<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

கா - முதல் சொற்கள்
கா 1
காக்க 6
காக்கின் 2
காக்கும் 7
காக்கை 2
காட்சிக்கு 1
காட்சியர் 1
காட்சியவர் 5
காட்சியவர்க்கு 1
காட்ட 1
காட்டி 2
காட்டிய 1
காட்டிவிடும் 2
காட்டுதல் 1
காட்டும் 4
காட்டுவான் 1
காடிக்கும் 1
காடும் 1
காண் 2
காண்க-மன் 1
காண்கம் 1
காண்கிற்பின் 2
காண்டலின் 1
காண்பது 4
காண்பர் 2
காண்பவர் 1
காண்பான் 1
காண்பானாயினும் 1
காண்பு 1
காண 5
காணப்படும் 5
காணலுற்று 1
காணா 2
காணாக்கால் 1
காணாதவர் 1
காணாதான் 2
காணாது 2
காணார் 1
காணார்-கொல் 1
காணான் 2
காணான்-கொல் 1
காணின் 11
காணுங்கால் 3
காணும் 3
காணேன் 4
காத்த 1
காத்தல் 1
காத்தலும் 1
காத்து 3
காதல் 6
காதல 1
காதலம் 1
காதலர் 10
காதலவர் 4
காதலவராக 2
காதலன் 1
காதலார்-கண்ணே 1
காதலிக்கும் 1
காதலை 1
காதற்று 1
காதன்மை 2
காப்பாற்றும் 1
காப்பான் 3
காப்பின் 1
காப்பு 3
காப்பே 1
காம்பு 1
காம 7
காமத்தான் 2
காமத்திற்கு 2
காமத்தின் 1
காமத்து 1
காமத்தை 1
காமநோய் 2
காமம் 24
காமமும் 1
காமன் 1
காமுற்றார் 1
காமுற்று 1
காமுறுதல் 1
காமுறுவர் 2
காய் 1
காய்தி 1
காய்வார் 1
காய்வு 1
காயார் 1
காயினும் 1
காயும் 3
காயுமே 1
கார் 1
காரணத்தின் 1
காரணம் 3
காரிகை 4
கால் 6
காலத்தால் 1
காலத்தினால் 1
காலத்தோடு 1
காலம் 8
காலமும் 2
காலும் 1
காலை 6
காலைக்கு 1
காவலன் 1
காவா 1
காவாக்கால் 3
காவாதான் 1
காவாது 1
காவாராயினும் 1
காவான் 1
காழ் 1
காழ்_இல் 1
காழ்த்த 1
காழ்ப்ப 1
கான 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 கா (1)
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
  இருதலையானும் இனிது - குறள் 120:6

 TOP

 
 காக்க (6)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
  அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு - குறள் 13:2
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
  சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு - குறள் 13:7
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
  தேரினும் அஃதே துணை - குறள் 14:2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
  தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
குற்றமே காக்க பொருளாக குற்றமே
  அற்றம் தரூஉம் பகை - குறள் 44:4

 TOP

 
 காக்கின் (2)
செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் அல்லிடத்து
  காக்கின் என் காவாக்கால் என் - குறள் 31:1
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
  தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5

 TOP

 
 காக்கும் (7)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
  உள் அழிக்கல் ஆகா அரண் - குறள் 43:1
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
  அதிர வருவதோர் நோய் - குறள் 43:9
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
  பெற்றியார் பேணி கொளல் - குறள் 45:2
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7

 TOP

 
 காக்கை (2)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள் 49:1
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
  அன்ன நீரார்க்கே உள - குறள் 53:7

 TOP

 
 காட்சிக்கு (1)
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
  மீக்கூறும் மன்னன் நிலம் - குறள் 39:6

 TOP

 
 காட்சியர் (1)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
  உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8

 TOP

 
 காட்சியவர் (5)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை_இல் காட்சியவர் - குறள் 18:4
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
  மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
  கடன் அறி காட்சியவர் - குறள் 22:8
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
  நடுக்கு அற்ற காட்சியவர் - குறள் 66:4
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9

