<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

உ - முதல் சொற்கள்
உக 6
உகக்கடை 1
உகத்தின் 1
உகந்து 1
உகம் 1
உகவே 1
உகளத்தினளே 1
உகிர் 3
உகிரின் 2
உகிரை 1
உகு 1
உகைத்த 1
உகைத்தருளியே 1
உகைத்தவன் 1
உகைத்து 5
உகைத்தே 2
உங்கள் 3
உங்களை 1
உச்சி 1
உட்கினர் 1
உட்பட 1
உட்புக்கு 1
உட்புகின் 1
உடம்பின 1
உடம்பினை 1
உடல் 23
உடல்கள் 3
உடல்களும் 1
உடலம்-தன்னை 1
உடலால் 1
உடலிய 1
உடலில் 1
உடலின் 3
உடலினில் 1
உடலு 1
உடலே 1
உடன் 6
உடன்றன 1
உடன்றிட 1
உடனிருந்த 1
உடனே 7
உடு 1
உடுக்கையளே 1
உடுத்ததே 1
உடுத்து 1
உடுப்பீர் 1
உடும்பும் 1
உடை 8
உடைத்தரோ 1
உடைத்து 1
உடைந்தமை 2
உடைபடும் 1
உடைய 9
உடையவர் 2
உடையன 5
உடையான் 2
உடையீர் 1
உடைவாளை 1
உண்க 1
உண்ட 2
உண்டன 1
உண்டாகும் 1
உண்டு 4
உண்டுழி 1
உண்டோ 1
உண்ண 9
உண்ணீரே 8
உண்ணும் 1
உண்ணுமே 1
உண்பதனுக்கு 1
உண்பதோர் 1
உண 2
உணங்கள் 1
உணங்கு 2
உணங்குவன 1
உணர்த்துவான் 1
உணர்ந்தருளும் 1
உணர்வையும் 1
உணவே 1
உத்தமனை 1
உத்தர 1
உத்தரிய 1
உத்திரம் 1
உதகை 1
உதட்டின 1
உதட்டினுடனே 1
உதடுகளில் 1
உதடுகளும் 1
உதய 1
உதயத்து 1
உதயபானு 1
உதயம் 2
உதரத்தினளே 1
உதரம் 1
உதவாதவரை 1
உதவி 1
உதவும் 2
உதித்த 1
உதித்தான் 1
உதித்திடும் 1
உதித்து 1
உதியர் 5
உதியன் 1
உதிர்ந்த 2
உதிர 3
உதிரத்தே 1
உதிரம் 1
உதிரமே 1
உதிரும் 1
உந்தவே 1
உந்தி 2
உந்திய 1
உந்தின 1
உந்து 1
உப்பு 2
உபகாரம் 1
உபநிடதம் 1
உபய 5
உபயகுலோத்தமன் 1
உபயம் 1
உபாயம் 1
உம் 1
உம்பர் 1
உம்பர்-தம் 1
உமக்கு 2
உமது 1
உமிழ் 2
உமிழ்வன 1
உய்த்து 1
உய்ந்து 2
உய்ப்பவர் 1
உய்ய 2
உய்யமாட்டேம் 1
உயக்கொள 1
உயர் 6
உயர்த்த 4
உயர்த்தவன் 1
உயர்ந்த 1
உயரத்து 1
உயிர் 5
உயிர்களே 1
உயிர்த்து 1
உயிர்ப்பன 1
உயிரும் 1
உயிரை 3
உயிரையும் 2
உரக 1
உரகத்தினளே 1
உரகர்-தம் 1
உரத்தின் 1
உரத்தினில் 2
உரத்து 1
உரம் 1
உரல் 2
உரல்-கண் 1
உரல்கள் 1
உரவோன் 2
உரி 2
உரிந்த 1
உரிப்புண்ட 1
உரிமை 3
உரிமையினில் 1
உரிமையும் 1
உரிய 1
உரியாள் 1
உரிவை 1
உருக 1
உருகி 3
உருகுதலுற்று 1
உருத்திரயோகினி 1
உரும் 4
உருவாய் 2
உருவி 3
உருவிய 2
உருவும் 1
உருள் 1
உருள்வன 1
உருள 1
உருளன 1
உரை 3
உரை-தனக்கு 1
உரைக்க 3
உரைக்கும் 3
உரைகள் 1
உரைசெய் 3
உரைசெய்த 1
உரைசெய்தவரவர்கள் 1
உரைசெய்தனை 1
உரைசெய்தாய் 1
உரைசெய்ய 1
உரைசெய்யின் 1
உரைசெயாது 1
உரைசெயும் 1
உரைத்த 6
உரைத்தருளவே 1
உரைத்தலும் 1
உரைத்தன 1
உரைத்தனள் 1
உரைத்து 1
உரைப்ப 3
உரைப்படி 1
உரைப்பரே 1
உரைப்பவர்கள் 1
உரைப்போர்க்கு 1
உரையில் 1
உரோம 1
உலக்கை 2
உலக்கை-தனை 1
உலகத்தவர்-தமக்கு 1
உலகத்து 2
உலகம் 1
உலகில் 2
உலகு 12
உலகுக்கு 1
உலகுகள் 3
உலகும் 2
உலகை 1
உலகொடு 2
உலர்ந்த 4
உலர்ந்து 2
உலவு 3
உலாவு 1
உலை 1
உலைகள்-தொறும் 1
உவட்டி 1
உவணம் 2
உவந்த 1
உவந்து 2
உவப்பது 1
உவமை 2
உவை 1
உவையும் 2
உவையுவை 1
உழக்கும் 1
உழந்து 1
உழப்பி 1
உழல்பவர் 1
உழும் 1
உள் 5
உள்ள 1
உள்ளங்கையில் 1
உள்ளபடி 1
உள்ளி 1
உள்ளியும் 1
உள்ளும் 1
உள 20
உளதாகவே 1
உளது 3
உளம் 1
உளர் 2
உளர்-கொல் 1
உளவாகிய 1
உளவாய் 3
உளவால் 1
உற்ற 3
உற்றவர் 1
உற்றவே 1
உற 1
உறங்கிடும் 1
உறங்குதலை 1
உறங்கும் 1
உறவாடுவீர் 1
உறவாய் 1
உறா 1
உறாமே 1
உறி 1
உறு 6
உறுதி 1
உறுதியே 1
உறுப்பு 2
உறுவது 2
உறை 2
உறையும் 1
உறையும்படி 1
உறைவாளை 1
உன் 1
உன்னுடைய 1
உனக்கு 2
உனது 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    உக (6)
மீனம் புகு கொடி மீனவர் விழி அம்பு உக ஓடி - கலிங்:40/1
அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன அயர்த்தன பசித்த பசியே - கலிங்:229/2
அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன அயர்த்தன பசித்த பசியே - கலிங்:229/2
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே - கலிங்:251/2
வளை முக நுரை உக வரு பரி கடலிடை மறி திரை என எழவே - கலிங்:396/2
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக
  கரும் சேவகம் செய்து செஞ்சோறு அற செய்த கைம்மாறு காண்-மின்களோ - கலிங்:490/1,2

 மேல்
 
    உகக்கடை (1)
முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு - கலிங்:415/1

 மேல்
 
    உகத்தின் (1)
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல் - கலிங்:355/1

 மேல்
 
    உகந்து (1)
இகல் இழந்து அரசர் தொழ வரும் பவனி இரவு உகந்து அருளும் கனவினில் - கலிங்:29/1

 மேல்
 
    உகம் (1)
உகம் நான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும் - கலிங்:5/1

 மேல்
 
    உகவே (1)
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே
  வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே - கலிங்:402/1,2

 மேல்
 
    உகளத்தினளே (1)
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே - கலிங்:122/2

