<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

து - முதல் சொற்கள்
துகில் 1
துச்சில் 1
துஞ்சலும் 1
துஞ்சா 2
துஞ்சின் 1
துஞ்சினார் 1
துஞ்சுங்கால் 1
துடைத்தவர் 1
துடைத்து 1
துணிக 1
துணிந்த 1
துணிவு 5
துணிவுடைமை 2
துணை 21
துணைத்துணை 1
துணைமை 1
துணையா 1
துணையாக 1
துணையாரை 1
துணையிலன் 1
துணையும் 2
துப்பார்க்கு 2
துப்பின் 2
துப்பு 5
துப்புரவு 3
தும்மல் 2
தும்மினார் 1
தும்மினீர் 1
தும்மினேன் 1
தும்மு 1
துய்க்க 1
துய்த்தல் 1
துய்ப்பதூஉம் 1
துயர் 4
துயரம் 1
துயில் 1
துயிலின் 1
துயிற்றி 1
துரீஇ 1
துலையல்லார்-கண்ணும் 1
துவ்வாதவர்க்கும் 1
துவ்வாமை 1
துவ்வாய் 1
துவ்வான் 2
துவர 2
துளக்கு 1
துளங்காது 1
துளி 1
துளியின்மை 1
துறக்க 1
துறந்த 1
துறந்தமை 1
துறந்தார் 8
துறந்தார்க்கு 1
துறந்தார்க்கும் 1
துறந்தாரின் 1
துறந்தாரை 1
துறப்பர் 1
துறப்பார்-மன் 1
துறவற்க 1
துறவாமை 1
துறவார் 3
துறைவன் 1
துன்பங்கள் 1
துன்பத்திற்கு 1
துன்பத்துள் 4
துன்பம் 10
துன்பமுறுதல் 2
துன்புறூஉம் 1
துன்னற்க 1
துன்னா 1
துன்னாமை 1
துன்னி 1
துன்னியார் 2
துனி 4
துனித்தே 1
துனியும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 துகில் (1)
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
  படாஅ முலை மேல் துகில் - குறள் 109:7

 TOP

 
 துச்சில் (1)
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
  துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10

 TOP

 
 துஞ்சலும் (1)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
  யாதொன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9

 TOP

 
 துஞ்சா (2)
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
  ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9

 TOP

 
 துஞ்சின் (1)
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
  உயல் உண்மை சாற்றுவேன்-மன் - குறள் 122:2

 TOP

 
 துஞ்சினார் (1)
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
  நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6

 TOP

 
 துஞ்சுங்கால் (1)
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 122:8

 TOP

 
 துடைத்தவர் (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 TOP

 
 துடைத்து (1)
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
  துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5

 TOP

 
 துணிக (1)
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
  எண்ணுவம் என்பது இழுக்கு - குறள் 47:7

 TOP

 
 துணிந்த (1)
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
  எண்ணுவம் என்பது இழுக்கு - குறள் 47:7

 TOP

 
 துணிவு (5)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
  வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எப்பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3
துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி
  இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் தங்குதல் தீது - குறள் 68:1

 TOP

 
 துணிவுடைமை (2)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
  நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள் 39:3
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும்
  வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள் 69:8

 TOP

 
 துணை (21)
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
  இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - குறள் 3:2
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றுங்கால் பொன்றா துணை - குறள் 4:6
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
  நல்லாற்றின் நின்ற துணை - குறள் 5:1
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
  இல்வாழ்வான் என்பான் துணை - குறள் 5:2
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
  மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
  தேரினும் அஃதே துணை - குறள் 14:2
நல்லாற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
  தேரினும் அஃதே துணை - குறள் 25:2
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
  துறந்தார் துறந்தார் துணை - குறள் 31:10
கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு
  ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - குறள் 42:4
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
  அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
  எண்ணி இடத்தால் செயின் - குறள் 50:7
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
  திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
  வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
  இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
  என் அல்லது இல்லை துணை - குறள் 117:8
புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
  வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:4
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
  நெஞ்சம் துணை அல்வழி - குறள் 130:9

