<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெகிழ 1
நெஞ்சத்தர் 1
நெஞ்சத்தார் 1
நெஞ்சத்தான் 2
நெஞ்சத்து 12
நெஞ்சத்தை 1
நெஞ்சம் 9
நெஞ்சில் 2
நெஞ்சின் 3
நெஞ்சினார்க்கு 2
நெஞ்சு 16
நெஞ்சே 11
நெடிது 2
நெடிய 1
நெடுநீர் 1
நெடும் 4
நெய்யால் 1
நெருஞ்சி 1
நெருநல் 1
நெருநலும் 1
நெருநற்று 1
நெருப்பினுள் 1
நெறி 3
நெறிநின்றார் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 
 நெகிழ (1)
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
  கொடியர் என கூறல் நொந்து - குறள் 124:6

 TOP

 
 நெஞ்சத்தர் (1)
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 122:8

 TOP

 
 நெஞ்சத்தார் (1)
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
  அஞ்சுதும் வேபாக்கு அறிந்து - குறள் 113:8

 TOP

 
 நெஞ்சத்தான் (2)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
  கேடும் நினைக்கப்படும் - குறள் 17:9
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
  புன்மையால் காணப்படும் - குறள் 19:5

 TOP

 
 நெஞ்சத்து (12)
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
  கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:5
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
  அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
  அகம் நக நட்பது நட்பு - குறள் 79:6
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
  பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் - குறள் 91:10
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
  நெஞ்சத்து அவலம் இலர் - குறள் 108:2
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
  ஓஒ உளரே அவர் - குறள் 121:4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
  எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
  இன்னும் இழத்தும் கவின் - குறள் 125:10

 TOP

 
 நெஞ்சத்தை (1)
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2

 TOP

 
 நெஞ்சம் (9)
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
  நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
  உடல் சுவை உண்டார் மனம் - குறள் 26:3
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம் - குறள் 71:6
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
  பேணி புணர்பவர் தோள் - குறள் 92:7
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தலுறுவது கண்டு - குறள் 126:9
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
  நெஞ்சம் துணை அல்வழி - குறள் 130:9
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாமுடைய
  நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
  கூடுவேம் என்பது அவா - குறள் 131:10

 TOP

 
 நெஞ்சில் (2)
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
  பேணி புணர்பவர் தோள் - குறள் 92:7

 TOP

 
 நெஞ்சின் (3)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
  இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள் 106:3
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
  மாணா மட நெஞ்சின் பட்டு - குறள் 130:7

 TOP

 
 நெஞ்சினார்க்கு (2)
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
  இன்னா உலகம் புகல் - குறள் 25:3
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
  புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள் 126:10

 TOP

 
 நெஞ்சு (16)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
  இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
  செறாஅய் வாழிய நெஞ்சு - குறள் 120:10
காதலவர் இலர் ஆக நீ நோவது
  பேதைமை வாழி என் நெஞ்சு - குறள் 125:2
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
  பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள் 125:8
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
  யாருழை சேறி என் நெஞ்சு - குறள் 125:9
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
  கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
  கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
  நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
  செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
  அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு - குறள் 130:5
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை
  தினிய இருந்தது என் நெஞ்சு - குறள் 130:6
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8

 TOP

 
 நெஞ்சே (11)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
  வாடூ தோள் பூசல் உரைத்து - குறள் 124:7
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
  எவ்வநோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
  பைதல் நோய் செய்தார்-கண் இல் - குறள் 125:3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
  தின்னும் அவர் காணலுற்று - குறள் 125:4
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
  உற்றால் உறாஅதவர் - குறள் 125:5
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே
  யானோ பொறேன் இ இரண்டு - குறள் 125:7
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
  நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
  பெட்டாங்கு அவர் பின் செலல் - குறள் 130:3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4

 TOP

 
 நெடிது (2)
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
  நீங்காமை வேண்டுபவர் - குறள் 57:2
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
  பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள் 95:3

 TOP

 
 நெடிய (1)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
  நெடிய கழியும் இரா - குறள் 117:9

 TOP

 
 நெடுநீர் (1)
நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
  கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5

 TOP

 
 நெடும் (4)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
  தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
  நீங்கின் அதனை பிற - குறள் 50:5
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்
  நாவாயும் ஓடா நிலத்து - குறள் 50:6
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
  நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6

 TOP

 
 நெய்யால் (1)
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
  காமம் நுதுப்பேம் எனல் - குறள் 115:8

 TOP

 
 நெருஞ்சி (1)
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
  அடிக்கு நெருஞ்சி பழம் - குறள் 112:10

 TOP

 
 நெருநல் (1)
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
  பெருமை உடைத்து இ உலகு - குறள் 34:6

 TOP

 
 நெருநலும் (1)
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
  கொன்றது போலும் நிரப்பு - குறள் 105:8

 TOP

 
 நெருநற்று (1)
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 TOP

 
 நெருப்பினுள் (1)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
  யாதொன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9

 TOP

 
 நெறி (3)
நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
  மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
  போற்றி வழங்கும் நெறி - குறள் 48:7

 TOP

 
 நெறிநின்றார் (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறிநின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6

 TOP