 மேல்
 
    உகிர் (3)
வளர்வது ஒர் பதத்தினிடை மத கரி முகத்தினிடை வளை உகிர் மடுத்து விளையாடு - கலிங்:250/1
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை - கலிங்:273/1
வாய் அம்புகளாம் உகிர் கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே - கலிங்:506/1

 மேல்
 
    உகிரின் (2)
வாய் அகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண்டு ஓட மற்று அதனை வள் உகிரின் பருந்து கோணல் - கலிங்:500/1
உள்ளியும் கிள்ளி இட்டு உகிரின் உப்பு இடு-மினோ - கலிங்:521/2

 மேல்
 
    உகிரை (1)
வாய் அம்புகளாம் உகிர் கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே - கலிங்:506/1

 மேல்
 
    உகு (1)
ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ - கலிங்:86/2

 மேல்
 
    உகைத்த (1)
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல் - கலிங்:355/1

 மேல்
 
    உகைத்தருளியே (1)
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே - கலிங்:251/2

 மேல்
 
    உகைத்தவன் (1)
கிம்புரி பணை கிரி உகைத்தவன் கிரிகள் எட்டினும் புலி பொறித்ததும் - கலிங்:203/2

 மேல்
 
    உகைத்து (5)
மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர் - கலிங்:102/1
ஆனை சாய அடு பரி ஒன்று உகைத்து ஐம்படை பருவத்து அபயன் பொரும் - கலிங்:149/1
வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும் - கலிங்:200/1
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான் - கலிங்:246/1
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன் - கலிங்:257/1

 மேல்
 
    உகைத்தே (2)
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான் - கலிங்:245/1
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே - கலிங்:245/2

 மேல்
 
    உங்கள் (3)
கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால் - கலிங்:184/1
உங்கள் குறியும் வட கலிங்கத்து உள்ள குறியும் உமக்கு அழகே - கலிங்:226/1
பரிசு படவே கலம் பரப்பி பந்தி பந்தி பட உங்கள்
  வரிசையுடனே இருந்து உண்ண வாரீர் கூழை வாரீரே - கலிங்:562/1,2

 மேல்
 
    உங்களை (1)
ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை
  தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:70/1,2

 மேல்
 
    உச்சி (1)
உலக்கை உச்சி தைத்த போது உழும் கலப்பை ஒக்குமே - கலிங்:427/2

 மேல்
 
    உட்கினர் (1)
எமது என இரு கண் விழிக்க உட்கினர் என விடுகிலர் படைஞர்க்கு வெட்கியே - கலிங்:442/2

 மேல்
 
    உட்பட (1)
அந்தம் உட்பட இருக்கும் அ இருக்கின் வழியே ஆகிவந்த அ வருக்கமும் வருக்கம் முழுதும் - கலிங்:183/1

 மேல்
 
    உட்புக்கு (1)
ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய - கலிங்:139/2

 மேல்
 
    உட்புகின் (1)
கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன - கலிங்:138/2

 மேல்
 
    உடம்பின (1)
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின
  கொல் தலம் பெறு கூழ் இலம் எங்களை கொள்வதே பணி என்று குரைப்பன - கலிங்:137/1,2

 மேல்
 
    உடம்பினை (1)
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் - கலிங்:213/2

 மேல்
 
    உடல் (23)
ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ - கலிங்:86/2
சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை - கலிங்:91/1
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2
இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும் - கலிங்:118/2
உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய - கலிங்:131/1
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின - கலிங்:140/1
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் - கலிங்:165/1
கயிற்று உறி ஒப்பதொர் பேய் வறிதே உடல் கௌவினது ஒக்க விரைந்து - கலிங்:171/1
உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும் ஒருவன் ஒரு துலை புறவொடு ஒக்க நிறை புக்க புகழும் - கலிங்:190/2
வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் - கலிங்:215/1
ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ - கலிங்:224/2
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர - கலிங்:350/3
உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர் - கலிங்:353/3
தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே - கலிங்:354/2
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே - கலிங்:402/1
கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இரு புடை கிடக்கவே - கலிங்:410/2
உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே - கலிங்:421/2
அறை கழல் விருதர் செருக்கு அற வெட்டலின் அவர் உடல் இரு வகிர் பட்டன முட்டவே - கலிங்:424/2
சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே - கலிங்:470/2
சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி - கலிங்:478/1
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:493/2
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர - கலிங்:527/1
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே - கலிங்:581/1

 மேல்
 
    உடல்கள் (3)
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் - கலிங்:302/2
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் - கலிங்:302/2
சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே - கலிங்:470/2

 மேல்
 
    உடல்களும் (1)
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:496/2

 மேல்
 
    உடலம்-தன்னை (1)
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு - கலிங்:483/1

 மேல்
 
    உடலால் (1)
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு - கலிங்:483/1

 மேல்
 
    உடலிய (1)
உலகுகள் பருகுவது ஒரு கடல் இது என உடலிய படை எழவே - கலிங்:398/2

 மேல்
 
    உடலில் (1)
உரையில் குழறியும் உடலில் பதறியும் ஒருவர்க்கொருவர் முன் முறையிட்டே - கலிங்:374/1

 மேல்
 
    உடலின் (3)
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை ஓட அஞ்சினர் - கலிங்:452/1
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை - கலிங்:475/1

 மேல்
 
    உடலினில் (1)
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே - கலிங்:402/1

 மேல்
 
    உடலு (1)
உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள - கலிங்:444/1

 மேல்
 
    உடலே (1)
கடன் அமைந்தது கரும் தலை அரிந்த பொழுதே கடவது ஒன்றும் இலை என்று விளையாடும் உடலே
  உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/1,2

 மேல்
 
    உடன் (6)
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2
அரிந்த தலை உடன் அமர்ந்தே ஆடு கழை அலை குருதி புனலின் மூழ்கி - கலிங்:118/1
ஒரு வலம்புரி தழங்கு ஒலி முழங்கி எழவே உடன் முழங்கு பணிலம் பல முழங்கி எழவே - கலிங்:283/1
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமை தியாகவல்லி நிறை செல்வி உடன் மல்கி வரவே - கலிங்:286/2
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை - கலிங்:475/1

 மேல்
 
    உடன்றன (1)
மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடு படை வேழம் என்று இருள் - கலிங்:453/1

 மேல்
 
    உடன்றிட (1)
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2

 மேல்
 
    உடனிருந்த (1)
என்ற போதில் இவை மெய் எனா உடனிருந்த பேய் பதறி ஒன்றன் மேல் - கலிங்:168/1

 மேல்
 
    உடனே (7)
வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:44/2
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/2
அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்ரமேயம் எனும் மெய்ப்ரியமதாக உடனே
  பதமும் இ பதம் வகுக்க வரு பாதம் அதுவும் பாதமான சிலர் பார் புகழ வந்த அவையும் - கலிங்:182/1,2
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர - கலிங்:286/1
நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே - கலிங்:367/2
கலிங்கம் அவை ஏழினும் எழுந்தது ஒரு பேர் ஒலி கறங்கு கடல் ஏழும் உடனே
  மலங்கி எழு பேர் ஒலி என திசை திகைப்புற வரும் தொனி எழுந்த பொழுதே - கலிங்:395/1,2

 மேல்
 
    உடு (1)
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே - கலிங்:122/2

 மேல்
 
    உடுக்கையளே (1)
உரி மிசை அ கரியின் குடரொடு கட்செவி இட்டு ஒரு புரி இட்டு இறுக புனையும் உடுக்கையளே - கலிங்:126/2

 மேல்
 
    உடுத்ததே (1)
ஒரு கலிங்கம் ஒருவர் உடுத்ததே - கலிங்:454/2

 மேல்
 
    உடுத்து (1)
குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து - கலிங்:468/1

 மேல்
 
    உடுப்பீர் (1)
நிலவை துகில் என்று எடுத்து உடுப்பீர் நீள் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:34/2

