|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
மு (1)
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின - கலிங்:136/2
மேல்
முக்கண் (2)
பரிவு அகல தழுவி புணர் கலவிக்கு உருகி படர் சடை முக்கண் உடை பரமர் கொடுத்த களிற்று - கலிங்:126/1
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் - கலிங்:299/1
மேல்
முக (7)
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் - கலிங்:49/1
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த - கலிங்:106/1
வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே - கலிங்:365/1,2
தொளை முக மத மலை அதிர்வன தொடு கடல் பருகிய முகில் எனவே - கலிங்:396/1
வளை முக நுரை உக வரு பரி கடலிடை மறி திரை என எழவே - கலிங்:396/2
ஒரு துணி கருதும் இலக்கை அழித்தன உருவிய பிறை முக அ பகழி தலை - கலிங்:422/1
சூழி முக களிற்று அபயன் தூது நடந்தருளிய நாள் - கலிங்:544/1
மேல்
முக-கண் (1)
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே - கலிங்:355/2
மேல்
முகட்டின் (1)
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல் - கலிங்:355/1
மேல்
முகட்டு (1)
மொய்த்து இலங்கிய தாரகை வானின் நீள் முகட்டு எழுந்த முழுமதிக்கு ஒப்பு என - கலிங்:316/1
மேல்
முகடு (2)
மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ - கலிங்:87/2
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/2
மேல்
முகத்தில் (1)
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத - கலிங்:484/1
மேல்
முகத்திலே (1)
கடுகிய வட அனலத்தினை வைத்தது களம் உறு துரக கணத்தின் முகத்திலே - கலிங்:415/2
மேல்
முகத்தினிடை (1)
வளர்வது ஒர் பதத்தினிடை மத கரி முகத்தினிடை வளை உகிர் மடுத்து விளையாடு - கலிங்:250/1
மேல்
முகத்தினும் (1)
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின - கலிங்:136/2
மேல்
முகத்து (3)
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே - கலிங்:251/2
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ - கலிங்:391/2
களம் உறு துரக கணத்தின் முகத்து எதிர் கறுவிலர் சிலர் கலவி தலை நித்தில - கலிங்:416/1
மேல்
முகந்து (5)
விழுந்து கொழும் குருதி புனல் என்று வெறுங்கை முகந்து முகந்து - கலிங்:169/1
விழுந்து கொழும் குருதி புனல் என்று வெறுங்கை முகந்து முகந்து
எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே - கலிங்:169/1,2
தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும் - கலிங்:320/1
உரல் பட்ட அரிசி முகந்து உலைகள்-தொறும் சொரியீரே - கலிங்:547/2
கும்பங்களிலே முகந்து எடுத்து குளிரவைத்து கொள்ளீரே - கலிங்:556/2
மேல்
முகந்துகொடு (1)
திக்கில் உள நித்திலம் முகந்துகொடு வீசி ஒரு தென்றல் வருகின்றது எனவே - கலிங்:298/2
மேல்
முகப்பது (1)
திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே - கலிங்:249/2
மேல்
முகம் (11)
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே - கலிங்:5/2
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ - கலிங்:35/2
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:46/2
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும் - கலிங்:172/1
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென் - கலிங்:294/1
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் - கலிங்:299/1
பொருநர்கள் சிலர்-தம் உரத்தினில் கவிழ் புகர் முகம் மிசை அடியிட்டு அதின் பகை - கலிங்:440/1
அபயன் விடு படை ஏழ் கலிங்கமும் அடைய ஒரு முகம் ஆகி முந்தவே - கலிங்:444/2
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல - கலிங்:477/1
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் - கலிங்:477/2
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:496/2
மேல்
முகமாக (1)
அணிகள் ஒரு முகமாக உந்தின அமரர் அமர் அது காண முந்தினர் - கலிங்:445/1
மேல்
முகரியை (1)
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் தொடர வந்திலா முகரியை படத்து - கலிங்:197/1
மேல்
முகில் (15)
விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே - கலிங்:19/1
மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ - கலிங்:87/2
கலை வளர் உத்தமனை கரு முகில் ஒப்பவனை கரட தட கடவுள் கனக நிறத்தவனை - கலிங்:127/1
கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ - கலிங்:222/2
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே - கலிங்:289/2
முகில் அனைத்தும் அ தேர்கள் ஆனவோ மூரி வேலை போர்வீரர் ஆனவோ - கலிங்:347/2
கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின் - கலிங்:350/2
உரும் இடிப்பன வட அனல் உள என ஒலி முகில் கட கரிகளும் இடையவே - கலிங்:350/4
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு - கலிங்:351/2
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு - கலிங்:351/2
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல் - கலிங்:355/1
உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே - கலிங்:356/2
தொளை முக மத மலை அதிர்வன தொடு கடல் பருகிய முகில் எனவே - கலிங்:396/1
இன முகில் முகிலொடும் எதிர்த்த போல் இரதமொடு இரதமும் எதிர்க்கவே - கலிங்:407/2
மேல்
முகில்களும் (1)
உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே - கலிங்:356/2
மேல்
முகிலின் (1)
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
மேல்
முகிலும் (1)
காடு இதனை கடத்தும் என கரு முகிலும் வெண் மதியும் கடக்க அப்பால் - கலிங்:86/1
மேல்
முகிலொடும் (1)
இன முகில் முகிலொடும் எதிர்த்த போல் இரதமொடு இரதமும் எதிர்க்கவே - கலிங்:407/2
மேல்
முகிழ் (2)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய் - கலிங்:30/1
மேல்
முகிழினும் (1)
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும்
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:49/1,2
மேல்
முசுகுந்தன் (1)
பொரு துறைத்தலை புகுந்து முசுகுந்தன் இமையோர் புரம் அடங்கலும் அரண் செய்து புரந்த புகழும் - கலிங்:189/2
மேல்
முட்டவே (1)
அறை கழல் விருதர் செருக்கு அற வெட்டலின் அவர் உடல் இரு வகிர் பட்டன முட்டவே - கலிங்:424/2
மேல்
முட்டி (1)
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ - கலிங்:391/2
மேல்
முடம் (1)
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் - கலிங்:145/2
மேல்
முடி (8)
பொரு களத்திலே முடி கவித்தவன் புவி கவிப்பது ஓர் குடை கவித்ததும் - கலிங்:204/2
நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி - கலிங்:265/1
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே - கலிங்:287/2
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே - கலிங்:365/2
கடை பார்த்து தலை வணங்கும் கதிர் முடி நூறாயிரமே - கலிங்:536/2
முடி சூடும் முடி ஒன்றே முதல் அபயன் எம் கோமான் - கலிங்:537/1
முடி சூடும் முடி ஒன்றே முதல் அபயன் எம் கோமான் - கலிங்:537/1
அடி சூடும் முடி எண்ணில் ஆயிரம் நூறாயிரமே - கலிங்:537/2
மேல்
முடி-கண் (1)
கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண்
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/1,2
மேல்
முடிகள் (2)
அரிது அரிது இதுவும் என பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்துமே - கலிங்:422/2
அடியொடு முடிகள் துணித்து விழ புகும் அளவு அரி தொடை சமரத்தொடு அணைத்தனர் - கலிங்:423/1
மேல்
முடித்த (1)
எழுதி மற்று உரைசெய்தவரவர்கள் செய் பிழை எலாம் எமர் பொறுக்க என இப்படி முடித்த இதனை - கலிங்:209/1
மேல்
முடித்ததனை (1)
எனா உரை முடித்ததனை என்-கொல் விளைவு என்றே - கலிங்:225/1
மேல்
முடித்து (1)
அன்று இலங்கை பொருது அழித்த அவனே அ பாரத போர் முடித்து பின்னை - கலிங்:232/1
மேல்
முடிப்பளவும் (1)
தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் - கலிங்:194/2
மேல்
முடியான் (1)
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும் - கலிங்:212/1
மேல்
முடியின் (3)
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே - கலிங்:287/2
அரசர் அஞ்சல் என அடி இரண்டும் அவர் முடியின் வைத்தருளி அரசர் மற்று - கலிங்:337/1
முனைகள் ஒட்டினர் முடியினை இடறுவ முடியின் முத்தினை விளை புகழ் என நில - கலிங்:351/1
மேல்
முடியினால் (1)
முடியினால் வழிபட்டு மொழிந்த திறை இடா வேந்தர் - கலிங்:538/1
