<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெஃகா 1
வெஃகாமை 1
வெஃகி 6
வெஃகின் 2
வெஃகுதல் 1
வெகுளாமை 2
வெகுளி 6
வெகுளியின் 1
வெகுளியை 1
வெகுளும் 1
வெண்மை 1
வெம் 2
வெய்து 2
வெயர்ப்ப 1
வெயில் 1
வெருவந்த 1
வெருவந்து 1
வெரூஉம் 1
வெல் 1
வெல்லல் 1
வெல்லும் 5
வெல்வது 1
வெள்ள 1
வெள்ளத்து 2
வெளிப்படும்-தோறும் 1
வெளியார் 1
வெளிறு 1
வெறி 1
வெறிய 1
வெறுக்கை 2
வெறுக்கையுள் 1
வெறுத்தக்க 1
வெறுப்பு 1
வென்ற 1
வென்றதூஉம் 1
வென்றார் 1
வென்றி 2
வென்றிடினும் 1
வென்றீக 1
வென்றுவிடல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
 வெஃகா (1)
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9

 TOP

 
 வெஃகாமை (1)
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8

 TOP

 
 வெஃகி (6)
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
  நடுவு அன்மை நாணுபவர் - குறள் 18:2
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
  மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
  மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7

 TOP

 
 வெஃகின் (2)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
  வேண்டாமை என்னும் செருக்கு - குறள் 18:10

 TOP

 
 வெஃகுதல் (1)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை_இல் காட்சியவர் - குறள் 18:4

 TOP

 
 வெகுளாமை (2)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
  புணரின் வெகுளாமை நன்று - குறள் 31:8
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
  தானேயும் சாலும் கரி - குறள் 106:10

 TOP

 
 வெகுளி (6)
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணமேயும் காத்தல் அரிது - குறள் 3:9
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
  இழுக்கா இயன்றது அறம் - குறள் 4:5
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
  உள்ளான் வெகுளி எனின் - குறள் 31:9
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
  நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
  மருங்கு உடையார் மாநிலத்து இல் - குறள் 53:6
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
  யாங்கணும் யார்க்கும் எளிது - குறள் 87:4

 TOP

 
 வெகுளியின் (1)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
  உவகை மகிழ்ச்சியின் சோர்வு - குறள் 54:1

 TOP

 
 வெகுளியை (1)
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3

 TOP

 
 வெகுளும் (1)
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10

 TOP

 
 வெண்மை (1)
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4

 TOP

 
 வெம் (2)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5

 TOP

 
 வெய்து (2)
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
  அஞ்சுதும் வேபாக்கு அறிந்து - குறள் 113:8

 TOP

 
 வெயர்ப்ப (1)
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
  கூடலின் தோன்றிய உப்பு - குறள் 133:8

 TOP

 
 வெயில் (1)
என்பு இலதனை வெயில் போல காயுமே
  அன்பு இலதனை அறம் - குறள் 8:7

 TOP

 
 வெருவந்த (1)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3

 TOP

 
 வெருவந்து (1)
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9

 TOP

 
 வெரூஉம் (1)
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
  வெரூஉம் புலி தாக்குறின் - குறள் 60:9

 TOP

 
 வெல் (1)
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
  வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள் 77:1

 TOP

 
 வெல்லல் (1)
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
  இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 65:7

 TOP

 
 வெல்லும் (5)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள் 49:1
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
  நீங்கின் அதனை பிற - குறள் 50:5
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
  வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
  இல் ஆயின் வெல்லும் படை - குறள் 77:9

 TOP

 
 வெல்வது (1)
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
  பற்றியார் வெல்வது அரண் - குறள் 75:8

 TOP

 
 வெள்ள (1)
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
  நீந்தல-மன்னோ என் கண் - குறள் 117:10

 TOP

 
 வெள்ளத்து (2)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
  உள்ளத்து அனையது உயர்வு - குறள் 60:5
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
  உள்ளத்தின் உள்ள கெடும் - குறள் 63:2

 TOP

 
 வெளிப்படும்-தோறும் (1)
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5

 TOP

 
 வெளியார் (1)
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
  வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4

 TOP

 
 வெளிறு (1)
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால்
  இன்மை அரிதே வெளிறு - குறள் 51:3

 TOP

 
 வெறி (1)
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
  வேல் உண்கண் வேத்தோள் அவட்கு - குறள் 112:3

 TOP

 
 வெறிய (1)
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5

 TOP

 
 வெறுக்கை (2)
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
  மரம் மக்கள் ஆதலே வேறு - குறள் 60:10
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
  அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள் 98:1

 TOP

 
 வெறுக்கையுள் (1)
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
  வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள் 77:1

 TOP

 
 வெறுத்தக்க (1)
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
  பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள் 100:3

 TOP

 
 வெறுப்பு (1)
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6

 TOP

 
 வென்ற (1)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை_இல் காட்சியவர் - குறள் 18:4

 TOP

 
 வென்றதூஉம் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

 TOP

 
 வென்றார் (1)
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
  கூடலின் காணப்படும் - குறள் 133:7

 TOP

 
 வென்றி (2)
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
  கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3

 TOP

 
 வென்றிடினும் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

 TOP

 
 வென்றீக (1)
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 TOP

 
 வென்றுவிடல் (1)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
  தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8

 TOP