<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

கொ - முதல் சொற்கள்
கொக்கு 1
கொட்க 1
கொட்கின் 1
கொட்பு 1
கொடிது 1
கொடிதே 1
கொடிய 1
கொடியர் 1
கொடியார் 3
கொடியார்க்கு 1
கொடியாரை 1
கொடிறு 1
கொடு 1
கொடுத்தல்-பொருட்டு 1
கொடுத்தலும் 1
கொடுத்து 1
கொடுத்தும் 3
கொடுப்பது 1
கொடுப்பதூஉம் 1
கொடும் 1
கொடுமை 1
கொடுமையின் 1
கொடை 1
கொடையான் 1
கொண்கன் 3
கொண்கனை 2
கொண்ட 3
கொண்டவன் 1
கொண்டனள் 1
கொண்டார் 3
கொண்டு 7
கொம்பர் 1
கொல் 1
கொல்க 1
கொல்ல 1
கொல்லா 1
கொல்லாது 1
கொல்லாமை 6
கொல்லான் 1
கொல்லி 1
கொல்லும் 5
கொலை 3
கொலைக்களத்து 1
கொலையின் 1
கொழுநன் 1
கொள் 1
கொள்க 2
கொள்கலம்-கொல்லோ 1
கொள்கை 1
கொள்கையர் 1
கொள்பவன் 1
கொள்வர் 3
கொள்வார் 1
கொள்வாரும் 1
கொள்வாரொடு 1
கொள்வு 1
கொள்வேம் 1
கொள்ளற்க 3
கொள்ளாக்கடை 1
கொள்ளாத்தகைத்தே 1
கொள்ளாத 2
கொள்ளாதாம் 1
கொள்ளாதான் 1
கொள்ளாது 1
கொள்ளாது-மன்னோ 1
கொள்ளார் 1
கொள்ளும் 1
கொள 2
கொளப்பட்டேம் 1
கொளல் 22
கொளலின் 1
கொளற்கு 1
கொளின் 2
கொளினும் 1
கொற்றம் 1
கொன்ற 1
கொன்றது 1
கொன்றாங்கு 1
கொன்றார்க்கும் 1
கொன்றிட 1
கொன்று 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 கொக்கு (1)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
  குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10

 TOP

 
 கொட்க (1)
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
  எற்றா விழுமம் தரும் - குறள் 67:3

 TOP

 
 கொட்கின் (1)
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
  எற்றா விழுமம் தரும் - குறள் 67:3

 TOP

 
 கொட்பு (1)
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9

 TOP

 
 கொடிது (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 TOP

 
 கொடிதே (1)
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
  அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1

 TOP

 
 கொடிய (1)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
  நெடிய கழியும் இரா - குறள் 117:9

 TOP

 
 கொடியர் (1)
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
  கொடியர் என கூறல் நொந்து - குறள் 124:6

 TOP

 
 கொடியார் (3)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
  நெடிய கழியும் இரா - குறள் 117:9
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
  என் எம்மை பீழிப்பது - குறள் 122:7
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:5

 TOP

 
 கொடியார்க்கு (1)
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
  வாடூ தோள் பூசல் உரைத்து - குறள் 124:7

 TOP

 
 கொடியாரை (1)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
  களை கட்டதனொடு நேர் - குறள் 55:10

 TOP

 
 கொடிறு (1)
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
  கூன் கையர் அல்லாதவர்க்கு - குறள் 108:7

 TOP

 
 கொடு (1)
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
  கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4

 TOP

 
 கொடுத்தல்-பொருட்டு (1)
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
  மாற்றம் கொடுத்தல்-பொருட்டு - குறள் 73:5

 TOP

 
 கொடுத்தலும் (1)
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
  சுற்றத்தால் சுற்றப்படும் - குறள் 53:5

 TOP

 
 கொடுத்து (1)
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
  மெய் அறியாமை கொளல் - குறள் 93:5

 TOP

 
 கொடுத்தும் (3)
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
  யாது கொடுத்தும் கொளல் - குறள் 71:3
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
  மாணாத செய்வான் பகை - குறள் 87:7

 TOP

 
 கொடுப்பது (1)
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
  உண்பதூஉம் இன்றி கெடும் - குறள் 17:6

