<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூட்டிய 1
சூடகமா 1
சூடி 2
சூடினான் 1
சூடு 2
சூடும் 2
சூதர் 1
சூதளவு 1
சூர் 1
சூரர் 3
சூரை 1
சூல் 2
சூழ் 4
சூழ்ந்த 1
சூழ்ந்து 1
சூழவும் 1
சூழி 2
சூறை 2
சூறைவளி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    சூட்டிய (1)
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே - கலிங்:535/2

 மேல்
 
    சூடகமா (1)
மதம் கொள் கரியின் கோளகையை மணி சூடகமா செறியீரே - கலிங்:510/1

 மேல்
 
    சூடி (2)
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே - கலிங்:156/2
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே - கலிங்:327/2

 மேல்
 
    சூடினான் (1)
சுடர் படை வாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டைமானே - கலிங்:471/2

 மேல்
 
    சூடு (2)
வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில் - கலிங்:175/1
சொன்ன தனங்கள் கொணர்ந்தனம் என்று அடி சூடு கரங்களொடே - கலிங்:333/2

 மேல்
 
    சூடும் (2)
முடி சூடும் முடி ஒன்றே முதல் அபயன் எம் கோமான் - கலிங்:537/1
அடி சூடும் முடி எண்ணில் ஆயிரம் நூறாயிரமே - கலிங்:537/2

 மேல்
 
    சூதர் (1)
சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் - கலிங்:322/1

 மேல்
 
    சூதளவு (1)
சூதளவு அளவு எனும் இள முலை துடியளவு அளவு எனும் நுண் இடை - கலிங்:21/1

 மேல்
 
    சூர் (1)
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் - கலிங்:117/2

 மேல்
 
    சூரர் (3)
கலக்கம் அற்ற வீரர் வாள் கலந்த சூரர் கைத்தலத்து - கலிங்:427/1
இருப்பு கவந்தத்தின் மீது ஏறலும் சூரர் எஃகம் புதைக்க இறகை - கலிங்:489/1
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை - கலிங்:491/1

 மேல்
 
    சூரை (1)
பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேய் - கலிங்:76/1

 மேல்
 
    சூல் (2)
சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் - கலிங்:501/2
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே - கலிங்:571/2

 மேல்
 
    சூழ் (4)
காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின் - கலிங்:179/1
ஓதம் சூழ் இலங்கை போர்க்கு ஒட்டிரட்டி கலிங்க போர் - கலிங்:231/2
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர - கலிங்:286/1
கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி - கலிங்:377/1

 மேல்
 
    சூழ்ந்த (1)
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த
  எயிற்கு அழுத்தும் நிண கொடியும் இளம் குழவி பசும் தலையும் எங்கும் தூக்கி - கலிங்:106/1,2

 மேல்
 
    சூழ்ந்து (1)
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே - கலிங்:327/2

 மேல்
 
    சூழவும் (1)
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் - கலிங்:488/1

 மேல்
 
    சூழி (2)
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே - கலிங்:365/2
சூழி முக களிற்று அபயன் தூது நடந்தருளிய நாள் - கலிங்:544/1

 மேல்
 
    சூறை (2)
சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை - கலிங்:91/1
அடைய படர் எரி கொளுவி பதிகளை அழிய சூறை கொள் பொழுதத்தே - கலிங்:370/2

 மேல்
 
    சூறைவளி (1)
சுழி சுழல வருவது என சூறைவளி சுழன்றிடுமால் - கலிங்:90/2

 மேல்