 மேல்
 
    உடும்பும் (1)
ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய - கலிங்:139/2

 மேல்
 
    உடை (8)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை
  சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே - கலிங்:17/1,2
அலை நாடிய புனல் நாடு உடை அபயர்க்கு இடு திறையா - கலிங்:41/1
பரிவு அகல தழுவி புணர் கலவிக்கு உருகி படர் சடை முக்கண் உடை பரமர் கொடுத்த களிற்று - கலிங்:126/1
சக்கு ஆயிரம் உடை களிறு வாகனம் என தான் இருந்து பொரு தானவரை வென்ற சயமும் - கலிங்:188/2
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் - கலிங்:299/1
உழந்து தாம் உடை மண்டலம் தண்டினால் - கலிங்:387/1
அறியீரோ சாக்கியரை உடை கண்டான் என் அப்புறம் என்று இயம்பிடுவர் அநேகர் ஆங்கே - கலிங்:468/2
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் - கலிங்:480/2

 மேல்
 
    உடைத்தரோ (1)
பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ - கலிங்:120/2

 மேல்
 
    உடைத்து (1)
தான் அரணம் உடைத்து என்று கருதாது வருவதும் அ தண்டு போலும் - கலிங்:377/2

 மேல்
 
    உடைந்தமை (2)
தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே - கலிங்:529/2
தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே - கலிங்:529/2

 மேல்
 
    உடைபடும் (1)
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின் - கலிங்:352/1

 மேல்
 
    உடைய (9)
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே - கலிங்:5/2
ஈரிரண்டு படைத்து உடைய இரவி குலோத்தமன் அபயன் வாழ்க என்றே - கலிங்:12/2
எ அணங்கும் அடி வணங்க இ பெருமை படைத்து உடைய
  அ அணங்கை அகலாத அலகைகளை இனி பகர்வாம் - கலிங்:134/1,2
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும் - கலிங்:212/1
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும் - கலிங்:212/1
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் - கலிங்:212/2
காப்பு எலாம் உடைய தானே படைப்பதும் கடனா கொண்டு - கலிங்:262/1
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு - கலிங்:335/3
எயிறுகள் உடைய பொருப்பை வலித்து இடை எதிரெதிர் இரு பணை இட்டு முறுக்கிய - கலிங்:414/1

 மேல்
 
    உடையவர் (2)
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2
அவை என பல வடு நிரை உடையவர் அடி புறக்கிடில் அமரர்-தம் உலகொடு இ - கலிங்:353/2

 மேல்
 
    உடையன (5)
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன - கலிங்:135/2
ஈரம் உடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய - கலிங்:334/3
கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன
  கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின் - கலிங்:350/1,2
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின் - கலிங்:352/1
ஒரு நினைப்பினை உடையன வினையன உயர் செய் மொட்டொடு மலர் என நிறுவிய - கலிங்:352/3

 மேல்
 
    உடையான் (2)
பார் எலாம் உடையான் அபயன் கொடை பங்கய கரம் ஒப்பு என பண்டு ஒர் நாள் - கலிங்:314/1
ஆல களம் உடையான் மகிழ் அமுது அ களம் அணுகி - கலிங்:473/2

 மேல்
 
    உடையீர் (1)
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:27/2

 மேல்
 
    உடைவாளை (1)
உறைவாளை புயத்து இருத்தி உடைவாளை திரு அரையில் ஒளிர வைத்தே - கலிங்:244/2

 மேல்
 
    உண்க (1)
வலியினில் குருதி உண்க என அளித்த அவனும் வாதராசனை வலிந்து பணிகொண்ட அவனும் - கலிங்:193/2

 மேல்
 
    உண்ட (2)
உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் - கலிங்:148/2
பற்றி பாரீர் இ கூழின் பதமும் சுவையும் பண்டு உண்ட
  மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே - கலிங்:551/1,2

 மேல்
 
    உண்டன (1)
கரிகள் கருவிகளோடு சிந்தின கழுகு நரியொடு காகம் உண்டன
  திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே - கலிங்:447/1,2

 மேல்
 
    உண்டாகும் (1)
ஒருவர்க்கு ஒரு வாய் கொண்டு உரைக்க ஒண்ணாதேனும் உண்டாகும்
  செருவை சிறியேன் விண்ணப்பம் செய்ய சிறிது கேட்டருளே - கலிங்:313/1,2

 மேல்
 
    உண்டு (4)
பூதலம் பழம் கோயில் என்னினும் புதிய கோயில் உண்டு அது விளம்புவாம் - கலிங்:97/2
ஒரு பரணி உண்டு என உரைத்தன உரைப்படி உமக்கு இது கிடைக்கும் எனவே - கலிங்:227/2
திரித்த கோலில் வளைவு உண்டு நீதி புரி செய்ய கோலில் வளைவு இல்லையே - கலிங்:273/2
உண்டு மிகுமோ நீர் சொன்ன உபாயம் இதுவும் செய்குவமே - கலிங்:555/2

 மேல்
 
    உண்டுழி (1)
கூடி இரைத்து உண்டுழி எம் கூடு ஆர போதுமோ - கலிங்:230/2

 மேல்
 
    உண்டோ (1)
அ மலைகள் அவள் வேண்டின் ஆகாதது ஒன்று உண்டோ - கலிங்:133/2

 மேல்
 
    உண்ண (9)
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/2
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1
கடல் கலக்க எழும் இன் அமுது-தன்னை ஒருவன் கடவுள் வானவர்கள் உண்ண அருள்செய்த கதையும் - கலிங்:190/1
களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில் காய் சினத்தொடே கலவு செம்பியன் - கலிங்:202/1
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல - கலிங்:477/1
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் - கலிங்:477/2
ஒரு வாய் கொண்டே இது தொலைய உண்ண ஒண்ணாது என்று என்று - கலிங்:553/1
வரிசையுடனே இருந்து உண்ண வாரீர் கூழை வாரீரே - கலிங்:562/2
உயிரை கொல்லா சமண் பேய்கள் ஒரு போழ்து உண்ணும் அவை உண்ண
  மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே - கலிங்:566/1,2

 மேல்
 
    உண்ணீரே (8)
அள்ளி அருகிருந்து உண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டு என்னும் - கலிங்:579/1
உள்ளி கறித்துக்கொண்டு உண்ணீரே ஊதி வரன்றிக்கொண்டு உண்ணீரே - கலிங்:579/2
உள்ளி கறித்துக்கொண்டு உண்ணீரே ஊதி வரன்றிக்கொண்டு உண்ணீரே - கலிங்:579/2
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே - கலிங்:580/2
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே - கலிங்:581/1
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே
  ஆடி அசைந்து அசைந்து உண்ணீரே அற்றது அற அறிந்து உண்ணீரே - கலிங்:581/1,2
ஆடி அசைந்து அசைந்து உண்ணீரே அற்றது அற அறிந்து உண்ணீரே - கலிங்:581/2
ஆடி அசைந்து அசைந்து உண்ணீரே அற்றது அற அறிந்து உண்ணீரே - கலிங்:581/2

 மேல்
 
    உண்ணும் (1)
உயிரை கொல்லா சமண் பேய்கள் ஒரு போழ்து உண்ணும் அவை உண்ண - கலிங்:566/1

 மேல்
 
    உண்ணுமே (1)
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே
  சாகை சொன்ன பேய்களை தகர்க்க பற்கள் என்னுமே - கலிங்:308/1,2

 மேல்
 
    உண்பதனுக்கு (1)
உள்ளும் புறம்பும் வெதும்பும் காண் உண்பதனுக்கு ஒருப்படுவீரே - கலிங்:515/2

 மேல்
 
    உண்பதோர் (1)
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் - கலிங்:83/1

 மேல்
 
    உண (2)
முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு - கலிங்:415/1
கறங்கு வேலை நீர் உண கவிழ்ந்த மேகம் ஒக்குமே - கலிங்:434/2

