<<முந்திய பக்கம்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - தொடரடைவு

எ - முதல் சொற்கள்
எக்கரிடும் 1
எங்கணும் 1
எட்டி 1
எட்டு 3
எட்டும் 3
எட்டையும் 1
எடா 1
எடுக்கு 1
எடுக்கும் 1
எடுத்த 3
எடுத்து 16
எடுத்துரைப்ப 1
எண் 4
எண்_இல் 1
எண்ணி 1
எண்ணிலர் 1
எண்மர் 1
எதிர் 5
எதிர்கொண்டு 1
எதிர்கொள்ள 1
எதிர்த்து 1
எதிர்ப்பட்ட 1
எதிர்வர 1
எதிரிட்டு 1
எதிரெதிர் 1
எது-கொல் 1
எந்தாய் 1
எந்தை 5
எந்தையார் 1
எம் 5
எம்பிரான் 1
எம்பெருமான் 1
எம்மருங்கும் 1
எம்முடைய 1
எமக்கு 1
எமர் 1
எய்த 1
எயில் 1
எயிலை 1
எயிறு 2
எரி 1
எரிய 1
எரு 1
எருத்தம் 1
எருத்து 1
எருமை 2
எல் 1
எல்லை 1
எல்லைக்கல்லின் 1
எலாம் 2
எவ் 1
எவர்-கொல் 2
எவரும் 1
எழ 7
எழல் 1
எழவும் 1
எழில் 2
எழு 10
எழுகடலில் 1
எழுகுறு 1
எழுத 2
எழுதரு 2
எழுதாச்சொல் 1
எழுதாத 1
எழுதி 2
எழுதிய 2
எழுது 2
எழுந்த 1
எழுந்து 4
எழுநாத்-தலை 1
எழும் 6
எழுவது 2
எழுவர்கள் 1
எள்ளளவு 1
எள்ளி 1
எற்று 1
எறி 6
எறிந்து 2
எறிப்ப 2
எறிபந்தின் 1
எறிய 5
எறியும் 3
என் 5
என்பதும் 1
என்பவர் 1
என்பார்க்கு 1
என்பு 2
என்றளவில் 1
என்று 9
என்றும் 3
என்றே 2
என்ன 4
என்னவும் 1
என்னும் 1
என 52
எனது 1
எனவும் 6
எனவே 1
எனா 1
எனும் 6

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    எக்கரிடும் (1)
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என - மீனாட்சிபிள்ளை:9 90/2

 TOP
 
    எங்கணும் (1)
எண்_இல் பல புவன பெரும் தட்டை ஊடுருவி இவள் பெரும் புகழ் நெடு நிலா எங்கணும் நிறைந்திடுவது அங்கு அதனில் மெள்ள நீ எள்ளளவு மொண்டுகொண்டு - மீனாட்சிபிள்ளை:7 67/1

 TOP
 
    எட்டி (1)
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ - மீனாட்சிபிள்ளை:8 78/1

 TOP
 
    எட்டு (3)
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற - மீனாட்சிபிள்ளை:2 15/1
நாள வட்ட தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட - மீனாட்சிபிள்ளை:4 33/1
தளை ஆடு கறை அடி சிறு கண் பெரும் கை தடம் களிறு எடுத்து மற்று அ தவள களிற்றினொடு முட்டவிட்டு எட்டு மத தந்தியும் பந்து அடித்து - மீனாட்சிபிள்ளை:9 83/3

 TOP
 
    எட்டும் (3)
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் - மீனாட்சிபிள்ளை:1 12/2
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள - மீனாட்சிபிள்ளை:4 33/2
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் - மீனாட்சிபிள்ளை:6 55/3

 TOP
 
    எட்டையும் (1)
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் - மீனாட்சிபிள்ளை:4 39/3

 TOP
 
    எடா (1)
ஒள் ஒளி மரகதமும் முழு நீலமும் ஒண் தரள திரளும் ஒழுகு ஒளி பொங்க இழைத்திடும் அம்மனை ஒரு மூன்று அடைவில் எடா
  கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் - மீனாட்சிபிள்ளை:8 82/1,2