மேல்
முடியினை (1)
முனைகள் ஒட்டினர் முடியினை இடறுவ முடியின் முத்தினை விளை புகழ் என நில - கலிங்:351/1
மேல்
முடியெடுத்தனர் (1)
மறையவர் முடியெடுத்தனர் மனு நெறி தலையெடுக்கவே - கலிங்:264/2
மேல்
முடியொடு (1)
ஆடல் அயம் இவை மற்று இவை ஆதி முடியொடு பெட்டகம் - கலிங்:334/2
மேல்
முடிவது (1)
களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு - கலிங்:503/1
மேல்
முடிவில் (1)
சுவைக்கும் முடிவில் கூழினுக்கு சொரியும் அரிசி வரி எயிறா - கலிங்:525/1
மேல்
முடிவினில் (2)
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல் - கலிங்:355/1
முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு - கலிங்:415/1
மேல்
முடுகிய (1)
முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு - கலிங்:415/1
மேல்
முடை (1)
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை - கலிங்:219/1
மேல்
முண்டித்து (1)
குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை உடை கண்டான் என் அப்புறம் என்று இயம்பிடுவர் அநேகர் ஆங்கே - கலிங்:468/1,2
மேல்
முத்தம் (3)
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய் - கலிங்:92/1
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் - கலிங்:93/1
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே - கலிங்:308/1
மேல்
முத்தினை (2)
முனைகள் ஒட்டினர் முடியினை இடறுவ முடியின் முத்தினை விளை புகழ் என நில - கலிங்:351/1
சயமகள் களப முலைக்கு அணியத்தகு தனி வடம் இவை என மத்தக முத்தினை
அயம் எதிர் கடவி மத கரி வெட்டினர் அலை படை நிரைகள் களத்து நிரைக்கவே - கலிங்:418/1,2
மேல்
முத்து (6)
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:27/2
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய் - கலிங்:30/1
கூடும் இளம்பிறையில் குறு வெயர் முத்து உருள கொங்கை வடம் புரள செங்கழுநீர் அளக - கலிங்:62/1
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே - கலிங்:122/2
குவி கை கொடு அரசர் சுற்றிய குரை கழல் அபயன் முத்து அணி - கலிங்:267/1
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா - கலிங்:429/1
மேல்
முத்தும் (1)
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி - கலிங்:514/1
மேல்
முதல் (10)
செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் - கலிங்:15/1
தலம் முதல் உள மனு வளர்கவே சயதரன் உயர் புலி வளர்கவே - கலிங்:20/1
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல்
திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே - கலிங்:123/1,2
அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்ரமேயம் எனும் மெய்ப்ரியமதாக உடனே - கலிங்:182/1
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு - கலிங்:247/1
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு - கலிங்:247/1
அது முதல் கொடி எடுத்தன அமரர்-தம் விழவு எடுக்கவே - கலிங்:266/2
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே - கலிங்:327/2
முடி சூடும் முடி ஒன்றே முதல் அபயன் எம் கோமான் - கலிங்:537/1
ஆழி முதல் படையெடுத்த அணி நெடும் தோள் ஆயிரமே - கலிங்:544/2
மேல்
முதல்வனே (1)
அவன் இருந்துழி அறிக என்றனன் அபயன் மந்திரி முதல்வனே - கலிங்:460/2
மேல்
முதல்வனை (1)
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே - கலிங்:5/2
மேல்
முதலாக (3)
கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால் - கலிங்:184/1
அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட உருவாய் அரவணை துயிலும் ஆதி முதலாக அபயன் - கலிங்:185/1
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் - கலிங்:191/1
மேல்
முதலாய (1)
பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள் - கலிங்:205/1
மேல்
முதற்கண் (1)
அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்ரமேயம் எனும் மெய்ப்ரியமதாக உடனே - கலிங்:182/1
மேல்
முதிர் (2)
முறைமுறை முரசுகள் மொகுமொகு அதிர்வன முதிர் கடல் அதிர்வு எனவே - கலிங்:401/2
அலகில் செரு முதிர் பொழுது வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி - கலிங்:443/1
மேல்
முதிர (1)