 TOP

 
 கொடுப்பதூஉம் (1)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
  கோடி உண்டாயினும் இல் - குறள் 101:5

 TOP

 
 கொடும் (1)
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
  செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6

 TOP

 
 கொடுமை (1)
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:5

 TOP

 
 கொடுமையின் (1)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
  நெடிய கழியும் இரா - குறள் 117:9

 TOP

 
 கொடை (1)
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10

 TOP

 
 கொடையான் (1)
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
  மருங்கு உடையார் மாநிலத்து இல் - குறள் 53:6

 TOP

 
 கொண்கன் (3)
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
  முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
  பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5

 TOP

 
 கொண்கனை (2)
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின்
  நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள் 127:5
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
  காணாது அமையல கண் - குறள் 129:3

 TOP

 
 கொண்ட (3)
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
  பின் பயக்கும் நற்பாலவை - குறள் 66:9
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
  நிலைக்கு எளிதாம் நீரது அரண் - குறள் 75:5
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2

 TOP

 
 கொண்டவன் (1)
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
  நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - குறள் 31:7

 TOP

 
 கொண்டனள் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 TOP

 
 கொண்டார் (3)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
  உடல் சுவை உண்டார் மனம் - குறள் 26:3
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
  நோயும் பசலையும் தந்து - குறள் 119:3
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
  தாம் காதல் கொள்ளாக்கடை - குறள் 120:5

 TOP

 
 கொண்டு (7)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
  ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள் 78:5
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
  ஊதியம் போகவிடல் - குறள் 84:1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
  தகைமைக்-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1
ஒருமை மகளிரே போல பெருமையும்
  தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
  திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6

 TOP

 
 கொம்பர் (1)
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
  உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள் 48:6

 TOP

 
 கொல் (1)
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5

 TOP

 
 கொல்க (1)
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
  கை கொல்லும் காழ்த்த இடத்து - குறள் 88:9

 TOP

 
 கொல்ல (1)
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
  கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8

 TOP

 
 கொல்லா (1)
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
  சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4

 TOP

 
 கொல்லாது (1)
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை-பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6

 TOP

 
 கொல்லாமை (6)
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
  பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
  பின் சார பொய்யாமை நன்று - குறள் 33:3
நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6

 TOP

 
 கொல்லான் (1)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும் - குறள் 26:10

 TOP

 
 கொல்லி (1)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6

 TOP

 
 கொல்லும் (5)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்? தீய
  பகையும் உளவோ பிற - குறள் 31:4
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
  தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்றாங்கு - குறள் 54:2
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
  கை கொல்லும் காழ்த்த இடத்து - குறள் 88:9
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
  குழல் போலும் கொல்லும் படை - குறள் 123:8

 TOP

 
 கொலை (3)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
  புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
  அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1

 TOP

 
 கொலைக்களத்து (1)
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
  ஏதிலர் போல வரும் - குறள் 123:4

 TOP

 
 கொலையின் (1)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
  களை கட்டதனொடு நேர் - குறள் 55:10

 TOP

 
 கொழுநன் (1)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
  பெய் என பெய்யும் மழை - குறள் 6:5

 TOP

 
 கொள் (1)
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
  துன்பம் வளர வரும் - குறள் 123:3

 TOP

 
 கொள்க (2)
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
  அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
  இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5

 TOP

 
 கொள்கலம்-கொல்லோ (1)
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
  குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9

 TOP

 
 கொள்கை (1)
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
  நாணின்மை நின்றக்கடை - குறள் 102:9

 TOP

 
 கொள்கையர் (1)
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
  வேந்தனும் வேந்து கெடும் - குறள் 90:9

 TOP

 
 கொள்பவன் (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
  பல்லார் பகை கொள்பவன் - குறள் 88:3

 TOP

 
 கொள்வர் (3)
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா
  கொள்வர் பயன் தெரிவார் - குறள் 11:4
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையா
  கொள்வர் பழி நாணுவார் - குறள் 44:3
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
  கொள்வர் பெரியார் பணிந்து - குறள் 68:10

 TOP

 
 கொள்வார் (1)
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9

 TOP

 
 கொள்வாரும் (1)
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
  கொள்வாரும் கள்வரும் நேர் - குறள் 82:3

