|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
சோதி (2)
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே - கலிங்:17/2
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென் - கலிங்:294/1
மேல்
சோம்பி (1)
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்-தம் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி அரண்களும் அழிய ஆங்கே - கலிங்:260/1,2
மேல்
சோர் (1)
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:51/2
மேல்
சோர்வாளை (1)
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் - கலிங்:482/2
மேல்
சோரி (2)
பிறங்கு சோரி வாரியில் பிளிற்றி வீழ் களிற்று இனம் - கலிங்:434/1
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை - கலிங்:487/1
மேல்
சோரும் (1)
சோரும் களிற்றின் வாலதியால் சுழல அலகிட்டு அலை குருதி - கலிங்:557/1
மேல்
சோழ (4)
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் - கலிங்:191/1
தொழுது கற்றனம் என தொழுது சொல்லும் அளவில் சோழ வம்சம் இது சொன்ன அறிவு என்ன அழகோ - கலிங்:209/2
வாழி சோழ குல சேகரன் வகுத்த இசையின் மதுர வாரி எனலாகும் இசைமாது அரிது எனா - கலிங்:285/1
சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே - கலிங்:393/2
மேல்
சோழன் (5)
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் - கலிங்:191/1
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் - கலிங்:205/2
கண் ஆகிய சோழன் சக்கரம் ஆம் கருணாகரன் வாரண மேல் கொளவே - கலிங்:363/2
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே - கலிங்:365/2
பௌவம் அடங்க வளைந்த குடை பண்டித சோழன் மலர் கழலில் - கலிங்:532/1
மேல்
சோழனை (2)
கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே - கலிங்:533/2
காப்பதும் என் கடன் என்று காத்த கரிகால சோழனை வாழ்த்தினவே - கலிங்:594/2
மேல்
சோள (1)
துங்கபத்திரை செம் களத்திடை சோள சேகரன் வாள் எறிந்த போர் - கலிங்:103/1
மேல்
|
|
|