<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிட்ட 1
கிட்டி 1
கிடக்க 3
கிடக்கவே 1
கிடந்த 4
கிடந்தது 1
கிடப்ப 1
கிடப்பது 1
கிடைக்க 1
கிடைக்கவே 1
கிடைக்கும் 1
கிடைத்த 2
கிடைத்தது 1
கிடைப்பன 1
கிம்புரி 1
கிரி 2
கிரிகள் 2
கிரியில் 1
கிரியின் 1
கிழான் 1
கிழிகள் 1
கிழிய 1
கிள்ளி 1
கிளவி 1
கிளவியை 1
கிளி 1
கிளைத்தலுமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
  கிட்ட (1)
கழுத்தே கிட்ட மணம் திரியா கஞ்சி ஆக வாரீரே - கலிங்:567/2

 மேல்
 
  கிட்டி (1)
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ - கலிங்:391/2

 மேல்
 
  கிடக்க (3)
அடக்கம் அன்று இது கிடக்க எம்முடைய அம்மை வாழ்க என எம்மை பார் - கலிங்:164/1
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் - கலிங்:167/2
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர் - கலிங்:586/1

 மேல்
 
  கிடக்கவே (1)
கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இரு புடை கிடக்கவே - கலிங்:410/2

 மேல்
 
  கிடந்த (4)
கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி - கலிங்:377/1
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் - கலிங்:481/2
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ - கலிங்:482/1
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை - கலிங்:519/1

 மேல்
 
  கிடந்தது (1)
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் - கலிங்:482/2

 மேல்
 
  கிடப்ப (1)
மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர் - கலிங்:430/1

 மேல்
 
  கிடப்பது (1)
பறிந்த தேரின் நேமியோடு பார் கிடப்பது ஒக்குமே - கலிங்:430/2

 மேல்
 
  கிடைக்க (1)
கிடைக்க பொருது மணலூரில் கீழ்நாள் அட்ட பரணி கூழ் - கலிங்:564/1

 மேல்
 
  கிடைக்கவே (1)
எறி கடலொடு கடல் கிடைத்த போல் இரு படைகளும் எதிர் கிடைக்கவே
 மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே - கலிங்:406/1,2

 மேல்
 
  கிடைக்கும் (1)
ஒரு பரணி உண்டு என உரைத்தன உரைப்படி உமக்கு இது கிடைக்கும் எனவே - கலிங்:227/2

 மேல்
 
  கிடைத்த (2)
எறி கடலொடு கடல் கிடைத்த போல் இரு படைகளும் எதிர் கிடைக்கவே - கலிங்:406/1
ஒருவர் என கிடைத்த பொழுதினில் உபய பலத்து எடுத்தது அரவமே - கலிங்:439/2

 மேல்
 
  கிடைத்தது (1)
நண்ணுக படை செருநர் நண்ணுக செரு களம் நமக்கு இகல் கிடைத்தது எனவே - கலிங்:394/2

 மேல்
 
  கிடைப்பன (1)
இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் - கலிங்:177/2

 மேல்
 
  கிம்புரி (1)
கிம்புரி பணை கிரி உகைத்தவன் கிரிகள் எட்டினும் புலி பொறித்ததும் - கலிங்:203/2

 மேல்
 
  கிரி (2)
கிம்புரி பணை கிரி உகைத்தவன் கிரிகள் எட்டினும் புலி பொறித்ததும் - கலிங்:203/2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ - கலிங்:494/2

 மேல்
 
  கிரிகள் (2)
அண்டம் உறு குல கிரிகள் அவள் ஒருகால் இரு காதில் - கலிங்:132/1
கிம்புரி பணை கிரி உகைத்தவன் கிரிகள் எட்டினும் புலி பொறித்ததும் - கலிங்:203/2

 மேல்
 
  கிரியில் (1)
அம் கண் ஞாலம் அனைத்தும் புயத்தில் வைத்து ஆடக கிரியில் புலி வைத்தவன் - கலிங்:318/1

 மேல்
 
  கிரியின் (1)
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1

 மேல்
 
  கிழான் (1)
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை - கலிங்:519/1

 மேல்
 
  கிழிகள் (1)
இருவர்-தம்மையும் கிழிகள் சுற்றுவித்து எரிவிளக்கு வைத்து இகல் விளைத்ததும் - கலிங்:199/2

 மேல்
 
  கிழிய (1)
இள அரி என பகைஞர் எதிர்முனைகளை கிழிய எறி படை பிடித்தருளியே - கலிங்:250/2

 மேல்
 
  கிள்ளி (1)
உள்ளியும் கிள்ளி இட்டு உகிரின் உப்பு இடு-மினோ - கலிங்:521/2

 மேல்
 
  கிளவி (1)
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே - கலிங்:131/2

 மேல்
 
  கிளவியை (1)
பண் படு கிளவியை அமுது என பரவிய கொழுநனை நெறிசெய - கலிங்:71/1

 மேல்
 
  கிளி (1)
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப - கலிங்:67/1

 மேல்
 
  கிளைத்தலுமே (1)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1

 மேல்