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே - கலிங்:253/2
மேல்
முதிரா (1)
முருகின் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் - கலிங்:50/1
மேல்
முது (3)
முற்றிய நீள் மர பொதும்பின் முது பாம்பு புறப்படுமே - கலிங்:89/2
அ பேயின் ஒரு முது பேய் வந்து நின்று இங்கு அடியேனை விண்ணப்பம் செய்க என்றது - கலிங்:158/1
முது குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் முனை களிற்றோர் செரு களத்து முந்து தங்கள் - கலிங்:502/1
மேல்
முதுகில் (2)
பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய் புலி குறி பொறித்து அது மறித்த பொழுதே - கலிங்:178/2
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு - கலிங்:351/2
மேல்
முதுகு (4)
குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் - கலிங்:151/2
எழுந்தது சேனை எழலும் இரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள் - கலிங்:358/1,2
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே - கலிங்:453/2
முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை இன்னம் காண்-மின் - கலிங்:502/2
மேல்
முதுகுகள் (1)
வற்றலாக உலர்ந்த முதுகுகள் மரக்கலத்தின் மறி புறம் ஒப்பன - கலிங்:139/1
மேல்
முதுகும் (1)
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும்
திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே - கலிங்:172/1,2
மேல்
முந்தவே (1)
அபயன் விடு படை ஏழ் கலிங்கமும் அடைய ஒரு முகம் ஆகி முந்தவே - கலிங்:444/2
மேல்
முந்தினர் (2)
அணிகள் ஒரு முகமாக உந்தின அமரர் அமர் அது காண முந்தினர்
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/1,2
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை ஓட அஞ்சினர் - கலிங்:452/1
மேல்
முந்து (1)
முது குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் முனை களிற்றோர் செரு களத்து முந்து தங்கள் - கலிங்:502/1
மேல்
முந்நூல் (2)
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல்
பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் - கலிங்:242/1,2
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை - கலிங்:467/1
மேல்
மும்மடி (1)
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் - கலிங்:205/2
மேல்
மும்மையும் (1)
காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின் - கலிங்:179/1
மேல்
முயங்கும் (1)
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய் - கலிங்:30/1
மேல்
முயன்று (1)
பகல் இழந்த நிறை பெற முயன்று மொழி பதறுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:29/2
மேல்
முரசம் (2)
இணைத்த முரசம் வாள் காம்பிட்டு இரட்டை வாளி ஏற்றீரே - கலிங்:512/2
அவைக்கும் உரல்கள் என குரல்கள் அவிந்த முரசம் கொள்ளீரே - கலிங்:525/2
மேல்
முரசு (4)
வார் முரசு இருந்து வறிதே அதிருமாலோ வந்து இரவில் இந்திரவில் வானில் இடுமாலோ - கலிங்:223/1
முரசு அறைக என்று அருளுதலும் முழுது உலகும் ஒரு நகருள் புகுந்தது ஒப்ப - கலிங்:279/1
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
வளை கலிப்பவும் முரசு ஒலிப்பவும் மரம் இரட்டவும் வயிர மா - கலிங்:344/1
மேல்
முரசுகள் (1)
முறைமுறை முரசுகள் மொகுமொகு அதிர்வன முதிர் கடல் அதிர்வு எனவே - கலிங்:401/2
மேல்
முரிந்த (1)
முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே - கலிங்:78/2
மேல்
முருகின் (1)
முருகின் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் - கலிங்:50/1
மேல்
முலை (11)
சூதளவு அளவு எனும் இள முலை துடியளவு அளவு எனும் நுண் இடை - கலிங்:21/1
புடைபட இள முலை வளர்-தொறும் பொறை அறிவுடையரும் நிலை தளர்ந்து - கலிங்:22/1
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய் - கலிங்:30/1
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் - கலிங்:49/1
செரு இள நீர் பட வெம் முலை செவ்விளநீர் படு சே அரி - கலிங்:52/1
தங்கு கண் வேல் செய்த புண்களை தட முலை வேது கொண்டு ஒற்றியும் - கலிங்:55/1
கவள மத கரட கரி உரிவை கயிலை களிறு விருப்புறும் அ கனக முலை தரள - கலிங்:128/1
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே - கலிங்:241/1