 TOP
 
    எடுக்கு (1)
இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி - மீனாட்சிபிள்ளை:1 7/3

 TOP
 
    எடுக்கும் (1)
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் - மீனாட்சிபிள்ளை:6 61/2

 TOP
 
    எடுத்த (3)
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/2
இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் - மீனாட்சிபிள்ளை:8 73/2
இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர் - மீனாட்சிபிள்ளை:9 91/3

 TOP
 
    எடுத்து (16)
பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய - மீனாட்சிபிள்ளை:1 5/1
வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து
  தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/1,2
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4
எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர் - மீனாட்சிபிள்ளை:2 15/2
முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் - மீனாட்சிபிள்ளை:2 15/3
வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு - மீனாட்சிபிள்ளை:3 24/3
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் - மீனாட்சிபிள்ளை:6 54/3
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் - மீனாட்சிபிள்ளை:6 55/3
கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் - மீனாட்சிபிள்ளை:7 64/2
திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் - மீனாட்சிபிள்ளை:8 74/1
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் - மீனாட்சிபிள்ளை:8 76/3
தமரான நின் துணை சேடியரில் ஒருசிலர் தட கையின் எடுத்து ஆடும் நின் தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா - மீனாட்சிபிள்ளை:8 77/1
நிமிரா முன் அம்மனை ஒர் ஆயிரம் எடுத்து எறிய நிரைநிரையவாய் ககன மேல் நிற்கின்றது அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் நிரைத்து வைத்தது கடுப்ப - மீனாட்சிபிள்ளை:8 77/2
இளநிலவு உமிழ்தரு முத்தின் கோவை எடுத்து அவர் திருமார்புக்கு இடுவ கடுப்பவும் அப்பரிசே பல மணியின் இயற்றியிடும் - மீனாட்சிபிள்ளை:8 80/2
தளை ஆடு கறை அடி சிறு கண் பெரும் கை தடம் களிறு எடுத்து மற்று அ தவள களிற்றினொடு முட்டவிட்டு எட்டு மத தந்தியும் பந்து அடித்து - மீனாட்சிபிள்ளை:9 83/3
நெளிக்கும் தரங்க தடம் கங்கையுடன் ஒட்டி நித்தில பந்து ஆடவும் நிரை மணி திரளின் கழங்கு ஆடவும் தன் நெடும் திரை கை எடுத்து
  விளிக்கும் பெரும் தண் துறை கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:9 87/3,4

 TOP
 
    எடுத்துரைப்ப (1)
செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப
  அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி - மீனாட்சிபிள்ளை:10 96/2,3

 TOP
 
    எண் (4)
போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் - மீனாட்சிபிள்ளை:0 1/2
திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆட தெய்வ மணம் கமழும் திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 20/2
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் - மீனாட்சிபிள்ளை:4 39/3
எண்_இல் பல புவன பெரும் தட்டை ஊடுருவி இவள் பெரும் புகழ் நெடு நிலா எங்கணும் நிறைந்திடுவது அங்கு அதனில் மெள்ள நீ எள்ளளவு மொண்டுகொண்டு - மீனாட்சிபிள்ளை:7 67/1

 TOP
 
    எண்_இல் (1)

    எண்ணி (1)
ஏடகத்து எழுதாத வேத சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின் இதய தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா - மீனாட்சிபிள்ளை:7 72/1

 TOP
 
    எண்ணிலர் (1)
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1

 TOP
 
    எண்மர் (1)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8

 TOP
 
    எதிர் (5)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன - மீனாட்சிபிள்ளை:1 3/5
இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி - மீனாட்சிபிள்ளை:1 7/3
அமரர்க்கு அதிபதி வெளிறு அ களிறு எதிர் பிளிற குளிறியிடா அண்டம் மிசை பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும் - மீனாட்சிபிள்ளை:3 30/1
தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா - மீனாட்சிபிள்ளை:3 32/1
தமரான நின் துணை சேடியரில் ஒருசிலர் தட கையின் எடுத்து ஆடும் நின் தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா - மீனாட்சிபிள்ளை:8 77/1

 TOP
 
    எதிர்கொண்டு (1)
கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என - மீனாட்சிபிள்ளை:9 83/2

