<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

வே - முதல் சொற்கள்
வேட்ட 1
வேட்டலின் 1
வேட்டு 1
வேட்டுவன் 1
வேட்ப 3
வேட்பன 1
வேண்ட 2
வேண்டற்க 2
வேண்டற்பாற்று 2
வேண்டா 9
வேண்டாதார் 2
வேண்டாதான் 2
வேண்டாது 2
வேண்டாமை 4
வேண்டாரை 1
வேண்டாவாம் 1
வேண்டி 4
வேண்டிய 3
வேண்டியாங்கு 1
வேண்டியிருப்பர் 1
வேண்டின் 8
வேண்டுக 1
வேண்டுங்கால் 1
வேண்டுதல் 1
வேண்டுப 1
வேண்டுபவர் 6
வேண்டும் 22
வேண்டும்-கொல்லோ 1
வேண்டும்-மன்ற 1
வேண்டுவான் 1
வேத்தோள் 1
வேந்தர் 1
வேந்தர்க்கு 3
வேந்தற்கு 1
வேந்தன் 13
வேந்தன்-கண் 1
வேந்தனும் 1
வேந்து 8
வேபாக்கு 1
வேர்ப்பர் 1
வேரார் 1
வேல் 7
வேலாருள் 1
வேலி 1
வேலை 1
வேலொடு 1
வேள்வி 2
வேளாண்மை 4
வேற்றுமையான் 1
வேறு 13
வேறுபடும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
 வேட்ட (1)
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
  தோட்டு ஆர் கதுப்பினாள் தோள் - குறள் 111:5

 TOP

 
 வேட்டலின் (1)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9

 TOP

 
 வேட்டு (1)
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5

 TOP

 
 வேட்டுவன் (1)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
  வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று - குறள் 28:4

 TOP

 
 வேட்ப (3)
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
  வேட்ப மொழிவதாம் சொல் - குறள் 65:3
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6

 TOP

 
 வேட்பன (1)
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
  கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7

 TOP

 
 வேண்ட (2)
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
  வாஅய்மை வேண்ட வரும் - குறள் 37:4

 TOP

 
 வேண்டற்க (2)
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
  மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

 TOP

 
 வேண்டற்பாற்று (2)
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
  மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று - குறள் 9:2
பகை என்னும் பண்பிலதனை ஒருவன்
  நகையேயும் வேண்டற்பாற்று அன்று - குறள் 88:1

 TOP

 
 வேண்டா (9)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தானிடை - குறள் 4:7
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்தது ஒழித்துவிடின் - குறள் 28:10
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
  எண்ணி இடத்தால் செயின் - குறள் 50:7
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
  கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
  நட்பு ஆம் கிழமை தரும் - குறள் 79:5
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
  தோற்றம் நிலக்கு பொறை - குறள் 101:3

 TOP

 
 வேண்டாதார் (2)
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
  அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
  எண்ணப்பட வேண்டாதார் - குறள் 93:2

 TOP

 
 வேண்டாதான் (2)
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
  பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6

 TOP

 
 வேண்டாது (2)
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
  வேண்டாது சால படும் - குறள் 104:7

 TOP

 
 வேண்டாமை (4)
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல - குறள் 1:4
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
  வேண்டாமை என்னும் செருக்கு - குறள் 18:10
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
  யாண்டும் அஃது ஒப்பது இல் - குறள் 37:3

 TOP

 
 வேண்டாரை (1)
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10

 TOP

 
 வேண்டாவாம் (1)
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
  அற்றது போற்றி உணின் - குறள் 95:2

 TOP

 
 வேண்டி (4)
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
  மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
  கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7
உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
  வேண்டி அவர் கண்ட கண் - குறள் 118:7
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
  எற்று என்னை உற்ற துயர் - குறள் 126:6

 TOP

 
 வேண்டிய (3)
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
  ஈண்டு முயலப்படும் - குறள் 27:5
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
  வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள் 35:3
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
  வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1

 TOP

 
 வேண்டியாங்கு (1)
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
  ஈண்டு முயலப்படும் - குறள் 27:5

 TOP

 
 வேண்டியிருப்பர் (1)
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
  கேளாது நட்டார் செயின் - குறள் 81:4

 TOP

 
 வேண்டின் (8)
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
  போற்றி ஒழுகப்படும் - குறள் 16:4
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
  ஈண்டு இயற்பால பல - குறள் 35:2
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
  ஆற்றுபவர்-கண் இழுக்கு - குறள் 90:3
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10

