|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வைக்கப்படும் (4)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 85:10
TOP
வைக்கும் (1)
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6
TOP
வைகலும் (1)
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3
TOP
வைத்தான்-வாய் (1)
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 101:1
TOP
வைத்து (3)
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் - குறள் 23:8
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் - குறள் 84:10
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9
TOP
வைத்தூறு (1)
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் - குறள் 44:5
TOP
வைப்பர் (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5
TOP
வைப்பில் (1)
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - குறள் 15:9
TOP
வைப்பிற்கு (1)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள் 3:4
TOP
வைப்பு (1)
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி - குறள் 23:6
TOP
வையக்கு (1)
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி - குறள் 71:1
TOP
வையகத்து (2)
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
கரப்பிலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது - குறள் 106:5
TOP
வையகம் (1)
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7
TOP
வையகமும் (1)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1
TOP
வையத்தார்க்கு (1)
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
TOP
வையத்தின் (1)
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து - குறள் 36:3
TOP
வையத்து (2)
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - குறள் 3:2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 85:10
TOP
வையத்துள் (1)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10
TOP
வையம் (1)
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
TOP
வையாது (2)
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு - குறள் 85:1
TOP
வையாரே (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள் 16:5
TOP
|
|
|