<<முந்திய பக்கம்

கம்பராமாயணம் - தொடரடைவு

ஞா-முதல் சொற்கள்
ஞாங்கர் 1
ஞாட்புறு 1
ஞாயிறு 9
ஞாயிறும் 1
ஞால்வ 1
ஞால 4
ஞால_நாயகன் 1
ஞாலத்தவர் 2
ஞாலத்தால் 1
ஞாலத்தாள் 1
ஞாலத்து 7
ஞாலத்தும் 1
ஞாலத்துள் 1
ஞாலத்தை 5
ஞாலத்தொடு 1
ஞாலம் 38
ஞாலம்-தனில் 1
ஞாலமும் 8
ஞாலமே 1
ஞாளி 1
ஞாளிகள் 1
ஞாளியும் 1
ஞாளியோடு 1
ஞான்று 1
ஞான்றும் 2
ஞான்றே 1
ஞான 15
ஞானத்தர் 1
ஞானத்தாலும் 1
ஞானத்தின் 2
ஞானத்து 3
ஞானம் 11
ஞானமும் 8
ஞானமே 1
ஞானி 1
ஞானிகள் 1
ஞானியர் 1
ஞானீயும் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
 
  ஞாங்கர் (1)
ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற - கிட்:10 47/4

 மேல்
 
  ஞாட்புறு (1)
பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் - அயோ:9 46/1

 மேல்
 
  ஞாயிறு (9)
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய - அயோ:8 23/3
கண் தாமரை போல் கரு ஞாயிறு என - ஆரண்:2 24/2
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் - ஆரண்:14 44/4
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன - கிட்:7 37/4
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி - சுந்:2 205/1
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் - யுத்1:10 3/4
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் - யுத்3:31 108/2
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி - யுத்4:32 50/2
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற - யுத்4:37 195/3

 மேல்
 
  ஞாயிறும் (1)
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த - யுத்2:15 247/2

 மேல்
 
  ஞால்வ (1)
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ - சுந்:6 13/4

 மேல்
 
  ஞால (4)
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய - அயோ:2 27/3
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால
 முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க - அயோ:4 115/3,4
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் - சுந்:14 7/4
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக - யுத்3:31 93/3

 மேல்
 
  ஞால_நாயகன் (1)
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் - சுந்:14 7/4

 மேல்
 
  ஞாலத்தவர் (2)
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் - அயோ:4 119/2
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார் - சுந்:4 84/1

 மேல்
 
  ஞாலத்தால் (1)
நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ - யுத்1:12 38/2

 மேல்
 
  ஞாலத்தாள் (1)
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி - யுத்3:31 226/2

 மேல்
 
  ஞாலத்து (7)
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ - பால:3 6/4
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர் - பால:14 27/1
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து
 ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க - அயோ:4 116/3,4
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் - ஆரண்:14 24/2
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் - சுந்:12 92/1
மா இரு ஞாலத்து வைத்த மா படை - யுத்1:5 31/2
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் - யுத்1:6 11/1

 மேல்
 
  ஞாலத்தும் (1)
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி - கிட்:12 5/3

 மேல்
 
  ஞாலத்துள் (1)
நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் - சுந்:11 37/1

 மேல்
 
  ஞாலத்தை (5)
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் - ஆரண்:7 37/2
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் - ஆரண்:13 109/3
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது - யுத்2:16 99/3
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் - யுத்3:22 111/4
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் - யுத்3:31 172/2

 மேல்
 
  ஞாலத்தொடு (1)
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் - ஆரண்:10 141/3

 மேல்
 
  ஞாலம் (38)
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் - பால:3 21/3
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் - பால:5 22/4
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் - பால:8 8/2
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ - பால:22 3/4
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் - அயோ:3 9/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன - அயோ:3 26/1
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம்
 பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் - அயோ:3 42/3,4
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர - அயோ:3 71/1
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள - அயோ:3 101/2
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை - அயோ:4 27/2
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே - அயோ:4 111/1
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா - அயோ:9 26/2
துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் - அயோ:11 76/3
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம்
 மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் - அயோ:11 84/3,4
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் - ஆரண்:4 31/2
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார் - ஆரண்:7 11/3
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் - ஆரண்:10 140/2
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் - ஆரண்:13 31/1
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம்
 எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன - ஆரண்:16 1/2,3
ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் - கிட்:13 18/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ - கிட்:14 5/1
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம்
 அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே - கிட்:15 28/3,4
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் - கிட்:16 53/3
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் - சுந்:4 116/4
இருளும் ஞாலம் இராவணனால் இது - சுந்:5 28/1
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா - சுந்:5 63/3
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ - சுந்:12 83/4
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் - யுத்1:6 1/4
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை - யுத்2:15 40/1
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் - யுத்2:16 24/3
ஞாலம் உண்டவ நல்கினான் - யுத்2:16 117/4
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் - யுத்2:19 245/3
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் - யுத்3:20 77/3
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் - யுத்3:27 71/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் - யுத்3:31 76/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த - யுத்4:37 137/4
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் - யுத்4:37 140/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் - யுத்4:37 214/1

