<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

மா - முதல் சொற்கள்
மா 7
மாக்கள் 2
மாசற்ற 2
மாசற்றார் 5
மாசறு 1
மாசு 4
மாட்சி 3
மாட்சித்தாயினும் 1
மாட்சித்து 1
மாட்சியின் 1
மாடு 1
மாண் 7
மாண்_இழை 1
மாண்_இழையார் 1
மாண்ட 6
மாண்டது 3
மாண்டற்கு 1
மாண்டார் 2
மாண்பு 2
மாண்புடையள் 1
மாண 3
மாணா 7
மாணாக்கடை 1
மாணாத 1
மாணார்க்கு 1
மாத்திரையர் 1
மாதர் 4
மாதர்-கொல் 1
மாந்தர் 6
மாந்தர்-தம் 1
மாந்தர்க்கு 3
மாநில 1
மாநிலத்து 1
மாய்ந்து 1
மாய்வது 1
மாய்வர் 1
மாயமகளிர் 1
மாயா 1
மாயும் 2
மார்பு 2
மாரி 1
மாரி-மாட்டு 1
மாலும் 1
மாலை 9
மாலைக்கு 2
மாலையவர் 1
மாலையாளரை 1
மாலையோ 1
மாழ்கும் 1
மாற்ற 1
மாற்றம் 2
மாற்றல் 1
மாற்றலர் 1
மாற்றார்க்கு 1
மாற்றாரை 1
மாற்றான் 1
மாற்றும் 1
மாற்றுவார் 1
மாறா 1
மாறு 2
மாறுபாடு 1
மானம் 5
மானமும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 மா (7)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
  மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
  மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
  தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
  தமரின் தனிமை தலை - குறள் 82:4
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
  பகலும் பால் பட்டன்று இருள் - குறள் 100:9
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
  மரப்பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
  அ மா அரிவை முயக்கு - குறள் 111:7

 TOP

 
 மாக்கள் (2)
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
  புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என் - குறள் 42:10

 TOP

 
 மாசற்ற (2)
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
  சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 65:9
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6

 TOP

 
 மாசற்றார் (5)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
  துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு - குறள் 11:6
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:1
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:2
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
  ஒருவுக ஒப்பு இலார் நட்பு - குறள் 80:10

 TOP

 
 மாசறு (1)
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
  மாசறு காட்சியவர்க்கு - குறள் 36:2

 TOP

 
 மாசு (4)
மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
  ஆகுல நீர பிற - குறள் 4:4
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
  மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
  மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1

 TOP

 
 மாட்சி (3)
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
  எனை மாட்சித்தாயினும் இல் - குறள் 6:2
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
  நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10

 TOP

 
 மாட்சித்தாயினும் (1)
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
  எனை மாட்சித்தாயினும் இல் - குறள் 6:2

 TOP

 
 மாட்சித்து (1)
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10

 TOP

 
 மாட்சியின் (1)
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6

 TOP

 
 மாடு (1)
கேடு_இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடு அல்ல மற்றையவை - குறள் 40:10

 TOP

 
 மாண் (7)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
  நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
  மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார்
  மாண் பயன் எய்தல் அரிது - குறள் 61:6
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1
வரைவு இலா மாண்_இழையார் மென் தோள் புரை இலா
  பூரியர்கள் ஆழும் அளறு - குறள் 92:9
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 மாண்_இழை (1)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 மாண்_இழையார் (1)
வரைவு இலா மாண்_இழையார் மென் தோள் புரை இலா
  பூரியர்கள் ஆழும் அளறு - குறள் 92:9

 TOP

 
 மாண்ட (6)
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
  மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
  மாண்ட உஞற்று இலவர் - குறள் 61:7
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
  என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
  மாண்ட அறிவினவர் - குறள் 92:5

 TOP

 
 மாண்டது (3)
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
  அருவினையும் மாண்டது அமைச்சு - குறள் 64:1
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
  ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
  வீறு எய்தி மாண்டது அரண் - குறள் 75:9

 TOP

 
 மாண்டற்கு (1)
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
  மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7

 TOP

 
 மாண்டார் (2)
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
  மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
  ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5

 TOP

 
 மாண்பு (2)
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
  இல்லவள் மாணாக்கடை - குறள் 6:3
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு - குறள் 44:2

 TOP

 
 மாண்புடையள் (1)
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1

 TOP

 
 மாண (3)
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
  ஞாலத்தின் மாண பெரிது - குறள் 11:2
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாண பெரிது - குறள் 13:4
உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து
  மட்பகையின் மாண தெறும் - குறள் 89:3

 TOP

 
 மாணா (7)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
  மாணா செய்யாமை தலை - குறள் 32:7
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு - குறள் 44:2
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
  ஏதம் பலவும் தரும் - குறள் 89:4
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
  மாணா மட நெஞ்சின் பட்டு - குறள் 130:7

 TOP

 
 மாணாக்கடை (1)
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
  இல்லவள் மாணாக்கடை - குறள் 6:3

