<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூக்கின் 1
மூடப்பட்டார் 1
மூத்த 1
மூத்து 1
மூவர் 1
மூவர்க்கும் 1
மூன்றன் 2
மூன்று 2
மூன்றும் 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 
 மூக்கின் (1)
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
  மூக்கின் கரியார் உடைத்து - குறள் 28:7

 TOP

 
 மூடப்பட்டார் (1)
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
  முகடியான் மூடப்பட்டார் - குறள் 94:6

 TOP

 
 மூத்த (1)
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1

 TOP

 
 மூத்து (1)
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
  பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7

 TOP

 
 மூவர் (1)
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
  சொல் தொக்க தேறப்படும் - குறள் 59:9

 TOP

 
 மூவர்க்கும் (1)
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
  நல்லாற்றின் நின்ற துணை - குறள் 5:1

 TOP

 
 மூன்றன் (2)
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
  நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவுடையான் செல்க வினைக்கு - குறள் 69:4

 TOP

 
 மூன்று (2)
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
  இன்றியமையாத மூன்று - குறள் 69:2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

 TOP

 
 மூன்றும் (4)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
  நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள் 39:3
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும்
  வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள் 69:8
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடிப்பிறந்தார் - குறள் 96:2
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5

 TOP