இள முலை எதிர் பொரும் அப்பொழுது இப்பொழுது என எதிர் கரியின் மருப்பின் முன் நிற்பரே - கலிங்:416/2
சதுரர்கள் மணி அகலத்து மருப்பு அவை சயமகள் களப முலை குறி ஒத்ததே - கலிங்:417/2
மேல்
முலைக்கு (1)
சயமகள் களப முலைக்கு அணியத்தகு தனி வடம் இவை என மத்தக முத்தினை - கலிங்:418/1
மேல்
முலைகள் (2)
இளக மா முலைகள் இணையறாமல் வரும் இயல் நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:53/2
வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து - கலிங்:66/1
மேல்
முலையில் (1)
விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள் - கலிங்:42/1
மேல்
முலையினொடும் (1)
முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி - கலிங்:277/2
மேல்
முழக்கம் (1)
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே - கலிங்:258/2
மேல்
முழக்கி (1)
உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே - கலிங்:356/2
மேல்
முழங்க (1)
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/2
மேல்
முழங்கி (7)
அந்தரம் நீங்கின என்ன அந்தர துந்துமி முழங்கி எழுந்தது ஆங்கே - கலிங்:235/2
ஒரு வலம்புரி தழங்கு ஒலி முழங்கி எழவே உடன் முழங்கு பணிலம் பல முழங்கி எழவே - கலிங்:283/1
ஒரு வலம்புரி தழங்கு ஒலி முழங்கி எழவே உடன் முழங்கு பணிலம் பல முழங்கி எழவே - கலிங்:283/1
பருவம் வந்து பல கொண்டல்கள் முழங்கி எழவே பலவிதங்களொடு பல்லியம் முழங்கி எழவே - கலிங்:283/2
பருவம் வந்து பல கொண்டல்கள் முழங்கி எழவே பலவிதங்களொடு பல்லியம் முழங்கி எழவே - கலிங்:283/2
இன்ன மா கடல் முழங்கி எழுகின்ற ஒலி என்று இம்பர் உம்பர் அறியாத பரிசு எங்கும் மிகவே - கலிங்:284/2
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
மேல்
முழங்கு (1)
ஒரு வலம்புரி தழங்கு ஒலி முழங்கி எழவே உடன் முழங்கு பணிலம் பல முழங்கி எழவே - கலிங்:283/1
மேல்
முழந்தாளின (1)
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின - கலிங்:136/2
மேல்
முழம் (1)
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின - கலிங்:136/2
மேல்
முழவாக (1)
கொல் வாய் ஓரி முழவாக கொள்ளிவாய்ப்பேய் குழவிக்கு - கலிங்:119/1
மேல்
முழு (1)
அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின் - கலிங்:129/1
மேல்
முழுத்தோல் (1)
முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற - கலிங்:567/1
மேல்
முழுது (1)
முரசு அறைக என்று அருளுதலும் முழுது உலகும் ஒரு நகருள் புகுந்தது ஒப்ப - கலிங்:279/1
மேல்
முழுதும் (2)
அந்தம் உட்பட இருக்கும் அ இருக்கின் வழியே ஆகிவந்த அ வருக்கமும் வருக்கம் முழுதும்
வந்த அட்டகமும் ஒட்டு அரிய சங்கிதைகளும் வாய்மை வேதியர்கள் தாம் விதி எனும் வகையுமே - கலிங்:183/1,2
இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன் - கலிங்:234/1
மேல்
முழுமதிக்கு (1)
மொய்த்து இலங்கிய தாரகை வானின் நீள் முகட்டு எழுந்த முழுமதிக்கு ஒப்பு என - கலிங்:316/1
மேல்
முழுமையும் (1)
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன - கலிங்:135/2
மேல்
முழுவதும் (1)
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம் - கலிங்:328/1
மேல்
முழை (2)
கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன - கலிங்:138/2
வழுதியர் வரை முழை நுழை வடிவு இது என மத கரி வயிறுகள் புக நுழைவன சில - கலிங்:588/1
மேல்
முழை-கண் (1)
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ - கலிங்:391/2
மேல்
முழைகள் (1)
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே - கலிங்:453/2
மேல்
முழைகளிலோ (1)
அறியும் முழைகளிலோ பதுங்கியது அரிய பிலனிடையோ மறைந்தது - கலிங்:449/1
மேல்
முள் (1)
முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில் - கலிங்:95/1
மேல்
முள்ளி (1)
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே - கலிங்:77/2
மேல்
முளிந்த (1)
முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே - கலிங்:78/2
மேல்
முளைக்கவே (1)
விளை கனல் விழிகளின் முளைக்கவே மினல் ஒளி கனலிடை எறிக்கவே - கலிங்:409/1
மேல்
முளைத்தன (1)
சொரி புனலிடை முளைத்தன துறைகளின் அறம் அனைத்துமே - கலிங்:265/2
மேல்
