<<முந்திய பக்கம்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - தொடரடைவு

வ - முதல் சொற்கள்
வசுந்தரை 1
வஞ்சி 1
வட்ட 2
வட்டணையில் 1
வட்டத்தினுக்கு 1
வட்டத்தினொடு 1
வட்டத்தை 1
வட்டம் 3
வட 1
வடபுலத்தார் 1
வடம் 2
வடவரை 2
வடாது 1
வடி 3
வடித்த 1
வடித்து 1
வடிபட்ட 1
வடிம்பு 2
வடிவழகு 2
வடிவு 1
வடிவையும் 1
வண் 2
வண்டல் 3
வண்டலிடும் 1
வண்டலின் 1
வண்டின் 2
வண்டு 8
வண்ணம் 1
வண்ணமா 1
வண்ணரொடு 1
வண 1
வணக்கம் 1
வணக்கொடு 1
வணங்க 1
வணங்கா 1
வணங்கி 1
வணங்கும் 1
வந்திலை 1
வந்து 2
வம் 2
வம்-மின் 1
வய 2
வயல் 3
வயிர 1
வயிரமும் 1
வயிற்றை 1
வயிறு 6
வயிறெரிய 1
வர 1
வரதமும் 1
வரம்பே 1
வரால் 1
வரி 6
வரு 2
வருக 15
வருகவே 20
வருடவும் 1
வருணன் 1
வரும் 4
வரை 2
வரையும் 1
வல்சி 1
வலசாரி 1
வலம் 3
வலம்புரி 1
வலயம் 1
வலவர் 1
வவ்வி 1
வவ்விய 1
வழங்க 2
வழங்கு 1
வழி 5
வழிந்து 3
வழிபடு 1
வழிமுதல் 1
வழியும் 2
வழுக்கி 1
வழுதியுடைய 1
வள் 1
வள்ளன்மை 1
வள 1
வளர் 24
வளர்த்த 4
வளர்த்தவள் 3
வளர்த்தும் 1
வளர்ந்த 5
வளர்ந்திட 3
வளர்ப்பது 1
வளர்ப்பார்க்கு 1
வளர்வது 1
வளர 2
வளரும் 5
வளாக 1
வளை 4
வளைத்த 1
வளைப்பவள் 1
வளையும் 1
வற்ற 1
வனத்து 1
வனப்புக்கு 1
வனம் 1
வனிதையை 1
வனைந்திடு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    வசுந்தரை (1)
முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே முளரி கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 31/1

 TOP
 
    வஞ்சி (1)
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 61/4

 TOP
 
    வட்ட (2)
நாள வட்ட தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட - மீனாட்சிபிள்ளை:4 33/1
தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனி புதல்வனுக்கு வட்ட தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழை கரும்பு ஒன்று - மீனாட்சிபிள்ளை:7 69/3

 TOP
 
    வட்டணையில் (1)
புதை இருள் கிழிதர எழுதரு பரிதி வளைத்த கடல் புவியில் பொது அற அடிமைசெய்திடு வழி அடியர் பொருட்டு அலர் வட்டணையில்
  ததை மலர் பொதுளிய களி அளி குமிறு குழல் திருவை தவள சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மட பிடியே - மீனாட்சிபிள்ளை:5 52/1,2

 TOP
 
    வட்டத்தினுக்கு (1)
வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர் - மீனாட்சிபிள்ளை:4 33/3

 TOP
 
    வட்டத்தினொடு (1)
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள - மீனாட்சிபிள்ளை:4 33/2

 TOP
 
    வட்டத்தை (1)
வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர் - மீனாட்சிபிள்ளை:4 33/3

 TOP
 
    வட்டம் (3)

தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 33/4

 TOP
 
    வட (1)
வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து - மீனாட்சிபிள்ளை:6 58/1

 TOP
 
    வடபுலத்தார் (1)
மத்த மதமா கவுட்டு ஒரு நால் மருப்பு பொருப்பு மிசை பொலிந்த வானத்து அரசு கோயில் வளர் சிந்தாமணியும் வடபுலத்தார்
  நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என - மீனாட்சிபிள்ளை:5 46/1,2

