|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
துகள் (1)
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு - கலிங்:351/2
மேல்
துகள்படவே (1)
அடவிகள் பொடிபட அருவிகள் அனல்பட அரு வரை துகள்படவே - கலிங்:400/2
மேல்
துகில் (5)
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை - கலிங்:25/1
நிலவை துகில் என்று எடுத்து உடுப்பீர் நீள் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:34/2
சுற்ற நிண துகில் பெற்றனம் என்று சுலாவு வெறுங்கையவே - கலிங்:170/1
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே - கலிங்:289/2
அரையில் துகில் விழ அடைய சனபதி அடியில் புக விழு பொழுதத்தே - கலிங்:374/2
மேல்
துகிலால் (1)
மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே - கலிங்:566/2
மேல்
துகிலின் (1)
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே - கலிங்:289/2
மேல்
துகிலினை (1)
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:25/1,2
மேல்
துகிலொடே (1)
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:46/1,2
மேல்
துகைப்பன் (1)
அடைய அ திசை பகை துகைப்பன் என்று ஆசை கொண்டு அடல் தொண்டைமான் - கலிங்:342/1
மேல்
துங்க (2)
தோய கலவி அமுது அளிப்பீர் துங்க கபாடம் திற-மினோ - கலிங்:61/2
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன் - கலிங்:364/1
மேல்
துங்கபத்திரை (1)
துங்கபத்திரை செம் களத்திடை சோள சேகரன் வாள் எறிந்த போர் - கலிங்:103/1
மேல்
துங்கன் (7)
தனி ஆழி-தனை நடத்தும் சய_துங்கன் வாழ்க என்றே - கலிங்:8/2
எனது அடங்க இனி வளவர்_துங்கன் அருள் என மகிழ்ந்து இரவு கனவிடை - கலிங்:26/1
உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை சய_துங்கன் மரபு கீர்த்தி - கலிங்:211/1
வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே - கலிங்:296/2
சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே - கலிங்:393/2
நாற்கடலை கவித்த குடை நர_துங்கன் அமுதம் எழ - கலிங்:542/1
தாள் இரண்டால் நில வேந்தர் தலை தாங்கும் சய_துங்கன் - கலிங்:543/1
மேல்
துங்கனொடு (1)
கூடிய இன் கனவு-அதனிலே கொடை நர_துங்கனொடு அணைவுறாது - கலிங்:24/1
மேல்
துஞ்சலுக்கு (1)
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் - கலிங்:144/1
மேல்
துஞ்சி (2)
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் - கலிங்:165/1
மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர் - கலிங்:430/1
மேல்
துடிப்ப (2)
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் - கலிங்:165/1
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை - கலிங்:219/1
மேல்
துடியளவு (1)
சூதளவு அளவு எனும் இள முலை துடியளவு அளவு எனும் நுண் இடை - கலிங்:21/1
மேல்
துடுப்பா (1)
கள பரணி கூழ் பொங்கி வழியாமல் கை துடுப்பா
அளப்பரிய குளப்பு கால் அகப்பைகளாக கொள்ளீரே - கலிங்:548/1,2
மேல்
துடுப்பால் (1)
அழலை கையில் கொள்ளாமே அடுப்பை அவித்து கை துடுப்பால்
சுழல சுழல புடை எங்கும் துழாவி துழாவி கொள்ளீரே - கலிங்:550/1,2
மேல்
துடைத்து (1)
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே - கலிங்:571/2
மேல்
துணங்கை (1)
பிள்ளை வீழ வீழவும் பெரும் துணங்கை கொட்டுமே - கலிங்:309/1
மேல்
துணி (7)
உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே - கலிங்:421/2
உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே - கலிங்:421/2
ஒரு துணி கருதும் இலக்கை அழித்தன உருவிய பிறை முக அ பகழி தலை - கலிங்:422/1
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே - கலிங்:423/2
நிறை சரம் நிமிர விட துணி உற்றவர் நெறியினை எறி ஒடிகிற்பவர் ஒத்து எதிர் - கலிங்:424/1
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன - கலிங்:446/1
குறைத்தலை துணி கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்-மினோ - கலிங்:497/2
மேல்
துணிகள் (1)
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/2
மேல்
துணித்த (1)
தோள் இரண்டால் வாணனை முன் துணித்த தோள் ஆயிரமே - கலிங்:543/2
மேல்
துணித்து (3)
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை - கலிங்:157/1
அரிது அரிது இதுவும் என பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்துமே - கலிங்:422/2
அடியொடு முடிகள் துணித்து விழ புகும் அளவு அரி தொடை சமரத்தொடு அணைத்தனர் - கலிங்:423/1
மேல்
துணிந்து (2)
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் - கலிங்:165/1
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் - கலிங்:497/1
மேல்
துணிபடும் (1)
கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இரு புடை கிடக்கவே - கலிங்:410/2
மேல்
துணியிட்டு (1)
எடுத்து கைகள் வேகாமே இவுளி துணியிட்டு இரு மருங்கும் - கலிங்:552/1
மேல்
துணியை (1)
