|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
உக (1)
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
TOP
உகண்டு (1)
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா - மீனாட்சிபிள்ளை:4 39/2
TOP
உகந்த (2)
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி - மீனாட்சிபிள்ளை:5 48/3
TOP
உகந்து (1)
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே - மீனாட்சிபிள்ளை:3 32/3
TOP
உகவும் (1)
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும்
கரை எறி புணரியின் இரு மடி பெருகு தடத்து மடுத்த கட களிறொடு பிளிறிட இகலிய முகிலின் இரட்டி இரட்டிய மும் - மீனாட்சிபிள்ளை:5 51/2,3
TOP
உகள (1)
அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும் - மீனாட்சிபிள்ளை:2 16/3
TOP
உகளும் (2)
அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும்
செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:2 16/3,4
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் - மீனாட்சிபிள்ளை:3 27/2
TOP
உகிர் (2)
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு - மீனாட்சிபிள்ளை:7 72/3
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு - மீனாட்சிபிள்ளை:10 99/2
TOP
உகு (4)
மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய - மீனாட்சிபிள்ளை:1 3/7
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3
தழை கெழு பொழிலில் முசுக்கலை மை புயலில் பாய தவழ் இளமதி கலை நெக்கு உகு புத்தமுதத்தோடே - மீனாட்சிபிள்ளை:4 41/3
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 42/4
TOP
உகுத்து (1)
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை - மீனாட்சிபிள்ளை:3 27/1
TOP
உகைத்திடும் (1)
அமரர்க்கு அதிபதி வெளிறு அ களிறு எதிர் பிளிற குளிறியிடா அண்டம் மிசை பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும் - மீனாட்சிபிள்ளை:3 30/1
TOP
உகைத்து (4)
குழியும் சிறு கண் ஏற்று உருமு குரல் வெண் புயலும் கரும் புயலும் குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிச தட கை புத்தேளே - மீனாட்சிபிள்ளை:1 7/4
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க - மீனாட்சிபிள்ளை:1 10/2
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் - மீனாட்சிபிள்ளை:3 25/1
TOP
உச்சி (1)
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் - மீனாட்சிபிள்ளை:4 37/2
TOP
உச்சிட்டம் (1)
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் - மீனாட்சிபிள்ளை:7 64/1
TOP
உச்சியின் (1)
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆட சுடர் பொன் பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆட - மீனாட்சிபிள்ளை:2 20/1
TOP
உடல் (1)
வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து - மீனாட்சிபிள்ளை:1 8/1
TOP
உடல (1)
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு - மீனாட்சிபிள்ளை:5 49/1
TOP
உடலில் (1)
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி - மீனாட்சிபிள்ளை:4 37/3
TOP
உடற்ற (1)
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 32/2
TOP
உடன் (1)
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 9/4
TOP
உடன்பிறந்த (1)
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை - மீனாட்சிபிள்ளை:3 23/1
TOP
உடு (1)
வானத்து உருமொடு உடு திரள் சிந்த மலைந்த பறந்தலையில் மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன் தொடியார் - மீனாட்சிபிள்ளை:4 38/1
TOP
உடுக்கும் (1)
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய் - மீனாட்சிபிள்ளை:6 61/3
TOP
உடுக்கை (1)
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் - மீனாட்சிபிள்ளை:5 48/1
TOP
உடுத்து (3)
மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் - மீனாட்சிபிள்ளை:1 6/1
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை - மீனாட்சிபிள்ளை:7 65/2
புல்கும் தடம் பணை உடுத்து மதுரை தலைவி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 100/4
TOP
உடுமீன் (2)
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு - மீனாட்சிபிள்ளை:7 64/3
