<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்க 2
மிக்கவை 1
மிக்காருள் 1
மிக்கு 1
மிக 2
மிகப்பட்டு 1
மிகல் 4
மிகினும் 1
மிகு 1
மிகுத்து 1
மிகுதிக்-கண் 1
மிகுதியான் 1
மிகும் 3
மிகை 2
மிச்சில் 1
மிசை 2
மிசைவான் 1
மிறை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 மிக்க (2)
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்க கொளல் - குறள் 51:4
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4

 TOP

 
 மிக்கவை (1)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
  தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8

 TOP

 
 மிக்காருள் (1)
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4

 TOP

 
 மிக்கு (1)
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
  மிக்கு அற்றால் நீள விடல் - குறள் 131:2

 TOP

 
 மிக (2)
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
  நட்பினுள் சா புல்லற்பாற்று - குறள் 83:9
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
  தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6

 TOP

 
 மிகப்பட்டு (1)
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
  மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் - குறள் 108:4

 TOP

 
 மிகல் (4)
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
  மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல்
  இன்னா அறிவினவர் - குறள் 86:7
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
  மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு - குறள் 86:8
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
  மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9

 TOP

 
 மிகினும் (1)
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

 TOP

 
 மிகு (1)
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
  பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7

 TOP

 
 மிகுத்து (1)
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
  சால மிகுத்து பெயின் - குறள் 48:5

 TOP

 
 மிகுதிக்-கண் (1)
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
  மேற்சென்று இடித்தல்-பொருட்டு - குறள் 79:4

 TOP

 
 மிகுதியான் (1)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
  தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8

 TOP

 
 மிகும் (3)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
  ஊற்று நீர் போல மிகும் - குறள் 117:1

 TOP

 
 மிகை (2)
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்க கொளல் - குறள் 51:4

 TOP

 
 மிச்சில் (1)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்தோம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5

 TOP

 
 மிசை (2)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
  நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3

 TOP

 
 மிசைவான் (1)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்தோம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5

 TOP

 
 மிறை (1)
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
  பெரும் மிறை தானே தமக்கு - குறள் 85:7

 TOP