூளாமணி:10 1838/2
முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை - சூளாமணி:11 1844/3
செய்த தீமை கெட கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான் - நீலகேசி:1 148/4
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட
  முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய - நீலகேசி:4 449/1,2
மனை இருள் நெறி பெற மதி கெட அடைவன - நீலகேசி:4 455/3
ஏத்துநர் கண்டாய் இரு_வினையும் கெட
  பாத்து_இல் சிவகதி பான்மையர் என்றாள் - நீலகேசி:4 456/3,4
தன் வழி தோற்றி கெடுமோ அது கெட
  பின் வழி தோற்றம் பெறுமோ இரண்டனுள் - நீலகேசி:5 629/1,2
கெட கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்படப்பெறும் - நீலகேசி:8 803/1
இருள் கெட நினைத்தலும் இனையை ஆகு என - நீலகேசி:8 821/4

 TOP
 
    கெடல் (2)
பிறந்து பிறந்து நின் இச்சை கெடல் அன்றி பின் ஒன்றின் மேல் - நீலகேசி:5 511/1
ஒருங்கு புலம் தோன்றி அவை ஒத்த கெடல் ஆனால் - நீலகேசி:5 525/2

 TOP
 
    கெடல்-தான் (1)
அற கெடல்-தான் அது என்னில் அட்டக வித்து வெந்து ஆம் - நீலகேசி:4 445/2

 TOP
 
    கெடலும் (1)
பிறப்பித்து கேடும் பின் தோற்ற கெடலும்
  இறப்பவும் கூடாது இரு திறத்தானும் - நீலகேசி:5 631/1,2

 TOP
 
    கெடா (2)
எப்பாலும் தான் கெடா இல்லனவும் தோன்றா என்று - நீலகேசி:6 696/1
இல்லாத தோன்றா கெடா உள்ளன என்பாய் - நீலகேசி:6 698/1

 TOP
 
    கெடாத (1)
எடுத்து உரை கெடாத முன்னம் கேசரன் இதனை சொன்னான் - சூளாமணி:6 562/4

 TOP
 
    கெடின் (1)
ஓதின கந்தம் உடன் கெடின் வாசனை - நீலகேசி:5 622/3

 TOP
 
    கெடினும் (1)
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க என்பதனை - நீலகேசி:2 181/1

 TOP
 
    கெடு (1)
துணிவு இது என நம துயர் கெடு முறைமையும் - நீலகேசி:4 452/2

 TOP
 
    கெடுக (3)
பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால் - நீலகேசி:1 58/2
கொன்ற பாவம் கெடுக என கையிட்டு - நீலகேசி:4 315/1
தந்து இங்கு உரைத்த உரை-தானும் கெடுக என்றான் - நீலகேசி:4 400/3

 TOP
 
    கெடுகின்றார் (1)
வழி வாழ கெடுகின்றார் மாந்தருள் மேலாயார் - நீலகேசி:2 182/1

 TOP
 
    கெடுத்தவனும் (1)
இரு_வினை கெடுத்தவனும் இன்ப_உலகு அடைந்தான் - நாககுமார:5 158/1

 TOP
 
    கெடுத்தற்கு (1)
சொன்னதன் பொருள் எல்லாம் சுவடு இன்றி அற கெடுத்தற்கு
  அன்னதே எனில் ஆதன் ஆழிநாட்டு ஆகாதோ - நீலகேசி:2 199/3,4

 TOP
 
    கெடுப்பன் (1)
என்னை யான் கொடுத்தும் வையத்து இடுக்கண் நோய் கெடுப்பன் என்னும் - சூளாமணி:7 775/3

 TOP
 
    கெடும் (5)
ஆதி தான் பெரியனாய் அற கெடும் அளவு எல்லாம் - நீலகேசி:2 176/1
தான் கெடும் அளவு எல்லாம் நினைந்து உரைத்த தத்துவம்-தான் - நீலகேசி:2 181/3
கேடு இலவாய குணத்தின் நிலையும் கெடும் குணத்தின் - நீலகேசி:4 380/1
நில்லாது அற கெடும் தோன்றிற்றும் தோற்றமும் - நீலகேசி:5 616/1
கெட கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்படப்பெறும் - நீலகேசி:8 803/1

 TOP
 
    கெடுமால் (1)
பக்கம் உடன் கெடுமால் என்னை பாவம் - நீலகேசி:5 605/4

 TOP
 
    கெடுமே (1)
கெடுமே அவை கேட்டினும் வாள் கண் நல்லாய் - நீலகேசி:5 491/3

 TOP
 
    கெடுமேல் (1)
வழி ஒன்று தோற்றி கெடுமேல் மக பெற்று - நீலகேசி:5 630/1

 TOP
 
    கெடுமோ (1)
தன் வழி தோற்றி கெடுமோ அது கெட - நீலகேசி:5 629/1

 TOP
 
    கெடுவதன் (1)
கெடுவதன் உள் நின்று தோன்றுவதன்-கண் - நீலகேசி:5 621/1

 TOP
 
    கெடுவது (1)
கெடுவது தோற்றம் நிலையுதல்-தான் அ பொருள் எனவும் - நீலகேசி:4 392/3

 TOP
 
    கெடுவர் (1)
அழுக்கு உடம்பிற்கே கெடுவர் ஆடவர்கள் அந்தோ - நீலகேசி:1 108/4

 TOP
 
    கெடுவன (2)
கெடுவன தோன்றுவ நிற்பன-தாமும் குணம் என்றியேல் - நீலகேசி:4 392/1
கெடுவன தோன்றுவ நிற்பன-தாம் குணம் ஆயினக்கால் - நீலகேசி:4 392/2