TOP
உடை (3)
கைத்தலமோடு இரு கரட கரை திரை கக்கு கடாம் உடை கடலில் குளித்து எமர் - மீனாட்சிபிள்ளை:1 4/1
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/3,4
பரு அரை முது பல அடியினில் நெடு நிலம் நெக்க குட கனியின் படு நறை படு நிறை கடம் உடை படுவ கடுப்ப உவட்டு எழவும் - மீனாட்சிபிள்ளை:5 51/1
TOP
உடைதாரமும் (1)
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று - மீனாட்சிபிள்ளை:10 102/2
TOP
உடைந்த (6)
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு - மீனாட்சிபிள்ளை:5 45/1
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு - மீனாட்சிபிள்ளை:5 45/1
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் - மீனாட்சிபிள்ளை:5 45/2
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் - மீனாட்சிபிள்ளை:5 45/2
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் - மீனாட்சிபிள்ளை:5 45/3
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் - மீனாட்சிபிள்ளை:5 45/3
TOP
உடைந்து (8)
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க - மீனாட்சிபிள்ளை:1 10/2
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 32/2
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும் உழுவல் அன்பின் பழ அடியார் உள்ள தடத்தில் ஊற்றெடுத்து - மீனாட்சிபிள்ளை:5 44/1
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு - மீனாட்சிபிள்ளை:7 65/1
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1
கரைக்கும் கடாம் இரு கவுள் குடம் உடைந்து ஊற்று களிறு பெரு வயிறு தூர்ப்ப கவளம் திரட்டி கொடுப்பது எனவும் சூழ்ந்து ஒர் கலை மதி கலச அமுதுக்கு - மீனாட்சிபிள்ளை:8 73/1
அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி - மீனாட்சிபிள்ளை:10 96/3
பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் - மீனாட்சிபிள்ளை:10 100/3
TOP
உடைந்தும் (1)
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் - மீனாட்சிபிள்ளை:1 8/2
TOP
உடைய (2)
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப - மீனாட்சிபிள்ளை:2 22/2
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் - மீனாட்சிபிள்ளை:3 25/1
TOP
உடையது (3)
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று - மீனாட்சிபிள்ளை:1 10/3
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/4
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
TOP
உடையா (1)
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராட தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையா
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா - மீனாட்சிபிள்ளை:4 39/1,2
TOP
உடைவது (1)
கமரில் கவிழ்தரு திசையில் தலைவர்கள் மலையின் சிறகு அரியும் கடவுள் படையொடு பிறகிட்டு உடைவது கண்டு முகம் குளிரா - மீனாட்சிபிள்ளை:3 30/2
TOP
உண் (1)
களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்கலத்திடு புது கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால் - மீனாட்சிபிள்ளை:7 70/2
TOP
உண்ட (1)
கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்று பொன் தருவில் களி நறவு உண்ட மட பெடையோடு கலந்து முயங்கி வரி - மீனாட்சிபிள்ளை:9 92/3
TOP
உண்டு (8)
இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி - மீனாட்சிபிள்ளை:1 7/3
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று - மீனாட்சிபிள்ளை:1 10/3
பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா - மீனாட்சிபிள்ளை:4 38/2
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட - மீனாட்சிபிள்ளை:6 55/1
வடம் பட்ட நின் துணை கொங்கை குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய் வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்து - மீனாட்சிபிள்ளை:6 56/1
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் - மீனாட்சிபிள்ளை:7 70/3
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் - மீனாட்சிபிள்ளை:7 70/3
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் - மீனாட்சிபிள்ளை:9 83/1
TOP
உண்ணவும் (1)
மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் - மீனாட்சிபிள்ளை:1 6/1