முளைத்து (1)
உந்தி சுழியின் முளைத்து எழுந்த உரோம பசும் தாள் ஒன்றில் இரண்டு - கலிங்:39/1
மேல்
முற்பட (1)
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட
அடு கரி நுதல் பட விட்ட கைப்படை அதனை ஒர் நொடி வரையில் பறிப்பரே - கலிங்:441/1,2
மேல்
முற்படின் (1)
எதிர் பறப்பன விடு நுகமொடு கடிது இவுளி முற்படின் இது பரிபவம் எனும் - கலிங்:352/2
மேல்
முற்றல் (1)
முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே - கலிங்:78/2
மேல்
முற்றிய (1)
முற்றிய நீள் மர பொதும்பின் முது பாம்பு புறப்படுமே - கலிங்:89/2
மேல்
முறம் (1)
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும் - கலிங்:172/1
மேல்
முறித்திட்டு (1)
பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை - கலிங்:154/1
மேல்
முறிந்தவே (1)
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/2
மேல்
முறிந்தன (1)
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/2
மேல்
முறிந்து (2)
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும் - கலிங்:172/1
கல்லை கறித்து பல் முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்-தம் - கலிங்:524/1
மேல்
முறிபட (1)
விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட எறிபட நெறிபடவே - கலிங்:400/1
மேல்
முறிய (1)
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/2
மேல்
முறுக்கிய (1)
எயிறுகள் உடைய பொருப்பை வலித்து இடை எதிரெதிர் இரு பணை இட்டு முறுக்கிய
கயிறுகள் இவை என அ கரட கரி கரமொடு கரம் எதிர் தெற்றி வலிக்கவே - கலிங்:414/1,2
மேல்
முறுகிய (1)
அறை கழல் இளையவர் முறுகிய சின அழல் அது வட அனல் எனவே - கலிங்:401/1
மேல்
முறுவல் (4)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் - கலிங்:49/1
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே - கலிங்:131/2
முறுவல் கொண்ட பொருள் அறிகிலம் சிறிதும் முனிவு கொண்டது இலை வதனமே - கலிங்:339/2
மேல்
முறை (2)
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே - கலிங்:281/2
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே - கலிங்:287/2
மேல்
முறைசெய்த (1)
எ வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும் இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும் - கலிங்:187/2
மேல்
முறைமுறை (1)
முறைமுறை முரசுகள் மொகுமொகு அதிர்வன முதிர் கடல் அதிர்வு எனவே - கலிங்:401/2
மேல்
முறையால் (1)
கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால்
அமல வேதம் இது காணும் இதில் ஆரண நிலத்து அமலனே அபயன் ஆக அறிக என்று அருளியே - கலிங்:184/1,2
மேல்
முறையிட்டே (1)
உரையில் குழறியும் உடலில் பதறியும் ஒருவர்க்கொருவர் முன் முறையிட்டே
அரையில் துகில் விழ அடைய சனபதி அடியில் புக விழு பொழுதத்தே - கலிங்:374/1,2
மேல்
முறையிட (1)
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம் - கலிங்:328/1
மேல்
முறையினொடும் (1)
முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி - கலிங்:277/2
மேல்
முன் (19)
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1
முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில் - கலிங்:95/1
மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர் - கலிங்:102/1
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன - கலிங்:135/1
விருதராச பயங்கரன் முன் ஒர் நாள் வென்ற சக்கர கோட்டத்திடை கொழும் - கலிங்:147/1
பண்டு தென்னவர் சாய அதற்கு முன் பணி செய் பூத கணங்கள் அனைத்தையும் - கலிங்:150/1
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் - கலிங்:181/2
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று - கலிங்:199/1
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை - கலிங்:233/2
வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே - கலிங்:296/2
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு - கலிங்:325/1
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம் - கலிங்:328/1
உரையில் குழறியும் உடலில் பதறியும் ஒருவர்க்கொருவர் முன் முறையிட்டே - கலிங்:374/1
இன்று சீறினும் நாளை அ சேனை முன்