 மேல்
 
    உணங்கள் (1)
உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக - கலிங்:303/1

 மேல்
 
    உணங்கு (2)
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1
மண்டலீகரும் மாநில வேந்தரும் வந்து உணங்கு கடைத்தலை வண்டை மன் - கலிங்:327/1

 மேல்
 
    உணங்குவன (1)
பாதவம் புனல் பெறாது உணங்குவன பருகும் நம்மை என வெருவியே - கலிங்:81/2

 மேல்
 
    உணர்த்துவான் (1)
ஒன்று கூறுவன் கேள் என்று உணர்த்துவான் - கலிங்:378/2

 மேல்
 
    உணர்ந்தருளும் (1)
காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின் - கலிங்:179/1

 மேல்
 
    உணர்வையும் (1)
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2

 மேல்
 
    உணவே (1)
வெருவா நின்றீர் ஆயிரம் வாய் வேண்டுமோ இ கூழ் உணவே - கலிங்:553/2

 மேல்
 
    உத்தமனை (1)
கலை வளர் உத்தமனை கரு முகில் ஒப்பவனை கரட தட கடவுள் கனக நிறத்தவனை - கலிங்:127/1

 மேல்
 
    உத்தர (1)
ஒளிறு நெடும் படை வாள் அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறை - கலிங்:531/1

 மேல்
 
    உத்தரிய (1)
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே - கலிங்:128/2

 மேல்
 
    உத்திரம் (1)
எறிதரும் பெரும் கணைமரங்கள் கொண்டு எழுது தூணொடு உத்திரம் இயற்றியே - கலிங்:100/2

 மேல்
 
    உதகை (1)
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் - கலிங்:201/2

 மேல்
 
    உதட்டின (1)
தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின - கலிங்:141/2

 மேல்
 
    உதட்டினுடனே (1)
நடித்தன நடிப்ப வலி அற்றன கொடிற்றையும் நனைத்தன உதட்டினுடனே - கலிங்:228/2

 மேல்
 
    உதடுகளில் (1)
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் - கலிங்:217/2

 மேல்
 
    உதடுகளும் (1)
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை - கலிங்:219/1

 மேல்
 
    உதய (1)
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1

 மேல்
 
    உதயத்து (1)
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும் - கலிங்:362/1

 மேல்
 
    உதயபானு (1)
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் - கலிங்:201/2

 மேல்
 
    உதயம் (2)
செம் மலையாய் ஒளி படைத்தது யாதோ என்றும் செம் கதிரோன் உதயம் செய்து உதயம் என்னும் - கலிங்:465/1
செம் மலையாய் ஒளி படைத்தது யாதோ என்றும் செம் கதிரோன் உதயம் செய்து உதயம் என்னும் - கலிங்:465/1

 மேல்
 
    உதரத்தினளே (1)
சிலை வளைவுற்று அவுண தொகை செகவிட்ட பரி திறலவனை தரும் அ திரு உதரத்தினளே - கலிங்:127/2

 மேல்
 
    உதரம் (1)
அ நெடு மால் உதரம் போல் அருள் அபயன் தனி கவிகை - கலிங்:4/1

 மேல்
 
    உதவாதவரை (1)
சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி - கலிங்:478/1

 மேல்
 
    உதவி (1)
தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் - கலிங்:194/2

 மேல்
 
    உதவும் (2)
கருணையொடும் தனது உபய கரம் உதவும் பொருள் மழையின் - கலிங்:271/1
அரணிய மந்திர அனல்கள் அவை உதவும் பெரு மழையே - கலிங்:271/2

 மேல்
 
    உதித்த (1)
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் - கலிங்:123/1

 மேல்
 
    உதித்தான் (1)
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் - கலிங்:232/2

 மேல்
 
    உதித்திடும் (1)
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1

 மேல்
 
    உதித்து (1)
ஆதி மால் அமல நாபி கமலத்து அயன் உதித்து அயன் மரீசி எனும் அண்ணலை அளித்த பரிசும் - கலிங்:186/1

 மேல்
 
    உதியர் (5)
கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண் - கலிங்:16/1
துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து - கலிங்:99/1
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று - கலிங்:199/1
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் - கலிங்:201/1
கழலில் அடைந்தனர் உதியர் கடலில் அடைந்தனர் செழியர் - கலிங்:270/2

 மேல்
 
    உதியன் (1)
களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும் - கலிங்:195/2

 மேல்
 
    உதிர்ந்த (2)
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி - கலிங்:517/1

 மேல்
 
    உதிர (3)
இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என - கலிங்:163/1
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே - கலிங்:253/2

 மேல்
 
    உதிரத்தே (1)
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை - கலிங்:475/1

 மேல்
 
    உதிரம் (1)
குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை - கலிங்:253/1

 மேல்
 
    உதிரமே (1)
உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ - கலிங்:520/2

 மேல்
 
    உதிரும் (1)
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:27/2

 மேல்
 
    உந்தவே (1)
உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே - கலிங்:443/2

 மேல்
 
    உந்தி (2)
உந்தி சுழியின் முளைத்து எழுந்த உரோம பசும் தாள் ஒன்றில் இரண்டு - கலிங்:39/1
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே - கலிங்:581/1

 மேல்
 
    உந்திய (1)
ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய - கலிங்:139/2

 மேல்
 
    உந்தின (1)
அணிகள் ஒரு முகமாக உந்தின அமரர் அமர் அது காண முந்தினர் - கலிங்:445/1

 மேல்
 
    உந்து (1)
உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும் - கலிங்:146/2

 மேல்
 
    உப்பு (2)
உள்ளியும் கிள்ளி இட்டு உகிரின் உப்பு இடு-மினோ - கலிங்:521/2
உப்பு பார்க்க ஒரு துள்ளி உள்ளங்கையில் கொள்ளீரே - கலிங்:549/2

 மேல்
 
    உபகாரம் (1)
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே - கலிங்:453/2

 மேல்
 
    உபநிடதம் (1)
உகம் நான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும் - கலிங்:5/1

 மேல்
 
    உபய (5)
உபய தனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு - கலிங்:58/1
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் - கலிங்:123/1
கருணையொடும் தனது உபய கரம் உதவும் பொருள் மழையின் - கலிங்:271/1
ஒருவர் என கிடைத்த பொழுதினில் உபய பலத்து எடுத்தது அரவமே - கலிங்:439/2
உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள - கலிங்:444/1

 மேல்
 
    உபயகுலோத்தமன் (1)
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்தமன் அபயன் வாழ்க என்றே - கலிங்:2/2

 மேல்
 
    உபயம் (1)
உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற - கலிங்:590/1

 மேல்
 
    உபாயம் (1)
உண்டு மிகுமோ நீர் சொன்ன உபாயம் இதுவும் செய்குவமே - கலிங்:555/2

 மேல்
 
    உம் (1)
ஒக்க செருகும் குழல் மடவீர் உம் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:74/2

 மேல்
 
    உம்பர் (1)
இன்ன மா கடல் முழங்கி எழுகின்ற ஒலி என்று இம்பர் உம்பர் அறியாத பரிசு எங்கும் மிகவே - கலிங்:284/2

 மேல்
 
    உம்பர்-தம் (1)
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்-தம் கோயில் சோம்பி - கலிங்:260/1

 மேல்
 
    உமக்கு (2)
உங்கள் குறியும் வட கலிங்கத்து உள்ள குறியும் உமக்கு அழகே - கலிங்:226/1
ஒரு பரணி உண்டு என உரைத்தன உரைப்படி உமக்கு இது கிடைக்கும் எனவே - கலிங்:227/2

