<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

ம - முதல் சொற்கள்
மகரம் 1
மகள் 2
மகளே 1
மகளை 1
மகிழ் 1
மகிழ்ந்து 1
மகுட 1
மங்கல 1
மங்கையர் 1
மட 5
மடந்தைமார் 1
மடம் 1
மடல் 2
மடலேறிட 1
மடவார் 2
மடவார்கள் 1
மடிய 1
மண் 3
மண்ணும் 1
மணக்கும் 1
மணம்பேசி 1
மணலில் 1
மணாளன் 1
மணி 9
மணியொடும் 1
மத 8
மதங்கிக்கு 1
மதத்த 2
மதன் 1
மதனனது 1
மதி 2
மதியம் 1
மதியில் 1
மதியிலி 1
மதியிலேனே 1
மதியினோடே 1
மதியே 2
மதியை 1
மதில் 2
மதில்கள் 1
மது 3
மதுரை-கொலோ 1
மம்மர் 1
மயக்குவித்தான் 1
மயில் 6
மயில்_அன்னாள் 1
மயிலாபுரியில் 1
மயிலுக்கே 1
மயிலே 1
மயிலை 6
மயிலை_அன்னாள் 1
மரகதத்தின் 1
மரபும் 1
மராமரம் 1
மரு 1
மருங்கில் 1
மருங்கு 1
மருங்குல் 2
மருந்தோ 1
மருப்பின் 1
மருப்பு 1
மருவா 1
மருவும் 1
மருளாமே 1
மரை 1
மல்கு 1
மல்லல் 1
மல்லை 11
மல்லையர் 1
மல்லையின் 1
மலர் 15
மலர்கள் 1
மலராள் 2
மலரின் 1
மலி 1
மலை 1
மலைத்தல் 1
மலைந்தோர்க்கே 1
மழ 1
மழை 7
மற்று 3
மற்றும் 1
மற்றை 1
மற 1
மறந்தாலும் 2
மறந்து 1
மறந்தும் 1
மறமும் 1
மறவாத 1
மறவே 1
மறவோர்களிடத்தே 1
மறி 2
மறிந்து 1
மறுகில் 3
மறுகே 1
மறைத்த 1
மறையும் 1
மறைவாணர் 1
மன் 1
மன்னர் 15
மன்னர்க்கு 2
மன்னவ 1
மன்னவர் 2
மன்னவன் 1
மன்னன் 3
மன்னா 1
மன்னீர் 1
மன்னும் 1
மனக்கு 1
மனத்துள் 1
மனம் 3
மனமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மகரம் (1)
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை - நந்திக்-:2 38/2

 TOP
 
    மகள் (2)
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4
மீண்டான் நந்திக்கு என் மகள் தோற்கும் வெண் சங்கே - நந்திக்-:2 71/4

 TOP
 
    மகளே (1)
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4

 TOP
 
    மகளை (1)
ஓராதே என் மகளை சொன்னீரே தொண்டை மேல் - நந்திக்-:2 62/1

 TOP
 
    மகிழ் (1)
வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ்
  தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் - நந்திக்-:2 48/2,3

 TOP
 
    மகிழ்ந்து (1)
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம் - நந்திக்-:2 101/2

 TOP
 
    மகுட (1)
மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன - நந்திக்-:2 96/2

 TOP
 
    மங்கல (1)
விடையுடன் மங்கல விசயமும் நடப்ப - நந்திக்-:2 1/42

 TOP
 
    மங்கையர் (1)
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் - நந்திக்-:2 100/1

 TOP
 
    மட (5)
பொருப்பு_அரையன் மட பாவை புணர் முலையின் முகடு தைத்த - நந்திக்-:1 2/1
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே - நந்திக்-:2 10/4
ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/1
புரி குழல் மட மானை போதரவிட்டாரால் - நந்திக்-:2 69/2
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/4

 TOP
 
    மடந்தைமார் (1)
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் - நந்திக்-:2 22/2

 TOP
 
    மடம் (1)
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர் - நந்திக்-:2 24/1

 TOP
 
    மடல் (2)
மீட்கலாம் மடல் கையில் விரவுமாகிலே - நந்திக்-:2 18/4
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல் - நந்திக்-:2 73/2

 TOP
 
    மடலேறிட (1)
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான் - நந்திக்-:2 55/2

 TOP
 
    மடவார் (2)
கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே - நந்திக்-:2 6/3
நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் - நந்திக்-:2 41/1

 TOP
 
    மடவார்கள் (1)
வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன் - நந்திக்-:2 72/2

 TOP
 
    மடிய (1)
சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி - நந்திக்-:2 38/3

 TOP
 
    மண் (3)
மண் தலமாய் அம்பரமாய் மாருதமாய் வார் புனலாய் - நந்திக்-:2 1/1
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே - நந்திக்-:2 11/4
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர - நந்திக்-:2 107/1