 TOP
 
    எதிர்கொள்ள (1)
கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க - மீனாட்சிபிள்ளை:6 58/3

 TOP
 
    எதிர்த்து (1)
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ - மீனாட்சிபிள்ளை:8 78/1

 TOP
 
    எதிர்ப்பட்ட (1)
பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று - மீனாட்சிபிள்ளை:4 34/1

 TOP
 
    எதிர்வர (1)
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1

 TOP
 
    எதிரிட்டு (1)
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராட தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையா - மீனாட்சிபிள்ளை:4 39/1

 TOP
 
    எதிரெதிர் (1)
சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/1

 TOP
 
    எது-கொல் (1)
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7

 TOP
 
    எந்தாய் (1)
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று - மீனாட்சிபிள்ளை:2 22/1

 TOP
 
    எந்தை (5)
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று - மீனாட்சிபிள்ளை:1 10/3
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் - மீனாட்சிபிள்ளை:6 53/2
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/2
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு - மீனாட்சிபிள்ளை:7 66/2
பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான - மீனாட்சிபிள்ளை:8 78/2

 TOP
 
    எந்தையார் (1)
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:10 95/2

 TOP
 
    எம் (5)
கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் - மீனாட்சிபிள்ளை:0 1/1
அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க - மீனாட்சிபிள்ளை:1 2/2
அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க - மீனாட்சிபிள்ளை:1 2/2
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன - மீனாட்சிபிள்ளை:1 3/5
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7

 TOP
 
    எம்பிரான் (1)
அளிக்கும் சுந்தர கடவுள் பொலியும் அறு கால் பீடமும் எம்பிரான் காமர் பரியங்க கவின் தங்கு பள்ளி அம் கட்டிலும் தொட்டிலாக - மீனாட்சிபிள்ளை:4 36/2

 TOP
 
    எம்பெருமான் (1)
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு - மீனாட்சிபிள்ளை:9 89/1

 TOP
 
    எம்மருங்கும் (1)
தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி - மீனாட்சிபிள்ளை:9 86/1

 TOP
 
    எம்முடைய (1)
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1

 TOP
 
    எமக்கு (1)
பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற - மீனாட்சிபிள்ளை:5 46/3

 TOP
 
    எமர் (1)
கைத்தலமோடு இரு கரட கரை திரை கக்கு கடாம் உடை கடலில் குளித்து எமர்
  சித்தம் அது ஆம் ஒரு தறியில் துவக்குறு சித்திவிநாயகன் இசையை பழிச்சுதும் - மீனாட்சிபிள்ளை:1 4/1,2

 TOP
 
    எய்த (1)
சேன பந்தரின் அலகை திரள் பல குரவை பிணைத்து ஆட திசையில் தலைவர்கள் பெரு நாண் எய்த சிறு நாண் ஒலிசெய்யா - மீனாட்சிபிள்ளை:4 38/3

 TOP
 
    எயில் (1)
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4

 TOP
 
    எயிலை (1)
தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா - மீனாட்சிபிள்ளை:3 32/1

 TOP
 
    எயிறு (2)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2

 TOP
 
    எரி (1)
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் - மீனாட்சிபிள்ளை:10 95/3

 TOP
 
    எரிய (1)
கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் - மீனாட்சிபிள்ளை:1 11/1

 TOP
 
    எரு (1)
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு - மீனாட்சிபிள்ளை:7 65/1

 TOP
 
    எருத்தம் (1)
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் - மீனாட்சிபிள்ளை:2 14/3

 TOP
 
    எருத்து (1)
பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே - மீனாட்சிபிள்ளை:1 2/4

 TOP
 
    எருமை (2)
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை
  இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை - மீனாட்சிபிள்ளை:3 23/1,2
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு - மீனாட்சிபிள்ளை:3 27/3

 TOP
 
    எல் (1)
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் - மீனாட்சிபிள்ளை:10 94/3

 TOP
 
    எல்லை (1)
கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் - மீனாட்சிபிள்ளை:0 1/1

