|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சொரிந்து (2)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று - குறள் 72:8
TOP
சொரியினும் (1)
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம - குறள் 38:6
TOP
சொல் (41)
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் - குறள் 4:5
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம்பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியா சொல் - குறள் 10:7
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது - குறள் 10:9
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் - குறள் 12:9
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு - குறள் 13:7
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து - குறள் 20:4
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் - குறள் 20:6
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் - குறள் 20:8
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் - குறள் 20:10
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று - குறள் 41:2
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் - குறள் 59:9
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலவர் - குறள் 61:7
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் - குறள் 65:3
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு - குறள் 82:9
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் - குறள் 83:6
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் - குறள் 83:7
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை - குறள் 88:2
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் - குறள் 105:6
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் - குறள் 110:6
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் - குறள் 115:7
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு - குறள் 116:4
TOP
சொல்ல (2)
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 65:9
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8
TOP
சொல்லல் (4)
பயனில பல்லார் முன் சொல்லல் நயனில
நட்டார்-கண் செய்தலின் தீது - குறள் 20:2
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 65:9
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் - குறள் 72:3
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று - குறள் 72:8
TOP
சொல்லலும் (1)
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
சொல்லலும் வல்லது அமைச்சு - குறள் 64:4
TOP
சொல்லற்க (3)
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் - குறள் 20:10
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் - குறள் 72:9
TOP
சொல்லன் (2)
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் - குறள் 39:6
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
TOP
சொல்லா (2)
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4
TOP
சொல்லாட (2)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10
TOP
சொல்லாடார் (1)
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் - குறள் 82:8
TOP
சொல்லாதார் (2)
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் - குறள் 73:8
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் - குறள் 73:10
TOP
சொல்லாது (1)
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் - குறள் 41:3
TOP
சொல்லாமை (1)
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று - குறள் 20:7
TOP
சொல்லாயோ (1)
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1
TOP
சொல்லார் (3)
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் - குறள் 20:8
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் - குறள் 42:7
TOP
சொல்லான் (1)
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
TOP
சொல்லி (11)
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பாடல் தேற்றாதவர் - குறள் 19:7
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது - குறள் 69:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் - குறள் 80:5
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காமநோய் சொல்லி இரவு - குறள் 128:10
TOP
சொல்லிய (1)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4
TOP
சொல்லில் (2)
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் - குறள் 20:10
TOP
சொல்லின் (4)
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 72:1
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் - குறள் 72:2
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் - குறள் 72:3
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1
TOP
சொல்லின்-கண் (1)
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு - குறள் 65:2
TOP
சொல்லினான் (1)
மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று - குறள் 83:5
TOP
சொல்லினும் (4)
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று - குறள் 20:7
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் - குறள் 83:6
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் - குறள் 105:6
TOP
சொல்லுக (6)
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று - குறள் 20:7
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் - குறள் 20:10
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள் 65:4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 72:1
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் - குறள் 72:2
TOP
சொல்லுதல் (2)
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 65:8
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4
TOP
சொல்லும் (5)
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் - குறள் 19:5
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை - குறள் 20:3
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து - குறள் 70:4
TOP
சொல்லுவ (1)
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2
TOP
சொல்லுவார் (2)
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் - குறள் 72:9
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செல சொல்லுவார் - குறள் 73:2
TOP
சொல்லுவான் (1)
பல்லார் முனிய பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும் - குறள் 20:1
TOP
சொல்லை (3)
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள் 65:4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5
TOP
சொல்வன்மை (1)
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று - குறள் 69:2
TOP
சொலல் (4)
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் - குறள் 30:1
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 65:7
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6
TOP
சொலால் (1)
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
TOP
சொலின் (2)
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் - குறள் 10:6
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின் - குறள் 20:5
TOP
சொலினும் (1)
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் - குறள் 110:6
TOP
சொற்கள் (1)
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல - குறள் 110:10
TOP
|
|
|