 TOP

 
 கொள்வாரொடு (1)
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
  உறுப்பு ஓர் அனையரால் வேறு - குறள் 71:4

 TOP

 
 கொள்வு (1)
புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
  அள்ளி கொள்வு அற்றே பசப்பு - குறள் 119:7

 TOP

 
 கொள்வேம் (1)
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
  பேணி கொள்வேம் என்னும் நோக்கு - குறள் 98:6

 TOP

 
 கொள்ளற்க (3)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
  அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு - குறள் 80:8
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
  தீங்கு குறித்தமையான் - குறள் 83:7
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
  சொல் ஏர் உழவர் பகை - குறள் 88:2

 TOP

 
 கொள்ளாக்கடை (1)
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
  தாம் காதல் கொள்ளாக்கடை - குறள் 120:5

 TOP

 
 கொள்ளாத்தகைத்தே (1)
இடம் எல்லாம் கொள்ளாத்தகைத்தே இடம் இல்லா
  காலும் இரவு ஒல்லா சால்பு - குறள் 107:4

 TOP

 
 கொள்ளாத (2)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9

 TOP

 
 கொள்ளாதாம் (1)
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
  கையாறா கொள்ளாதாம் மேல் - குறள் 63:7

 TOP

 
 கொள்ளாதான் (1)
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
  தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2

 TOP

 
 கொள்ளாது (1)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10

 TOP

 
 கொள்ளாது-மன்னோ (1)
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன்? ஞாலம்
  பேணலர் மேலாயவர் - குறள் 102:6

 TOP

 
 கொள்ளார் (1)
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
  கொள்ளார் அறிவுடையார் - குறள் 41:4

 TOP

 
 கொள்ளும் (1)
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2

 TOP

 
 கொள (2)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
  கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59:3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
  தின்னும் அவர் காணலுற்று - குறள் 125:4

 TOP

 
 கொளப்பட்டேம் (1)
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9

 TOP

 
 கொளல் (22)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று - குறள் 23:2
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
  பெற்றியார் பேணி கொளல் - குறள் 45:2
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
  பேணி தமரா கொளல் - குறள் 45:3
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்க கொளல் - குறள் 51:4
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
  இழைத்து இருந்து எண்ணி கொளல் - குறள் 53:10
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
  ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8
செய் வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
  ஒட்டாரை ஒட்டி கொளல் - குறள் 68:9
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
  தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள் 71:2
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
  யாது கொடுத்தும் கொளல் - குறள் 71:3
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
  வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
  வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் - குறள் 80:5
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
  மாணாத செய்வான் பகை - குறள் 87:7
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
  மெய் அறியாமை கொளல் - குறள் 93:5
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
  துலையல்லார்-கண்ணும் கொளல் - குறள் 99:6
நல்லாண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல்லாண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6

 TOP

 
 கொளலின் (1)
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
  நல்லார் தொடர் கைவிடல் - குறள் 45:10

 TOP

 
 கொளற்கு (1)
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
  நிலைக்கு எளிதாம் நீரது அரண் - குறள் 75:5

 TOP

 
 கொளின் (2)
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
  ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
  அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9

 TOP

 
 கொளினும் (1)
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
  சொல் ஏர் உழவர் பகை - குறள் 88:2

 TOP

 
 கொற்றம் (1)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
  கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59:3

 TOP

 
 கொன்ற (1)
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள் 11:10

 TOP

 
 கொன்றது (1)
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
  கொன்றது போலும் நிரப்பு - குறள் 105:8

 TOP

 
 கொன்றாங்கு (1)
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்றாங்கு - குறள் 54:2

 TOP

 
 கொன்றார்க்கும் (1)
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள் 11:10

 TOP

 
 கொன்றிட (1)
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
  நல் ஆள் இலாத குடி - குறள் 103:10

 TOP

 
 கொன்று (3)
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
  ஒன்றும் நன்று உள்ள கெடும் - குறள் 11:9
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
  கொன்று ஆகும் ஆக்கம் கடை - குறள் 33:8
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
  உழை இருந்தான் கூறல் கடன் - குறள் 64:8

 TOP