 TOP
 
    வடம் (2)
வடம் பட்ட நின் துணை கொங்கை குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய் வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்து - மீனாட்சிபிள்ளை:6 56/1
ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே - மீனாட்சிபிள்ளை:10 93/1

 TOP
 
    வடவரை (2)
சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/1
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி - மீனாட்சிபிள்ளை:5 48/3

 TOP
 
    வடாது (1)
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் - மீனாட்சிபிள்ளை:4 39/3

 TOP
 
    வடி (3)
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/2
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 10/1
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் - மீனாட்சிபிள்ளை:2 14/3

 TOP
 
    வடித்த (1)
செழு மறை தெளிய வடித்த தமிழ் பதிகத்தோடே திருவருள் அமுது குழைத்து விடுத்த முலைப்பாலால் - மீனாட்சிபிள்ளை:4 42/1

 TOP
 
    வடித்து (1)
வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு - மீனாட்சிபிள்ளை:3 24/3

 TOP
 
    வடிபட்ட (1)
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 10/1

 TOP
 
    வடிம்பு (2)
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா - மீனாட்சிபிள்ளை:5 48/2
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு - மீனாட்சிபிள்ளை:7 72/3

 TOP
 
    வடிவழகு (2)
வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய - மீனாட்சிபிள்ளை:9 91/2
பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 102/4

 TOP
 
    வடிவு (1)
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று - மீனாட்சிபிள்ளை:2 22/1

 TOP
 
    வடிவையும் (1)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6

 TOP
 
    வண் (2)
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை - மீனாட்சிபிள்ளை:4 36/3
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் - மீனாட்சிபிள்ளை:9 83/1

 TOP
 
    வண்டல் (3)
பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் - மீனாட்சிபிள்ளை:4 35/1
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் - மீனாட்சிபிள்ளை:5 47/3
வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து - மீனாட்சிபிள்ளை:6 58/1

 TOP
 
    வண்டலிடும் (1)
மறிக்கும் திரை தண் புனல் வைகை வண்டலிடும் மண் கூடை கட்டி வாரி சுமந்தோர் அம்மை துணை மணி பொன் குடத்தில் கரைத்து ஊற்றும் - மீனாட்சிபிள்ளை:9 90/1

 TOP
 
    வண்டலின் (1)
காரில் பொழி மழை நீரில் சுழி எறி கழியில் சிறு குழியில் கரையில் கரை பொரு திரையில் தலை விரி கண்டலில் வண்டலின் நெற்போரில் - மீனாட்சிபிள்ளை:3 28/1

 TOP
 
    வண்டின் (2)
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட - மீனாட்சிபிள்ளை:8 79/1
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின்
  கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என - மீனாட்சிபிள்ளை:9 83/1,2

 TOP
 
    வண்டு (8)
இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி - மீனாட்சிபிள்ளை:1 7/3
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு - மீனாட்சிபிள்ளை:5 45/1
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் - மீனாட்சிபிள்ளை:6 54/2
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப - மீனாட்சிபிள்ளை:6 60/3
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/2
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட - மீனாட்சிபிள்ளை:8 79/1
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி - மீனாட்சிபிள்ளை:10 99/3
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ - மீனாட்சிபிள்ளை:10 100/1

 TOP
 
    வண்ணம் (1)
வண்ணம் பொலியும் பண்ணை வயல் மதுரைக்கு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 59/4

 TOP
 
    வண்ணமா (1)
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:9 86/2

 TOP
 
    வண்ணரொடு (1)
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:9 86/2

 TOP
 
    வண (1)
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும் - மீனாட்சிபிள்ளை:6 59/2

 TOP
 
    வணக்கம் (1)
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2

 TOP
 
    வணக்கொடு (1)
கைவந்த கொழுநரொடும் உள்ள புணர்ச்சி கருத்தான் அகத்து ஒடுங்க கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற - மீனாட்சிபிள்ளை:4 34/2