 TOP
 
    எல்லைக்கல்லின் (1)
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் - மீனாட்சிபிள்ளை:4 39/3

 TOP
 
    எலாம் (2)
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் - மீனாட்சிபிள்ளை:8 77/3
வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம்
  அயிராவதத்தினை நிகர்க்கும் மதுரை தலைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:8 78/3,4

 TOP
 
    எவ் (1)
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப - மீனாட்சிபிள்ளை:10 101/2

 TOP
 
    எவர்-கொல் (2)
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7

 TOP
 
    எவரும் (1)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3

 TOP
 
    எழ (7)
குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் - மீனாட்சிபிள்ளை:2 21/1
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா - மீனாட்சிபிள்ளை:4 39/2
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ
  வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த - மீனாட்சிபிள்ளை:8 74/2,3
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் - மீனாட்சிபிள்ளை:8 77/3
கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என - மீனாட்சிபிள்ளை:9 83/2
புள் ஒலி எழ குடிபுகுந்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 93/4
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ - மீனாட்சிபிள்ளை:10 100/1

 TOP
 
    எழல் (1)
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான - மீனாட்சிபிள்ளை:9 88/2

 TOP
 
    எழவும் (1)
பரு அரை முது பல அடியினில் நெடு நிலம் நெக்க குட கனியின் படு நறை படு நிறை கடம் உடை படுவ கடுப்ப உவட்டு எழவும்
  விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் - மீனாட்சிபிள்ளை:5 51/1,2

 TOP
 
    எழில் (2)
குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் என சித்தர் பாடவும் குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/4
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8

 TOP
 
    எழு (10)
புத்தமுதோ அருள் தழைய தழைத்தது ஒர் பொன் கொடியோ என மதுரித்து உவட்டு எழு
  முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை மு தனம் மேவு பெண் அரசை புரக்கவே - மீனாட்சிபிள்ளை:1 4/3,4
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 18/1
குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் - மீனாட்சிபிள்ளை:2 21/1
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் - மீனாட்சிபிள்ளை:5 48/1
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் - மீனாட்சிபிள்ளை:10 95/3
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு - மீனாட்சிபிள்ளை:10 99/2

    எழுகடலில் (1)
கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/5

 TOP
 
    எழுகுறு (1)
திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆட தெய்வ மணம் கமழும் திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 20/2

 TOP
 
    எழுத (2)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் - மீனாட்சிபிள்ளை:1 3/4
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2

 TOP
 
    எழுதரு (2)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6
புதை இருள் கிழிதர எழுதரு பரிதி வளைத்த கடல் புவியில் பொது அற அடிமைசெய்திடு வழி அடியர் பொருட்டு அலர் வட்டணையில் - மீனாட்சிபிள்ளை:5 52/1

 TOP
 
    எழுதாச்சொல் (1)
உணர்வு நீர் பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளி பூத்து அருள் பழுத்த மலர் கற்பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலை - மீனாட்சிபிள்ளை:5 43/2

 TOP
 
    எழுதாத (1)
ஏடகத்து எழுதாத வேத சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின் இதய தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா - மீனாட்சிபிள்ளை:7 72/1

 TOP
 
    எழுதி (2)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய் - மீனாட்சிபிள்ளை:6 61/3

 TOP
 
    எழுதிய (2)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் - மீனாட்சிபிள்ளை:1 3/4
அத்தன் மனத்து எழுதிய உயிர் ஓவியம் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே - மீனாட்சிபிள்ளை:8 79/4

 TOP
 
    எழுது (2)
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் - மீனாட்சிபிள்ளை:5 45/3
இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும் - மீனாட்சிபிள்ளை:10 102/1

 TOP
 
    எழுந்த (1)
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் - மீனாட்சிபிள்ளை:8 77/3

 TOP
 
    எழுந்து (4)
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 70/4
விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து - மீனாட்சிபிள்ளை:8 73/3
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான - மீனாட்சிபிள்ளை:9 88/2
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் - மீனாட்சிபிள்ளை:10 98/1

 TOP
 
    எழுநாத்-தலை (1)
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் - மீனாட்சிபிள்ளை:10 95/3