 TOP

 
 துணைத்துணை (1)
இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
  துணைத்துணை வேள்வி பயன் - குறள் 9:7

 TOP

 
 துணைமை (1)
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும்
  வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள் 69:8

 TOP

 
 துணையா (1)
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
  இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5

 TOP

 
 துணையாக (1)
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார்
  வரல் நசைஇ இன்னும் உளேன் - குறள் 127:3

 TOP

 
 துணையாரை (1)
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
  கெடுக்கும் தகைமையவர் - குறள் 45:7

 TOP

 
 துணையிலன் (1)
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
  என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2

 TOP

 
 துணையும் (2)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
  பொன்றும் துணையும் புகழ் - குறள் 16:6
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
  சாம் துணையும் கல்லாதவாறு - குறள் 40:7

 TOP

 
 துப்பார்க்கு (2)
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
  துப்பு ஆயதூஉம் மழை - குறள் 2:2

 TOP

 
 துப்பின் (2)
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
  நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5

 TOP

 
 துப்பு (5)
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
  துப்பு ஆயதூஉம் மழை - குறள் 2:2
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
  துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு - குறள் 11:6
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
  என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2

 TOP

 
 துப்புரவு (3)
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
  மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால
  ஊட்டா கழியும் எனின் - குறள் 38:8
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10

 TOP

 
 தும்மல் (2)
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
  சினைப்பது போன்று கெடும் - குறள் 121:3
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
  தும்மல் போல் தோன்றிவிடும் - குறள் 126:3

 TOP

 
 தும்மினார் (1)
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
  நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2

 TOP

 
 தும்மினீர் (1)
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
  யார் உள்ளி தும்மினீர் என்று - குறள் 132:7

 TOP

 
 தும்மினேன் (1)
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
  யார் உள்ளி தும்மினீர் என்று - குறள் 132:7

 TOP

 
 தும்மு (1)
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
  எம்மை மறைத்திரோ என்று - குறள் 132:8

 TOP

 
 துய்க்க (1)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
  துய்க்க துவர பசித்து - குறள் 95:4

 TOP

 
 துய்த்தல் (1)
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
  தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள் 38:7

 TOP

 
 துய்ப்பதூஉம் (1)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
  கோடி உண்டாயினும் இல் - குறள் 101:5

 TOP

 
 துயர் (4)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
  மாலை உழக்கும் துயர் - குறள் 114:5
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
  நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
  எற்று என்னை உற்ற துயர் - குறள் 126:6
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5

 TOP

 
 துயரம் (1)
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
  தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2

 TOP

 
 துயில் (1)
நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
  கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5

 TOP

 
 துயிலின் (1)
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3

 TOP

 
 துயிற்றி (1)
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
  என் அல்லது இல்லை துணை - குறள் 117:8

 TOP

 
 துரீஇ (1)
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9

 TOP

 
 துலையல்லார்-கண்ணும் (1)
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
  துலையல்லார்-கண்ணும் கொளல் - குறள் 99:6

 TOP

 
 துவ்வாதவர்க்கும் (1)
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
  இல்வாழ்வான் என்பான் துணை - குறள் 5:2

 TOP

 
 துவ்வாமை (1)
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
  இன்புறூஉம் இன்சொலவர்க்கு - குறள் 10:4

 TOP

 
 துவ்வாய் (1)
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4

 TOP

 
 துவ்வான் (2)
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
  என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
  ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6

 TOP

 
 துவர (2)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
  துய்க்க துவர பசித்து - குறள் 95:4
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10

 TOP

 
 துளக்கு (1)
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9

 TOP

 
 துளங்காது (1)
கலங்காது கண்ட வினைக்-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8

 TOP

 
 துளி (1)
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
  பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6

 TOP

 
 துளியின்மை (1)
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
  அளியின்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7

 TOP

 
 துறக்க (1)
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
  ஈண்டு இயற்பால பல - குறள் 35:2

 TOP

 
 துறந்த (1)
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
  ஈண்டு இயற்பால பல - குறள் 35:2