 TOP

 
 காட்சியவர்க்கு (1)
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
  மாசறு காட்சியவர்க்கு - குறள் 36:2

 TOP

 
 காட்ட (1)
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1

 TOP

 
 காட்டி (2)
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
  வாள் அது உணர்வார் பெறின் - குறள் 34:4
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4

 TOP

 
 காட்டிய (1)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3

 TOP

 
 காட்டிவிடும் (2)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
  தவ்வையை காட்டிவிடும் - குறள் 17:7

 TOP

 
 காட்டுதல் (1)
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9

 TOP

 
 காட்டும் (4)
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம் - குறள் 71:6
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 TOP

 
 காட்டுவான் (1)
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
  கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9

 TOP

 
 காடிக்கும் (1)
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10

 TOP

 
 காடும் (1)
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
  காடும் உடையது அரண் - குறள் 75:2

 TOP

 
 காண் (2)
எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
  நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4

 TOP

 
 காண்க-மன் (1)
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின்
  நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள் 127:5

 TOP

 
 காண்கம் (1)
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
  அல்லல் நோய் காண்கம் சிறிது - குறள் 131:1

 TOP

 
 காண்கிற்பின் (2)
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
  தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6

 TOP

 
 காண்டலின் (1)
நனவினான் நல்காதவரை கனவினான்
  காண்டலின் உண்டு என் உயிர் - குறள் 122:3

 TOP

 
 காண்பது (4)
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 36:5
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம்பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4

 TOP

 
 காண்பர் (2)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
  தாழாது உஞற்றுபவர் - குறள் 62:10
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
  அலகு உடை நீழலவர் - குறள் 104:4

 TOP

 
 காண்பவர் (1)
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால்
  அல்லற்படுவது எவன் - குறள் 38:9

 TOP

 
 காண்பான் (1)
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
  வன் சொல் வழங்குவது - குறள் 10:9

 TOP

 
 காண்பானாயினும் (1)
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
  சான்றோர் பழிக்கும் வினை - குறள் 66:6

 TOP

 
 காண்பு (1)
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
  பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6

 TOP

 
 காண (5)
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்றாகும் கீழ் - குறள் 108:9
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
  பலர் காண தோன்றல் மதி - குறள் 112:9
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
  யாம் பட்ட தாம் படாவாறு - குறள் 114:10
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
  படாஅதி வாழி மதி - குறள் 121:10
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
  கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - குறள் 129:1

 TOP

 
 காணப்படும் (5)
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
  எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
  புன்மையால் காணப்படும் - குறள் 19:5
புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
  வாய்மையான் காணப்படும் - குறள் 30:8
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
  கூடலின் காணப்படும் - குறள் 133:7

 TOP

 
 காணலுற்று (1)
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
  தின்னும் அவர் காணலுற்று - குறள் 125:4

 TOP

 
 காணா (2)
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
  பேணாமை பேணப்படும் - குறள் 87:6
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5

 TOP

 
 காணாக்கால் (1)
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
  காணேன் தவறு அல்லவை - குறள் 129:6

 TOP

 
 காணாதவர் (1)
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
  காதலர் காணாதவர் - குறள் 122:9

 TOP

 
 காணாதான் (2)
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
  கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9

 TOP

 
 காணாது (2)
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
  காணாது அமைவு இல கண் - குறள் 118:8
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
  காணாது அமையல கண் - குறள் 129:3

 TOP

 
 காணார் (1)
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல்
  இன்னா அறிவினவர் - குறள் 86:7

 TOP

 
 காணார்-கொல் (1)
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
  காணார்-கொல் இ ஊரவர் - குறள் 122:10

 TOP

 
 காணான் (2)
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
  கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
  மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9

