<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

சி - முதல் சொற்கள்
சிதைக்கலாதார் 1
சிதையாமல் 1
சிதைவிடத்து 1
சிதைவு 1
சிமிழ்த்து 1
சில 1
சிலர் 2
சிவிகை 1
சிற்றின்பம் 1
சிற்றினம் 1
சிறக்கணித்தான் 1
சிறந்த 1
சிறந்தான் 1
சிறந்து 1
சிறப்பினவாயினும் 1
சிறப்பு 12
சிறப்பும் 1
சிறப்பொடு 2
சிறிது 5
சிறிய 1
சிறியர் 1
சிறியவர் 1
சிறியார் 2
சிறு 6
சிறுகும் 1
சிறுகுவ 1
சிறுசொல்லும் 1
சிறுபொருள் 1
சிறுமை 4
சிறுமைக்கும் 1
சிறுமைத்தேயாயினும் 1
சிறுமைதான் 2
சிறுமையும் 2
சிறுமையுள் 1
சிறை 3
சினத்தான் 1
சினத்தின்? 1
சினத்து 1
சினத்தை 2
சினம் 5
சினமும் 1
சினைப்பது 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 சிதைக்கலாதார் (1)
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
  செம்மல் சிதைக்கலாதார் - குறள் 88:10

 TOP

 
 சிதையாமல் (1)
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
  உரிமை உடைத்து இ உலகு - குறள் 58:8

 TOP

 
 சிதைவிடத்து (1)
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
  பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள் 60:7

 TOP

 
 சிதைவு (1)
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
  எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள் 12:2

 TOP

 
 சிமிழ்த்து (1)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
  வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று - குறள் 28:4

 TOP

 
 சில (1)
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
  சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 65:9

 TOP

 
 சிலர் (2)
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
  சிலர் பலர் நோலாதவர் - குறள் 27:10
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
  செவ்வி தலைப்படுவார் - குறள் 129:9

 TOP

 
 சிவிகை (1)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தானிடை - குறள் 4:7

 TOP

 
 சிற்றின்பம் (1)
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
  மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3

 TOP

 
 சிற்றினம் (1)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
  சுற்றமா சூழ்ந்துவிடும் - குறள் 46:1

 TOP

 
 சிறக்கணித்தான் (1)
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
  சிறக்கணித்தான் போல நகும் - குறள் 110:5

 TOP

 
 சிறந்த (1)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
  உவகை மகிழ்ச்சியின் சோர்வு - குறள் 54:1

 TOP

 
 சிறந்தான் (1)
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள் 52:5

 TOP

 
 சிறந்து (1)
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்
  சிறந்து அமைந்த சீரார் செறின் - குறள் 90:10

 TOP

 
 சிறப்பினவாயினும் (1)
இன்றியமையா சிறப்பினவாயினும்
  குன்ற வருப விடல் - குறள் 97:1

 TOP

 
 சிறப்பு (12)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8
அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும்
  நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம்பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
  ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
  எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள் 76:2
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
  நாணுடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
  காதலர் செய்யும் சிறப்பு - குறள் 121:8

 TOP

 
 சிறப்பும் (1)
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
  சீரல்லவர்-கண் படின் - குறள் 98:7

 TOP

 
 சிறப்பொடு (2)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
  நீர்மை உடையார் சொலின் - குறள் 20:5

 TOP

 
 சிறிது (5)
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
  ஞாலத்தின் மாண பெரிது - குறள் 11:2
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
  வயிற்றுக்கும் ஈயப்படும் - குறள் 42:2
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
  அவா உண்டேல் உண்டாம் சிறிது - குறள் 108:5
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
  அல்லல் நோய் காண்கம் சிறிது - குறள் 131:1
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
  மிக்கு அற்றால் நீள விடல் - குறள் 131:2

 TOP

 
 சிறிய (1)
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
  சுருக்கத்து வேண்டும் உயர்வு - குறள் 97:3

 TOP

 
 சிறியர் (1)
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
  செயற்கு அரிய செய்கலாதார் - குறள் 3:6

 TOP

 
 சிறியவர் (1)
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
  எய்தலின் எய்தாமை நன்று - குறள் 82:5

 TOP

 
 சிறியார் (2)
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
  கொள்வர் பெரியார் பணிந்து - குறள் 68:10
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
  பேணி கொள்வேம் என்னும் நோக்கு - குறள் 98:6

 TOP

 
 சிறு (6)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
  சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4
சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான்
  ஊக்கம் அழிந்துவிடும் - குறள் 50:8
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
  ஊக்கம் அழிப்பது அரண் - குறள் 75:4
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
  வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள் 101:10
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
  வாடினும் பாடு பெறும் - குறள் 133:2

 TOP

 
 சிறுகும் (1)
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8

 TOP

 
 சிறுகுவ (1)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
  அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு - குறள் 80:8

 TOP

 
 சிறுசொல்லும் (1)
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
  உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - குறள் 110:7

 TOP

 
 சிறுபொருள் (1)
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10

 TOP

 
 சிறுமை (4)
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
  வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து - குறள் 98:8
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
  பெருமிதம் ஊர்ந்துவிடல் - குறள் 98:9
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
  நறு மலர் நாணின கண் - குறள் 124:1

 TOP

 
 சிறுமைக்கும் (1)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளை கல் - குறள் 51:5

 TOP

 
 சிறுமைத்தேயாயினும் (1)
எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும்
  உட்பகை உள்ளது ஆம் கேடு - குறள் 89:9

 TOP

 
 சிறுமைதான் (2)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
  சுற்றமா சூழ்ந்துவிடும் - குறள் 46:1
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
  குற்றமே கூறிவிடும் - குறள் 98:10

 TOP

 
 சிறுமையும் (2)
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
  பெருக்கம் பெருமித நீர்த்து - குறள் 44:1
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
  இல் ஆயின் வெல்லும் படை - குறள் 77:9

 TOP

 
 சிறுமையுள் (1)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
  இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8

 TOP

 
 சிறை (3)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
  உறை நிலத்தோடு ஒட்டல் அரிது - குறள் 50:9
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9

 TOP

 
 சினத்தான் (1)
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
  பேணாமை பேணப்படும் - குறள் 87:6

 TOP

 
 சினத்தின்? (1)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்? தீய
  பகையும் உளவோ பிற - குறள் 31:4

 TOP

 
 சினத்து (1)
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8

 TOP

 
 சினத்தை (2)
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
  நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - குறள் 31:7
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
  துறந்தார் துறந்தார் துணை - குறள் 31:10

 TOP

 
 சினம் (5)
செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் அல்லிடத்து
  காக்கின் என் காவாக்கால் என் - குறள் 31:1
செல்லா இடத்து சினம் தீது செல்லிடத்தும்
  இல் அதனின் தீய பிற - குறள் 31:2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
  தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6

 TOP

 
 சினமும் (1)
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
  பெருக்கம் பெருமித நீர்த்து - குறள் 44:1

 TOP

 
 சினைப்பது (1)
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
  சினைப்பது போன்று கெடும் - குறள் 121:3

 TOP