 TOP
 
    கெடுவார்களை (1)
இகழ்ச்சியில் கெடுவார்களை எண்ணுக - சூளாமணி:7 628/1

 TOP
 
    கெடூஉ (1)
மஞ்சு இவர் மகிழம்-தன் வயவு நோய் கெடூஉ
  பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால் - சூளாமணி:10 1588/2,3

 TOP
 
    கெண்டிகை (1)
மண்டை கெண்டிகை மாடம் மடாமனை - நீலகேசி:5 532/1

 TOP
 
    கெண்டை (3)
கெண்டை அம் சினை மேய்ந்து கிளர்ந்து போய் - சூளாமணி:1 28/1
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை - சூளாமணி:4 152/3
இட்ட வில் இரட்டையும் இரண்டு கெண்டை போல்பவும் - சூளாமணி:6 483/1

 TOP
 
    கெண்டையோடு (1)
கெண்டையோடு நின்று அலைந்த கேழவாய் கிளர்ந்தவே - சூளாமணி:6 479/4

 TOP
 
    கெணிகை (1)
கின்னரி மனோகரீ என் கெணிகை நல் கன்னிமாரும் - நாககுமார:2 54/1

 TOP
 
    கெர்ப்பமாதல் (1)
நிறை_மதி முக நல் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
  பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் - உதயணகுமார:1 15/1,2

 TOP
 
    கெழீஇயினர் (1)
கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து - சூளாமணி:11 1987/3

 TOP
 
    கெழு (33)
வளம் கெழு வத்தவற்கு மன்னிய காதல் மிக்க - உதயணகுமார:6 303/1
உளம் கெழு கற்பினார்கள் ஓதிமம் போலும் நீரார் - உதயணகுமார:6 303/2
கறை கெழு வேலினான் தன் காரிகை நீர் மேல் நிற்ப - நாககுமார:2 52/1
வளம் கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் - யசோதர:2 77/2
பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால் - சூளாமணி:4 204/2
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் - சூளாமணி:5 322/2
குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் - சூளாமணி:5 322/4
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் - சூளாமணி:6 444/4
கணம் கெழு கலாவம் ஒளி காலும் அகல் அல்குல் - சூளாமணி:6 452/1
ஈங்கு வாழிய இருள் கெழு முழையகத்து ஒளித்தாய் - சூளாமணி:7 719/1
கணம் கெழு களி வண்டு ஆல பாசடை கலந்த பொய்கை - சூளாமணி:7 758/3
வளம் கெழு குமரரை வலம்கொண்டு எய்தின - சூளாமணி:7 815/3
குணம் கெழு குல தலைவி கொண்டு மிசை புல்லி - சூளாமணி:8 864/2
இலைய நாடகத்து எழில் கெழு விமானம் அஃது இயல்கின்ற விசை-தன்னால் - சூளாமணி:8 888/1
கணம் கெழு கவரிகள் கலந்து காழ் அகில் - சூளாமணி:8 954/1
சினம் கெழு காலன் மற்றோர் காலன் மேல் சிவந்தது ஒப்பான் - சூளாமணி:9 1149/4
மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ - சூளாமணி:9 1181/2
சீர் கெழு விஞ்சையர் செம் தடி நுந்துபு - சூளாமணி:9 1240/3
நீர் கெழு வெள்ளம் நிரந்ததை அன்றே - சூளாமணி:9 1240/4
எண் திசை மருங்கும் இடைநிலத்திடையும் இருள் கெழு விசும்பினது அகமும் - சூளாமணி:9 1324/3
தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால் - சூளாமணி:9 1417/3
புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன - சூளாமணி:9 1514/2
கலி கெழு கனை கடல் கலங்கி அன்னது ஓர் - சூளாமணி:10 1713/3
பலி கெழு முரசு ஒலி பரந்து ஒலித்ததே - சூளாமணி:10 1713/4
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் - சூளாமணி:10 1729/1
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான் - சூளாமணி:10 1789/2
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் - சூளாமணி:10 1838/4
படை கெழு தானைய பல் களி யானை - சூளாமணி:11 1997/3
குடை கெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே - சூளாமணி:11 1997/4
முடி கெழு மன்னர் முன் இறைஞ்ச நம்மை தம் - சூளாமணி:12 2103/1
படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க - சூளாமணி:12 2112/1
மிடை கெழு வினைவர் தானை மெலிய மேற்சென்றுவிட்டான் - சூளாமணி:12 2112/4
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும் - நீலகேசி:1 24/1

 TOP
 
    கெழும (1)
கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள் - யசோதர:2 78/3

 TOP
 
    கெழுமி (2)
மையலுற்று அழுந்தி நான்கு கதிகளுள் கெழுமி செல்வர் - யசோதர:4 238/3
அரசன் நகரார் குழுவும் கெழுமி
  விரையும் புகையும் மலரும் பலியின் - சூளாமணி:8 1072/2,3

 TOP
 
    கெழுமிய (1)
கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மை - யசோதர:4 254/1

 TOP
 
    கெழுமும் (1)
கிளைமையும் அனையதே கெழுமும் நம் உளம் அ - யசோதர:2 81/3

 TOP
 
    கெழுவல் (1)
கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா - சூளாமணி:8 830/1

 TOP