 மேல்
 
  ஞாலம்-தனில் (1)
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் - அயோ:3 30/2

 மேல்
 
  ஞாலமும் (8)
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய - அயோ:3 66/1
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும்
 கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட - அயோ:12 56/1,2
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும் - கிட்:7 21/1
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் - சுந்:3 122/1
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும் - யுத்2:16 311/3
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் - யுத்3:22 19/3
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற - யுத்4:37 145/3
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா - யுத்4:40 43/3

 மேல்
 
  ஞாலமே (1)
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே - பால:19 4/4

 மேல்
 
  ஞாளி (1)
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த - யுத்4:32 17/2

 மேல்
 
  ஞாளிகள் (1)
ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன - ஆரண்:7 31/3

 மேல்
 
  ஞாளியும் (1)
கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும்
 போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் - யுத்3:31 93/1,2

 மேல்
 
  ஞாளியோடு (1)
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் - ஆரண்:7 70/4

 மேல்
 
  ஞான்று (1)
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் - யுத்3:24 28/1

 மேல்
 
  ஞான்றும் (2)
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி - சுந்:4 58/2
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் - சுந்:4 72/4

 மேல்
 
  ஞான்றே (1)
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே
 ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற - யுத்1:4 120/2,3

 மேல்
 
  ஞான (15)
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் - பால:13 31/1
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ - பால:18 20/2
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி - ஆரண்:2 30/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க - கிட்:10 43/2
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி - யுத்1:3 23/4
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் - யுத்1:7 18/3
ஞான நாயகன் சேனை நடத்தலால் - யுத்1:8 68/2
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான
 தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் - யுத்1:9 80/3,4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி - யுத்3:22 199/4
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான
 திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் - யுத்3:27 176/1,2
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக - யுத்3:31 93/3
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் - யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர - யுத்4:37 124/1
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் - யுத்4:37 129/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் - யுத்4:41 39/3

 மேல்
 
  ஞானத்தர் (1)
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
 உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் - பால:23 59/1,2

 மேல்
 
  ஞானத்தாலும் (1)
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும்
 கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் - கிட்:2 33/3,4

 மேல்
 
  ஞானத்தின் (2)
கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி - கிட்:12 34/3
தொழும் கர துணையினன் சுருதி ஞானத்தின்
 கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான் - யுத்4:40 73/3,4

 மேல்
 
  ஞானத்து (3)
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் - பால:17 36/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து
 அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் - கிட்:13 27/3,4
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து
 உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் - சுந்:2 163/1,2

 மேல்
 
  ஞானம் (11)
இறையும் ஞானம் இலாத என் புன் கவி - பால:0 9/3
ஞானம் முன்னிய நான்மறையாளர் கை - பால:1 5/3
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் - அயோ:1 19/2
விள்ள ஞானம் வீசு தாள் - ஆரண்:1 62/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா - ஆரண்:2 26/3
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு - ஆரண்:3 43/2
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ - ஆரண்:10 84/4
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என - சுந்:6 23/2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம்
 முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் - யுத்1:4 151/1,2
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் - யுத்2:15 213/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் - யுத்2:19 255/2

 மேல்
 
  ஞானமும் (8)
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன - பால:3 6/2
ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும் - அயோ:1 80/2
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும்
 விரவு சீலமும் வினையின் மேன்மையும் - அயோ:14 104/1,2
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே - ஆரண்:14 2/4
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் - கிட்:3 22/4
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் - யுத்1:3 173/2
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் - யுத்1:4 47/1
கருமமும் கடைக்கண் உறு ஞானமும்
 அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் - யுத்4:37 24/1,2

 மேல்
 
  ஞானமே (1)
சான்றலோ எம் தவ பெரு ஞானமே - ஆரண்:3 24/4

 மேல்
 
  ஞானி (1)
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் - யுத்1:3 19/3

 மேல்
 
  ஞானிகள் (1)
நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் - பால:10 12/3

 மேல்
 
  ஞானியர் (1)
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் - யுத்1:6 11/1

 மேல்
 
  ஞானீயும் (1)
ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை - அயோ:4 99/1

 மேல்