 TOP

 
 துறந்தமை (1)
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
  இறை இறவாநின்ற வளை - குறள் 116:7

 TOP

 
 துறந்தார் (8)
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
  இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - குறள் 3:2
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
  துறந்தார் துறந்தார் துணை - குறள் 31:10
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
  வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
  காரணம் இன்றி வரும் - குறள் 53:9
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
  என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
  துறந்தார் அவர் என்பார் இல் - குறள் 119:8

 TOP

 
 துறந்தார்க்கு (1)
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
  மற்றையவர்கள் தவம் - குறள் 27:3

 TOP

 
 துறந்தார்க்கும் (1)
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
  இல்வாழ்வான் என்பான் துணை - குறள் 5:2

 TOP

 
 துறந்தாரின் (1)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
  இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9

 TOP

 
 துறந்தாரை (1)
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
  இன்னும் இழத்தும் கவின் - குறள் 125:10

 TOP

 
 துறப்பர் (1)
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால்
  நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7

 TOP

 
 துறப்பார்-மன் (1)
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால
  ஊட்டா கழியும் எனின் - குறள் 38:8

 TOP

 
 துறவற்க (1)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
  துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு - குறள் 11:6

 TOP

 
 துறவாமை (1)
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10

 TOP

 
 துறவார் (3)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
  தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு - குறள் 81:6
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால்
  நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7

 TOP

 
 துறைவன் (1)
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
  இறை இறவாநின்ற வளை - குறள் 116:7

 TOP

 
 துன்பங்கள் (1)
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
  துன்பங்கள் சென்று படும் - குறள் 105:5

 TOP

 
 துன்பத்திற்கு (1)
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
  நெஞ்சம் துணை அல்வழி - குறள் 130:9

 TOP

 
 துன்பத்துள் (4)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
  துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு - குறள் 11:6
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
  துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 37:9
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
  துன்பமுறுதல் இலன் - குறள் 63:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
  துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 86:4

 TOP

 
 துன்பம் (10)
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
  சுடச்சுட நோற்கிற்பவர்க்கு - குறள் 27:7
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
  தவாஅது மேன்மேல் வரும் - குறள் 37:8
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
  துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 37:9
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
  துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி
  இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
  துன்பத்துள் துன்பம் கெடின் - குறள் 86:4
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
  உழத்-தொறூஉம் காதற்று உயிர் - குறள் 94:10
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
  துன்பம் உறாஅ வரின் - குறள் 106:2
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால்
  துன்பம் அதனின் பெரிது - குறள் 117:6
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
  துன்பம் வளர வரும் - குறள் 123:3

 TOP

 
 துன்பமுறுதல் (2)
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
  துன்பமுறுதல் இலன் - குறள் 63:8
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
  துன்பமுறுதல் இலன் - குறள் 63:9

 TOP

 
 துன்புறூஉம் (1)
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
  இன்புறூஉம் இன்சொலவர்க்கு - குறள் 10:4

 TOP

 
 துன்னற்க (1)
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9

 TOP

 
 துன்னா (1)
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
  இன்னும் இழத்தும் கவின் - குறள் 125:10

 TOP

 
 துன்னாமை (1)
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6

 TOP

 
 துன்னி (1)
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
  துன்னியார் துன்னி செயின் - குறள் 50:4

 TOP

 
 துன்னியார் (2)
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
  என்னை-கொல் ஏதிலார்-மாட்டு - குறள் 19:8
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
  துன்னியார் துன்னி செயின் - குறள் 50:4

 TOP

 
 துனி (4)
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
  வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள் 101:10
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
  துன்பம் வளர வரும் - குறள் 123:3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
  வாடினும் பாடு பெறும் - குறள் 133:2

 TOP

 
 துனித்தே (1)
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்புற்று - குறள் 129:10

 TOP

 
 துனியும் (2)
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
  இல் ஆயின் வெல்லும் படை - குறள் 77:9
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
  கனியும் கருக்காயும் அற்று - குறள் 131:6

 TOP