 மேல்
 
    உமது (1)
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ - கலிங்:24/2

 மேல்
 
    உமிழ் (2)
நிலவு உமிழ் கவிகையும் வளர்கவே நிதி பொழி கவிகையும் வளர்கவே - கலிங்:20/2
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே - கலிங்:128/2

 மேல்
 
    உமிழ்வன (1)
ஒழிதர செரு உறு புனல் உமிழ்வன உலகு அளப்பன இரதமும் மருவியே - கலிங்:352/4

 மேல்
 
    உய்த்து (1)
இடை நிரைத்தலின் பகல் கரப்ப உய்த்து இருநில பரப்பு இருள் பரக்கவே - கலிங்:345/2

 மேல்
 
    உய்ந்து (2)
உய்ந்து போயினம் உவந்து எமக்கு அருள ஒன்றொடு ஒப்பன ஒராயிரம் - கலிங்:161/1
ஈ கதுவும் குறியால் உய்ந்து இருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் - கலிங்:219/2

 மேல்
 
    உய்ப்பவர் (1)
அரிது அரிது இதுவும் என பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்துமே - கலிங்:422/2

 மேல்
 
    உய்ய (2)
ஒலி கடல் அருக்கன் என்ன உலகு உய்ய வந்து தோன்றி - கலிங்:261/2
ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே - கலிங்:593/2

 மேல்
 
    உய்யமாட்டேம் (1)
தேய்கின்றபடி தேய்ந்து மிடுக்கு அற்றேம் செற்றாலும் உய்யமாட்டேம் - கலிங்:214/2

 மேல்
 
    உயக்கொள (1)
ஒரு களிற்றின் மேல் வரு களிற்றை ஒத்து உலகு உயக்கொள பொருது கொப்பையில் - கலிங்:204/1

 மேல்
 
    உயர் (6)
தலம் முதல் உள மனு வளர்கவே சயதரன் உயர் புலி வளர்கவே - கலிங்:20/1
இடை படுவது பட அருளுவீர் இடு கதவு உயர் கடை திற-மினோ - கலிங்:22/2
உயர் செய் கொடி இவை மற்று இவை உரிமை அரிவையர் பட்டமே - கலிங்:335/4
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர - கலிங்:350/3
ஒரு நினைப்பினை உடையன வினையன உயர் செய் மொட்டொடு மலர் என நிறுவிய - கலிங்:352/3
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில - கலிங்:589/1

 மேல்
 
    உயர்த்த (4)
தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனி புலிக்கொடி தழைக்கவே - கலிங்:18/2
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் - கலிங்:194/1
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன் - கலிங்:364/1
ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர் - கலிங்:433/1

 மேல்
 
    உயர்த்தவன் (1)
விடை எனக்கு என புலி உயர்த்தவன் விடைகொடுக்க அ பொழுதிலே - கலிங்:342/2

 மேல்
 
    உயர்ந்த (1)
நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே - கலிங்:154/2

 மேல்
 
    உயரத்து (1)
பூமாதும் சயமாதும் பொலிந்து வாழும் புயத்து இருப்ப மிக உயரத்து இருப்பள் என்று - கலிங்:13/1

 மேல்
 
    உயிர் (5)
நிதி தரு பயிர் வளம் நிறைகவே நிறைதலின் உயிர் நிலைபெறுகவே - கலிங்:19/2
அ கானகத்தே உயிர் பறிப்பீர் அம் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:73/2
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் - கலிங்:213/2
உறுவது என்-கொல் என நிலைகுலைந்து அரசர் உயிர் நடுங்க ஒளிர் பவள வாய் - கலிங்:339/1
ஆட போந்து அகப்பட்டேம் கரந்தோம் என்றே அரி-தனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே - கலிங்:467/2

 மேல்
 
    உயிர்களே (1)
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் - கலிங்:496/1

 மேல்
 
    உயிர்த்து (1)
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி - கலிங்:375/2

 மேல்
 
    உயிர்ப்பன (1)
புலம்பொடு நின்று உயிர்ப்பன போல் புகைந்து மரம் கரிந்து உளவால் - கலிங்:88/2

 மேல்
 
    உயிரும் (1)
மேல் அனைத்து உயிரும் வீவது இலை ஆக நமன் மேல் - கலிங்:192/3

 மேல்
 
    உயிரை (3)
உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே - கலிங்:353/4
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் - கலிங்:483/2
உயிரை கொல்லா சமண் பேய்கள் ஒரு போழ்து உண்ணும் அவை உண்ண - கலிங்:566/1

 மேல்
 
    உயிரையும் (2)
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2
இசை பெற உயிரையும் இகழ்தரும் இளையவர் எறி சுறவு இனம் எனவே - கலிங்:399/2

 மேல்
 
    உரக (1)
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ - கலிங்:122/1

 மேல்
 
    உரகத்தினளே (1)
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே - கலிங்:128/2

 மேல்
 
    உரகர்-தம் (1)
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் - கலிங்:195/1

 மேல்
 
    உரத்தின் (1)
இருவர் உரத்தின் உற்ற சுரிகையின் எதிரெதிர் புக்கு இழைக்கும் அளவினில் - கலிங்:439/1

 மேல்
 
    உரத்தினில் (2)
எதிர் பொரு கரியின் மருப்பை உரத்தினில் இற எறி படையின் இறுத்து மிறைத்து எழு - கலிங்:417/1
பொருநர்கள் சிலர்-தம் உரத்தினில் கவிழ் புகர் முகம் மிசை அடியிட்டு அதின் பகை - கலிங்:440/1

 மேல்
 
    உரத்து (1)
அசைய உரத்து அழுத்தி இவுளியை அடு சவளத்து எடுத்தபொழுது அவை - கலிங்:437/1

 மேல்
 
    உரம் (1)
இக்குவாகுவின் மகன் புதல்வன் ஆன உரவோன் இகலுவோன் இகல் உரம் செய்து புரந்தரன் எனும் - கலிங்:188/1

 மேல்
 
    உரல் (2)
அந்த நாள் அ களத்து அடு கூழினுக்கு ஆய்ந்த வெண் பல் அரிசி உரல் புக - கலிங்:146/1
உரல் பட்ட அரிசி முகந்து உலைகள்-தொறும் சொரியீரே - கலிங்:547/2

 மேல்
 
    உரல்-கண் (1)
இந்த உரல்-கண் இ அரிசி எல்லாம் பெய்து கொல் யானை - கலிங்:526/1

 மேல்
 
    உரல்கள் (1)
அவைக்கும் உரல்கள் என குரல்கள் அவிந்த முரசம் கொள்ளீரே - கலிங்:525/2

 மேல்
 
    உரவோன் (2)
இக்குவாகுவின் மகன் புதல்வன் ஆன உரவோன் இகலுவோன் இகல் உரம் செய்து புரந்தரன் எனும் - கலிங்:188/1
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1

 மேல்
 
    உரி (2)
உரி மிசை அ கரியின் குடரொடு கட்செவி இட்டு ஒரு புரி இட்டு இறுக புனையும் உடுக்கையளே - கலிங்:126/2
புரவி உரி தோல் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே - கலிங்:576/2

 மேல்
 
    உரிந்த (1)
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2

 மேல்
 
    உரிப்புண்ட (1)
அரை கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் என பிழைத்தாரும் அநேகர் ஆங்கே - கலிங்:466/2

 மேல்
 
    உரிமை (3)
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து - கலிங்:248/1
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமை தியாகவல்லி நிறை செல்வி உடன் மல்கி வரவே - கலிங்:286/2
உயர் செய் கொடி இவை மற்று இவை உரிமை அரிவையர் பட்டமே - கலிங்:335/4

 மேல்
 
    உரிமையினில் (1)
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்தமன் அபயன் வாழ்க என்றே - கலிங்:2/2

 மேல்
 
    உரிமையும் (1)
அலகில் வெற்றியும் உரிமையும் இவை என அவயவத்தினில் எழுதிய அறிகுறி - கலிங்:353/1

