<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூக்கின 1
மூக்கு 1
மூட 1
மூடி 1
மூடிக்கொள 1
மூடு 1
மூரி 3
மூவுலகும் 1
மூழ்கி 1
மூழைகளா 1
மூள 1
மூளை 4
மூளையில் 1
மூளையை 1
மூன்று 1
மூன்றும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    மூக்கின (1)
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின
  ஆந்தை பாந்தி இருப்ப துரிஞ்சில் புக்கு அங்குமிங்கும் உலாவு செவியின - கலிங்:140/1,2

 மேல்
 
    மூக்கு (1)
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை - கலிங்:219/1

 மேல்
 
    மூட (1)
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும் - கலிங்:95/2

 மேல்
 
    மூடி (1)
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே - கலிங்:290/2

 மேல்
 
    மூடிக்கொள (1)
நெருங்கு ஆகவ செம் களத்தே தயங்கும் நிண போர்வை மூடிக்கொள
  கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ - கலிங்:486/1,2

 மேல்
 
    மூடு (1)
புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் - கலிங்:91/2

 மேல்
 
    மூரி (3)
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
முகில் அனைத்தும் அ தேர்கள் ஆனவோ மூரி வேலை போர்வீரர் ஆனவோ - கலிங்:347/2
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம் - கலிங்:359/2

 மேல்
 
    மூவுலகும் (1)
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை - கலிங்:233/2

 மேல்
 
    மூழ்கி (1)
அரிந்த தலை உடன் அமர்ந்தே ஆடு கழை அலை குருதி புனலின் மூழ்கி
  இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும் - கலிங்:118/1,2

 மேல்
 
    மூழைகளா (1)
இங்கே தலையின் வேல் பாய்ந்த இவை மூழைகளா கொள்ளீரே - கலிங்:563/2

 மேல்
 
    மூள (1)
முனிவு எனும் கனலை நீர் மூள வைத்திடு-மினோ - கலிங்:522/2

 மேல்
 
    மூளை (4)
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் - கலிங்:145/2
எண்ணெய் போக வெண் மூளை என்னும் களியால் மயிர் குழப்பி - கலிங்:507/1
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை
  தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா - கலிங்:519/1,2
முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற - கலிங்:567/1

 மேல்
 
    மூளையில் (1)
இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார் - கலிங்:166/2

 மேல்
 
    மூளையை (1)
முன்கை எலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே - கலிங்:578/2

 மேல்
 
    மூன்று (1)
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் - கலிங்:194/1

 மேல்
 
    மூன்றும் (1)
தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் தாம் இனிதா படைத்துக்கொண்டு - கலிங்:580/1

 மேல்