TOP
உணர்ந்திலை-கொல் (1)
தன் பெருந்தன்மையை உணர்ந்திலை-கொல் சிவ ராசதானியாய் சீவன் முத்தி தலமுமாய் துவாதசாந்த தலமும் ஆனது இ தலம் இ தலத்து அடைதியேல் - மீனாட்சிபிள்ளை:7 68/2
TOP
உணர்ந்து (1)
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:9 87/2
TOP
உணர்வாய் (1)
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய்
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 67/3,4
TOP
உணர்வு (2)
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில் - மீனாட்சிபிள்ளை:2 21/2
உணர்வு நீர் பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளி பூத்து அருள் பழுத்த மலர் கற்பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலை - மீனாட்சிபிள்ளை:5 43/2
TOP
உணராதார் (1)
சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே - மீனாட்சிபிள்ளை:3 31/3
TOP
உத்தரியமும் (1)
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று - மீனாட்சிபிள்ளை:10 102/2
TOP
உத்தி (1)
மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் - மீனாட்சிபிள்ளை:1 6/1
TOP
உததியில் (1)
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
TOP
உதவி (1)
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 9/4
TOP
உதவு (3)
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க - மீனாட்சிபிள்ளை:1 6/2
கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் - மீனாட்சிபிள்ளை:1 11/1
ததை மலர் பொதுளிய களி அளி குமிறு குழல் திருவை தவள சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மட பிடியே - மீனாட்சிபிள்ளை:5 52/2
TOP
உதவும் (1)
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 65/4
TOP
உதறி (1)
காடும் தரங்க கங்கை நெடும் கழியும் நீந்தி அமுது இறைக்கும் கலை வெண் மதியின் முயல் தடவி கதிர் மீன் கற்றை திரைத்து உதறி
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் - மீனாட்சிபிள்ளை:3 25/2,3
TOP
உதறும் (1)
ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் - மீனாட்சிபிள்ளை:3 26/1
TOP
உதித்த (1)
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை - மீனாட்சிபிள்ளை:7 65/2
TOP
உதித்தவள் (1)
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ - மீனாட்சிபிள்ளை:8 78/1
TOP
உதியர் (1)
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1
TOP
உதியரும் (1)
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராட தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையா - மீனாட்சிபிள்ளை:4 39/1
TOP
உதிர்வது (1)
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் - மீனாட்சிபிள்ளை:10 95/1
TOP
உதைந்து (2)
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் - மீனாட்சிபிள்ளை:10 95/1
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ - மீனாட்சிபிள்ளை:10 100/1
TOP
உந்தி (1)
துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆட தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று - மீனாட்சிபிள்ளை:2 18/3
TOP
உபயமும் (1)
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப - மீனாட்சிபிள்ளை:2 22/2
TOP
உம்பர் (1)
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் - மீனாட்சிபிள்ளை:7 68/1
TOP
உமிழ் (1)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன - மீனாட்சிபிள்ளை:1 3/5
TOP
உமிழ்தரு (1)
இளநிலவு உமிழ்தரு முத்தின் கோவை எடுத்து அவர் திருமார்புக்கு இடுவ கடுப்பவும் அப்பரிசே பல மணியின் இயற்றியிடும் - மீனாட்சிபிள்ளை:8 80/2
TOP
உமிழ்ந்த (1)
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் - மீனாட்சிபிள்ளை:7 64/1
TOP
உயர்த்த (2)
சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி - மீனாட்சிபிள்ளை:1 7/1
மகர துவசம் உயர்த்த பொலன் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 32/4
TOP
உயர்த்தாய் (1)
பொறிக்கும் சுறவ கொடி உயர்த்தாய் புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே - மீனாட்சிபிள்ளை:9 90/4
TOP
உயிர் (5)
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ - மீனாட்சிபிள்ளை:4 34/3
காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்து பழம் பாடல் கலை மா செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆலவாலத்து - மீனாட்சிபிள்ளை:5 43/1
சோலை கிளியே உயிர் துணையாம் தோன்றாத்துணைக்கு ஓர் துணையாகி துவாதசாந்த பெருவெளியில் துரியம் கடந்த பரநாத - மீனாட்சிபிள்ளை:5 43/3
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய் - மீனாட்சிபிள்ளை:6 61/3
அத்தன் மனத்து எழுதிய உயிர் ஓவியம் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே - மீனாட்சிபிள்ளை:8 79/4
TOP
உயிர்கள் (1)
அதிர பொருது கலி பகைஞன் தமிழ் நீர் நாடு ஆளாமே அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை நீள்நீர் தோயாமே - மீனாட்சிபிள்ளை:3 31/2
TOP
உயிர்களும் (1)
அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும் - மீனாட்சிபிள்ளை:2 16/3
TOP
உயிர்த்த (1)
பொன் அம் கமல பசும் தோட்டு பொன் தாது ஆடி கற்றை நிலா பொழியும் தரங்கம் பொறை உயிர்த்த பொன் போல் தொடுதோல் அடி பொலன் சூட்டு - மீனாட்சிபிள்ளை:3 23/3
TOP
உயிர்ப்பு (1)
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ - மீனாட்சிபிள்ளை:4 34/3
TOP
உயிராய் (1)
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ - மீனாட்சிபிள்ளை:8 78/1
TOP
உரு (3)
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் - மீனாட்சிபிள்ளை:6 54/3
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:9 86/2
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் - மீனாட்சிபிள்ளை:10 97/3
TOP
உருக (3)
அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 68/4
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு - மீனாட்சிபிள்ளை:8 75/3
வளர் ஒளி விம்மிய அம்மனை செல்வது வானவில் ஒத்திடவும் மனன் நெக்கு உருக பரமானந்தம் மடுத்த திருத்தொண்டர்க்கு - மீனாட்சிபிள்ளை:8 80/3
TOP
உருகி (5)
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும் உழுவல் அன்பின் பழ அடியார் உள்ள தடத்தில் ஊற்றெடுத்து - மீனாட்சிபிள்ளை:5 44/1
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும் உழுவல் அன்பின் பழ அடியார் உள்ள தடத்தில் ஊற்றெடுத்து - மீனாட்சிபிள்ளை:5 44/1
கொத்து மணி திரளில் செயும் அம்மனை குயிலின் மிழற்றிய நின் குழலின் இசைக்கு உருகி பனி தூங்கு குறும் துளி சிந்தியிட - மீனாட்சிபிள்ளை:8 79/2
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு - மீனாட்சிபிள்ளை:9 89/1
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக - மீனாட்சிபிள்ளை:10 98/2
TOP
உருகிய (1)
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் - மீனாட்சிபிள்ளை:10 95/1
TOP
உருகியிட (1)
கங்கை முடி மகிழ்நர் திருவுளம் அசைந்து ஆட கலந்து ஆடு பொன் ஊசல் அ கடவுள் திரு நோக்கத்து நெக்கு உருகியிட நின் கடைக்கண் நோக்கத்து மற்று அ - மீனாட்சிபிள்ளை:10 96/1
TOP
உருகு (1)
செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப - மீனாட்சிபிள்ளை:10 96/2
TOP
உருட்டும் (1)
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ - மீனாட்சிபிள்ளை:3 26/2
TOP
உருமு (1)
குழியும் சிறு கண் ஏற்று உருமு குரல் வெண் புயலும் கரும் புயலும் குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிச தட கை புத்தேளே - மீனாட்சிபிள்ளை:1 7/4
TOP
உருமொடு (1)
வானத்து உருமொடு உடு திரள் சிந்த மலைந்த பறந்தலையில் மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன் தொடியார் - மீனாட்சிபிள்ளை:4 38/1
TOP
உருவம் (1)
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:10 95/2
TOP
உருவுமாம் (1)
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப - மீனாட்சிபிள்ளை:10 101/2
TOP
உரை (1)
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் - மீனாட்சிபிள்ளை:1 12/2
TOP
உரைதரு (1)
தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பு ஆட தாய் வருக என்பவர் பேதமை கண்டு ததும்பு புன்னகை ஆட - மீனாட்சிபிள்ளை:2 19/1
TOP
உரைப்பன (1)
தம் மனம் ஒப்ப உரைப்பன மற்றை சமயத்து அமைவு பெறார் தத்தமில் நின்று பிதற்றுவ பொருவ தனிமுதல் யாம் என்பார்க்கு - மீனாட்சிபிள்ளை:8 81/3
TOP
உலகு (3)
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/4