 மேல்
 
    உரிய (1)
திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே - கலிங்:249/2

 மேல்
 
    உரியாள் (1)
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2

 மேல்
 
    உரிவை (1)
கவள மத கரட கரி உரிவை கயிலை களிறு விருப்புறும் அ கனக முலை தரள - கலிங்:128/1

 மேல்
 
    உருக (1)
சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து - கலிங்:130/1

 மேல்
 
    உருகி (3)
மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே - கலிங்:51/1
பிழை நினைந்து உருகி அணைவுறா மகிழ்நர் பிரிதல் அஞ்சி விடு கண்கள் நீர் - கலிங்:72/1
பரிவு அகல தழுவி புணர் கலவிக்கு உருகி படர் சடை முக்கண் உடை பரமர் கொடுத்த களிற்று - கலிங்:126/1

 மேல்
 
    உருகுதலுற்று (1)
உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய - கலிங்:131/1

 மேல்
 
    உருத்திரயோகினி (1)
உன்னுடைய பழ அடியார் அடியாள் தெய்வ உருத்திரயோகினி என்பாள் உனக்கு நன்மை - கலிங்:177/1

 மேல்
 
    உரும் (4)
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/2
இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என - கலிங்:163/1
உரும் இடிப்பன வட அனல் உள என ஒலி முகில் கட கரிகளும் இடையவே - கலிங்:350/4
வளை சிலை உரும் என இடிக்கவே வடி கணை நெடு மழை படைக்கவே - கலிங்:409/2

 மேல்
 
    உருவாய் (2)
அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட உருவாய் அரவணை துயிலும் ஆதி முதலாக அபயன் - கலிங்:185/1
போதம் கொள் மாண் உருவாய் புவி இரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற - கலிங்:243/1

 மேல்
 
    உருவி (3)
துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து - கலிங்:99/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் - கலிங்:495/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் - கலிங்:495/1

 மேல்
 
    உருவிய (2)
ஒரு துணி கருதும் இலக்கை அழித்தன உருவிய பிறை முக அ பகழி தலை - கலிங்:422/1
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில - கலிங்:589/1

 மேல்
 
    உருவும் (1)
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2

 மேல்
 
    உருள் (1)
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில - கலிங்:589/1

 மேல்
 
    உருள்வன (1)
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில - கலிங்:589/1

 மேல்
 
    உருள (1)
கூடும் இளம்பிறையில் குறு வெயர் முத்து உருள கொங்கை வடம் புரள செங்கழுநீர் அளக - கலிங்:62/1

 மேல்
 
    உருளன (1)
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின் - கலிங்:352/1

 மேல்
 
    உரை (3)
எனா உரை முடித்ததனை என்-கொல் விளைவு என்றே - கலிங்:225/1
உலகுக்கு ஒருமுதல் அபயற்கு இடு திறை உரை தப்பியது எமது அரசே எம் - கலிங்:373/1
ஓவா உரை ஓயும்படி உளது அ பொரு களமே - கலிங்:472/2

 மேல்
 
    உரை-தனக்கு (1)
வினா உரை-தனக்கு எதிர் விளம்பினள் அணங்கே - கலிங்:225/2

 மேல்
 
    உரைக்க (3)
உவையுவை உள என்று எண்ணி உரைப்ப என் உரைக்க வந்த - கலிங்:121/1
ஒருவர்க்கு ஒரு வாய் கொண்டு உரைக்க ஒண்ணாதேனும் உண்டாகும் - கலிங்:313/1
என்று இவை உரைத்தலும் எனக்கு எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர் புய - கலிங்:390/1

 மேல்
 
    உரைக்கும் (3)
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே - கலிங்:570/2
இணக்கம் இல்லா நமை எல்லாம் எண்ணி கண்டேம் என்று உரைக்கும்
  கணக்க பேய்க்கும் அகம் களிக்க கையால் எடுத்து வாரீரே - கலிங்:577/1,2
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத - கலிங்:591/1

 மேல்
 
    உரைகள் (1)
உரைகள் பிற்படும் அளவில் ஒற்றர்கள் ஒலி கடற்படை கடிது போய் - கலிங்:461/1

 மேல்
 
    உரைசெய் (3)
ஒப்புற தனது தொல் மரபும் அ மரபின் மேல் உரைசெய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே - கலிங்:208/2
என்று பல கூளிகள் இரைத்து உரைசெய் போதத்து - கலிங்:220/1
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து - கலிங்:248/1

 மேல்
 
    உரைசெய்த (1)
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே - கலிங்:448/2

 மேல்
 
    உரைசெய்தவரவர்கள் (1)
எழுதி மற்று உரைசெய்தவரவர்கள் செய் பிழை எலாம் எமர் பொறுக்க என இப்படி முடித்த இதனை - கலிங்:209/1

 மேல்
 
    உரைசெய்தனை (1)
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ - கலிங்:391/1

 மேல்
 
    உரைசெய்தாய் (1)
நின்னுடைய பேதைமையினால் உரைசெய்தாய் இது நினைப்பளவில் வெல்ல அரிதோ - கலிங்:392/2

 மேல்
 
    உரைசெய்ய (1)
களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும் - கலிங்:195/2

 மேல்
 
    உரைசெய்யின் (1)
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து - கலிங்:248/1

 மேல்
 
    உரைசெயாது (1)
உரைசெயாது ஒழியார்கள் உறுதியே - கலிங்:379/2

 மேல்
 
    உரைசெயும் (1)
உரைசெயும் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்-கொல் என்று அருளு பொழுதிலே - கலிங்:337/2

 மேல்
 
    உரைத்த (6)
காலனுக்கு இது வழக்கு என உரைத்த அவனும் - கலிங்:192/1
பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள் - கலிங்:205/1
பழகினார் தெரிந்து உரைத்த பழுது அறு நாள் பழுது அற்ற பொழுதத்து ஆங்கே - கலிங்:280/2
எனா உரைத்த தேவி வாழி வாழி என்று வாழ்த்தியே - கலிங்:310/1
கனா உரைத்த பேயினை கழுத்தினில் கொடு ஆடுமே - கலிங்:310/2
உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற - கலிங்:590/1

 மேல்
 
    உரைத்தருளவே (1)
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே - கலிங்:311/2

 மேல்
 
    உரைத்தலும் (1)
என்று இவை உரைத்தலும் எனக்கு எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர் புய - கலிங்:390/1

 மேல்
 
    உரைத்தன (1)
ஒரு பரணி உண்டு என உரைத்தன உரைப்படி உமக்கு இது கிடைக்கும் எனவே - கலிங்:227/2

 மேல்
 
    உரைத்தனள் (1)
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே - கலிங்:311/2

 மேல்
 
    உரைத்து (1)
என எடுத்து உரைத்து அதிசயித்து நின்று இனைய மண்ணுளோர் அனைய விண்ணுளோர் - கலிங்:349/1

 மேல்
 
    உரைப்ப (3)
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப
  வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:67/1,2
உவையுவை உள என்று எண்ணி உரைப்ப என் உரைக்க வந்த - கலிங்:121/1
கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் - கலிங்:180/2

 மேல்
 
    உரைப்படி (1)
ஒரு பரணி உண்டு என உரைத்தன உரைப்படி உமக்கு இது கிடைக்கும் எனவே - கலிங்:227/2

 மேல்
 
    உரைப்பரே (1)
மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே - கலிங்:336/4

 மேல்
 
    உரைப்பவர்கள் (1)
கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே - கலிங்:455/2

 மேல்
 
    உரைப்போர்க்கு (1)
மா ஆயிரமும் பட கலிங்கர் மடிந்த கள போர் உரைப்போர்க்கு
  நா ஆயிரமும் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டுமால் - கலிங்:312/1,2