 TOP
 
    எழும் (6)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8
ஆணை திரளொடு குதிரை திரளையும் அ பெயர் மீனை முகந்து அம்மனை ஆடு கடல் திரை போல அடல் திரை மோத எழும்
  தானை கடலொடு பொலியும் திருமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 29/3,4
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ - மீனாட்சிபிள்ளை:4 34/3
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ - மீனாட்சிபிள்ளை:8 74/2
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் - மீனாட்சிபிள்ளை:9 92/2
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் - மீனாட்சிபிள்ளை:10 98/1

 TOP
 
    எழுவது (2)
விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய் விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு - மீனாட்சிபிள்ளை:8 80/1
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் - மீனாட்சிபிள்ளை:10 97/3

 TOP
 
    எழுவர்கள் (1)
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2

 TOP
 
    எள்ளளவு (1)
எண்_இல் பல புவன பெரும் தட்டை ஊடுருவி இவள் பெரும் புகழ் நெடு நிலா எங்கணும் நிறைந்திடுவது அங்கு அதனில் மெள்ள நீ எள்ளளவு மொண்டுகொண்டு - மீனாட்சிபிள்ளை:7 67/1

 TOP
 
    எள்ளி (1)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6

 TOP
 
    எற்று (1)
எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர் - மீனாட்சிபிள்ளை:2 15/2

 TOP
 
    எறி (6)
கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் - மீனாட்சிபிள்ளை:0 1/1
மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய - மீனாட்சிபிள்ளை:1 3/7
காரில் பொழி மழை நீரில் சுழி எறி கழியில் சிறு குழியில் கரையில் கரை பொரு திரையில் தலை விரி கண்டலில் வண்டலின் நெற்போரில் - மீனாட்சிபிள்ளை:3 28/1
கரை எறி புணரியின் இரு மடி பெருகு தடத்து மடுத்த கட களிறொடு பிளிறிட இகலிய முகிலின் இரட்டி இரட்டிய மும் - மீனாட்சிபிள்ளை:5 51/3
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் - மீனாட்சிபிள்ளை:6 61/2
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் - மீனாட்சிபிள்ளை:10 94/3

 TOP
 
    எறிந்து (2)
அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும் - மீனாட்சிபிள்ளை:2 16/3
ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர் - மீனாட்சிபிள்ளை:3 26/3

 TOP
 
    எறிப்ப (2)
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப
  மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 60/3,4
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் - மீனாட்சிபிள்ளை:10 95/3

 TOP
 
    எறிபந்தின் (1)
இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் - மீனாட்சிபிள்ளை:8 73/2

 TOP
 
    எறிய (5)
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை - மீனாட்சிபிள்ளை:3 23/2
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம் - மீனாட்சிபிள்ளை:4 37/1
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் - மீனாட்சிபிள்ளை:8 76/3
நிமிரா முன் அம்மனை ஒர் ஆயிரம் எடுத்து எறிய நிரைநிரையவாய் ககன மேல் நிற்கின்றது அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் நிரைத்து வைத்தது கடுப்ப - மீனாட்சிபிள்ளை:8 77/2
துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த - மீனாட்சிபிள்ளை:9 88/1

 TOP
 
    எறியும் (3)
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை - மீனாட்சிபிள்ளை:3 23/2
சிகர களப பொம்மல் முலை தெய்வ மகளிர் புடை இரட்டும் செம் கை கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க - மீனாட்சிபிள்ளை:6 60/2
திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் - மீனாட்சிபிள்ளை:8 74/1

 TOP
 
    என் (5)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச - மீனாட்சிபிள்ளை:6 53/3
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் - மீனாட்சிபிள்ளை:7 70/3
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ - மீனாட்சிபிள்ளை:8 74/2
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2

 TOP
 
    என்பதும் (1)
சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப - மீனாட்சிபிள்ளை:10 94/2

 TOP
 
    என்பவர் (1)
தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பு ஆட தாய் வருக என்பவர் பேதமை கண்டு ததும்பு புன்னகை ஆட - மீனாட்சிபிள்ளை:2 19/1

