<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெகுண்டு 1
வெகுளி 1
வெகுளியினால் 1
வெட்கியே 1
வெட்டலின் 1
வெட்டி 3
வெட்டின 1
வெட்டினர் 1
வெடிக்கவே 1
வெடித்த 1
வெடுவெடு 1
வெண் 9
வெண்குடை 4
வெதும்பும் 1
வெந்த 2
வெந்திலா 1
வெந்து 2
வெந்நிடும் 1
வெம் 28
வெம்பும் 1
வெம்மையினை 1
வெம்மையை 1
வெய்து 1
வெய்யவன் 1
வெய்யோன் 1
வெயர் 1
வெயில் 1
வெயிலும் 1
வெருவர 2
வெருவா 1
வெருவிய 1
வெருவியே 1
வெல்ல 1
வெல்வன் 1
வெள் 2
வெள்ளணி 1
வெள்ளமும் 4
வெள்ளாட்டின் 1
வெள்ளாறும் 1
வெள்ளி 2
வெள்ளியால் 1
வெள்ளில் 1
வெள்ளை 3
வெளி 4
வெளிக்கே 1
வெளியில் 1
வெளுத்ததே 1
வெளுப்பவே 1
வெளுப்பை 1
வெற்பினிடை 1
வெற்பு-அதனை 1
வெற்பும் 1
வெற்றி 1
வெற்றியும் 1
வெற்று 1
வெறுங்கை 1
வெறுங்கையவே 1
வெறுத்து 1
வெறுந்தரை 1
வெறும் 1
வென்ற 7
வென்றது 1
வென்றதும் 2
வென்றி 3
வென்றிகொள் 1
வென்று 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    வெகுண்டு (1)
தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கே - கலிங்:376/2

 மேல்
 
    வெகுளி (1)
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை - கலிங்:25/1

 மேல்
 
    வெகுளியினால் (1)
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி - கலிங்:375/2

 மேல்
 
    வெட்கியே (1)
எமது என இரு கண் விழிக்க உட்கினர் என விடுகிலர் படைஞர்க்கு வெட்கியே - கலிங்:442/2

 மேல்
 
    வெட்டலின் (1)
அறை கழல் விருதர் செருக்கு அற வெட்டலின் அவர் உடல் இரு வகிர் பட்டன முட்டவே - கலிங்:424/2

 மேல்
 
    வெட்டி (3)
களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும் - கலிங்:195/2
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே - கலிங்:253/2
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம் - கலிங்:435/1

 மேல்
 
    வெட்டின (1)
அடு சிலை பகழி தொடுத்துவிட புகும் அளவினில் அயம் எதிர் விட்டவர் வெட்டின
  உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே - கலிங்:421/1,2

 மேல்
 
    வெட்டினர் (1)
அயம் எதிர் கடவி மத கரி வெட்டினர் அலை படை நிரைகள் களத்து நிரைக்கவே - கலிங்:418/2

 மேல்
 
    வெடிக்கவே (1)
வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
  செருவிடை அவரவர் தெழித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே - கலிங்:405/1,2

 மேல்
 
    வெடித்த (1)
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் - கலிங்:93/1

 மேல்
 
    வெடுவெடு (1)
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் - கலிங்:354/1

 மேல்
 
    வெண் (9)
காடு இதனை கடத்தும் என கரு முகிலும் வெண் மதியும் கடக்க அப்பால் - கலிங்:86/1
அந்த நாள் அ களத்து அடு கூழினுக்கு ஆய்ந்த வெண் பல் அரிசி உரல் புக - கலிங்:146/1
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு - கலிங்:317/1
கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ - கலிங்:486/2
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:493/2
பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக்கொள்ளீரே - கலிங்:505/1
எண்ணெய் போக வெண் மூளை என்னும் களியால் மயிர் குழப்பி - கலிங்:507/1
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை - கலிங்:519/1
துள்ளி வெம் களனில் வீழ் துரக வெண் பல் எனும் - கலிங்:521/1

