|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சீர் (5)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:8
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் - குறள் 97:2
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள் 101:10
TOP
சீர்த்த (1)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10
TOP
சீர்தூக்கும் (1)
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் - குறள் 82:3
TOP
சீர்மை (2)
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்க பெறின் - குறள் 13:3
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின் - குறள் 20:5
TOP
சீரல்லவர்-கண் (1)
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீரல்லவர்-கண் படின் - குறள் 98:7
TOP
சீரார் (1)
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் - குறள் 90:10
TOP
சீரிடம் (1)
சீரிடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு - குறள் 83:1
TOP
சீரினும் (1)
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் - குறள் 97:2
TOP
சீரும் (1)
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது - குறள் 50:9
TOP
சீரொடு (1)
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் - குறள் 97:2
TOP
சீறின் (2)
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு - குறள் 57:8
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் - குறள் 90:9
TOP
|
|
|