<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

ஒ - முதல் சொற்கள்
ஒடி 1
ஒடிதல் 1
ஒடுங்கா 1
ஒண் 5
ஒத்தது 1
ஒத்ததே 1
ஒதுங்கி 1
ஒரு 12
ஒருவர் 3
ஒருவர்க்கு 1
ஒலிப்ப 1
ஒவ்வாது 1
ஒழி 1
ஒழிகின்றது 1
ஒழித்த 1
ஒழிய 1
ஒழியா 1
ஒளி 2
ஒளிய 4
ஒளியன 1
ஒளிர் 1
ஒற்கம் 1
ஒற்றுவள் 1
ஒன்று 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
  ஒடி (1)
உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி
 தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா - நந்திக்-:2 74/1,2

 TOP
 
  ஒடிதல் (1)
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ - நந்திக்-:2 78/1

 TOP
 
  ஒடுங்கா (1)
மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ - நந்திக்-:2 70/4

 TOP
 
  ஒண் (5)
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு - நந்திக்-:2 1/2
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர் - நந்திக்-:2 15/1
ஊசல் மறந்தாலும் ஒண் கழல் அம்மானை - நந்திக்-:2 30/1
தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் - நந்திக்-:2 36/2
உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி - நந்திக்-:2 74/1

 TOP
 
  ஒத்தது (1)
கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே - நந்திக்-:2 13/4

 TOP
 
  ஒத்ததே (1)
ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே - நந்திக்-:2 81/4

 TOP
 
  ஒதுங்கி (1)
குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை - நந்திக்-:2 4/1

 TOP
 
  ஒரு (12)
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை - நந்திக்-:2 1/16
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை - நந்திக்-:2 1/16
ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன் - நந்திக்-:2 1/38
ஒரு பெரும் தனி குடை நீழல் - நந்திக்-:2 1/43
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன் - நந்திக்-:2 26/2
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே - நந்திக்-:2 41/4
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே - நந்திக்-:2 43/4
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை - நந்திக்-:2 44/1
ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி - நந்திக்-:2 57/2
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/3
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே - நந்திக்-:2 113/4
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் - நந்திக்-:2 114/2

 TOP
 
  ஒருவர் (3)
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் - நந்திக்-:2 114/3

 TOP
 
  ஒருவர்க்கு (1)
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே - நந்திக்-:2 49/4

 TOP
 
  ஒலிப்ப (1)
வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன் - நந்திக்-:2 72/2

 TOP
 
  ஒவ்வாது (1)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1

 TOP
 
  ஒழி (1)
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் - நந்திக்-:2 25/2

 TOP
 
  ஒழிகின்றது (1)
துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ - நந்திக்-:2 11/2

 TOP
 
  ஒழித்த (1)
சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ - நந்திக்-:2 34/2

 TOP
 
  ஒழிய (1)
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1

 TOP
 
  ஒழியா (1)
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ - நந்திக்-:2 43/3

 TOP
 
  ஒளி (2)
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு - நந்திக்-:2 1/2
விளங்கு ஒளி ஆனனன் இப்போது - நந்திக்-:2 23/10

 TOP
 
  ஒளிய (4)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை - நந்திக்-:2 1/9
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் - நந்திக்-:2 14/2
புலம் கொள் ஒளிய நல்லோர்க்கும் புகல்கின்றோர்க்கும் பொன் ஆரம் - நந்திக்-:2 32/2
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய
 தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் - நந்திக்-:2 52/2,3

 TOP
 
  ஒளியன (1)
திறல் உடையன தொடை புகழ்வன திகழ் ஒளியன புகழ் ததைவன - நந்திக்-:2 7/3

 TOP
 
  ஒளிர் (1)
பூண் ஆகத்து ஒளிர் பொலனாக செய்த புது மென் தொண்டை அது அருளாயே - நந்திக்-:2 41/2

 TOP
 
  ஒற்கம் (1)
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4

 TOP
 
  ஒற்றுவள் (1)
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே - நந்திக்-:2 84/4

 TOP
 
  ஒன்று (4)
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று
 இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/1,2
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ - நந்திக்-:2 78/1
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா - நந்திக்-:2 78/2

 TOP