<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோகனக 1
கோசலரே 1
கோட்ட 1
கோட்டத்திடை 1
கோட்டம் 3
கோட்டாறும் 1
கோணல் 1
கோத்தன 1
கோத்து 4
கோதமையுடன் 1
கோதாவரி 1
கோதை 1
கோப்பு 1
கோபுரமும் 1
கோம்பி 1
கோமகன் 1
கோமான் 1
கோயில் 4
கோல்களும் 1
கோலம் 1
கோலால் 1
கோலி 1
கோலில் 2
கோலும் 1
கோவரையன் 1
கோழி 1
கோளகையை 1
கோன் 7

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    கோகனக (1)
குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே - கலிங்:236/2

 மேல்
 
    கோசலரே (1)
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே - கலிங்:329/2

 மேல்
 
    கோட்ட (1)
தனு கோட்ட நமன் கோட்டம் பட்டது சகர கோட்டம் - கலிங்:254/2

 மேல்
 
    கோட்டத்திடை (1)
விருதராச பயங்கரன் முன் ஒர் நாள் வென்ற சக்கர கோட்டத்திடை கொழும் - கலிங்:147/1

 மேல்
 
    கோட்டம் (3)
மனு கோட்டம் அழித்த பிரான் வளவர் பிரான் திரு புருவ - கலிங்:254/1
தனு கோட்ட நமன் கோட்டம் பட்டது சகர கோட்டம் - கலிங்:254/2
தனு கோட்ட நமன் கோட்டம் பட்டது சகர கோட்டம் - கலிங்:254/2

 மேல்
 
    கோட்டாறும் (1)
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும் - கலிங்:95/2

 மேல்
 
    கோணல் (1)
வாய் அகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண்டு ஓட மற்று அதனை வள் உகிரின் பருந்து கோணல்
  வாய் அகல் அம்பரத்தினிடை கௌவி வல் வாய் வகிர்ப்பட்டு நிலம் பட்ட வண்ணம் காண்-மின் - கலிங்:500/1,2

 மேல்
 
    கோத்தன (1)
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய - கலிங்:141/1

 மேல்
 
    கோத்து (4)
கொண்டு அணியின் குதம்பையுமாம் கோத்து அணியின் மணி வடமாம் - கலிங்:132/2
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய - கலிங்:141/1
இட்ட சுரி சங்கு எடுத்து கோத்து ஏகாவலியும் சாத்தீரே - கலிங்:513/2
வரிசை அறிந்து நரம்பில் கோத்து வன்ன சரங்கள் அணியீரே - கலிங்:514/2

 மேல்
 
    கோதமையுடன் (1)
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக - கலிங்:369/2

 மேல்
 
    கோதாவரி (1)
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர் - கலிங்:369/1

 மேல்
 
    கோதை (1)
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென் - கலிங்:294/1

 மேல்
 
    கோப்பு (1)
கோப்பு எலாம் குலைந்தோர்-தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே - கலிங்:262/2

 மேல்
 
    கோபுரமும் (1)
கொள்ளிவாய்ப்பேய் காக்கும் கோபுரமும் நெடு மதிலும் - கலிங்:104/1

 மேல்
 
    கோம்பி (1)
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய - கலிங்:141/1

 மேல்
 
    கோமகன் (1)
கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண் - கலிங்:16/1

 மேல்
 
    கோமான் (1)
முடி சூடும் முடி ஒன்றே முதல் அபயன் எம் கோமான்
  அடி சூடும் முடி எண்ணில் ஆயிரம் நூறாயிரமே - கலிங்:537/1,2

 மேல்
 
    கோயில் (4)
பூதலம் பழம் கோயில் என்னினும் புதிய கோயில் உண்டு அது விளம்புவாம் - கலிங்:97/2
பூதலம் பழம் கோயில் என்னினும் புதிய கோயில் உண்டு அது விளம்புவாம் - கலிங்:97/2
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே - கலிங்:156/2
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்-தம் கோயில் சோம்பி - கலிங்:260/1

 மேல்
 
    கோல்களும் (1)
குந்தமும் பகழியும் கோல்களும் வேலுமாம் - கலிங்:523/1

 மேல்
 
    கோலம் (1)
கொள்ளும் எனை பல கோலம் மென்மேல் கொண்டிட வேளையும் மீதூர - கலிங்:515/1

 மேல்
 
    கோலால் (1)
பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக்கொள்ளீரே - கலிங்:505/1

 மேல்
 
    கோலி (1)
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே - கலிங்:464/2

 மேல்
 
    கோலில் (2)
திரித்த கோலில் வளைவு உண்டு நீதி புரி செய்ய கோலில் வளைவு இல்லையே - கலிங்:273/2
திரித்த கோலில் வளைவு உண்டு நீதி புரி செய்ய கோலில் வளைவு இல்லையே - கலிங்:273/2

 மேல்
 
    கோலும் (1)
குருதி குட்டம் இத்தனையும் கோலும் வேலும் குந்தமுமே - கலிங்:508/1

 மேல்
 
    கோவரையன் (1)
வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக - கலிங்:365/1

 மேல்
 
    கோழி (1)
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் - கலிங்:293/1

 மேல்
 
    கோளகையை (1)
மதம் கொள் கரியின் கோளகையை மணி சூடகமா செறியீரே - கலிங்:510/1

 மேல்
 
    கோன் (7)
எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல - கலிங்:14/1
கொற்றவர் கோன் வாள் அபயன் அறிய வாழும் குவலயத்தோர் கலை அனைத்தும் கூற ஆங்கே - கலிங்:174/1
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் - கலிங்:201/2
குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை - கலிங்:206/1
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன்
  வண்டையர்க்கு அரசு பல்லவர்க்கு அரசு மால் களிற்றின் மிசை கொள்ளவே - கலிங்:364/1,2
வரும் அனுக்கை பல்லவர் கோன் வண்டை வேந்தன் - கலிங்:366/2
சுடர் படை வாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டைமானே - கலிங்:471/2

 மேல்