 மேல்
 
    வெண்குடை (4)
வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை - கலிங்:98/1
ஒரு தனி வெண்குடை உலகில் ஒளி கொள் நலம் தரு நிழலில் - கலிங்:268/2
கொற்ற வெண்குடை கவிப்ப மிசை கொண்டு கவரி குல மதி புடை கவித்த நிலவு ஒத்துவரவே - கலிங்:282/2
நெய்த்து இலங்கிய நித்தில பந்தரின் நின்று வெண்குடை ஒன்று நிழற்றவே - கலிங்:316/2

 மேல்
 
    வெதும்பும் (1)
உள்ளும் புறம்பும் வெதும்பும் காண் உண்பதனுக்கு ஒருப்படுவீரே - கலிங்:515/2

 மேல்
 
    வெந்த (2)
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும் - கலிங்:95/2
வெந்த இரும்பில் புகும் புனல் போல் வெம் தீ பசியால் வெந்து எரியும் - கலிங்:554/1

 மேல்
 
    வெந்திலா (1)
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின - கலிங்:137/1

 மேல்
 
    வெந்து (2)
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் - கலிங்:83/1
வெந்த இரும்பில் புகும் புனல் போல் வெம் தீ பசியால் வெந்து எரியும் - கலிங்:554/1

 மேல்
 
    வெந்நிடும் (1)
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு - கலிங்:325/1

 மேல்
 
    வெம் (28)
செரு இள நீர் பட வெம் முலை செவ்விளநீர் படு சே அரி - கலிங்:52/1
இலங்கை எறிந்த கருணாகரன்-தன் இகல் வெம் சிலையின் வலி கேட்பீர் - கலிங்:64/1
ஆடுகின்ற சிறை வெம் பருந்தின் நிழல் அஞ்சி அ கடு வனத்தை விட்டு - கலிங்:80/1
பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில் - கலிங்:94/1
வெம் கத களிற்றின் படத்தினால் வெளி அடங்கவே மிசை கவிக்கவே - கலிங்:103/2
கயல் ஒளித்த கடும் சுரம் போல் அகம் காந்து வெம் பசியில் புறம் தீந்தவும் - கலிங்:143/2
குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும் - கலிங்:147/2
வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு - கலிங்:148/1
சேனை வீரர் நின்று ஆர்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெம் களத்தில் செவிடு ஆனவும் - கலிங்:149/2
வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் - கலிங்:152/2
பண்டு பாரதம் எனும் கதை பராசரன் மகன் பகர வெம் கரிமுகன் பரு மருப்பை ஒரு கை - கலிங்:180/1
ஒரு கரு வெம் கலி கழுவி உலவு பெரும் புகழ் நிழலில் - கலிங்:269/2
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1
கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே குமுறு வெம் புலிக்கொடி குலாவவே - கலிங்:293/2
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு - கலிங்:325/1
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி - கலிங்:375/2
வேழம் இரதம் புரவி வெம் படைஞர் என்று இனைய நம் படை விரைந்து கடுக - கலிங்:393/1
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா - கலிங்:429/1
உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள - கலிங்:444/1
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம் - கலிங்:451/1
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை - கலிங்:467/1
என்னே ஒரு செரு வெம் களம் எனவே அதிசயமுற்று - கலிங்:474/1
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை - கலிங்:487/1
பணைத்த பனை வெம் கரி கரத்தால் பரிய கரு நாண் கட்டீரே - கலிங்:512/1
துள்ளி வெம் களனில் வீழ் துரக வெண் பல் எனும் - கலிங்:521/1
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர - கலிங்:527/1
வெந்த இரும்பில் புகும் புனல் போல் வெம் தீ பசியால் வெந்து எரியும் - கலிங்:554/1
வேத நல் நெறி பரக்கவே அபயன் வென்ற வெம் கலி கரக்கவே - கலிங்:596/1

 மேல்
 
    வெம்பும் (1)
வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின் - கலிங்:556/1