 TOP
 
    வணங்க (1)
இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர் - மீனாட்சிபிள்ளை:9 91/3

 TOP
 
    வணங்கா (1)
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2

 TOP
 
    வணங்கி (1)
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் - மீனாட்சிபிள்ளை:6 54/3

 TOP
 
    வணங்கும் (1)
இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர் - மீனாட்சிபிள்ளை:9 91/3

 TOP
 
    வந்திலை (1)
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1

 TOP
 
    வந்து (2)
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ - மீனாட்சிபிள்ளை:4 34/3
துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தை கண்டு துணை விழியும் மனமும் நின்று - மீனாட்சிபிள்ளை:7 70/1

 TOP
 
    வம் (2)
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு - மீனாட்சிபிள்ளை:7 63/3
தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனி புதல்வனுக்கு வட்ட தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழை கரும்பு ஒன்று - மீனாட்சிபிள்ளை:7 69/3

 TOP
 
    வம்-மின் (1)
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1

 TOP
 
    வய (2)
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா - மீனாட்சிபிள்ளை:5 48/2
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி - மீனாட்சிபிள்ளை:5 48/3

 TOP
 
    வயல் (3)
வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு - மீனாட்சிபிள்ளை:3 24/3
வண்ணம் பொலியும் பண்ணை வயல் மதுரைக்கு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 59/4
அள்ளல் வயல் துயில் மதுரை துரைமகள் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே - மீனாட்சிபிள்ளை:8 82/4

 TOP
 
    வயிர (1)
ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே - மீனாட்சிபிள்ளை:10 93/1

 TOP
 
    வயிரமும் (1)
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் - மீனாட்சிபிள்ளை:8 76/3

 TOP
 
    வயிற்றை (1)
கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயை களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே - மீனாட்சிபிள்ளை:4 42/2

 TOP
 
    வயிறு (6)
கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் - மீனாட்சிபிள்ளை:1 11/1
தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி - மீனாட்சிபிள்ளை:2 14/2
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் - மீனாட்சிபிள்ளை:3 25/1
குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும் கொழி தமிழ் பனுவல் துறை படியும் மட நடை கூந்தல் அம் பிடியும் அறுகால் - மீனாட்சிபிள்ளை:6 54/1
கரைக்கும் கடாம் இரு கவுள் குடம் உடைந்து ஊற்று களிறு பெரு வயிறு தூர்ப்ப கவளம் திரட்டி கொடுப்பது எனவும் சூழ்ந்து ஒர் கலை மதி கலச அமுதுக்கு - மீனாட்சிபிள்ளை:8 73/1
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு
  கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி - மீனாட்சிபிள்ளை:10 99/2,3

 TOP
 
    வயிறெரிய (1)
பமர தரு மலர் மிலையப்படு முடி தொலைய கொடுமுடி தாழ் பைம்பொன் தட வரை திரிய கடல் வயிறெரிய படை திரியா - மீனாட்சிபிள்ளை:3 30/3

 TOP
 
    வர (1)
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4

 TOP
 
    வரதமும் (1)
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப - மீனாட்சிபிள்ளை:2 22/2

 TOP
 
    வரம்பே (1)
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில் - மீனாட்சிபிள்ளை:2 21/2

 TOP
 
    வரால் (1)
மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என - மீனாட்சிபிள்ளை:5 49/2

 TOP
 
    வரி (6)
பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்ப பசும் தேறல் ஆறு அலைக்கும் பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையா - மீனாட்சிபிள்ளை:2 17/1
தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொரு_இல் வரி சிலையில் திரள் புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்த முடி - மீனாட்சிபிள்ளை:3 28/3
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் - மீனாட்சிபிள்ளை:8 77/3
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் - மீனாட்சிபிள்ளை:9 83/1
கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்று பொன் தருவில் களி நறவு உண்ட மட பெடையோடு கலந்து முயங்கி வரி
  புள் உறை பூம் பொழில் மதுரை துரைமகள் புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே - மீனாட்சிபிள்ளை:9 92/3,4
பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் - மீனாட்சிபிள்ளை:10 100/3

