<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வைக்க 3
வைகும் 1
வைகுவோர் 1
வைத்த 10
வைத்தது 1
வைத்ததும் 1
வைத்தருளி 2
வைத்தலுமே 1
வைத்தவன் 2
வைத்தாய் 1
வைத்தான் 1
வைத்திடு-மினோ 1
வைத்து 4
வைத்தே 3
வைத 1
வைப்பர் 1
வைப்பாம் 1
வைப்பு 1
வையகமாம் 1
வையீரே 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
   வைக்க (3)
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே - கலிங்:239/2
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை - கலிங்:273/1
நீரும் தெளித்து கலம் வைக்க நிலமே சமைத்து கொள்ளீரே - கலிங்:557/2

 மேல்
 
    வைகும் (1)
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் - கலிங்:480/2

 மேல்
 
    வைகுவோர் (1)
மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்
  பறிந்த தேரின் நேமியோடு பார் கிடப்பது ஒக்குமே - கலிங்:430/1,2

 மேல்
 
    வைத்த (10)
வைத்த பவள வடம் புனைவீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:30/2
நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த நெடும் குஞ்சி சிரத்தை தன் இனம் என்று எண்ணி - கலிங்:112/1
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே - கலிங்:122/2
தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து - கலிங்:125/1
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை - கலிங்:157/1
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் - கலிங்:189/1
புலி என கொடியில் இந்திரனை வைத்த அவனும் புணரி ஒன்றினிடை ஒன்று புகவிட்ட அவனும் - கலிங்:193/1
இசையுடன் எடுத்த கொடி அபயன் அவனிக்கு இவனை இளவரசில் வைத்த பிறகே - கலிங்:249/1
வட்டம் இட்ட நீள் மதிற்கு வைத்த பூழை ஒக்குமே - கலிங்:426/2

 மேல்
 
    வைத்தது (1)
கடுகிய வட அனலத்தினை வைத்தது களம் உறு துரக கணத்தின் முகத்திலே - கலிங்:415/2

 மேல்
 
    வைத்ததும் (1)
குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் - கலிங்:202/2

 மேல்
 
    வைத்தருளி (2)
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் - கலிங்:299/1
அரசர் அஞ்சல் என அடி இரண்டும் அவர் முடியின் வைத்தருளி அரசர் மற்று - கலிங்:337/1

 மேல்
 
    வைத்தலுமே (1)
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:28/2

 மேல்
 
    வைத்தவன் (2)
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் - கலிங்:201/1
அம் கண் ஞாலம் அனைத்தும் புயத்தில் வைத்து ஆடக கிரியில் புலி வைத்தவன்
  சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே - கலிங்:318/1,2

 மேல்
 
    வைத்தாய் (1)
சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் - கலிங்:215/2

 மேல்
 
    வைத்தான் (1)
பாவத்தால் எம் வயிற்றில் பசியை வைத்தான் பாவியேம் பசிக்கு ஒன்று இல்லேம் - கலிங்:216/2

 மேல்
 
    வைத்திடு-மினோ (1)
முனிவு எனும் கனலை நீர் மூள வைத்திடு-மினோ - கலிங்:522/2

 மேல்
 
    வைத்து (4)
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் - கலிங்:28/1
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார் - கலிங்:162/1
இருவர்-தம்மையும் கிழிகள் சுற்றுவித்து எரிவிளக்கு வைத்து இகல் விளைத்ததும் - கலிங்:199/2
அம் கண் ஞாலம் அனைத்தும் புயத்தில் வைத்து ஆடக கிரியில் புலி வைத்தவன் - கலிங்:318/1

 மேல்
 
    வைத்தே (3)
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே - கலிங்:239/2
உறைவாளை புயத்து இருத்தி உடைவாளை திரு அரையில் ஒளிர வைத்தே - கலிங்:244/2
கோப்பு எலாம் குலைந்தோர்-தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே - கலிங்:262/2

 மேல்
 
    வைத (1)
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத
  வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே - கலிங்:591/1,2

 மேல்
 
    வைப்பர் (1)
ஒரு தொடையை சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே - கலிங்:438/2

 மேல்
 
    வைப்பாம் (1)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2

 மேல்
 
    வைப்பு (1)
வைப்பு காணும் நமக்கு இன்று வாரீர் கூழை எல்லீரும் - கலிங்:549/1

 மேல்
 
    வையகமாம் (1)
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே - கலிங்:210/1

 மேல்
 
    வையீரே (1)
புரவி உரி தோல் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே - கலிங்:576/2

 மேல்