 மேல்
 
    உரையில் (1)
உரையில் குழறியும் உடலில் பதறியும் ஒருவர்க்கொருவர் முன் முறையிட்டே - கலிங்:374/1

 மேல்
 
    உரோம (1)
உந்தி சுழியின் முளைத்து எழுந்த உரோம பசும் தாள் ஒன்றில் இரண்டு - கலிங்:39/1

 மேல்
 
    உலக்கை (2)
உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும் - கலிங்:146/2
உலக்கை உச்சி தைத்த போது உழும் கலப்பை ஒக்குமே - கலிங்:427/2

 மேல்
 
    உலக்கை-தனை (1)
தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே - கலிங்:526/2

 மேல்
 
    உலகத்தவர்-தமக்கு (1)
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே - கலிங்:241/1

 மேல்
 
    உலகத்து (2)
உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய - கலிங்:131/1
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து
  அரசர் உளர் அல்லர் என அவை புகழ மல்கு கலை அவையவைகள் வல்ல பிறகே - கலிங்:248/1,2

 மேல்
 
    உலகம் (1)
முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு - கலிங்:415/1

 மேல்
 
    உலகில் (2)
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1
ஒரு தனி வெண்குடை உலகில் ஒளி கொள் நலம் தரு நிழலில் - கலிங்:268/2

 மேல்
 
    உலகு (12)
ஒரு வயிற்றில் பிறவாது பிறந்தருளி உலகு ஒடுக்கும் - கலிங்:3/1
பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க - கலிங்:7/1
பனி ஆழி உலகு அனைத்தும் பரந்த கலி இருள் நீங்க - கலிங்:8/1
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ - கலிங்:122/1
ஒரு களிற்றின் மேல் வரு களிற்றை ஒத்து உலகு உயக்கொள பொருது கொப்பையில் - கலிங்:204/1
ஒலி கடல் அருக்கன் என்ன உலகு உய்ய வந்து தோன்றி - கலிங்:261/2
பொது அற உலகு கைக்கொடு புலி வளர் கொடி எடுத்தலும் - கலிங்:266/1
ஒழிதர செரு உறு புனல் உமிழ்வன உலகு அளப்பன இரதமும் மருவியே - கலிங்:352/4
உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர் - கலிங்:353/3
கடுத்த விசை இருள் கொடுத்த உலகு ஒரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர் - கலிங்:357/1
உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே - கலிங்:443/2
ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே - கலிங்:593/2

 மேல்
 
    உலகுக்கு (1)
உலகுக்கு ஒருமுதல் அபயற்கு இடு திறை உரை தப்பியது எமது அரசே எம் - கலிங்:373/1

 மேல்
 
    உலகுகள் (3)
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர - கலிங்:350/3
உலகுகள் பருகுவது ஒரு கடல் இது என உடலிய படை எழவே - கலிங்:398/2
செருவிடை அவரவர் தெழித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே - கலிங்:405/2

 மேல்
 
    உலகும் (2)
அனைத்து உலகும் கவித்தது என கவித்து நிற்கும் அருள் கவிகை கலி பகைஞன் வாழ்க என்றே - கலிங்:10/2
முரசு அறைக என்று அருளுதலும் முழுது உலகும் ஒரு நகருள் புகுந்தது ஒப்ப - கலிங்:279/1

 மேல்
 
    உலகை (1)
உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை சய_துங்கன் மரபு கீர்த்தி - கலிங்:211/1

 மேல்
 
    உலகொடு (2)
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2
அவை என பல வடு நிரை உடையவர் அடி புறக்கிடில் அமரர்-தம் உலகொடு இ - கலிங்:353/2

 மேல்
 
    உலர்ந்த (4)
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1
வற்றலாக உலர்ந்த முதுகுகள் மரக்கலத்தின் மறி புறம் ஒப்பன - கலிங்:139/1
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே - கலிங்:568/2

 மேல்
 
    உலர்ந்து (2)
வற்றிய பேய் வாய் உலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ போல் - கலிங்:89/1
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம் - கலிங்:218/2

 மேல்
 
    உலவு (3)
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ - கலிங்:122/1
உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய - கலிங்:131/1
ஒரு கரு வெம் கலி கழுவி உலவு பெரும் புகழ் நிழலில் - கலிங்:269/2

 மேல்
 
    உலாவு (1)
ஆந்தை பாந்தி இருப்ப துரிஞ்சில் புக்கு அங்குமிங்கும் உலாவு செவியின - கலிங்:140/2

 மேல்
 
    உலை (1)
உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ - கலிங்:520/2

 மேல்
 
    உலைகள்-தொறும் (1)
உரல் பட்ட அரிசி முகந்து உலைகள்-தொறும் சொரியீரே - கலிங்:547/2

 மேல்
 
    உவட்டி (1)
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல் - கலிங்:355/1

 மேல்
 
    உவணம் (2)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை - கலிங்:17/1
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் - கலிங்:293/1

 மேல்
 
    உவந்த (1)
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2

 மேல்
 
    உவந்து (2)
உய்ந்து போயினம் உவந்து எமக்கு அருள ஒன்றொடு ஒப்பன ஒராயிரம் - கலிங்:161/1
உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக - கலிங்:303/1

 மேல்
 
    உவப்பது (1)
தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே - கலிங்:238/2

 மேல்
 
    உவமை (2)
உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய - கலிங்:131/1
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து - கலிங்:248/1

 மேல்
 
    உவை (1)
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார் - கலிங்:166/1

 மேல்
 
    உவையும் (2)
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு - கலிங்:335/3
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு - கலிங்:335/3

 மேல்
 
    உவையுவை (1)
உவையுவை உள என்று எண்ணி உரைப்ப என் உரைக்க வந்த - கலிங்:121/1

 மேல்
 
    உழக்கும் (1)
காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி - கலிங்:278/1

 மேல்
 
    உழந்து (1)
உழந்து தாம் உடை மண்டலம் தண்டினால் - கலிங்:387/1

 மேல்
 
    உழப்பி (1)
உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே - கலிங்:356/2

 மேல்
 
    உழல்பவர் (1)
உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே - கலிங்:353/4

 மேல்
 
    உழும் (1)
உலக்கை உச்சி தைத்த போது உழும் கலப்பை ஒக்குமே - கலிங்:427/2

 மேல்
 
    உள் (5)
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம் - கலிங்:75/2
அரவொடு திக்கயம் அப்பொழுது பரித்த இடத்து அடியிட உள் குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில் - கலிங்:124/1
உள் ஒடுங்கி இரண்டும் ஒன்றாகவே ஒட்டி ஒட்டு விடாத கொடிற்றின - கலிங்:138/1
உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் - கலிங்:148/2
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு - கலிங்:335/3

 மேல்
 
    உள்ள (1)
உங்கள் குறியும் வட கலிங்கத்து உள்ள குறியும் உமக்கு அழகே - கலிங்:226/1

 மேல்
 
    உள்ளங்கையில் (1)
உப்பு பார்க்க ஒரு துள்ளி உள்ளங்கையில் கொள்ளீரே - கலிங்:549/2

 மேல்
 
    உள்ளபடி (1)
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே - கலிங்:311/2

 மேல்
 
    உள்ளி (1)
உள்ளி கறித்துக்கொண்டு உண்ணீரே ஊதி வரன்றிக்கொண்டு உண்ணீரே - கலிங்:579/2

 மேல்
 
    உள்ளியும் (1)
உள்ளியும் கிள்ளி இட்டு உகிரின் உப்பு இடு-மினோ - கலிங்:521/2

 மேல்
 
    உள்ளும் (1)
உள்ளும் புறம்பும் வெதும்பும் காண் உண்பதனுக்கு ஒருப்படுவீரே - கலிங்:515/2

