<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

பெ - முதல் சொற்கள்
பெட்டகம் 1
பெடை 1
பெண் 1
பெண்ணை 1
பெய் 2
பெய்து 1
பெயர்தும் 1
பெயர்ந்து 1
பெயல் 1
பெரியது 1
பெரியன 1
பெரு 3
பெருக்க 1
பெருக்கி 1
பெருத்ததோ 1
பெருத்தலின் 1
பெருந்தேவி 1
பெரும் 12
பெருமான் 1
பெருமை 1
பெற்ற 1
பெற்றம் 1
பெற்றவர் 1
பெற்றனம் 2
பெற்றார்க்கு 1
பெற்றிலம் 1
பெற்று 1
பெற்றெடுத்த 1
பெற 7
பெறல் 1
பெறவும் 1
பெறவே 4
பெறாது 2
பெறின் 1
பெறினும் 2
பெறு 3
பெறுகிலர் 1
பெறுதுமோ 1
பெறும் 1
	
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
  பெட்டகம் (1)
ஆடல் அயம் இவை மற்று இவை ஆதி முடியொடு பெட்டகம்
 ஈரம் உடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய - கலிங்:334/2,3

 மேல்
 
  பெடை (1)
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:25/2

 மேல்
 
  பெண் (1)
பிழைக்க வந்தனம் பொறுத்து எமக்கு அருள்செய் பெண் அணங்கு என வணங்கவே - கலிங்:159/2

 மேல்
 
  பெண்ணை (1)
நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே - கலிங்:367/2

 மேல்
 
  பெய் (2)
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன - கலிங்:135/1
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே - கலிங்:287/1

 மேல்
 
  பெய்து (1)
இந்த உரல்-கண் இ அரிசி எல்லாம் பெய்து கொல் யானை - கலிங்:526/1

 மேல்
 
  பெயர்தும் (1)
இவை கவர்ந்த பின் எழு கலிங்கர்-தம் இறையையும் கொடு பெயர்தும் என்று - கலிங்:460/1

 மேல்
 
  பெயர்ந்து (1)
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் - கலிங்:145/2

 மேல்
 
  பெயல் (1)
பெயல் ஆறு பரந்து நிறைந்து வரும் பேராறும் இழிந்தது பிற்படவே - கலிங்:368/2

 மேல்
 
  பெரியது (1)
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:492/2

 மேல்
 
  பெரியன (1)
விரல் புட்டில் அவை சிறிய வில் கூடை பெரியன கொண்டு - கலிங்:547/1

 மேல்
 
  பெரு (3)
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன - கலிங்:135/1
பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் - கலிங்:242/2
அரணிய மந்திர அனல்கள் அவை உதவும் பெரு மழையே - கலிங்:271/2

 மேல்
 
  பெருக்க (1)
பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே - கலிங்:584/1

 மேல்
 
  பெருக்கி (1)
கலத்தில் கொள்ள குறையாத கலங்கள் பெருக்கி கொள்ளீரே - கலிங்:560/2

 மேல்
 
  பெருத்ததோ (1)
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ - கலிங்:348/1

 மேல்
 
  பெருத்தலின் (1)
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ - கலிங்:348/1

 மேல்
 
  பெருந்தேவி (1)
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும் - கலிங்:212/1

 மேல்
 
  பெரும் (12)
எறிதரும் பெரும் கணைமரங்கள் கொண்டு எழுது தூணொடு உத்திரம் இயற்றியே - கலிங்:100/2
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2
கடக்கம் அன்று அபயன் வென்று வென்றிகொள் கள பெரும் பரணி இன்று பார் - கலிங்:164/2
ஒரு கரு வெம் கலி கழுவி உலவு பெரும் புகழ் நிழலில் - கலிங்:269/2
பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும் - கலிங்:306/2
பிள்ளை வீழ வீழவும் பெரும் துணங்கை கொட்டுமே - கலிங்:309/1
திருமடந்தையும் போல் பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்து இருக்கவே - கலிங்:320/2
நாடகாதி நிருத்தம் அனைத்தினும் நால் வகை பெரும் பண்ணினும் எண்ணிய - கலிங்:321/1
இரை வேட்ட பெரும் புலி போல் இகல் மேல் செல்ல - கலிங்:366/4
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ - கலிங்:494/2
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் - கலிங்:497/1
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே - கலிங்:527/2