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் - மீனாட்சிபிள்ளை:8 77/3
TOP
உலவு (2)
போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் - மீனாட்சிபிள்ளை:0 1/2
வழுதியுடைய கண்மணியொடு உலவு பெண்மணியை அணி திகழ் செல்வியை தே கமழ் மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 3/8
TOP
உலாம் (2)
தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி - மீனாட்சிபிள்ளை:2 14/2
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் - மீனாட்சிபிள்ளை:2 14/3
TOP
உலாவ (1)
கொங்கு ஓலிடும் கை கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடி சுறவும் நின் கொற்ற பதாகை குழாத்தினொடும் இரசத குன்றினும் சென்று உலாவ
பொங்கு ஓல வேலை புறத்தினொடு அகத்தின் நிமிர் போர் ஆழி பரிதி இரத பொங்கு ஆழி மற்ற பொருப்பு ஆழியில் திரி புலம்பை புலம்புசெய்ய - மீனாட்சிபிள்ளை:5 50/2,3
TOP
உலை (1)
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை
வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு - மீனாட்சிபிள்ளை:3 24/2,3
TOP
உலைய (2)
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 32/2
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் - மீனாட்சிபிள்ளை:5 51/2
TOP
உவகை (1)
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
TOP
உவட்டு (4)
புத்தமுதோ அருள் தழைய தழைத்தது ஒர் பொன் கொடியோ என மதுரித்து உவட்டு எழு - மீனாட்சிபிள்ளை:1 4/3
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை - மீனாட்சிபிள்ளை:3 23/2
பரு அரை முது பல அடியினில் நெடு நிலம் நெக்க குட கனியின் படு நறை படு நிறை கடம் உடை படுவ கடுப்ப உவட்டு எழவும் - மீனாட்சிபிள்ளை:5 51/1
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு - மீனாட்சிபிள்ளை:10 99/2
TOP
உவட்டுற (1)
இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி - மீனாட்சிபிள்ளை:1 7/3
TOP
உவட்டெழவைத்த (1)
ஒழுகிய கருணை உவட்டெழவைத்த அருள் பார்வைக்கு உளம் நெகிழ் அடியர் பவ கடல் வற்ற அலைத்து ஓடி - மீனாட்சிபிள்ளை:4 41/1
TOP
உவந்து (1)
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க - மீனாட்சிபிள்ளை:1 6/2
TOP
உவர் (1)
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் - மீனாட்சிபிள்ளை:3 25/1
TOP
உவரி (1)
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் - மீனாட்சிபிள்ளை:3 25/1
TOP
உழக்க (1)
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை - மீனாட்சிபிள்ளை:3 27/1
TOP
உழக்கி (2)
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் - மீனாட்சிபிள்ளை:3 25/3
புயல் பாய் படப்பை தடம் பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்து புறம் மூடும் அண்ட சுவர் தலம் இடித்து அ புற கடல் மடுத்து உழக்கி
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் - மீனாட்சிபிள்ளை:6 55/2,3
TOP
உழக்கிய (1)
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் - மீனாட்சிபிள்ளை:5 51/2
TOP
உழக்கு (1)
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு - மீனாட்சிபிள்ளை:5 45/1
TOP
உழக்கும் (1)
தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் - மீனாட்சிபிள்ளை:10 93/3
TOP
உழு (1)
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி - மீனாட்சிபிள்ளை:10 99/3
TOP
உழுத (1)
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் - மீனாட்சிபிள்ளை:5 45/2
TOP
உழுது (1)
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
TOP
உழுவல் (2)
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும் உழுவல் அன்பின் பழ அடியார் உள்ள தடத்தில் ஊற்றெடுத்து - மீனாட்சிபிள்ளை:5 44/1
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு - மீனாட்சிபிள்ளை:8 75/3
TOP
உள் (5)
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும் உழுவல் அன்பின் பழ அடியார் உள்ள தடத்தில் ஊற்றெடுத்து - மீனாட்சிபிள்ளை:5 44/1
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு - மீனாட்சிபிள்ளை:8 75/3
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு - மீனாட்சிபிள்ளை:9 89/1