 TOP

 
 காணான்-கொல் (1)
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7

 TOP

 
 காணின் (11)
செறுநரை காணின் சுமக்க இறுவரை
  காணின் கிழக்காம் தலை - குறள் 49:8
சீரிடம் காணின் எறிதற்கு பட்டடை
  நேரா நிரந்தவர் நட்பு - குறள் 83:1
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள் 104:10
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
  அவர் பழி தம் பழி அன்று - குறள் 106:1
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
  எல்லாம் ஒருங்கு கெடும் - குறள் 106:6
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
  உள்ளுள் உவப்பது உடைத்து - குறள் 106:7
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
  மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் - குறள் 108:4
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்றாகும் கீழ் - குறள் 108:9
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 காணுங்கால் (3)
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
  கண் அல்லது இல்லை பிற - குறள் 71:10
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால்
  உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு - குறள் 93:10
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
  காணேன் தவறு அல்லவை - குறள் 129:6

 TOP

 
 காணும் (3)
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
  இன்முகம் காணும் அளவு - குறள் 23:4
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
  மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2

 TOP

 
 காணேன் (4)
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
  காணேன் தவறு அல்லவை - குறள் 129:6

 TOP

 
 காத்த (1)
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
  வகுத்தலும் வல்லது அரசு - குறள் 39:5

 TOP

 
 காத்தல் (1)
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணமேயும் காத்தல் அரிது - குறள் 3:9

 TOP

 
 காத்தலும் (1)
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
  வகுத்தலும் வல்லது அரசு - குறள் 39:5

 TOP

 
 காத்து (3)
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
  சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
  காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு - குறள் 65:2

 TOP

 
 காதல் (6)
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
  வீயா விழுமம் தரும் - குறள் 29:4
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10
உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
  தாம் காதல் கொள்ளாக்கடை - குறள் 120:5
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8

 TOP

 
 காதல (1)
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10

 TOP

 
 காதலம் (1)
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
  யாரினும் யாரினும் என்று - குறள் 132:4

 TOP

 
 காதலர் (10)
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
  மேனி பசப்பு ஊர்வது - குறள் 119:5
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
  காதலர் செய்யும் சிறப்பு - குறள் 121:8
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
  யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1
நனவு என ஒன்று இல்லையாயின் கனவினான்
  காதலர் நீங்கலர்-மன் - குறள் 122:6
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
  காதலர் காணாதவர் - குறள் 122:9
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
  ஏதிலர் போல வரும் - குறள் 123:4
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
  காதலர் இல்லா வழி - குறள் 131:8

 TOP

 
 காதலவர் (4)
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
  நுண்ணியர் எம் காதலவர் - குறள் 113:6
காதலவர் இலர் ஆக நீ நோவது
  பேதைமை வாழி என் நெஞ்சு - குறள் 125:2
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
  யாருழை சேறி என் நெஞ்சு - குறள் 125:9

 TOP

 
 காதலவராக (2)
கண்ணுள்ளார் காதலவராக கண்ணும்
  எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள் 113:7
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
  அஞ்சுதும் வேபாக்கு அறிந்து - குறள் 113:8

 TOP

 
 காதலன் (1)
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9

 TOP

 
 காதலார்-கண்ணே (1)
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
  காதலார்-கண்ணே உள - குறள் 110:9

 TOP

 
 காதலிக்கும் (1)
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
  உழத்-தொறூஉம் காதற்று உயிர் - குறள் 94:10

 TOP

 
 காதலை (1)
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி - குறள் 112:8

 TOP

 
 காதற்று (1)
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
  உழத்-தொறூஉம் காதற்று உயிர் - குறள் 94:10

 TOP

 
 காதன்மை (2)
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
  பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
  கை அல்லதன்-கண் செயல் - குறள் 84:2

 TOP

 
 காப்பாற்றும் (1)
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8

 TOP

 
 காப்பான் (3)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
  வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள் 3:4
செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் அல்லிடத்து
  காக்கின் என் காவாக்கால் என் - குறள் 31:1