 மேல்
 
    வெம்மையினை (1)
விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின் - கலிங்:87/1

 மேல்
 
    வெம்மையை (1)
அ நிலத்தின் மேல் வெம்மையை குறித்து அல்லவோ நிலத்து அடி இடாததே - கலிங்:84/2

 மேல்
 
    வெய்து (1)
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி - கலிங்:375/2

 மேல்
 
    வெய்யவன் (1)
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும் - கலிங்:315/1

 மேல்
 
    வெய்யோன் (1)
அ குவடும் அ கடலும் வளைந்து வெய்யோன் அத்தமன குவடு அணையும் அளவில் சென்றே - கலிங்:463/2

 மேல்
 
    வெயர் (1)
கூடும் இளம்பிறையில் குறு வெயர் முத்து உருள கொங்கை வடம் புரள செங்கழுநீர் அளக - கலிங்:62/1

 மேல்
 
    வெயில் (1)
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் - கலிங்:488/1

 மேல்
 
    வெயிலும் (1)
இருளும் வெயிலும் எறித்திட இலகும் மணி மகர குழை - கலிங்:335/2

 மேல்
 
    வெருவர (2)
வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே - கலிங்:402/2
வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே - கலிங்:405/1

 மேல்
 
    வெருவா (1)
வெருவா நின்றீர் ஆயிரம் வாய் வேண்டுமோ இ கூழ் உணவே - கலிங்:553/2

 மேல்
 
    வெருவிய (1)
வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில - கலிங்:589/2

 மேல்
 
    வெருவியே (1)
பாதவம் புனல் பெறாது உணங்குவன பருகும் நம்மை என வெருவியே - கலிங்:81/2

 மேல்
 
    வெல்ல (1)
நின்னுடைய பேதைமையினால் உரைசெய்தாய் இது நினைப்பளவில் வெல்ல அரிதோ - கலிங்:392/2

 மேல்
 
    வெல்வன் (1)
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே - கலிங்:245/2

 மேல்
 
    வெள் (2)
வெள்ளியால் சமைத்தது என வெள் எலும்பினால் சமைத்தே - கலிங்:104/2
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன் - கலிங்:364/1

 மேல்
 
    வெள்ளணி (1)
எற்றை பகலினும் வெள்ளணி நாள் இருநில பாவை நிழலுற்ற - கலிங்:533/1

 மேல்
 
    வெள்ளமும் (4)
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும் - கலிங்:292/1
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும்
  காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே - கலிங்:292/1,2
காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே - கலிங்:292/2
காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே - கலிங்:292/2

 மேல்
 
    வெள்ளாட்டின் (1)
கொய்த இறைச்சி உறுப்பு அனைத்தும் கொள்ளும் கூழை வெள்ளாட்டின்
  பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே - கலிங்:568/1,2

 மேல்
 
    வெள்ளாறும் (1)
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும் - கலிங்:95/2

 மேல்
 
    வெள்ளி (2)
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் - கலிங்:299/1
விழுந்த தவள குடை மின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே - கலிங்:559/2

 மேல்
 
    வெள்ளியால் (1)
வெள்ளியால் சமைத்தது என வெள் எலும்பினால் சமைத்தே - கலிங்:104/2

 மேல்
 
    வெள்ளில் (1)
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1

 மேல்
 
    வெள்ளை (3)
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே - கலிங்:14/2
பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை
  நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே - கலிங்:154/1,2
மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே - கலிங்:578/1

 மேல்
 
    வெளி (4)
வெம் கத களிற்றின் படத்தினால் வெளி அடங்கவே மிசை கவிக்கவே - கலிங்:103/2
வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே - கலிங்:402/2
வெளி அரிது என எதிர் மிடை படை மனுபரன் விடு படை அதன் எதிரே - கலிங்:403/1
குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே - கலிங்:410/1

