<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்க 1
மிக்கன 1
மிக 4
மிகவே 1
மிகு 1
மிகுத்து 1
மிகும் 1
மிகுமோ 2
மிகை 1
மிகைக்கவே 1
மிசை 24
மிசை-தோறும் 1
மிசையே 1
மிசைவான் 1
மிடற்று 2
மிடுக்கு 1
மிடை 3
மிடைகின்ற 1
மிடையவே 1
மிடையுற்ற 1
மிடைவித்த 1
மிதக்கவே 2
மிதந்தவே 1
மிதந்து 1
மிதப்ப 2
மிதிப்பன 1
மிதிபட்ட 1
மிதிலையில் 1
மிலேச்சர்களே 1
மிளிர்வன 1
மிறைத்து 1
மின்னும் 1
மினல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    மிக்க (1)
சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க
  சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் - கலிங்:501/1,2

 மேல்
 
    மிக்கன (1)
கடலிடத்து இறும் இடி என அடி இடு கவனம் மிக்கன கதழ் பரி கடுகவே - கலிங்:351/4

 மேல்
 
    மிக (4)
பூமாதும் சயமாதும் பொலிந்து வாழும் புயத்து இருப்ப மிக உயரத்து இருப்பள் என்று - கலிங்:13/1
பல் அரிசி யாவும் மிக பழ அரிசி தாம் ஆக - கலிங்:545/1
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே - கலிங்:551/2
கங்காபுரியின் மதில் புறத்து கருதார் சிரம் போய் மிக வீழ - கலிங்:563/1

 மேல்
 
    மிகவே (1)
இன்ன மா கடல் முழங்கி எழுகின்ற ஒலி என்று இம்பர் உம்பர் அறியாத பரிசு எங்கும் மிகவே - கலிங்:284/2

 மேல்
 
    மிகு (1)
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:49/2

 மேல்
 
    மிகுத்து (1)
மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் - கலிங்:284/1

 மேல்
 
    மிகும் (1)
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/2

 மேல்
 
    மிகுமோ (2)
பண்டு மிகுமோ பரணி கூழ் பாரகத்தில் அறியேமோ - கலிங்:555/1
உண்டு மிகுமோ நீர் சொன்ன உபாயம் இதுவும் செய்குவமே - கலிங்:555/2

 மேல்
 
    மிகை (1)
எழுதுக என்று கண்டு இது மிகை கண் என்று இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும் - கலிங்:197/2

 மேல்
 
    மிகைக்கவே (1)
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே - கலிங்:404/2

 மேல்
 
    மிசை (24)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:26/2
ஆக அமளி மிசை துயில்வீர் அம் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:37/2
அளக பாரம் மிசை அசைய மேகலைகள் அவிழ ஆபரணம் இவை எலாம் - கலிங்:53/1
அளக பந்தி மிசை அளிகள் பந்தர் இடும் அரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:60/2
வெம் கத களிற்றின் படத்தினால் வெளி அடங்கவே மிசை கவிக்கவே - கலிங்:103/2
ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே - கலிங்:105/2
வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ - கலிங்:110/2
தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து - கலிங்:125/1
உரி மிசை அ கரியின் குடரொடு கட்செவி இட்டு ஒரு புரி இட்டு இறுக புனையும் உடுக்கையளே - கலிங்:126/2
இ வண்ணத்த இரு திறமும் தொழுது இருப்ப எலும்பின் மிசை குடர் மென் கச்சின் - கலிங்:153/1
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் - கலிங்:194/1
அறை கழல் அரசர் அப்பொழுது அடி மிசை அறுகு எடுத்திட - கலிங்:264/1
நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி - கலிங்:265/1
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர் - கலிங்:275/1
கொற்ற வெண்குடை கவிப்ப மிசை கொண்டு கவரி குல மதி புடை கவித்த நிலவு ஒத்துவரவே - கலிங்:282/2
யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே - கலிங்:288/1
எடுத்த கொடி திசையிபத்தின் மத மிசை இருக்கும் அளிகளை எழுப்பவே - கலிங்:357/2
வண்டையர்க்கு அரசு பல்லவர்க்கு அரசு மால் களிற்றின் மிசை கொள்ளவே - கலிங்:364/2
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே - கலிங்:365/2
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே - கலிங்:399/1
பொருநர்கள் சிலர்-தம் உரத்தினில் கவிழ் புகர் முகம் மிசை அடியிட்டு அதின் பகை - கலிங்:440/1
நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று - கலிங்:476/1
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள் - கலிங்:480/1