 TOP
 
    வரு (2)
வரு குங்கும குன்று இரண்டு ஏந்து மலர் பூம் கொம்பே தீம் குழலின் மதுரம் கனிந்த பசுங்குதலை மழலை அரும்ப சேதாம்பல் - மீனாட்சிபிள்ளை:5 44/3
பொங்கி வரு பொழில் மதுர மதுரைநாயகி திரு பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 96/4

 TOP
 
    வருக (15)
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பு ஆட தாய் வருக என்பவர் பேதமை கண்டு ததும்பு புன்னகை ஆட - மீனாட்சிபிள்ளை:2 19/1
மடுக்கும் திரை தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 58/4
வண்ணம் பொலியும் பண்ணை வயல் மதுரைக்கு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 59/4
மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 60/4
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 61/4
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் - மீனாட்சிபிள்ளை:6 62/1
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் - மீனாட்சிபிள்ளை:6 62/1
விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் - மீனாட்சிபிள்ளை:6 62/2

குருந்தே வருக அருள் பழுத்த கொம்பே வருக திரு கடைக்கண் கொழித்த கருணை பெரு வெள்ளம் குடைவார் பிறவி பெரும் பிணிக்கு ஓர் - மீனாட்சிபிள்ளை:6 62/3
குருந்தே வருக அருள் பழுத்த கொம்பே வருக திரு கடைக்கண் கொழித்த கருணை பெரு வெள்ளம் குடைவார் பிறவி பெரும் பிணிக்கு ஓர் - மீனாட்சிபிள்ளை:6 62/3
மருந்தே வருக பசுங்குதலை மழலை கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 62/4
மருந்தே வருக பசுங்குதலை மழலை கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 62/4

 TOP
 
    வருகவே (20)
கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 53/4
கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 53/4
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 54/4
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 54/4
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணை தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 55/4
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணை தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 55/4
கடம் பட்ட சிறு கண் பெரும் கொலைய மழ இளங்களிறு ஈன்ற பிடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 56/4
கடம் பட்ட சிறு கண் பெரும் கொலைய மழ இளங்களிறு ஈன்ற பிடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 56/4
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 57/4
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 57/4
மடுக்கும் திரை தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 58/4
மடுக்கும் திரை தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 58/4
வண்ணம் பொலியும் பண்ணை வயல் மதுரைக்கு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 59/4
வண்ணம் பொலியும் பண்ணை வயல் மதுரைக்கு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 59/4
மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 60/4
மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 60/4
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 61/4
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 61/4
மருந்தே வருக பசுங்குதலை மழலை கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 62/4
மருந்தே வருக பசுங்குதலை மழலை கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 62/4

 TOP
 
    வருடவும் (1)
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும்
  செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை என கொப்பளிக்கும் சீறடிகள் கன்றி சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன் - மீனாட்சிபிள்ளை:7 69/1,2

 TOP
 
    வருணன் (1)
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா - மீனாட்சிபிள்ளை:4 39/2

 TOP
 
    வரும் (4)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு - மீனாட்சிபிள்ளை:7 63/3

 TOP
 
    வரை (2)
மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய - மீனாட்சிபிள்ளை:1 3/7
பமர தரு மலர் மிலையப்படு முடி தொலைய கொடுமுடி தாழ் பைம்பொன் தட வரை திரிய கடல் வயிறெரிய படை திரியா - மீனாட்சிபிள்ளை:3 30/3

 TOP
 
    வரையும் (1)
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் - மீனாட்சிபிள்ளை:2 17/2

 TOP
 
    வல்சி (1)
வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு - மீனாட்சிபிள்ளை:3 24/3

 TOP
 
    வலசாரி (1)
தமரான நின் துணை சேடியரில் ஒருசிலர் தட கையின் எடுத்து ஆடும் நின் தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா - மீனாட்சிபிள்ளை:8 77/1

 TOP
 
    வலம் (3)
தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 48/4
செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 49/4
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 50/4