 மேல்
 
    உள (20)
தலம் முதல் உள மனு வளர்கவே சயதரன் உயர் புலி வளர்கவே - கலிங்:20/1
ஓடுகின்ற நிழல் ஒக்கும் நிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்லவே - கலிங்:80/2
உவையுவை உள என்று எண்ணி உரைப்ப என் உரைக்க வந்த - கலிங்:121/1
இந்த்ரசாலம் உள கற்று வந்தனென் இருந்து காண் என இறைஞ்சியே - கலிங்:161/2
இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் - கலிங்:177/2
எய்திய இடத்து உள நிமித்தம் இவை கேண்மோ - கலிங்:221/2
எங்கும் உள மென் கதலி எங்கும் உள தண் கமுகம் எங்கும் உள பொங்கும் இளநீர் - கலிங்:295/1
எங்கும் உள மென் கதலி எங்கும் உள தண் கமுகம் எங்கும் உள பொங்கும் இளநீர் - கலிங்:295/1
எங்கும் உள மென் கதலி எங்கும் உள தண் கமுகம் எங்கும் உள பொங்கும் இளநீர் - கலிங்:295/1
எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே - கலிங்:295/2
எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே - கலிங்:295/2
எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே - கலிங்:295/2
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய் - கலிங்:296/1
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய் - கலிங்:296/1
திக்கில் உள நித்திலம் முகந்துகொடு வீசி ஒரு தென்றல் வருகின்றது எனவே - கலிங்:298/2
கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன - கலிங்:350/1
கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின் - கலிங்:350/2
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர - கலிங்:350/3
உரும் இடிப்பன வட அனல் உள என ஒலி முகில் கட கரிகளும் இடையவே - கலிங்:350/4
தேவாசுர ராமாயண மாபாரதம் உள என்று - கலிங்:472/1

 மேல்
 
    உளதாகவே (1)
யாவரும் களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும் உளதாகவே
  தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே - கலிங்:595/1,2

 மேல்
 
    உளது (3)
போலும் மன்னர் உளர் அல்லர் என ஆசி புகலா புகல்வது ஒன்று உளது கேள் அரச என்று புகல்வான் - கலிங்:179/2
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே - கலிங்:290/2
ஓவா உரை ஓயும்படி உளது அ பொரு களமே - கலிங்:472/2

 மேல்
 
    உளம் (1)
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை - கலிங்:33/1

 மேல்
 
    உளர் (2)
போலும் மன்னர் உளர் அல்லர் என ஆசி புகலா புகல்வது ஒன்று உளது கேள் அரச என்று புகல்வான் - கலிங்:179/2
அரசர் உளர் அல்லர் என அவை புகழ மல்கு கலை அவையவைகள் வல்ல பிறகே - கலிங்:248/2

 மேல்
 
    உளர்-கொல் (1)
உரைசெயும் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்-கொல் என்று அருளு பொழுதிலே - கலிங்:337/2

 மேல்
 
    உளவாகிய (1)
பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை எம் பரமன் நல் சரிதை மெய் பழைய நான்மறைகளே - கலிங்:181/1

 மேல்
 
    உளவாய் (3)
எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும் - கலிங்:207/1
எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும் - கலிங்:207/1
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய்
  வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே - கலிங்:296/1,2

 மேல்
 
    உளவால் (1)
புலம்பொடு நின்று உயிர்ப்பன போல் புகைந்து மரம் கரிந்து உளவால் - கலிங்:88/2

 மேல்
 
    உற்ற (3)
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே - கலிங்:246/2
இருவர் உரத்தின் உற்ற சுரிகையின் எதிரெதிர் புக்கு இழைக்கும் அளவினில் - கலிங்:439/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் - கலிங்:495/1

 மேல்
 
    உற்றவர் (1)
நிறை சரம் நிமிர விட துணி உற்றவர் நெறியினை எறி ஒடிகிற்பவர் ஒத்து எதிர் - கலிங்:424/1

 மேல்
 
    உற்றவே (1)
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே - கலிங்:423/2

 மேல்
 
    உற (1)
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை - கலிங்:33/1

 மேல்
 
    உறங்கிடும் (1)
ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய - கலிங்:139/2

 மேல்
 
    உறங்குதலை (1)
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் - கலிங்:117/2

 மேல்
 
    உறங்கும் (1)
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ - கலிங்:36/2

 மேல்
 
    உறவாடுவீர் (1)
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:66/2

 மேல்
 
    உறவாய் (1)
சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே - கலிங்:157/2

 மேல்
 
    உறா (1)
அ நெருப்பினில் புகை திரண்டது ஒப்பு அல்லது ஒப்பு உறா அதனிடை புறா - கலிங்:82/2

 மேல்
 
    உறாமே (1)
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக - கலிங்:490/1

 மேல்
 
    உறி (1)
கயிற்று உறி ஒப்பதொர் பேய் வறிதே உடல் கௌவினது ஒக்க விரைந்து - கலிங்:171/1

 மேல்
 
    உறு (6)
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2
அண்டம் உறு குல கிரிகள் அவள் ஒருகால் இரு காதில் - கலிங்:132/1
ஒழிதர செரு உறு புனல் உமிழ்வன உலகு அளப்பன இரதமும் மருவியே - கலிங்:352/4
உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே - கலிங்:353/4
கடுகிய வட அனலத்தினை வைத்தது களம் உறு துரக கணத்தின் முகத்திலே - கலிங்:415/2
களம் உறு துரக கணத்தின் முகத்து எதிர் கறுவிலர் சிலர் கலவி தலை நித்தில - கலிங்:416/1

 மேல்
 
    உறுதி (1)
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ - கலிங்:391/1

 மேல்
 
    உறுதியே (1)
உரைசெயாது ஒழியார்கள் உறுதியே - கலிங்:379/2

 மேல்
 
    உறுப்பு (2)
பலியாக உறுப்பு அரிந்து தருதும் என்று பரவும் ஒலி கடல் ஒலி போல் பரக்குமாலோ - கலிங்:109/2
கொய்த இறைச்சி உறுப்பு அனைத்தும் கொள்ளும் கூழை வெள்ளாட்டின் - கலிங்:568/1

 மேல்
 
    உறுவது (2)
உறுவது என்-கொல் என நிலைகுலைந்து அரசர் உயிர் நடுங்க ஒளிர் பவள வாய் - கலிங்:339/1
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே - கலிங்:402/1

 மேல்
 
    உறை (2)
ஓதி வந்த அ கொடிய கானகத்து உறை அணங்கினுக்கு அயன் வகுத்த இ - கலிங்:97/1
பணி பணத்து உறை பார்க்கு ஒரு நாயகன் பல் கலை துறை நாவில் இருந்தவன் - கலிங்:319/1

 மேல்
 
    உறையும் (1)
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம் - கலிங்:75/2

 மேல்
 
    உறையும்படி (1)
அரன் உறையும்படி மலைகள் அடைய விளங்கின அனையோன் - கலிங்:268/1

 மேல்
 
    உறைவாளை (1)
உறைவாளை புயத்து இருத்தி உடைவாளை திரு அரையில் ஒளிர வைத்தே - கலிங்:244/2

 மேல்
 
    உன் (1)
கண்டு காண் உன் புய வலி நீயும் அ - கலிங்:388/1

 மேல்
 
    உன்னுடைய (1)
உன்னுடைய பழ அடியார் அடியாள் தெய்வ உருத்திரயோகினி என்பாள் உனக்கு நன்மை - கலிங்:177/1

 மேல்
 
    உனக்கு (2)
உன்னுடைய பழ அடியார் அடியாள் தெய்வ உருத்திரயோகினி என்பாள் உனக்கு நன்மை - கலிங்:177/1
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் - கலிங்:217/2

 மேல்
 
    உனது (1)
அழைக்க என்றலும் அழைக்க வந்து அணுகி அஞ்சி அஞ்சி உனது ஆணையின் - கலிங்:159/1

 மேல்