<<முந்திய பக்கம்

கம்பராமாயணம் - தொடரடைவு

யோ-முதல் சொற்கள்
யோக 1
யோகத்தின் 2
யோகத்து 2
யோகம் 3
யோகமும் 1
யோகமுறு 1
யோகரும் 1
யோகி 2
யோகியர் 3
யோகியின் 2
யோகியும் 1
யோகியை 1
யோகின் 1
யோகு 1
யோசனை 27
யோசனைக்கும் 1
யோசனைகள் 3
யோசனையின் 4
யோனிகள் 2
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
 
  யோக (1)
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை - யுத்2:18 2/2

 மேல்
 
  யோகத்தின் (2)
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே - ஆரண்:16 8/1
மூர்த்திகள்-தாமும் தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் - சுந்:11 4/4

 மேல்
 
  யோகத்து (2)
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் - பால:8 7/4
உழந்த யோகத்து ஒரு_முதல் கோபத்தால் - ஆரண்:14 26/1

 மேல்
 
  யோகம் (3)
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய - யுத்1:3 60/1
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் - யுத்3:24 103/4
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம்
 வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் - யுத்4:32 42/1,2

 மேல்
 
  யோகமும் (1)
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் - பால:23 85/4

 மேல்
 
  யோகமுறு (1)
யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல் - ஆரண்:3 39/1

 மேல்
 
  யோகரும் (1)
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் - அயோ:4 210/4

 மேல்
 
  யோகி (2)
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த - ஆரண்:10 103/2
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் - சுந்:12 117/4

 மேல்
 
  யோகியர் (3)
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த - ஆரண்:13 33/3
உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் - சுந்:2 163/2
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார் - யுத்1:3 9/3

 மேல்
 
  யோகியின் (2)
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த - பால:14 58/4
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த - கிட்:10 75/4

 மேல்
 
  யோகியும் (1)
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் - யுத்1:9 25/4

 மேல்
 
  யோகியை (1)
களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல் - அயோ:10 11/2

 மேல்
 
  யோகின் (1)
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய - அயோ:1 2/3

 மேல்
 
  யோகு (1)
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் - பால:7 3/3

 மேல்
 
  யோசனை (27)
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான் - பால:14 81/1
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் - அயோ:6 6/2
கீண்டான் நிலம் யோசனை கீழ் புடையே - ஆரண்:12 72/4
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் - ஆரண்:13 80/2
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார் - ஆரண்:14 33/4
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் - ஆரண்:15 10/3
ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய - கிட்:4 11/4
செய்த கல் மதிலும் திசை யோசனை
 ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக - கிட்:11 36/2,3
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி - கிட்:12 30/1
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார் - கிட்:14 7/1
பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன் - கிட்:14 29/1
ஒருவனே ஒரு பன்னிரு யோசனை
 தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான் - சுந்:2 155/3,4
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் - யுத்1:5 18/1
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை - யுத்1:5 18/2
ஆர ஆயிர யோசனை ஆழமும் - யுத்1:8 45/1
எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன் - யுத்1:8 71/1
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும் - யுத்2:18 149/1
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால் - யுத்3:22 139/2
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் - யுத்3:22 140/1
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் - யுத்3:24 24/3
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப - யுத்3:24 24/4
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் - யுத்3:24 26/3
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா - யுத்3:24 31/2
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து - யுத்3:24 64/1
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை - யுத்3:24 64/2
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை - யுத்3:27 18/4
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால் - யுத்3:31 207/3

 மேல்
 
  யோசனைக்கும் (1)
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் - கிட்:7 9/2

 மேல்
 
  யோசனைகள் (3)
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற - யுத்3:24 24/1
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி - யுத்3:24 46/1
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி - யுத்3:31 226/4

 மேல்
 
  யோசனையின் (4)
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த - ஆரண்:15 1/1
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் - யுத்3:24 25/1
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் - யுத்3:24 25/4
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் - யுத்3:24 26/2

 மேல்
 
  யோனிகள் (2)
வெம் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்
 எ அளவில் செல எண்ணல் ஆகுமோ - அயோ:14 74/3,4
மெத்து யோனிகள் ஏறினும் வெற்றிடம் மிகுமால் - யுத்4:41 17/2

 மேல்