 TOP

 
 வேண்டுக (1)
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10

 TOP

 
 வேண்டுங்கால் (1)
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2

 TOP

 
 வேண்டுதல் (1)
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல - குறள் 1:4

 TOP

 
 வேண்டுப (1)
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6

 TOP

 
 வேண்டுபவர் (6)
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
  மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
  நோய் இன்மை வேண்டுபவர் - குறள் 32:10
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
  நீங்காமை வேண்டுபவர் - குறள் 57:2
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
  நாகரிகம் வேண்டுபவர் - குறள் 58:10
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
  பேராண்மை வேண்டுபவர் - குறள் 97:2

 TOP

 
 வேண்டும் (22)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
  வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
  புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
  வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள் 35:3
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
  தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள் 49:1
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
  பெருமை முயற்சி தரும் - குறள் 62:1
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
  நன்றி பயவா வினை - குறள் 66:2
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
  ஆஅதும் என்னுமவர் - குறள் 66:3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
  அச்சாணி அன்னார் உடைத்து - குறள் 67:7
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
  சுருக்கத்து வேண்டும் உயர்வு - குறள் 97:3
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
  தானேயும் சாலும் கரி - குறள் 106:10
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
  காமம் நிறைய வரின் - குறள் 129:2

 TOP

 
 வேண்டும்-கொல்லோ (1)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்தோம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5

 TOP

 
 வேண்டும்-மன்ற (1)
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
  மாணாத செய்வான் பகை - குறள் 87:7

 TOP

 
 வேண்டுவான் (1)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1

 TOP

 
 வேத்தோள் (1)
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
  வேல் உண்கண் வேத்தோள் அவட்கு - குறள் 112:3

 TOP

 
 வேந்தர் (1)
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
  இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - குறள் 70:1

 TOP

 
 வேந்தர்க்கு (3)
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள் 49:1
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
  வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9

 TOP

 
 வேந்தற்கு (1)
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
  எஞ்சாமை வேந்தற்கு இயல்பு - குறள் 39:2

 TOP

 
 வேந்தன் (13)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
  இழைத்து இருந்து எண்ணி கொளல் - குறள் 53:10
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
  வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
  அளியின்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
  உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
  அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
  வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 59:2
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
  தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள் 76:6
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
  வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள் 77:1
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 TOP

 
 வேந்தன்-கண் (1)
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
  ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5

 TOP

 
 வேந்தனும் (1)
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
  வேந்தனும் வேந்து கெடும் - குறள் 90:9

 TOP

 
 வேந்து (8)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
  களை கட்டதனொடு நேர் - குறள் 55:10
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
  அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
  ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்புடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
  வேந்து அமைவு இல்லாத நாடு - குறள் 74:10
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
  வேந்தனும் வேந்து கெடும் - குறள் 90:9

 TOP

 
 வேபாக்கு (1)
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
  அஞ்சுதும் வேபாக்கு அறிந்து - குறள் 113:8

 TOP

 
 வேர்ப்பர் (1)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7

 TOP

 
 வேரார் (1)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7

 TOP

 
 வேல் (7)
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
  வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
  கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
கான முயல் எய்த அம்பினில் யானை
  பிழைத்த வேல் ஏந்தல் இனிது - குறள் 78:2
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
  மெய் வேல் பறியா நகும் - குறள் 78:4
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
  ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள் 78:5
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
  வேல் உண்கண் வேத்தோள் அவட்கு - குறள் 112:3

 TOP

 
 வேலாருள் (1)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3

 TOP

 
 வேலி (1)
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன்? ஞாலம்
  பேணலர் மேலாயவர் - குறள் 102:6

 TOP

 
 வேலை (1)
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
  வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1

 TOP

 
 வேலொடு (1)
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
  கோலொடு நின்றான் இரவு - குறள் 56:2

 TOP

 
 வேள்வி (2)
இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
  துணைத்துணை வேள்வி பயன் - குறள் 9:7
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்தோம்பி
  வேள்வி தலைப்படாதார் - குறள் 9:8

 TOP

 
 வேளாண்மை (4)
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 9:1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
  வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
  வாளாண்மை போல கெடும் - குறள் 62:4

 TOP

 
 வேற்றுமையான் (1)
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

 TOP

 
 வேறு (13)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
  தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
  வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
  மரம் மக்கள் ஆதலே வேறு - குறள் 60:10
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
  உறுப்பு ஓர் அனையரால் வேறு - குறள் 71:4
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு
  சொல் வேறு பட்டார் தொடர்பு - குறள் 82:9
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
  நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
  நாணுடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
  அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9

 TOP

 
 வேறுபடும் (1)
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
  மனம் போல வேறுபடும் - குறள் 83:2

 TOP