 TOP

 
 காப்பின் (1)
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
  ஊக்கம் அழிப்பது அரண் - குறள் 75:4

 TOP

 
 காப்பு (3)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
  வினைக்கு அரிய யா உள காப்பு - குறள் 79:1
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
  நீரினும் நன்று அதன் காப்பு - குறள் 104:8

 TOP

 
 காப்பே (1)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7

 TOP

 
 காம்பு (1)
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
  பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள் 128:2

 TOP

 
 காம (7)
நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
  கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
  நல்லாண்மை என்னும் புணை - குறள் 114:4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
  விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள் 116:9
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
  ஏம புணை-மன்னும் இல் - குறள் 117:4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
  காம நோய் செய்த என் கண் - குறள் 118:5
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
  நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1

 TOP

 
 காமத்தான் (2)
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
  பேணாமை பேணப்படும் - குறள் 87:6
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
  பேணியார் பெட்ப செயின் - குறள் 126:7

 TOP

 
 காமத்திற்கு (2)
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
  கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - குறள் 129:1
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
  கூடி முயங்க பெறின் - குறள் 133:10

 TOP

 
 காமத்தின் (1)
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2

 TOP

 
 காமத்து (1)
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
  காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1

 TOP

 
 காமத்தை (1)
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
  தும்மல் போல் தோன்றிவிடும் - குறள் 126:3

 TOP

 
 காமநோய் (2)
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய்
  உற்றார் அறிவது ஒன்று அன்று - குறள் 126:5
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
  காமநோய் சொல்லி இரவு - குறள் 128:10

 TOP

 
 காமம் (24)
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
  நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
  கண்டார் மகிழ்செய்தல் இன்று - குறள் 109:10
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
  கூடியார் பெற்ற பயன் - குறள் 111:9
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை-மாட்டு - குறள் 111:10
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
  மடல் அல்லது இல்லை வலி - குறள் 114:1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
  பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள் 114:7
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
  மறை இறந்து மன்று படும் - குறள் 114:8
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
  மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
  தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
  காமம் நுதுப்பேம் எனல் - குறள் 115:8
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால்
  துன்பம் அதனின் பெரிது - குறள் 117:6
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
  இருதலையானும் இனிது - குறள் 120:6
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
  கள்ளினும் காமம் இனிது - குறள் 121:1
எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
  நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
  நல்காரை நாடி தரற்கு - குறள் 122:4
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே
  யானோ பொறேன் இ இரண்டு - குறள் 125:7
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
  மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
  கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
  காமம் நிறைய வரின் - குறள் 129:2
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
  செவ்வி தலைப்படுவார் - குறள் 129:9
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
  கனியும் கருக்காயும் அற்று - குறள் 131:6
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
  புணர்தலின் ஊடல் இனிது - குறள் 133:6

 TOP

 
 காமமும் (1)
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
  நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3

 TOP

 
 காமன் (1)
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7

 TOP

 
 காமுற்றார் (1)
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
  காமுற்றார் ஏறும் மடல் - குறள் 114:3

 TOP

 
 காமுற்று (1)
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
  இல்லாதாள் பெண் காமுற்று அற்று - குறள் 41:2

 TOP

 
 காமுறுதல் (1)
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
  இல்லாதாள் பெண் காமுற்று அற்று - குறள் 41:2

 TOP

 
 காமுறுவர் (2)
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
  சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 65:9

 TOP

 
 காய் (1)
இனிய உளவாக இன்னாத கூறல்
  கனி இருப்ப காய் கவர்ந்து அற்று - குறள் 10:10

 TOP

 
 காய்தி (1)
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6

 TOP

 
 காய்வார் (1)
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
  இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - குறள் 70:1

 TOP

 
 காய்வு (1)
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6

 TOP

 
 காயார் (1)
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
  காதலர் செய்யும் சிறப்பு - குறள் 121:8