 TOP
 
    மண்ணும் (1)
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே - நந்திக்-:2 113/4

 TOP
 
    மணக்கும் (1)
மணக்கும் பெரும் புகழான் மானபரன் நந்தி - நந்திக்-:2 108/3

 TOP
 
    மணம்பேசி (1)
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா - நந்திக்-:2 78/2

 TOP
 
    மணலில் (1)
குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில்
  பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/2,3

 TOP
 
    மணாளன் (1)
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி - நந்திக்-:2 28/2

 TOP
 
    மணி (9)
குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய - நந்திக்-:2 1/7
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4
மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன - நந்திக்-:2 7/1
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் - நந்திக்-:2 14/1
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை - நந்திக்-:2 78/3
கொண்டல் உறும் பொழில் வண்டினம் ஆம் மணி
  வண்டல் இடும் கடல் மல்லை காவலனே - நந்திக்-:2 84/1,2

 TOP
 
    மணியொடும் (1)
மெல்கு தொண்டையும் தந்து அருள்கிலன் விடை மணியொடும் விடியாத - நந்திக்-:2 59/3

 TOP
 
    மத (8)
பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு - நந்திக்-:1 2/3
மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன - நந்திக்-:2 7/1
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர் - நந்திக்-:2 24/1
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே - நந்திக்-:2 27/4
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் - நந்திக்-:2 37/1
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே - நந்திக்-:2 54/4
மா மத யானை பண்ணின் - நந்திக்-:2 61/14
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் - நந்திக்-:2 86/3

 TOP
 
    மதங்கிக்கு (1)
நகையும் வாண்மையும் பாடி நன்று ஆடும் மதங்கிக்கு
  தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு - நந்திக்-:2 70/2,3

 TOP
 
    மதத்த (2)
சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப - நந்திக்-:2 1/21
ஏர் மதத்த கரி உரிவை ஏகாசம் இட்டனையே - நந்திக்-:2 1/22

 TOP
 
    மதன் (1)
காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான் - நந்திக்-:2 77/1

 TOP
 
    மதனனது (1)
செழு மலர் துதைதரு தெரி கணை மதனனது
  எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை - நந்திக்-:2 1/13,14

 TOP
 
    மதி (2)
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/2
வார் ஊரும் மென் முலை வார்த்தை கண்டு ஊரும் மதி முகத்தில் - நந்திக்-:2 110/1

 TOP
 
    மதியம் (1)
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் - நந்திக்-:2 45/1

 TOP
 
    மதியில் (1)
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை - நந்திக்-:2 109/5

 TOP
 
    மதியிலி (1)
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - நந்திக்-:2 17/4

 TOP
 
    மதியிலேனே (1)
மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே - நந்திக்-:2 79/4

 TOP
 
    மதியினோடே (1)
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று - நந்திக்-:2 80/2

 TOP
 
    மதியே (2)
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே - நந்திக்-:2 44/4
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே - நந்திக்-:2 55/4

 TOP
 
    மதியை (1)
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1

 TOP
 
    மதில் (2)
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் - நந்திக்-:2 22/3
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1

 TOP
 
    மதில்கள் (1)
பொரு மதில்கள் அவை மூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் - நந்திக்-:2 1/6

 TOP
 
    மது (3)
தோள் குலாம் மது மலர் தொண்டை வாய்ச்சியர் - நந்திக்-:2 18/2
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே - நந்திக்-:2 97/2

 TOP
 
    மதுரை-கொலோ (1)
மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து - நந்திக்-:2 14/3

 TOP
 
    மம்மர் (1)
வாள் குலாம் கண்ணினால் வளைத்த மம்மர் நோய் - நந்திக்-:2 18/3

 TOP
 
    மயக்குவித்தான் (1)
மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே - நந்திக்-:2 63/4

 TOP
 
    மயில் (6)
மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் - நந்திக்-:2 25/1
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல் - நந்திக்-:2 57/3
வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் - நந்திக்-:2 58/2
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/2
குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும் - நந்திக்-:2 83/3
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் - நந்திக்-:2 100/1

 TOP
 
    மயில்_அன்னாள் (1)
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள்
  விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் - நந்திக்-:2 75/2,3

 TOP
 
    மயிலாபுரியில் (1)
நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில்
  உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/3,4

 TOP
 
    மயிலுக்கே (1)
மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் - நந்திக்-:2 25/1

 TOP
 
    மயிலே (1)
மின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே - நந்திக்-:2 24/4

 TOP
 
    மயிலை (6)
மல்லை வேந்தன் மயிலை காவலன் - நந்திக்-:2 1/39
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர் - நந்திக்-:2 24/1
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/3
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே - நந்திக்-:2 51/3
மயிலை_அன்னாள் தனக்கு - நந்திக்-:2 52/4
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் - நந்திக்-:2 55/3

