<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 11
தீங்கு 1
தீச்சொல் 1
தீண்டல் 2
தீண்டலான் 1
தீண்டா 1
தீது 7
தீதே 3
தீப்பால 1
தீமை 3
தீமைத்தே 1
தீமையால் 1
தீமையும் 1
தீய 7
தீயவும் 1
தீயவை 5
தீயில் 1
தீயினால் 1
தீயினும் 1
தீர் 1
தீர்க்கும் 2
தீர்த்தல் 1
தீர்ந்த 3
தீர்ந்தன்று 1
தீர்ந்தாரின் 1
தீர்ந்தாரும் 1
தீர்ப்பான் 1
தீர்வாம் 1
தீர 2
தீரா 3
தீராமை 1
தீவினை 3
தீவினையார் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 தீ (11)
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
  என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும்
  தீ பிணி தீண்டல் அரிது - குறள் 23:7
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
  அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால்
  தீ எச்சம் போல தெறும் - குறள் 68:4
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
  இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - குறள் 70:1
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
  நோய் அளவின்றி படும் - குறள் 95:7
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
  தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள் 111:4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
  விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள் 116:9

 TOP

 
 தீங்கு (1)
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
  தீங்கு குறித்தமையான் - குறள் 83:7

 TOP

 
 தீச்சொல் (1)
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
  நன்று ஆகாது ஆகிவிடும் - குறள் 13:8

 TOP

 
 தீண்டல் (2)
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
  சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும்
  தீ பிணி தீண்டல் அரிது - குறள் 23:7

 TOP

 
 தீண்டலான் (1)
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6

 TOP

 
 தீண்டா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2

 TOP

 
 தீது (7)
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
  தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
பயனில பல்லார் முன் சொல்லல் நயனில
  நட்டார்-கண் செய்தலின் தீது - குறள் 20:2
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று - குறள் 23:2
செல்லா இடத்து சினம் தீது செல்லிடத்தும்
  இல் அதனின் தீய பிற - குறள் 31:2
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் தங்குதல் தீது - குறள் 68:1
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
  தீது இன்றி வந்த பொருள் - குறள் 76:4

 TOP

 
 தீதே (3)
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள் 19:2
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
  உவகை மகிழ்ச்சியின் சோர்வு - குறள் 54:1

 TOP

 
 தீப்பால (1)
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6

 TOP

 
 தீமை (3)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
  தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
  சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4

 TOP

 
 தீமைத்தே (1)
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
  நல்லார் தொடர் கைவிடல் - குறள் 45:10

 TOP

 
 தீமையால் (1)
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
  கலம் தீமையால் திரிந்து அற்று - குறள் 100:10

 TOP

 
 தீமையும் (1)
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
  தன்மையான் ஆளப்படும் - குறள் 52:1

 TOP

 
 தீய (7)
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9
தீயவை தீய பயத்தலான் தீயவை
  தீயினும் அஞ்சப்படும் - குறள் 21:2
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
செல்லா இடத்து சினம் தீது செல்லிடத்தும்
  இல் அதனின் தீய பிற - குறள் 31:2
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்? தீய
  பகையும் உளவோ பிற - குறள் 31:4
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
  நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள் 38:5

 TOP

 
 தீயவும் (1)
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
  நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள் 38:5

 TOP

 
 தீயவை (5)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
தீயவை தீய பயத்தலான் தீயவை
  தீயினும் அஞ்சப்படும் - குறள் 21:2
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
  இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 21:5
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
  வீயாது அடி உறைந்து அற்று - குறள் 21:8

 TOP

 
 தீயில் (1)
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
  புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள் 126:10

 TOP

 
 தீயினால் (1)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
  நாவினால் சுட்ட வடு - குறள் 13:9

 TOP

 
 தீயினும் (1)
தீயவை தீய பயத்தலான் தீயவை
  தீயினும் அஞ்சப்படும் - குறள் 21:2

 TOP

 
 தீர் (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறிநின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6

 TOP

 
 தீர்க்கும் (2)
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
  எவ்வநோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5

 TOP

 
 தீர்த்தல் (1)
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
  பெற்றான் பொருள் வைப்பு உழி - குறள் 23:6

 TOP

 
 தீர்ந்த (3)
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
  மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள் 30:2

 TOP

 
 தீர்ந்தன்று (1)
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2

 TOP

 
 தீர்ந்தாரின் (1)
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2

 TOP

 
 தீர்ந்தாரும் (1)
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
  பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - குறள் 17:10

 TOP

 
 தீர்ப்பான் (1)
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
  அ பால் நால் கூற்றே மருந்து - குறள் 95:10

 TOP

 
 தீர்வாம் (1)
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
  வன்மையின் வன்பாட்டது இல் - குறள் 107:3

 TOP

 
 தீர (2)
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
  வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5

 TOP

 
 தீரா (3)
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
  தீரா இடும்பை தரும் - குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
  தீரா இடும்பை தரும் - குறள் 51:10
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
  கள்ளினும் காமம் இனிது - குறள் 121:1

 TOP

 
 தீராமை (1)
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2

 TOP

 
 தீவினை (3)
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
  தீவினை என்னும் செருக்கு - குறள் 21:1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
  தீவினை செய்யான் எனின் - குறள் 21:10

 TOP

 
 தீவினையார் (1)
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
  தீவினை என்னும் செருக்கு - குறள் 21:1

 TOP