|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
யாதவரே (1)
தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே - கலிங்:329/1,2
மேல்
யாது (2)
சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே - கலிங்:79/2
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே - கலிங்:448/2
மேல்
யாதும் (2)
ஏகவடம் இவை மற்று இவை யாதும் விலை இல் பதக்கமே - கலிங்:334/4
என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல் - கலிங்:392/1
மேல்
யாதோ (1)
செம் மலையாய் ஒளி படைத்தது யாதோ என்றும் செம் கதிரோன் உதயம் செய்து உதயம் என்னும் - கலிங்:465/1
மேல்
யாம் (1)
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே - கலிங்:5/2
மேல்
யாமும் (1)
மாறி அருள அவர்க்கு இடை யாமும் இசைவம் என பல - கலிங்:336/3
மேல்
யாரும் (1)
சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே - கலிங்:259/1,2
மேல்
யாரே (2)
எங்கே புகலிடம் எங்கே இனி அரண் யாரே அதிபதி இங்கு என்றே - கலிங்:371/2
கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே - கலிங்:455/2
மேல்
யாரேனும் (1)
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின் - கலிங்:47/2
மேல்
யாவரும் (1)
யாவரும் களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும் உளதாகவே - கலிங்:595/1
மேல்
யாவும் (1)
பல் அரிசி யாவும் மிக பழ அரிசி தாம் ஆக - கலிங்:545/1
மேல்
யாழ் (1)
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட - கலிங்:323/1
மேல்
யாளி (1)
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி - கலிங்:18/1
மேல்
யான் (5)
எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல - கலிங்:14/1
இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் - கலிங்:177/2
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை - கலிங்:210/2
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான்
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே - கலிங்:245/1,2
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான்
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே - கலிங்:246/1,2
மேல்
யானை (10)
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
அகளங்கன் நமக்கு இரங்கான் அரசர் இடும் திறைக்கு அருள்வான் அவன்-தன் யானை
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம் - கலிங்:218/1,2
நிருபர் அணி வென்ற அகளங்கன் மத யானை நிகளங்களொடு நிற்பன அதற்கு - கலிங்:227/1
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2
யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே - கலிங்:288/1
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை - கலிங்:291/1
ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர் - கலிங்:433/1
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் - கலிங்:475/1,2
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை - கலிங்:491/1
இந்த உரல்-கண் இ அரிசி எல்லாம் பெய்து கொல் யானை
தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே - கலிங்:526/1,2
மேல்
யானைகளின் (1)
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
மேல்
யானையின் (2)
படி பரப்பி அ பரும யானையின் பழு எலும்பினில் பா அடுக்கியே - கலிங்:101/2
மத்த யானையின் கரம் சுருண்டு வீழ வன் சரம் - கலிங்:428/1
மேல்
யானையும் (1)
யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே - கலிங்:288/1
மேல்
|
|
|