<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீடு 5
பீலி 1
பீழிக்கும் 1
பீழிப்பது 1
பீழை 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


 பீடு (5)
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
  ஏறு போல் பீடு நடை - குறள் 6:9
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
  பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
  பிணி அன்றோ பீடு நடை - குறள் 102:4
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
  பெருமையின் பீடு உடையது இல் - குறள் 103:1
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
  நண்ணாரும் உட்கும் என் பீடு - குறள் 109:8

 TOP

 
 பீலி (1)
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
  சால மிகுத்து பெயின் - குறள் 48:5

 TOP

 
 பீழிக்கும் (1)
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3

 TOP

 
 பீழிப்பது (1)
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
  என் எம்மை பீழிப்பது - குறள் 122:7

 TOP

 
 பீழை (3)
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
  முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
  பீழை தருவது ஒன்று இல் - குறள் 84:9
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3

 TOP