<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

ஐ - முதல் சொற்கள்
ஐந்தும் 1
ஐம் 1
ஐம்படை 2
ஐய 1
ஐயணரே 1
ஐயன் 1
ஐயனை 1
ஐயுறும் 1
ஐயோ 2
ஐவரும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
  ஐந்தும் (1)
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு - கலிங்:247/1

 மேல்
 
  ஐம் (1)
ஆரணமாம் நாற்கூடத்து அணைந்து நிற்கும் ஐம் கரத்தது ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம் - கலிங்:9/2

 மேல்
 
  ஐம்படை (2)
ஆனை சாய அடு பரி ஒன்று உகைத்து ஐம்படை பருவத்து அபயன் பொரும் - கலிங்:149/1
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே - கலிங்:240/2

 மேல்
 
  ஐய (1)
அளத்தி பட்டது அறிந்திலை ஐய நீ - கலிங்:385/2

 மேல்
 
  ஐயணரே (1)
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே
 கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே - கலிங்:331/1,2

 மேல்
 
  ஐயன் (1)
திங்களின் இளம் குழவி செம்மல் இவன் என்றும் செய்ய பரிதி குழவி ஐயன் இவன் என்றும் - கலிங்:238/1

 மேல்
 
  ஐயனை (1)
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை - கலிங்:210/2

 மேல்
 
  ஐயுறும் (1)
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும்
 செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே - கலிங்:315/1,2

 மேல்
 
  ஐயோ (2)
ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ - கலிங்:86/2
மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ - கலிங்:87/2

 மேல்
 
  ஐவரும் (1)
விட்ட தண்டினின் மீனவர் ஐவரும்
 கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ - கலிங்:381/1,2

 மேல்