<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

கை - முதல் சொற்கள்
கை 24
கைக்கே 2
கைக்கொடு 1
கைக்கொளும் 1
கைகள் 1
கைத்தலத்து 1
கைத்தலம் 1
கைதவர் 1
கைதொழுது 1
கைப்படு 1
கைப்படுமெனினும் 1
கைப்படை 2
கைப்பிடித்த 2
கைப்பிடித்தலும் 1
கைம்மாறு 1
கைம்மிக்கு 1
கையால் 3
கையில் 5
கையின் 1
கையும் 3
கையோடு 1
கைவளை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
  கை (24)
தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை
 வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:44/1,2
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே - கலிங்:46/1
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே - கலிங்:46/1
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ - கலிங்:56/2
அடி கழுத்தின் நெடும் சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ - கலிங்:111/1
கை மலர் மேல் அம்மனையாம் கந்துகமாம் கழங்குமாம் - கலிங்:133/1
உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும் - கலிங்:146/2
இ கணம் மாளும் இனி தவிர் விச்சை என கை விதிர்த்தலுமே - கலிங்:173/2
பண்டு பாரதம் எனும் கதை பராசரன் மகன் பகர வெம் கரிமுகன் பரு மருப்பை ஒரு கை
 கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் - கலிங்:180/1,2
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் - கலிங்:201/2
திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே - கலிங்:247/2
குவி கை கொடு அரசர் சுற்றிய குரை கழல் அபயன் முத்து அணி - கலிங்:267/1
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே - கலிங்:287/1
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி - கலிங்:375/2
அழல் படு புகையொடு இழிச்சிய கை சிலை அடு சிலை பகழி தொடுத்து வலிப்பரே - கலிங்:420/2
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம் - கலிங்:435/1
இரு தொடை அற்று இருக்கும் மறவர்கள் எதிர் பொரு கை களிற்றின் வலி கெட - கலிங்:438/1
உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே - கலிங்:443/2
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத - கலிங்:484/1
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ - கலிங்:495/2
கள பரணி கூழ் பொங்கி வழியாமல் கை துடுப்பா - கலிங்:548/1
அழலை கையில் கொள்ளாமே அடுப்பை அவித்து கை துடுப்பால் - கலிங்:550/1
நிலத்தை சமைத்து கொள்ளீரே நெடும் கை களிற்றின் இரு செவியாம் - கலிங்:560/1

 மேல்
 
  கைக்கே (2)
காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே - கலிங்:569/2
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே - கலிங்:570/2

 மேல்
 
  கைக்கொடு (1)
பொது அற உலகு கைக்கொடு புலி வளர் கொடி எடுத்தலும் - கலிங்:266/1

 மேல்
 
  கைக்கொளும் (1)
அடைவ அப்பொழுது அவர்கள் கைக்கொளும் அவை கணிப்பதும் அருமையே - கலிங்:459/2

 மேல்
 
  கைகள் (1)
எடுத்து கைகள் வேகாமே இவுளி துணியிட்டு இரு மருங்கும் - கலிங்:552/1

 மேல்
 
  கைத்தலத்து (1)
கலக்கம் அற்ற வீரர் வாள் கலந்த சூரர் கைத்தலத்து
 உலக்கை உச்சி தைத்த போது உழும் கலப்பை ஒக்குமே - கலிங்:427/1,2

 மேல்
 
  கைத்தலம் (1)
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:28/2

 மேல்
 
  கைதவர் (1)
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே - கலிங்:329/2

 மேல்
 
  கைதொழுது (1)
கைதொழுது இறைஞ்சி அடியேன் வட கலிங்கத்து - கலிங்:221/1

 மேல்
 
  கைப்படு (1)
கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே - கலிங்:455/2

 மேல்
 
  கைப்படுமெனினும் (1)
உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர் - கலிங்:353/3

 மேல்
 
  கைப்படை (2)
இலகு கைப்படை கனல் விரித்தலால் இருள் கரக்கவே ஒளி பரக்கவே - கலிங்:346/2
அடு கரி நுதல் பட விட்ட கைப்படை அதனை ஒர் நொடி வரையில் பறிப்பரே - கலிங்:441/2

 மேல்
 
  கைப்பிடித்த (2)
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்தமன் அபயன் வாழ்க என்றே - கலிங்:2/2
குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே - கலிங்:431/2

 மேல்
 
  கைப்பிடித்தலும் (1)
சரி களம்-தொறும் தங்கள் சயமகள்-தன்னை மன் அபயன் கைப்பிடித்தலும்
 பரிகளும் களிறும் தனராகியும் பாரிபோகம் கொடுத்தனர் பார்த்திபர் - கலிங்:255/1,2

 மேல்
 
  கைம்மாறு (1)
கரும் சேவகம் செய்து செஞ்சோறு அற செய்த கைம்மாறு காண்-மின்களோ - கலிங்:490/2

 மேல்
 
  கைம்மிக்கு (1)
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்-தம் கோயில் சோம்பி - கலிங்:260/1

 மேல்
 
  கையால் (3)
குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே - கலிங்:236/2
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே - கலிங்:570/2
கணக்க பேய்க்கும் அகம் களிக்க கையால் எடுத்து வாரீரே - கலிங்:577/2

 மேல்
 
  கையில் (5)
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:51/2
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார் - கலிங்:162/1
மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் - கலிங்:162/2
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே - கலிங்:256/2
அழலை கையில் கொள்ளாமே அடுப்பை அவித்து கை துடுப்பால் - கலிங்:550/1

 மேல்
 
  கையின் (1)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2

 மேல்
 
  கையும் (3)
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன - கலிங்:135/2
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே - கலிங்:587/2
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே - கலிங்:587/2

 மேல்
 
  கையோடு (1)
வாயினில் புகு வேல்கள் பற்று வல கையோடு நிலத்திடை - கலிங்:498/1

 மேல்
 
  கைவளை (1)
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:62/2

 மேல்