நின்ற போழ்தினில் என்னை நினைத்தியால் - கலிங்:389/1,2
இள முலை எதிர் பொரும் அப்பொழுது இப்பொழுது என எதிர் கரியின் மருப்பின் முன் நிற்பரே - கலிங்:416/2
உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள - கலிங்:444/1
சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே - கலிங்:470/2
தோள் இரண்டால் வாணனை முன் துணித்த தோள் ஆயிரமே - கலிங்:543/2
வரு கூழ் பரணி களம் கண்டு வந்த பேயை முன் ஊட்டி - கலிங்:575/1
மேல்
முன்கை (1)
முன்கை எலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே - கலிங்:578/2
மேல்
முன்பு (3)
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின - கலிங்:136/2
கவந்தம் ஆட முன்பு தம் களிப்பொடு ஆடு பேய் இனம் - கலிங்:432/1
கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ - கலிங்:486/2
மேல்
முன்வரும் (1)
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன் - கலிங்:364/1
மேல்
முன்னம் (4)
என்னும் இத நல் மொழி எடுத்து இறைவி சொல்லுவதன் முன்னம் இகல் கண்டது ஒரு பேய் - கலிங்:301/1
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் - கலிங்:483/2
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் - கலிங்:499/2
முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை இன்னம் காண்-மின் - கலிங்:502/2
மேல்
முன்னமே (1)
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் - கலிங்:144/1
மேல்
முன்னே (2)
என் செய பாவிகாள் இங்கு இருப்பது அங்கு இருப்ப முன்னே
வன் சிறை கழுகும் பாறும் வயிறுகள் பீறி போன - கலிங்:304/1,2
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத - கலிங்:591/1
மேல்
முன்னொடு (1)
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் - கலிங்:497/1
மேல்
முனம் (1)
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் - கலிங்:191/1
மேல்
முனி (2)
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை - கலிங்:25/1
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே - கலிங்:185/2
மேல்
முனிந்த (1)
முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில் - கலிங்:95/1
மேல்
முனிபவர் (2)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர்
உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே - கலிங்:353/3,4
மேல்
முனிவர் (1)
தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே - கலிங்:595/2
மேல்
முனிவன் (1)
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே - கலிங்:185/2
மேல்
முனிவு (3)
ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை - கலிங்:70/1
முறுவல் கொண்ட பொருள் அறிகிலம் சிறிதும் முனிவு கொண்டது இலை வதனமே - கலிங்:339/2
முனிவு எனும் கனலை நீர் மூள வைத்திடு-மினோ - கலிங்:522/2
மேல்
முனிவும் (4)
நின் முனிவும் சுரகுருவின் முனிவும் அஞ்சி நிலை அரிது என்று இமகிரி புக்கு இருந்தேற்கு ஔவை - கலிங்:176/1
நின் முனிவும் சுரகுருவின் முனிவும் அஞ்சி நிலை அரிது என்று இமகிரி புக்கு இருந்தேற்கு ஔவை - கலிங்:176/1
தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே - கலிங்:176/2
தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே - கலிங்:176/2
மேல்
முனே (1)
நிழல் கொடி தழல் கதுவலின் கடிது ஒளித்த அவை நினைப்பவர் நினைப்பதன் முனே
அழல்படு புகை கொடி எடுத்தன புது கொடி அனைத்தினும் நிரைத்தது எனவே - கலிங்:412/1,2
மேல்
முனை (2)
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின் - கலிங்:352/1
முது குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் முனை களிற்றோர் செரு களத்து முந்து தங்கள் - கலிங்:502/1
மேல்
முனைக்கவே (1)
கன வரையொடு வரை முனைத்த போல் கட கரியொடு கரி முனைக்கவே
இன முகில் முகிலொடும் எதிர்த்த போல் இரதமொடு இரதமும் எதிர்க்கவே - கலிங்:407/1,2
மேல்
முனைகள் (1)
முனைகள் ஒட்டினர் முடியினை இடறுவ முடியின் முத்தினை விளை புகழ் என நில - கலிங்:351/1
மேல்
முனைத்த (1)
கன வரையொடு வரை முனைத்த போல் கட கரியொடு கரி முனைக்கவே - கலிங்:407/1
மேல்
முனையில் (1)
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் - கலிங்:436/1
மேல்
|
|
|