<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏஎர் 3
ஏக்கற்றும் 1
ஏகினான் 1
ஏங்கி 1
ஏங்குபவர்க்கு 1
ஏத்தும் 1
ஏதப்பாடு 1
ஏதம் 8
ஏதில் 1
ஏதில 2
ஏதிலர் 3
ஏதிலார் 5
ஏதிலார்-மாட்டு 1
ஏதிலான் 1
ஏதின்மை 1
ஏந்தல் 1
ஏந்திய 1
ஏம 3
ஏமம் 3
ஏமரா 1
ஏமாக்கல் 1
ஏமாப்பு 7
ஏமாப்பு_இல் 1
ஏமுற்றவரினும் 1
ஏர் 5
ஏரின் 1
ஏரினும் 1
ஏவல் 2
ஏவல்பாற்று 1
ஏவவும் 1
ஏழை 1
ஏற்றல் 1
ஏற்று 1
ஏறா 1
ஏறி 2
ஏறினார் 1
ஏறு 2
ஏறும் 2
ஏனை 4
ஏனைய 1
ஏனையவர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 ஏஎர் (3)
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
  இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள் 106:3
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
  பசையினள் பைய நகும் - குறள் 110:8
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
  பூ அன்ன கண்ணார் அகத்து - குறள் 131:5

 TOP


 ஏக்கற்றும் (1)
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
  கடையரே கல்லாதவர் - குறள் 40:5

 TOP

 
 ஏகினான் (1)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
  நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3

 TOP

 
 ஏங்கி (1)
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
  பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள் 125:8

 TOP

 
 ஏங்குபவர்க்கு (1)
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9

 TOP

 
 ஏத்தும் (1)
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10

 TOP

 
 ஏதப்பாடு (1)
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
  ஏதப்பாடு அஞ்சுபவர் - குறள் 47:4

 TOP

 
 ஏதம் (8)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 14:6
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 17:4
பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
  ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு - குறள் 44:2
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
  ஊதியம் போகவிடல் - குறள் 84:1
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
  ஏதம் பலவும் தரும் - குறள் 89:4
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான்
  ஏதம் பலவும் தரும் - குறள் 89:5
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
  ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6

 TOP

 
 ஏதில் (1)
பொருள்_பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
  ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3

 TOP

 
 ஏதில (2)
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
  அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9

 TOP

 
 ஏதிலர் (3)
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:9
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:10
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
  ஏதிலர் போல வரும் - குறள் 123:4

 TOP

 
 ஏதிலார் (5)
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
  தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
  பெரும் செல்வம் உற்றக்கடை - குறள் 84:7
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
  காதலார்-கண்ணே உள - குறள் 110:9
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாமுடைய
  நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10

 TOP

 
 ஏதிலார்-மாட்டு (1)
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
  என்னை-கொல் ஏதிலார்-மாட்டு - குறள் 19:8

 TOP

 
 ஏதிலான் (1)
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
  என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2

 TOP

 
 ஏதின்மை (1)
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
  ஏதின்மை கோடி உறும் - குறள் 82:6

 TOP

 
 ஏந்தல் (1)
கான முயல் எய்த அம்பினில் யானை
  பிழைத்த வேல் ஏந்தல் இனிது - குறள் 78:2

 TOP

 
 ஏந்திய (1)
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
  வேந்தனும் வேந்து கெடும் - குறள் 90:9

 TOP

 
 ஏம (3)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
  மடல் அல்லது இல்லை வலி - குறள் 114:1
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
  ஏம புணை-மன்னும் இல் - குறள் 117:4

 TOP

 
 ஏமம் (3)
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
  அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள் 74:8
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
  என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
  எய்தலின் எய்தாமை நன்று - குறள் 82:5

 TOP

 
 ஏமரா (1)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
  கெடுப்பார் இலானும் கெடும் - குறள் 45:8

 TOP

 
 ஏமாக்கல் (1)
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
  கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள் 66:10

 TOP

 
 ஏமாப்பு (7)
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
  எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள் 12:2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு
  இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
  இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
குணனிலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனனிலனாம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8

 TOP

 
 ஏமாப்பு_இல் (1)
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8

 TOP

 
 ஏமுற்றவரினும் (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
  பல்லார் பகை கொள்பவன் - குறள் 88:3

 TOP

 
 ஏர் (5)
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
  சொல் ஏர் உழவர் பகை - குறள் 88:2
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை - குறள் 104:1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
  அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
  பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள் 128:2

 TOP

 
 ஏரின் (1)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
  வாரி வளம் குன்றியக்கால் - குறள் 2:4

 TOP

 
 ஏரினும் (1)
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
  நீரினும் நன்று அதன் காப்பு - குறள் 104:8

 TOP

 
 ஏவல் (2)
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
  பெண்ணே பெருமை உடைத்து - குறள் 91:7
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

 TOP

 
 ஏவல்பாற்று (1)
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள் 52:5

 TOP

 
 ஏவவும் (1)
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
  போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8

 TOP

 
 ஏழை (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
  பல்லார் பகை கொள்பவன் - குறள் 88:3

 TOP

 
 ஏற்றல் (1)
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
  மெலியார் மேல் மேக பகை - குறள் 87:1

 TOP

 
 ஏற்று (1)
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
  ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6

 TOP

 
 ஏறா (1)
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
  பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள் 114:7

 TOP

 
 ஏறி (2)
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணமேயும் காத்தல் அரிது - குறள் 3:9
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8

 TOP

 
 ஏறினார் (1)
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
  உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள் 48:6

 TOP

 
 ஏறு (2)
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
  ஏறு போல் பீடு நடை - குறள் 6:9
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
  உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1

 TOP

 
 ஏறும் (2)
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
  காமுற்றார் ஏறும் மடல் - குறள் 114:3
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
  கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4

 TOP

 
 ஏனை (4)
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளை கல் - குறள் 51:5
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
  உறுப்பு ஓர் அனையரால் வேறு - குறள் 71:4
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
  ஏனை இரண்டும் ஒருங்கு - குறள் 76:10

 TOP

 
 ஏனைய (1)
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
  மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8

 TOP

 
 ஏனையவர் (1)
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரோடு ஏனையவர் - குறள் 41:10

 TOP