 TOP
 
    வலம்புரி (1)
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2

 TOP
 
    வலயம் (1)
மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 2/1

 TOP
 
    வலவர் (1)
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/2

 TOP
 
    வவ்வி (1)
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு - மீனாட்சிபிள்ளை:7 65/1

 TOP
 
    வவ்விய (1)
செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் - மீனாட்சிபிள்ளை:8 81/2

 TOP
 
    வழங்க (2)
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு - மீனாட்சிபிள்ளை:7 72/3
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க
  பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் - மீனாட்சிபிள்ளை:10 100/2,3

 TOP
 
    வழங்கு (1)
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா - மீனாட்சிபிள்ளை:4 39/2

 TOP
 
    வழி (5)
பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப - மீனாட்சிபிள்ளை:2 16/2
இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு இடுகு இடை ஆட இயற்கை மணம் பொதி இதழ் வழி தேறலினோடு - மீனாட்சிபிள்ளை:2 19/3
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் - மீனாட்சிபிள்ளை:5 51/2
புதை இருள் கிழிதர எழுதரு பரிதி வளைத்த கடல் புவியில் பொது அற அடிமைசெய்திடு வழி அடியர் பொருட்டு அலர் வட்டணையில் - மீனாட்சிபிள்ளை:5 52/1
வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து - மீனாட்சிபிள்ளை:6 58/1

 TOP
 
    வழிந்து (3)
பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து
  இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி - மீனாட்சிபிள்ளை:1 7/2,3
ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர் - மீனாட்சிபிள்ளை:3 26/3
அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:10 93/2

 TOP
 
    வழிபடு (1)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை - மீனாட்சிபிள்ளை:1 3/6

 TOP
 
    வழிமுதல் (1)
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/2

 TOP
 
    வழியும் (2)
வடம் பட்ட நின் துணை கொங்கை குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய் வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்து - மீனாட்சிபிள்ளை:6 56/1
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு - மீனாட்சிபிள்ளை:10 99/2

 TOP
 
    வழுக்கி (1)
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ - மீனாட்சிபிள்ளை:3 26/2

 TOP
 
    வழுதியுடைய (1)
வழுதியுடைய கண்மணியொடு உலவு பெண்மணியை அணி திகழ் செல்வியை தே கமழ் மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 3/8

 TOP
 
    வள் (1)
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு - மீனாட்சிபிள்ளை:10 99/2

 TOP
 
    வள்ளன்மை (1)
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 9/4

 TOP
 
    வள (1)
மடுக்கும் திரை தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே - மீனாட்சிபிள்ளை:6 58/4

 TOP
 
    வளர் (24)
மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 2/1
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 8/4
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/2
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் - மீனாட்சிபிள்ளை:2 17/2
அருள் விழியொடும் வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை - மீனாட்சிபிள்ளை:2 20/4
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில் - மீனாட்சிபிள்ளை:2 21/2
கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் - மீனாட்சிபிள்ளை:2 21/3
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் - மீனாட்சிபிள்ளை:4 37/2
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் - மீனாட்சிபிள்ளை:4 39/3
மத்த மதமா கவுட்டு ஒரு நால் மருப்பு பொருப்பு மிசை பொலிந்த வானத்து அரசு கோயில் வளர் சிந்தாமணியும் வடபுலத்தார் - மீனாட்சிபிள்ளை:5 46/1
பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற - மீனாட்சிபிள்ளை:5 46/3
கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் - மீனாட்சிபிள்ளை:5 49/3
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/4
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் - மீனாட்சிபிள்ளை:6 53/2
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே - மீனாட்சிபிள்ளை:6 57/4
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் - மீனாட்சிபிள்ளை:6 61/2
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/2
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு - மீனாட்சிபிள்ளை:7 66/2
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் - மீனாட்சிபிள்ளை:7 68/3
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு - மீனாட்சிபிள்ளை:7 71/3
வளர் ஒளி விம்மிய அம்மனை செல்வது வானவில் ஒத்திடவும் மனன் நெக்கு உருக பரமானந்தம் மடுத்த திருத்தொண்டர்க்கு - மீனாட்சிபிள்ளை:8 80/3
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் - மீனாட்சிபிள்ளை:8 82/2
அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:10 93/2