துதிக்கை துணியை பல்லின் மேல் செவ்வே நிறுத்தி துதிக்கையின் - கலிங்:573/1
மேல்
துணை (2)
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே - கலிங்:17/2
இடத்திடை வலத்திடை இருத்திய துணை கரம் நிகர்த்தன அடுத்த கரியின் - கலிங்:413/1
மேல்
துதிக்கை (2)
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார் - கலிங்:162/1
துதிக்கை துணியை பல்லின் மேல் செவ்வே நிறுத்தி துதிக்கையின் - கலிங்:573/1
மேல்
துதிக்கையின் (1)
துதிக்கை துணியை பல்லின் மேல் செவ்வே நிறுத்தி துதிக்கையின்
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே - கலிங்:573/1,2
மேல்
துந்துமி (1)
அந்தரம் நீங்கின என்ன அந்தர துந்துமி முழங்கி எழுந்தது ஆங்கே - கலிங்:235/2
மேல்
துமிந்தர் (1)
கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே - கலிங்:330/1
மேல்
துய்ய (1)
சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் - கலிங்:322/1
மேல்
துயில் (4)
சுரி குழல் அசைவுற அசைவுற துயில் எழு மயில் என மயில் என - கலிங்:23/1
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் - கலிங்:28/1
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:28/2
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை - கலிங்:33/1
மேல்
துயில்வீர் (1)
ஆக அமளி மிசை துயில்வீர் அம் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:37/2
மேல்
துயிலும் (1)
அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட உருவாய் அரவணை துயிலும் ஆதி முதலாக அபயன் - கலிங்:185/1
மேல்
துயிலும்படி (1)
அரி துயிலும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின் - கலிங்:269/1
மேல்
துயிலே (1)
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் - கலிங்:28/1
மேல்
துரக (5)
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் - கலிங்:165/1
கடுகிய வட அனலத்தினை வைத்தது களம் உறு துரக கணத்தின் முகத்திலே - கலிங்:415/2
களம் உறு துரக கணத்தின் முகத்து எதிர் கறுவிலர் சிலர் கலவி தலை நித்தில - கலிங்:416/1
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/2
துள்ளி வெம் களனில் வீழ் துரக வெண் பல் எனும் - கலிங்:521/1
மேல்
துரங்கம் (1)
ஆடல் துரங்கம் பிடித்து ஆளை ஆளோடு அடித்து புடைத்து அ இரும் புண்ணின் நீர் - கலிங்:485/1
மேல்
துரிஞ்சில் (1)
ஆந்தை பாந்தி இருப்ப துரிஞ்சில் புக்கு அங்குமிங்கும் உலாவு செவியின - கலிங்:140/2
மேல்
துருக்கர் (1)
குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே - கலிங்:332/2
மேல்
துருத்தியாளர் (1)
தோளில் இட்டு நீர் விடும் துருத்தியாளர் ஒப்பரே - கலிங்:435/2
மேல்
துலாம் (1)
கடிது அழிந்து போர் மிதிலையில் படும் கரி மருப்பினை திரள் துலாம் எனும் - கலிங்:101/1
மேல்
துலை (1)
உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும் ஒருவன் ஒரு துலை புறவொடு ஒக்க நிறை புக்க புகழும் - கலிங்:190/2
மேல்
துவர் (2)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து - கலிங்:99/1
மேல்
துழாவி (2)
சுழல சுழல புடை எங்கும் துழாவி துழாவி கொள்ளீரே - கலிங்:550/2
சுழல சுழல புடை எங்கும் துழாவி துழாவி கொள்ளீரே - கலிங்:550/2
மேல்
துழாவிடுமே (1)
எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே - கலிங்:169/2
மேல்
துள்ளி (3)
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1
துள்ளி வெம் களனில் வீழ் துரக வெண் பல் எனும் - கலிங்:521/1
உப்பு பார்க்க ஒரு துள்ளி உள்ளங்கையில் கொள்ளீரே - கலிங்:549/2
மேல்
துளியொடு (1)
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு
கனை கடல் திரை நிரை என விரைவொடு கடல் இடத்தினை வலம் இடம் வருவன - கலிங்:351/2,3
மேல்
துளுநாடியர் (1)
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின் - கலிங்:41/2
மேல்
துளும்பர்களே (1)
கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே - கலிங்:330/1,2
மேல்
துறந்து (1)
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய் - கலிங்:92/1
மேல்
துறை (4)
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே - கலிங்:239/2
பணி பணத்து உறை பார்க்கு ஒரு நாயகன் பல் கலை துறை நாவில் இருந்தவன் - கலிங்:319/1
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக - கலிங்:369/2
மேல்
துறை-தொறும் (1)
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் - கலிங்:144/1
மேல்
துறைகள் (1)
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே - கலிங்:258/2
மேல்
துறைகளின் (1)
சொரி புனலிடை முளைத்தன துறைகளின் அறம் அனைத்துமே - கலிங்:265/2
மேல்
துறைத்தலை (1)
பொரு துறைத்தலை புகுந்து முசுகுந்தன் இமையோர் புரம் அடங்கலும் அரண் செய்து புரந்த புகழும் - கலிங்:189/2
மேல்
துறைவனை (1)
பொன்னி துறைவனை வாழ்த்தினவே பொருநை கரையனை வாழ்த்தினவே - கலிங்:592/1
மேல்
|
|
|