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ - மீனாட்சிபிள்ளை:10 100/1
TOP
உள்ள (2)
கைவந்த கொழுநரொடும் உள்ள புணர்ச்சி கருத்தான் அகத்து ஒடுங்க கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற - மீனாட்சிபிள்ளை:4 34/2
உருகி உருகி நெக்கு நெக்கு உள் உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊறும் உழுவல் அன்பின் பழ அடியார் உள்ள தடத்தில் ஊற்றெடுத்து - மீனாட்சிபிள்ளை:5 44/1
TOP
உள்ளத்தில் (1)
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய் - மீனாட்சிபிள்ளை:6 61/3
TOP
உள்ளம் (2)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் - மீனாட்சிபிள்ளை:1 3/4
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக - மீனாட்சிபிள்ளை:10 98/2
TOP
உள்ளி (1)
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை - மீனாட்சிபிள்ளை:3 23/2
TOP
உள்ளே (1)
அள் ஊற உள்ளே கசிந்து ஊறு பைம் தேறல் அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:8 75/4
TOP
உள (1)
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் - மீனாட்சிபிள்ளை:6 61/2
TOP
உளக்-கண்ணது (1)
பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று - மீனாட்சிபிள்ளை:1 6/3
TOP
உளம் (1)
ஒழுகிய கருணை உவட்டெழவைத்த அருள் பார்வைக்கு உளம் நெகிழ் அடியர் பவ கடல் வற்ற அலைத்து ஓடி - மீனாட்சிபிள்ளை:4 41/1
TOP
உளை (3)
மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 2/1
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க - மீனாட்சிபிள்ளை:1 10/2
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா - மீனாட்சிபிள்ளை:5 48/2
TOP
உளைந்து (1)
குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும் கொழி தமிழ் பனுவல் துறை படியும் மட நடை கூந்தல் அம் பிடியும் அறுகால் - மீனாட்சிபிள்ளை:6 54/1
TOP
உற்றிடு (1)
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு - மீனாட்சிபிள்ளை:8 75/3
TOP
உற (3)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ - மீனாட்சிபிள்ளை:5 52/3
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் - மீனாட்சிபிள்ளை:10 95/1
TOP
உறங்கு (1)
தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி - மீனாட்சிபிள்ளை:9 86/1
TOP
உறங்கும் (1)
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு - மீனாட்சிபிள்ளை:8 75/3
TOP
உறுத்த (1)
வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து - மீனாட்சிபிள்ளை:1 8/1
TOP
உறுத்தவும் (1)
செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை என கொப்பளிக்கும் சீறடிகள் கன்றி சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன் - மீனாட்சிபிள்ளை:7 69/2
TOP
உறை (2)
முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை மு தனம் மேவு பெண் அரசை புரக்கவே - மீனாட்சிபிள்ளை:1 4/4
புள் உறை பூம் பொழில் மதுரை துரைமகள் புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே - மீனாட்சிபிள்ளை:9 92/4
TOP
உறைந்ததும் (1)
மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து - மீனாட்சிபிள்ளை:7 65/3
TOP
உன் (5)
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் - மீனாட்சிபிள்ளை:5 45/3
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன்
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச - மீனாட்சிபிள்ளை:6 53/2,3
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன்
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:10 95/1,2
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் - மீனாட்சிபிள்ளை:10 95/3
TOP
உன்னிடத்து (1)
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் - மீனாட்சிபிள்ளை:7 67/3
TOP
உன்னிஉனி (1)
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் - மீனாட்சிபிள்ளை:1 12/2
TOP
உனக்கு (1)
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு
அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 63/3,4
TOP
உனது (1)
விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் - மீனாட்சிபிள்ளை:7 66/1
TOP
உனை (1)
மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து - மீனாட்சிபிள்ளை:7 65/3
TOP
|
|
|