 TOP
 
    மயிலை_அன்னாள் (1)
மயிலை_அன்னாள் தனக்கு - நந்திக்-:2 52/4

 TOP
 
    மரகதத்தின் (1)
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ - நந்திக்-:2 1/3

 TOP
 
    மரபும் (1)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1

 TOP
 
    மராமரம் (1)
பண்டை மராமரம் எய்த பல்லவனே - நந்திக்-:2 84/3

 TOP
 
    மரு (1)
மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன - நந்திக்-:2 96/2

 TOP
 
    மருங்கில் (1)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2

 TOP
 
    மருங்கு (1)
உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில் - நந்திக்-:2 52/1

 TOP
 
    மருங்குல் (2)
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/2
செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு - நந்திக்-:2 47/1

 TOP
 
    மருந்தோ (1)
இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ அன்றோ - நந்திக்-:2 115/1

 TOP
 
    மருப்பின் (1)
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே - நந்திக்-:2 6/2

 TOP
 
    மருப்பு (1)
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் - நந்திக்-:2 14/2

 TOP
 
    மருவா (1)
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே - நந்திக்-:2 61/13

 TOP
 
    மருவும் (1)
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று - நந்திக்-:2 54/1

 TOP
 
    மருளாமே (1)
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே - நந்திக்-:2 86/4

 TOP
 
    மரை (1)
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/3

 TOP
 
    மல்கு (1)
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் - நந்திக்-:2 59/2

 TOP
 
    மல்லல் (1)
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் - நந்திக்-:2 59/2

 TOP
 
    மல்லை (11)
மல்லை வேந்தன் மயிலை காவலன் - நந்திக்-:2 1/39
முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு - நந்திக்-:2 3/3
ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் - நந்திக்-:2 9/3
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி - நந்திக்-:2 25/3
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே - நந்திக்-:2 34/4
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி - நந்திக்-:2 40/2
போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே - நந்திக்-:2 54/3
வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன் - நந்திக்-:2 72/2
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல் - நந்திக்-:2 73/2
வண்டல் இடும் கடல் மல்லை காவலனே - நந்திக்-:2 84/2
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே - நந்திக்-:2 89/4

 TOP
 
    மல்லையர் (1)
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானை பரு சுவடு - நந்திக்-:2 46/2

 TOP
 
    மல்லையின் (1)
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/2

 TOP
 
    மலர் (15)
செம்மை முளரி மலர் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே - நந்திக்-:1 1/4
திரு பெருக அருளுக நின் செழு மலர் சேவடி தொழவே - நந்திக்-:1 2/4
அரியின் மலர் பதம் - நந்திக்-:1 3/2
செழு மலர் துதைதரு தெரி கணை மதனனது - நந்திக்-:2 1/13
விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன - நந்திக்-:2 7/2
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே - நந்திக்-:2 7/4
கயங்களில் கடி மலர் துழாவி காமுகர் - நந்திக்-:2 8/3
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - நந்திக்-:2 17/4
தோள் குலாம் மது மலர் தொண்டை வாய்ச்சியர் - நந்திக்-:2 18/2
ஆடக பூண் மின் ஆட ஆடாமோ ஊசல் அம் மென் மலர் குழல் சரிய ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/2
மொழி ஆர் தொண்டை பல் மலர் முற்றும் தெரு வந்து - நந்திக்-:2 43/1
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1
வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர் காவகத்து - நந்திக்-:2 63/2
பாவையர் பரிந்து தாங்கும் பனி மலர் செறிந்த செந்தில் - நந்திக்-:2 79/1

 TOP
 
    மலர்கள் (1)
இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே - நந்திக்-:2 58/4

 TOP
 
    மலராள் (2)
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் - நந்திக்-:2 109/3
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி - நந்திக்-:2 109/7

 TOP
 
    மலரின் (1)
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே - நந்திக்-:2 97/2

 TOP
 
    மலி (1)
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல் - நந்திக்-:2 73/2

 TOP
 
    மலை (1)
மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி - நந்திக்-:2 98/3

 TOP
 
    மலைத்தல் (1)
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் - நந்திக்-:2 34/3

 TOP
 
    மலைந்தோர்க்கே (1)
உதிரம் மன்னும் நின் எதிர் மலைந்தோர்க்கே - நந்திக்-:2 61/15

 TOP
 
    மழ (1)
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் - நந்திக்-:2 53/1

 TOP
 
    மழை (7)
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4
மழை தவழ் கொடி போல - நந்திக்-:2 83/2
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/3
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் - நந்திக்-:2 100/1
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர - நந்திக்-:2 107/1
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
    மற்று (3)
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே - நந்திக்-:2 10/4
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற - நந்திக்-:2 27/2
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் - நந்திக்-:2 112/2