 TOP
 
    என்பார்க்கு (1)
தம் மனம் ஒப்ப உரைப்பன மற்றை சமயத்து அமைவு பெறார் தத்தமில் நின்று பிதற்றுவ பொருவ தனிமுதல் யாம் என்பார்க்கு
  அம்மனை ஆயவர்-தம் மனை ஆனவள் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே - மீனாட்சிபிள்ளை:8 81/3,4

 TOP
 
    என்பு (2)
அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 68/4
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு - மீனாட்சிபிள்ளை:8 75/3

 TOP
 
    என்றளவில் (1)
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1

 TOP
 
    என்று (9)
பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று - மீனாட்சிபிள்ளை:1 6/3
கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் - மீனாட்சிபிள்ளை:2 21/3
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று
  அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப - மீனாட்சிபிள்ளை:2 22/1,2
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப - மீனாட்சிபிள்ளை:2 22/2
தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா - மீனாட்சிபிள்ளை:3 32/1
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு - மீனாட்சிபிள்ளை:7 71/3
தண் நாறும் மல்லல் துறை சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய் சகலமும் நின் திரு சொருபம் என்று ஓலிடும் சதுர்மறை பொருள் வெளியிட - மீனாட்சிபிள்ளை:9 85/2
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு - மீனாட்சிபிள்ளை:9 89/1
இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும் - மீனாட்சிபிள்ளை:10 102/1

 TOP
 
    என்றும் (3)
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் - மீனாட்சிபிள்ளை:7 64/1
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும்
  கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் - மீனாட்சிபிள்ளை:7 64/1,2
கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் - மீனாட்சிபிள்ளை:7 64/2

 TOP
 
    என்றே (2)
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 8/4
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 9/4

 TOP
 
    என்ன (4)
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7
இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு இடுகு இடை ஆட இயற்கை மணம் பொதி இதழ் வழி தேறலினோடு - மீனாட்சிபிள்ளை:2 19/3
கண்டு படு குதலை பசும் கிளி இவட்கு ஒரு கலாபேதம் என்ன நின்னை கலை மறைகள் முறையிடுவ கண்டோ அலாது ஒண் கலாநிதி என தெரிந்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/1

 TOP
 
    என்னவும் (1)
இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும்
  விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து - மீனாட்சிபிள்ளை:8 73/2,3

 TOP
 
    என்னும் (1)
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் - மீனாட்சிபிள்ளை:1 12/2