 மேல்
 
    வெளிக்கே (1)
ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு - கலிங்:73/1

 மேல்
 
    வெளியில் (1)
கழப்பு இல் வெளியில் சுளி கதத்தில் இரு கவுள் கலித்த கடம் இடி பொறுத்த போர்க்கு - கலிங்:356/1

 மேல்
 
    வெளுத்ததே (1)
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே - கலிங்:256/2

 மேல்
 
    வெளுப்பவே (1)
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே
  அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ - கலிங்:54/1,2

 மேல்
 
    வெளுப்பை (1)
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க - கலிங்:61/1

 மேல்
 
    வெற்பினிடை (1)
அன்று இமய வெற்பினிடை நின்ற வரும் அ பேய் - கலிங்:220/2

 மேல்
 
    வெற்பு-அதனை (1)
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே - கலிங்:464/2

 மேல்
 
    வெற்பும் (1)
அகில வெற்பும் இன்று ஆனை ஆனவோ அடைய மாருதம் புரவி ஆனவோ - கலிங்:347/1

 மேல்
 
    வெற்றி (1)
சிங்களத்தொடு தென் மதுராபுரி செற்ற கொற்றவன் வெற்றி கொள் காலையே - கலிங்:152/1

 மேல்
 
    வெற்றியும் (1)
அலகில் வெற்றியும் உரிமையும் இவை என அவயவத்தினில் எழுதிய அறிகுறி - கலிங்:353/1

 மேல்
 
    வெற்று (1)
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின - கலிங்:137/1

 மேல்
 
    வெறுங்கை (1)
விழுந்து கொழும் குருதி புனல் என்று வெறுங்கை முகந்து முகந்து - கலிங்:169/1

 மேல்
 
    வெறுங்கையவே (1)
சுற்ற நிண துகில் பெற்றனம் என்று சுலாவு வெறுங்கையவே
  அற்ற குறைத்தலை என்று விசும்பை அதுக்கும் எயிற்றினவே - கலிங்:170/1,2

 மேல்
 
    வெறுத்து (1)
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் - கலிங்:479/1

 மேல்
 
    வெறுந்தரை (1)
விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள் - கலிங்:358/2

 மேல்
 
    வெறும் (1)
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/2

 மேல்
 
    வென்ற (7)
விருதராச பயங்கரன் முன் ஒர் நாள் வென்ற சக்கர கோட்டத்திடை கொழும் - கலிங்:147/1
சக்கு ஆயிரம் உடை களிறு வாகனம் என தான் இருந்து பொரு தானவரை வென்ற சயமும் - கலிங்:188/2
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் - கலிங்:201/2
குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை - கலிங்:206/1
நிருபர் அணி வென்ற அகளங்கன் மத யானை நிகளங்களொடு நிற்பன அதற்கு - கலிங்:227/1
உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற
  அபயன் அருளினை பாடினவே அணி செறி தோளினை வாழ்த்தினவே - கலிங்:590/1,2
வேத நல் நெறி பரக்கவே அபயன் வென்ற வெம் கலி கரக்கவே - கலிங்:596/1

 மேல்
 
    வென்றது (1)
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே - கலிங்:587/2

 மேல்
 
    வென்றதும் (2)
தத்து நீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர் பொன் - கலிங்:198/1
வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும்
  ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும் - கலிங்:200/1,2

 மேல்
 
    வென்றி (3)
வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும் - கலிங்:192/4
வேழம் நிரை என்ற மலை எங்கும் மிடைகின்ற அயில் வென்றி அபயன்-தன் அருளால் - கலிங்:297/1
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே - கலிங்:587/2

 மேல்
 
    வென்றிகொள் (1)
கடக்கம் அன்று அபயன் வென்று வென்றிகொள் கள பெரும் பரணி இன்று பார் - கலிங்:164/2

 மேல்
 
    வென்று (3)
கடக்கம் அன்று அபயன் வென்று வென்றிகொள் கள பெரும் பரணி இன்று பார் - கலிங்:164/2
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் - கலிங்:232/2
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான் - கலிங்:245/1

 மேல்