 TOP

 
 மாணாத (1)
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
  மாணாத செய்வான் பகை - குறள் 87:7

 TOP

 
 மாணார்க்கு (1)
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
  ஆகுதல் மாணார்க்கு அரிது - குறள் 83:3

 TOP

 
 மாத்திரையர் (1)
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
  களர் அனையர் கல்லாதவர் - குறள் 41:6

 TOP

 
 மாதர் (4)
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
  படாஅ முலை மேல் துகில் - குறள் 109:7
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
  மறு உண்டோ மாதர் முகத்து - குறள் 112:7
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி - குறள் 112:8
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
  அடிக்கு நெருஞ்சி பழம் - குறள் 112:10

 TOP

 
 மாதர்-கொல் (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1

 TOP

 
 மாந்தர் (6)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
  மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
  உறை நிலத்தோடு ஒட்டல் அரிது - குறள் 50:9
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
  வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
  நிலையின் இழிந்தக்கடை - குறள் 97:4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
  நாணுடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2

 TOP

 
 மாந்தர்-தம் (1)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
  உள்ளத்து அனையது உயர்வு - குறள் 60:5

 TOP

 
 மாந்தர்க்கு (3)
தொட்டனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
  கற்றனைத்து ஊறும் அறிவு - குறள் 40:6
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
  இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

 TOP

 
 மாநில (1)
குடி தழீஇ கோல் ஓச்சும் மாநில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4

 TOP

 
 மாநிலத்து (1)
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
  மருங்கு உடையார் மாநிலத்து இல் - குறள் 53:6

 TOP

 
 மாய்ந்து (1)
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1

 TOP

 
 மாய்வது (1)
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
  மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6

 TOP

 
 மாய்வர் (1)
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8

 TOP

 
 மாயமகளிர் (1)
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
  மாயமகளிர் முயக்கு - குறள் 92:8

 TOP

 
 மாயா (1)
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10

 TOP

 
 மாயும் (2)
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
  பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10

 TOP

 
 மார்பு (2)
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
  கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள் 129:8
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
  நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள் 132:1

 TOP

 
 மாரி (1)
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
  வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள் 101:10

 TOP

 
 மாரி-மாட்டு (1)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1

 TOP

 
 மாலும் (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1

 TOP

 
 மாலை (9)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
  மாலை உழக்கும் துயர் - குறள் 114:5
புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
  வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
  துன்பம் வளர வரும் - குறள் 123:3
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
  ஏதிலர் போல வரும் - குறள் 123:4
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
  காலை அறிந்தது இலேன் - குறள் 123:6
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
  மாலை மலரும் இ நோய் - குறள் 123:7
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
  மாலை படர்தரும் போழ்து - குறள் 123:9
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 TOP

 
 மாலைக்கு (2)
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
  குழல் போலும் கொல்லும் படை - குறள் 123:8

 TOP

 
 மாலையவர் (1)
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
  கை செய்து ஊண் மாலையவர் - குறள் 104:5

 TOP

 
 மாலையாளரை (1)
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10

 TOP

 
 மாலையோ (1)
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
  வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1

 TOP

 
 மாழ்கும் (1)
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
  ஆஅதும் என்னுமவர் - குறள் 66:3

 TOP

 
 மாற்ற (1)
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
  மடியாண்மை மாற்ற கெடும் - குறள் 61:9

 TOP

 
 மாற்றம் (2)
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
  வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
  மாற்றம் கொடுத்தல்-பொருட்டு - குறள் 73:5

 TOP

 
 மாற்றல் (1)
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  மன கவலை மாற்றல் அரிது - குறள் 1:7

 TOP

 
 மாற்றலர் (1)
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
  வீறு எய்தி மாண்டது அரண் - குறள் 75:9

 TOP

 
 மாற்றார்க்கு (1)
குணனிலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனனிலனாம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8

 TOP

 
 மாற்றாரை (1)
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
  மாற்றாரை மாற்றும் படை - குறள் 99:5

 TOP

 
 மாற்றான் (1)
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1

 TOP

 
 மாற்றும் (1)
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
  மாற்றாரை மாற்றும் படை - குறள் 99:5

 TOP

 
 மாற்றுவார் (1)
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
  மாற்றுவார் ஆற்றலின் பின் - குறள் 23:5

 TOP

 
 மாறா (1)
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
  மாறா நீர் வையக்கு அணி - குறள் 71:1

 TOP

 
 மாறு (2)
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
  மெலியார் மேல் மேக பகை - குறள் 87:1
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
  துய்க்க துவர பசித்து - குறள் 95:4

 TOP

 
 மாறுபாடு (1)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
  ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் 95:5

 TOP

 
 மானம் (5)
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
  மானம் உடையது அரசு - குறள் 39:4
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
  என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
  உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
  மானம் கருத கெடும் - குறள் 103:8

 TOP

 
 மானமும் (1)
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு - குறள் 44:2

 TOP