 TOP
 
    மற்றும் (1)
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே - நந்திக்-:2 45/4

 TOP
 
    மற்றை (1)
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1

 TOP
 
    மற (1)
மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன - நந்திக்-:2 7/1

 TOP
 
    மறந்தாலும் (2)
ஊசல் மறந்தாலும் ஒண் கழல் அம்மானை - நந்திக்-:2 30/1
வீசல் மறந்தாலும் மெல்லியல் என் பேதை - நந்திக்-:2 30/2

 TOP
 
    மறந்து (1)
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் - நந்திக்-:2 101/4

 TOP
 
    மறந்தும் (1)
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் - நந்திக்-:2 45/1

 TOP
 
    மறமும் (1)
அறமும் நீ மறமும் நீ - நந்திக்-:2 1/36

 TOP
 
    மறவாத (1)
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் - நந்திக்-:2 97/1

 TOP
 
    மறவே (1)
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4

 TOP
 
    மறவோர்களிடத்தே (1)
பண்ணும் புகழ் எட்டு திசை ஏகம்பலவாணா பாப திறலோ நந்தி-தன் மறவோர்களிடத்தே
  பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே - நந்திக்-:2 113/3,4

 TOP
 
    மறி (2)
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை - நந்திக்-:2 109/5

 TOP
 
    மறிந்து (1)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2

 TOP
 
    மறுகில் (3)
கோ மறுகில் சீறி குருக்கோட்டை வென்று ஆடும் - நந்திக்-:2 2/3
பூ மறுகில் போகா பொழுது - நந்திக்-:2 2/4
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில்
  பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் - நந்திக்-:2 15/2,3

 TOP
 
    மறுகே (1)
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே
  அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே - நந்திக்-:2 6/1,2

 TOP
 
    மறைத்த (1)
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே - நந்திக்-:2 11/4

 TOP
 
    மறையும் (1)
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக - நந்திக்-:2 1/10

 TOP
 
    மறைவாணர் (1)
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர் - நந்திக்-:2 15/1

 TOP
 
    மன் (1)
பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே - நந்திக்-:2 37/4

 TOP
 
    மன்னர் (15)
எனதே கலை வளையும் என்னதே மன்னர்
  சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம் - நந்திக்-:2 2/1,2
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே - நந்திக்-:2 6/1
விரவாத மன்னர் எலாம் விண் ஏற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக்கு - நந்திக்-:2 19/1
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர்
  எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி - நந்திக்-:2 25/2,3
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர்
  போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி பூதலத்து வடிம்பு அலம்ப பூண்ட வில்லோன் - நந்திக்-:2 35/2,3
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை - நந்திக்-:2 38/2
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் - நந்திக்-:2 42/3
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர்
  சின கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி - நந்திக்-:2 53/2,3
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான் - நந்திக்-:2 55/2
கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே - நந்திக்-:2 57/4
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே - நந்திக்-:2 61/13
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா - நந்திக்-:2 78/2
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே - நந்திக்-:2 86/4
மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில் - நந்திக்-:2 87/3
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின் - நந்திக்-:2 90/2

 TOP
 
    மன்னர்க்கு (2)
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் - நந்திக்-:2 39/1
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே - நந்திக்-:2 61/8

 TOP
 
    மன்னவ (1)
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட - நந்திக்-:2 37/3

 TOP
 
    மன்னவர் (2)
நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை - நந்திக்-:2 22/1
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் - நந்திக்-:2 37/2

 TOP
 
    மன்னவன் (1)
போன்ற மன்னவன் நந்தி-தன் பூதரத்து - நந்திக்-:2 36/3

 TOP
 
    மன்னன் (3)
புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன்
  வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் - நந்திக்-:2 58/1,2
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு - நந்திக்-:2 65/1
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் - நந்திக்-:2 114/4

 TOP
 
    மன்னா (1)
புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா
  சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே - நந்திக்-:2 49/3,4

 TOP
 
    மன்னீர் (1)
படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே - நந்திக்-:2 12/4

 TOP
 
    மன்னும் (1)
உதிரம் மன்னும் நின் எதிர் மலைந்தோர்க்கே - நந்திக்-:2 61/15

 TOP
 
    மனக்கு (1)
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4

 TOP
 
    மனத்துள் (1)
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் - நந்திக்-:2 34/3

 TOP
 
    மனம் (3)
மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன - நந்திக்-:2 7/1
விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன - நந்திக்-:2 7/2
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே - நந்திக்-:2 61/13

 TOP
 
    மனமே (1)
கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே
  வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/3,4

 TOP