 TOP
 
    வளர்த்த (4)
மதுரை பதி தழைய தழையும் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 31/4
மகர துவசம் உயர்த்த பொலன் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 32/4
கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயை களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே - மீனாட்சிபிள்ளை:4 42/2
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் - மீனாட்சிபிள்ளை:8 82/2

 TOP
 
    வளர்த்தவள் (3)
கூனல் சிலையின் நெடும் கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 38/4
குமரி துறை என ஆடும் மட பிடி கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 39/4
குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 40/4

 TOP
 
    வளர்த்தும் (1)
காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும் - மீனாட்சிபிள்ளை:4 35/2

 TOP
 
    வளர்ந்த (5)
தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 33/4
தைவந்த நாணினொடு தவழ்தந்த செம் கை கொடு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 34/4
தாமரை பழுத்த கை தளிர் ஒளி துளும்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 35/4
தண் அளி கமலம் சிவப்பூற அம்மை ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 36/4
தாலாட்டி ஆட்டு கை தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 37/4

 TOP
 
    வளர்ந்திட (3)
தாரில் பொருதிடும் மதுரை துரைமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 28/4
தானை கடலொடு பொலியும் திருமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 29/4
சமரில் பொரு திருமகனை தரு மயில் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 30/4

 TOP
 
    வளர்ப்பது (1)
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் - மீனாட்சிபிள்ளை:7 67/3

 TOP
 
    வளர்ப்பார்க்கு (1)
உணர்வு நீர் பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளி பூத்து அருள் பழுத்த மலர் கற்பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலை - மீனாட்சிபிள்ளை:5 43/2

 TOP
 
    வளர்வது (1)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன - மீனாட்சிபிள்ளை:1 3/5

 TOP
 
    வளர (2)
கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயை களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே - மீனாட்சிபிள்ளை:4 42/2
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என - மீனாட்சிபிள்ளை:5 46/2

 TOP
 
    வளரும் (5)
திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை - மீனாட்சிபிள்ளை:2 21/4
செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை - மீனாட்சிபிள்ளை:2 22/4
மழை பொழி இமய மயில் பெடை கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 41/4
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 42/4
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என - மீனாட்சிபிள்ளை:5 46/2

 TOP
 
    வளாக (1)
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி - மீனாட்சிபிள்ளை:5 48/3

 TOP
 
    வளை (4)
பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/3
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 10/1
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் - மீனாட்சிபிள்ளை:9 83/1
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய - மீனாட்சிபிள்ளை:9 84/1

 TOP
 
    வளைத்த (1)
புதை இருள் கிழிதர எழுதரு பரிதி வளைத்த கடல் புவியில் பொது அற அடிமைசெய்திடு வழி அடியர் பொருட்டு அலர் வட்டணையில் - மீனாட்சிபிள்ளை:5 52/1

 TOP
 
    வளைப்பவள் (1)
தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா - மீனாட்சிபிள்ளை:3 32/1

 TOP
 
    வளையும் (1)
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ - மீனாட்சிபிள்ளை:5 52/3

 TOP
 
    வற்ற (1)
ஒழுகிய கருணை உவட்டெழவைத்த அருள் பார்வைக்கு உளம் நெகிழ் அடியர் பவ கடல் வற்ற அலைத்து ஓடி - மீனாட்சிபிள்ளை:4 41/1

 TOP
 
    வனத்து (1)
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1

 TOP
 
    வனப்புக்கு (1)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8

 TOP
 
    வனம் (1)
பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/3

 TOP
 
    வனிதையை (1)
ததை மலர் பொதுளிய களி அளி குமிறு குழல் திருவை தவள சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மட பிடியே - மீனாட்சிபிள்ளை:5 52/2

 TOP
 
    வனைந்திடு (1)
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப - மீனாட்சிபிள்ளை:9 86/2

 TOP