 TOP
 
    என (52)
சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/1
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/2
புத்தமுதோ அருள் தழைய தழைத்தது ஒர் பொன் கொடியோ என மதுரித்து உவட்டு எழு - மீனாட்சிபிள்ளை:1 4/3
பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய - மீனாட்சிபிள்ளை:1 5/1
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/2
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க - மீனாட்சிபிள்ளை:1 10/2
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4
குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் என சித்தர் பாடவும் குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/4
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் - மீனாட்சிபிள்ளை:1 12/7
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் - மீனாட்சிபிள்ளை:2 17/2
தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பு ஆட தாய் வருக என்பவர் பேதமை கண்டு ததும்பு புன்னகை ஆட - மீனாட்சிபிள்ளை:2 19/1
அசைந்து ஒசிகின்ற பசும் கொடி என இனிது ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை - மீனாட்சிபிள்ளை:2 19/4
கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் - மீனாட்சிபிள்ளை:2 21/3
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று - மீனாட்சிபிள்ளை:2 22/1
கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல் - மீனாட்சிபிள்ளை:2 22/3
சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே - மீனாட்சிபிள்ளை:3 31/3
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ - மீனாட்சிபிள்ளை:4 34/3
காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும் - மீனாட்சிபிள்ளை:4 35/2
குமரி துறை என ஆடும் மட பிடி கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 39/4
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் - மீனாட்சிபிள்ளை:4 40/1
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என
  பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற - மீனாட்சிபிள்ளை:5 46/2,3
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி - மீனாட்சிபிள்ளை:5 48/3
மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என
  கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் - மீனாட்சிபிள்ளை:5 49/2,3
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச - மீனாட்சிபிள்ளை:6 53/3
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் - மீனாட்சிபிள்ளை:6 54/3
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் - மீனாட்சிபிள்ளை:6 55/3
வடம் பட்ட நின் துணை கொங்கை குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய் வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்து - மீனாட்சிபிள்ளை:6 56/1
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல - மீனாட்சிபிள்ளை:6 59/3
கண்டு படு குதலை பசும் கிளி இவட்கு ஒரு கலாபேதம் என்ன நின்னை கலை மறைகள் முறையிடுவ கண்டோ அலாது ஒண் கலாநிதி என தெரிந்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/1
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/2
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு - மீனாட்சிபிள்ளை:7 63/3
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு - மீனாட்சிபிள்ளை:7 63/3
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு - மீனாட்சிபிள்ளை:7 65/1
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை - மீனாட்சிபிள்ளை:7 65/2
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் - மீனாட்சிபிள்ளை:7 67/3
செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை என கொப்பளிக்கும் சீறடிகள் கன்றி சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன் - மீனாட்சிபிள்ளை:7 69/2
தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனி புதல்வனுக்கு வட்ட தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழை கரும்பு ஒன்று - மீனாட்சிபிள்ளை:7 69/3
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண் - மீனாட்சிபிள்ளை:7 71/2
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண் - மீனாட்சிபிள்ளை:7 71/2
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ - மீனாட்சிபிள்ளை:8 74/2
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ - மீனாட்சிபிள்ளை:8 74/2
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த - மீனாட்சிபிள்ளை:8 74/3
கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என
  தளை ஆடு கறை அடி சிறு கண் பெரும் கை தடம் களிறு எடுத்து மற்று அ தவள களிற்றினொடு முட்டவிட்டு எட்டு மத தந்தியும் பந்து அடித்து - மீனாட்சிபிள்ளை:9 83/2,3
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:9 87/2
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என
  குறிக்கும் இடத்தில் தடம் தூ நீர் குடையப்பெறின் அ கங்கை திரு கோடீரத்து குடியிருப்பும் கூடா போலும் பொலன் குவட்டு - மீனாட்சிபிள்ளை:9 90/2,3
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் - மீனாட்சிபிள்ளை:10 98/1
பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் - மீனாட்சிபிள்ளை:10 100/3

 TOP
 
    எனது (1)
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/2

 TOP
 
    எனவும் (6)
கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் - மீனாட்சிபிள்ளை:7 64/2
கரைக்கும் கடாம் இரு கவுள் குடம் உடைந்து ஊற்று களிறு பெரு வயிறு தூர்ப்ப கவளம் திரட்டி கொடுப்பது எனவும் சூழ்ந்து ஒர் கலை மதி கலச அமுதுக்கு - மீனாட்சிபிள்ளை:8 73/1
இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் - மீனாட்சிபிள்ளை:8 73/2
விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து - மீனாட்சிபிள்ளை:8 73/3
செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் - மீனாட்சிபிள்ளை:8 81/2
செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும்
  தம் மனம் ஒப்ப உரைப்பன மற்றை சமயத்து அமைவு பெறார் தத்தமில் நின்று பிதற்றுவ பொருவ தனிமுதல் யாம் என்பார்க்கு - மீனாட்சிபிள்ளை:8 81/2,3

 TOP
 
    எனவே (1)
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக - மீனாட்சிபிள்ளை:10 98/2

 TOP
 
    எனா (1)
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:10 95/2

 TOP
 
    எனும் (6)
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8
இகல் விழி மகரமும் அ மகரம் பொரும் இரு மகரமும் ஆட இடு நூபுர அடி பெயர கிண்கிண் எனும் கிண்கிணி ஆட - மீனாட்சிபிள்ளை:2 18/2
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் - மீனாட்சிபிள்ளை:8 77/3
துளிக்கும் பனி திவலை சிதறி குடைந்து ஆடு துறையில் துறை தமிழொடும் தொல் மறை தெளிக்கும் கலை கொடி எனும் துணை தோழி மூழ்கி புனல் மடுத்து - மீனாட்சிபிள்ளை:9 87/1
செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப - மீனாட்சிபிள்ளை:10 96/2

 TOP