 மேல்
 
  பெருமான் (1)
பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே - கலிங்:530/2

 மேல்
 
  பெருமை (1)
எ அணங்கும் அடி வணங்க இ பெருமை படைத்து உடைய - கலிங்:134/1

 மேல்
 
  பெற்ற (1)
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1

 மேல்
 
  பெற்றம் (1)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1

 மேல்
 
  பெற்றவர் (1)
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே - கலிங்:423/2

 மேல்
 
  பெற்றனம் (2)
சுற்ற நிண துகில் பெற்றனம் என்று சுலாவு வெறுங்கையவே - கலிங்:170/1
சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை - கலிங்:462/1

 மேல்
 
  பெற்றார்க்கு (1)
பதம் பெற்றார்க்கு பகல் விளக்கும் பா ஆடையுமா கொள்ளீரே - கலிங்:561/2

 மேல்
 
  பெற்றிலம் (1)
சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை - கலிங்:462/1

 மேல்
 
  பெற்று (1)
கதம் பெற்று ஆர்க்கும் செறுநர் விழி கனலும் நிணமும் அணங்கின்-பால் - கலிங்:561/1

 மேல்
 
  பெற்றெடுத்த (1)
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை - கலிங்:210/2

 மேல்
 
  பெற (7)
பகல் இழந்த நிறை பெற முயன்று மொழி பதறுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:29/2
கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் - கலிங்:150/2
அருத்தியின் பிழை நினைத்த கூளியை அறுத்து அவன் தலை அவன் பெற
 பொருத்தி அ பிழை பொறுத்தனம் பிழை பொறாதது இல்லை இனி என்னவே - கலிங்:160/1,2
பத்தொடு ஆறுநூறாயிரம் பெற பண்டு பட்டினப்பாலை கொண்டதும் - கலிங்:198/2
அழகின் மேல் அழகு பெற அணி அனைத்தும் அணிந்தருளி கணித நூலில் - கலிங்:280/1
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே - கலிங்:399/1
இசை பெற உயிரையும் இகழ்தரும் இளையவர் எறி சுறவு இனம் எனவே - கலிங்:399/2

 மேல்
 
  பெறல் (1)
நிறை வாழ்வை பெறல் நமக்கும் அணித்து என்று நில பாவை களிப்ப விந்தத்து - கலிங்:244/1

 மேல்
 
  பெறவும் (1)
பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும் - கலிங்:306/2

 மேல்
 
  பெறவே (4)
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே - கலிங்:281/1
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே
 கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே - கலிங்:281/1,2
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே - கலிங்:281/2
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே - கலிங்:281/2

 மேல்
 
  பெறாது (2)
பாதவம் புனல் பெறாது உணங்குவன பருகும் நம்மை என வெருவியே - கலிங்:81/2
குன்று இவை செரு தொழில் பெறாது நெடு நாள் மெலிவு கொண்டபடி கண்டும் இலையோ - கலிங்:390/2

 மேல்
 
  பெறின் (1)
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின்
 எதிர் பறப்பன விடு நுகமொடு கடிது இவுளி முற்படின் இது பரிபவம் எனும் - கலிங்:352/1,2

 மேல்
 
  பெறினும் (2)
நனவினில் சயதரன் புணரவே பெறினும் நீர் நனவு என தெளிவுறாது அதனையும் பழைய அ - கலிங்:35/1
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் - கலிங்:83/1

 மேல்
 
  பெறு (3)
கொல் தலம் பெறு கூழ் இலம் எங்களை கொள்வதே பணி என்று குரைப்பன - கலிங்:137/2
கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் - கலிங்:180/2
எளிது என இரை பெறு புலி என வலியினொடு எடும் எடும் எனவே - கலிங்:403/2

 மேல்
 
  பெறுகிலர் (1)
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட - கலிங்:441/1

 மேல்
 
  பெறுதுமோ (1)
சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த - கலிங்:216/1

 மேல்
 
  பெறும் (1)
காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே - கலிங்:324/2

 மேல்