 TOP

 
 காயினும் (1)
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
  காயினும் தான் முந்துறும் - குறள் 71:7

 TOP

 
 காயும் (3)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
  இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
  யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள் 132:10

 TOP

 
 காயுமே (1)
என்பு இலதனை வெயில் போல காயுமே
  அன்பு இலதனை அறம் - குறள் 8:7

 TOP

 
 கார் (1)
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7

 TOP

 
 காரணத்தின் (1)
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
  இழைத்து இருந்து எண்ணி கொளல் - குறள் 53:10

 TOP

 
 காரணம் (3)
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
  சிலர் பலர் நோலாதவர் - குறள் 27:10
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
  காரணம் இன்றி வரும் - குறள் 53:9
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9

 TOP

 
 காரிகை (4)
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
  உண்மையான் உண்டு இ உலகு - குறள் 58:1
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
  கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
  கலம் கழியும் காரிகை நீத்து - குறள் 127:2
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
  பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள் 128:2

 TOP

 
 கால் (6)
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்
  நாவாயும் ஓடா நிலத்து - குறள் 50:6
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
  வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
  குழாஅத்து பேதை புகல் - குறள் 84:10
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
  நல் ஆள் இலாத குடி - குறள் 103:10
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
  நல்ல படாஅ பறை - குறள் 112:5

 TOP

 
 காலத்தால் (1)
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
  தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6

 TOP

 
 காலத்தினால் (1)
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
  ஞாலத்தின் மாண பெரிது - குறள் 11:2

 TOP

 
 காலத்தோடு (1)
செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு
  எய்த உணர்ந்து செயல் - குறள் 52:6

 TOP

 
 காலம் (8)
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின் - குறள் 49:4
காலம் கருதி இருப்பர் கலங்காது
  ஞாலம் கருதுபவர் - குறள் 49:5
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
  எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு
  அகம் நட்பு ஒரீஇவிடல் - குறள் 83:10

 TOP

 
 காலமும் (2)
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
  அருவினையும் மாண்டது அமைச்சு - குறள் 64:1
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
  கற்றான் கருதி செயல் - குறள் 95:9

 TOP

 
 காலும் (1)
இடம் எல்லாம் கொள்ளாத்தகைத்தே இடம் இல்லா
  காலும் இரவு ஒல்லா சால்பு - குறள் 107:4

 TOP

 
 காலை (6)
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
  உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 80:9
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
  கழகத்து காலை புகின் - குறள் 94:7
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
  காலை அறிந்தது இலேன் - குறள் 123:6
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
  மாலை மலரும் இ நோய் - குறள் 123:7

 TOP

 
 காலைக்கு (1)
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5

 TOP

 
 காவலன் (1)
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10

 TOP

 
 காவா (1)
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
  நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3

 TOP

 
 காவாக்கால் (3)
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
  சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு - குறள் 13:7
செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் அல்லிடத்து
  காக்கின் என் காவாக்கால் என் - குறள் 31:1
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
  தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5

 TOP

 
 காவாதான் (1)
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
  வைத்தூறு போல கெடும் - குறள் 44:5

 TOP

 
 காவாது (1)
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
  பின் ஊறு இரங்கிவிடும் - குறள் 54:5

 TOP

 
 காவாராயினும் (1)
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
  சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு - குறள் 13:7

 TOP

 
 காவான் (1)
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10

 TOP

 
 காழ் (1)
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
  காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1

 TOP

 
 காழ்_இல் (1)
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
  காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1

 TOP

 
 காழ்த்த (1)
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
  கை கொல்லும் காழ்த்த இடத்து - குறள் 88:9

 TOP

 
 காழ்ப்ப (1)
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
  ஏனை இரண்டும் ஒருங்கு - குறள் 76:10

 TOP

 
 கான (1)
கான முயல் எய்த அம்பினில் யானை
  பிழைத்த வேல் ஏந்தல் இனிது - குறள் 78:2

 TOP