 மேல்
 
    மிசை-தோறும் (1)
வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று - கலிங்:117/1

 மேல்
 
    மிசையே (1)
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் - கலிங்:181/2

 மேல்
 
    மிசைவான் (1)
பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து மிசைவான்
  முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/1,2

 மேல்
 
    மிடற்று (2)
அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின் - கலிங்:129/1
இமையவரை தகைதற்கு இருளும் மிடற்று இறைவற்கு இனிய தரத்து அமுத கனி அதரத்தினளே - கலிங்:130/2

 மேல்
 
    மிடுக்கு (1)
தேய்கின்றபடி தேய்ந்து மிடுக்கு அற்றேம் செற்றாலும் உய்யமாட்டேம் - கலிங்:214/2

 மேல்
 
    மிடை (3)
மிடை கொடி பிறழ்வன மறி கடல் அடையவும் மிளிர்வன கயல் எனவே - கலிங்:397/2
வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே - கலிங்:402/2
வெளி அரிது என எதிர் மிடை படை மனுபரன் விடு படை அதன் எதிரே - கலிங்:403/1

 மேல்
 
    மிடைகின்ற (1)
வேழம் நிரை என்ற மலை எங்கும் மிடைகின்ற அயில் வென்றி அபயன்-தன் அருளால் - கலிங்:297/1

 மேல்
 
    மிடையவே (1)
உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே - கலிங்:353/4

 மேல்
 
    மிடையுற்ற (1)
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை - கலிங்:487/1

 மேல்
 
    மிடைவித்த (1)
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா - கலிங்:519/2

 மேல்
 
    மிதக்கவே (2)
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே - கலிங்:355/2
குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே
  கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இரு புடை கிடக்கவே - கலிங்:410/1,2

 மேல்
 
    மிதந்தவே (1)
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே - கலிங்:446/2

 மேல்
 
    மிதந்து (1)
விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர் அ நீர் - கலிங்:90/1

 மேல்
 
    மிதப்ப (2)
கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார் - கலிங்:163/2
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார் - கலிங்:166/1

 மேல்
 
    மிதிப்பன (1)
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு - கலிங்:351/2

 மேல்
 
    மிதிபட்ட (1)
அடியினால் மிதிபட்ட அரு வரை நூறாயிரமே - கலிங்:538/2

 மேல்
 
    மிதிலையில் (1)
கடிது அழிந்து போர் மிதிலையில் படும் கரி மருப்பினை திரள் துலாம் எனும் - கலிங்:101/1

 மேல்
 
    மிலேச்சர்களே (1)
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே
  குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே - கலிங்:332/1,2

 மேல்
 
    மிளிர்வன (1)
மிடை கொடி பிறழ்வன மறி கடல் அடையவும் மிளிர்வன கயல் எனவே - கலிங்:397/2

 மேல்
 
    மிறைத்து (1)
எதிர் பொரு கரியின் மருப்பை உரத்தினில் இற எறி படையின் இறுத்து மிறைத்து எழு - கலிங்:417/1

 மேல்
 
    மின்னும் (1)
விழுந்த தவள குடை மின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே - கலிங்:559/2

 மேல்
 
    மினல் (1)
விளை கனல் விழிகளின் முளைக்கவே மினல் ஒளி கனலிடை எறிக்கவே - கலிங்:409/1

 மேல்