|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கெட்ட (1)
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
TOP
கெட்டார்க்கு (2)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டாங்கு அவர் பின் செலல் - குறள் 130:3
TOP
கெட்டாரை (1)
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - குறள் 54:9
TOP
கெட்டான் (1)
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7
TOP
கெட (3)
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் - குறள் 36:9
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6
TOP
கெடல் (2)
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு - குறள் 90:3
TOP
கெடலும் (1)
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6
TOP
கெடாஅ (1)
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு - குறள் 81:9
TOP
கெடின் (2)
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 37:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 86:4
TOP
கெடுக்கும் (3)
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் - குறள் 45:7
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்து காலை புகின் - குறள் 94:7
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை - குறள் 105:3
TOP
கெடுக (1)
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
TOP
கெடுத்து (2)
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8
TOP
கெடுதல் (1)
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று - குறள் 21:8
TOP
கெடுப்பதூஉம் (1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5
TOP
கெடுப்பார் (1)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - குறள் 45:8
TOP
கெடும் (32)
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் - குறள் 11:9
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் - குறள் 17:6
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும் - குறள் 29:3
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் - குறள் 44:5
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றி கெடும் - குறள் 44:7
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - குறள் 45:8
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும் - குறள் 47:6
அமைந்தாங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் - குறள் 48:9
உள வரை தூக்காத ஒப்புரவாண்மை
வள வரை வல்லை கெடும் - குறள் 48:10
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் - குறள் 55:8
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் - குறள் 56:3
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாளாண்மை போல கெடும் - குறள் 62:4
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் - குறள் 63:2
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 80:9
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் - குறள் 90:9
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் - குறள் 103:8
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் - குறள் 106:6
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் - குறள் 107:9
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் - குறள் 121:3
TOP
கெடுவல் (1)
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
TOP
கெடுவாக (1)
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
TOP
கெழீஇ (2)
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும் - குறள் 82:6
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள் 82:10
TOP
கெழீஇயிலர் (1)
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் - குறள் 120:4
TOP
கெழு (1)
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
TOP
கெழுதகைமை (3)
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் - குறள் 81:2
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக்கடை - குறள் 81:3
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் - குறள் 81:8
TOP
கெழுதகையான் (1)
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் - குறள் 81:4
TOP
|
|
|