<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

நோ - முதல் சொற்கள்
நோ 1
நோக்க 2
நோக்கப்படும் 1
நோக்கம் 2
நோக்கா 1
நோக்காக்கால் 1
நோக்காத 1
நோக்காது 1
நோக்காமை 1
நோக்கான் 3
நோக்கி 16
நோக்கிய 1
நோக்கின் 1
நோக்கினாள் 2
நோக்கினீர் 1
நோக்கினும் 1
நோக்கு 7
நோக்குதல் 2
நோக்கும் 4
நோகும் 1
நோதக்க 1
நோதல் 2
நோய் 35
நோய்க்கு 1
நோய்ப்பால 1
நோயும் 1
நோயை 2
நோலாதவர் 1
நோவது 2
நோவர் 1
நோவல் 1
நோவற்க 1
நோவார் 1
நோற்கிற்பவர் 1
நோற்கிற்பவர்க்கு 1
நோற்பார் 2
நோற்பாரின் 2
நோற்றலின் 1
நோற்றான்-கொல் 1
நோன்பிற்கு 1
நோன்மை 2
நோன்றல் 1
நோனா 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 நோ (1)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7

 TOP

 
 நோக்க (2)
மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து
  நோக்க குழையும் விருந்து - குறள் 9:10
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
  பசையினள் பைய நகும் - குறள் 110:8

 TOP

 
 நோக்கப்படும் (1)
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
  பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7

 TOP

 
 நோக்கம் (2)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2

 TOP

 
 நோக்கா (1)
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
  முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4

 TOP

 
 நோக்காக்கால் (1)
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4

 TOP

 
 நோக்காத (1)
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8

 TOP

 
 நோக்காது (1)
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9

 TOP

 
 நோக்காமை (1)
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
  சிறக்கணித்தான் போல நகும் - குறள் 110:5

 TOP

 
 நோக்கான் (3)
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
  பண்பிலன் பற்றார்க்கு இனிது - குறள் 87:5

 TOP

 
 நோக்கி (16)
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
  இன்சொலினதே அறம் - குறள் 10:3
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன்சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
  மாறா நீர் வையக்கு அணி - குறள் 71:1
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
  உற்றது உணர்வார் பெறின் - குறள் 71:8
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
  யாப்பினுள் அட்டிய நீர் - குறள் 110:3
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
  இது நகத்தக்கது உடைத்து - குறள் 118:3
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
  அஃது ஆண்டு அவள் செய்தது - குறள் 128:9

 TOP

 
 நோக்கிய (1)
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
  பைதல் உழப்பது எவன் - குறள் 118:2

 TOP

 
 நோக்கின் (1)
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8

 TOP

 
 நோக்கினாள் (2)
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
  யாப்பினுள் அட்டிய நீர் - குறள் 110:3

 TOP

 
 நோக்கினீர் (1)
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
  யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள் 132:10

 TOP

 
 நோக்கினும் (1)
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
  யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள் 132:10

 TOP

 
 நோக்கு (7)
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
  பேணி கொள்வேம் என்னும் நோக்கு - குறள் 98:6
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
  நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து - குறள் 110:1
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
  காதலார்-கண்ணே உள - குறள் 110:9
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10

 TOP

 
 நோக்குதல் (2)
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
  காதலார்-கண்ணே உள - குறள் 110:9

 TOP

 
 நோக்கும் (4)
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
  அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
  உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - குறள் 110:7

 TOP

 
 நோகும் (1)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 நோதக்க (1)
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
  நோதக்க நட்டார் செயின் - குறள் 81:5

 TOP

 
 நோதல் (2)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன் - குறள் 35:1
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
  காதலர் இல்லா வழி - குறள் 131:8

 TOP

 
 நோய் (35)
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
  தம் நோய் போல் போற்றாக்கடை - குறள் 32:5
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
  நோய் இன்மை வேண்டுபவர் - குறள் 32:10
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
  சார்தரா சார்தரும் நோய் - குறள் 36:9
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
  நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
  அதிர வருவதோர் நோய் - குறள் 43:9
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
  பெற்றியார் பேணி கொளல் - குறள் 45:2
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
  போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
  கழி பேரிரையான்-கண் நோய் - குறள் 95:6
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
  நோய் அளவின்றி படும் - குறள் 95:7
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
  நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து - குறள் 110:1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
  நீர் ஆக நீளும் இ நோய் - குறள் 115:7
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
  விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள் 116:9
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
  பின் இருந்து வாழ்வார் பலர் - குறள் 116:10
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
  உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
  உய்வு_இல் நோய் என்-கண் நிறுத்து - குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
  காம நோய் செய்த என் கண் - குறள் 118:5
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
  தாஅம் இதற்பட்டது - குறள் 118:6
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
  செறாஅய் வாழிய நெஞ்சு - குறள் 120:10
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
  காலை அறிந்தது இலேன் - குறள் 123:6
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
  மாலை மலரும் இ நோய் - குறள் 123:7
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
  பைதல் நோய் செய்தார்-கண் இல் - குறள் 125:3
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
  பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
  அல்லல் நோய் காண்கம் சிறிது - குறள் 131:1
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
  புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3

 TOP

 
 நோய்க்கு (1)
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
  தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2

 TOP

 
 நோய்ப்பால (1)
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6

 TOP

 
 நோயும் (1)
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
  நோயும் பசலையும் தந்து - குறள் 119:3

 TOP

 
 நோயை (2)
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
  ஊற்று நீர் போல மிகும் - குறள் 117:1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
  உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2

 TOP

 
 நோலாதவர் (1)
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
  சிலர் பலர் நோலாதவர் - குறள் 27:10

 TOP

 
 நோவது (2)
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
காதலவர் இலர் ஆக நீ நோவது
  பேதைமை வாழி என் நெஞ்சு - குறள் 125:2

 TOP

 
 நோவர் (1)
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
  காதலர் காணாதவர் - குறள் 122:9

 TOP

 
 நோவல் (1)
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
  கொடியர் என கூறல் நொந்து - குறள் 124:6

 TOP

 
 நோவற்க (1)
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
  மென்மை பகைவர் அகத்து - குறள் 88:7

 TOP

 
 நோவார் (1)
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7

 TOP

 
 நோற்கிற்பவர் (1)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
  இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9

 TOP

 
 நோற்கிற்பவர்க்கு (1)
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
  சுடச்சுட நோற்கிற்பவர்க்கு - குறள் 27:7

 TOP

 
 நோற்பார் (2)
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
  இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
  சிலர் பலர் நோலாதவர் - குறள் 27:10

 TOP

 
 நோற்பாரின் (2)
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
  இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10

 TOP

 
 நோற்றலின் (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
  ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9

 TOP

 
 நோற்றான்-கொல் (1)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
  என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10

 TOP

 
 நோன்பிற்கு (1)
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மையுடைமை
  மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 35:4

 TOP

 
 நோன்மை (2)
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
  சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4

 TOP

 
 நோன்றல் (1)
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1

 TOP

 
 நோனா (2)
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
  நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
  நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3

 TOP