<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

ப - முதல் சொற்கள்
பகர் 1
பகர்வாய் 1
பகர்வாயே 1
பகரம் 1
பகரா 1
பகை 2
பகைஞர் 1
பகையாக்கும் 1
பங்கய 1
பங்கில் 1
பட்ட 1
பட்டவோ 1
பட்டு 2
பட 1
படர் 2
படர்ந்த 1
படி 2
படிவம் 1
படுதிர்-கொல்லோ 1
படும் 1
படை 11
படைத்த 1
படையின் 1
படைவீட்டுக்கு 1
பண்டு 3
பண்டை 1
பண்ணின் 1
பண்ணும் 1
பணி 1
பணிகிலர் 1
பணிலமும் 1
பணை 1
பதம் 2
பதர் 1
பதி 3
பதி-தொறு 1
பதியின் 1
பதியே 2
பது 1
பந்தி 1
பந்தும் 1
பயந்த 1
பயம்கொள 1
பயில் 2
பயின்று 1
பர 2
பரடு 1
பரவுதும் 1
பரி 3
பரிசு 2
பரிந்து 1
பரியும் 1
பரிவும் 1
பரு 4
பருவ 2
பருவம் 1
பல் 4
பல்லவ 2
பல்லவர் 8
பல்லவர்க்கு 1
பல்லவன் 2
பல்லவனே 1
பல 1
பலர் 2
பலர்க்கு 1
பவம் 1
பவள 2
பழம் 1
பழிகாரர் 1
பழுதாக 1
பழுது 2
பழுப்பித்து 1
பழையாறு 1
பற்றாமல் 1
பற்றிய 3
பறித்து 1
பன் 1
பனி 4
பனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  பகர் (1)
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று - நந்திக்-:2 54/1

 TOP
 
  பகர்வாய் (1)
பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே - நந்திக்-:2 3/4

 TOP
 
  பகர்வாயே (1)
பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே - நந்திக்-:2 37/4

 TOP
 
  பகரம் (1)
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் - நந்திக்-:2 38/1

 TOP
 
  பகரா (1)
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1

 TOP
 
  பகை (2)
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/4
பகை இன்றி பார் காக்கும் பல்லவர் கோன் செங்கோலின் - நந்திக்-:2 70/1

 TOP
 
  பகைஞர் (1)
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4

 TOP
 
  பகையாக்கும் (1)
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
  பங்கய (1)
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை - நந்திக்-:2 96/3

 TOP
 
  பங்கில் (1)
பங்கில் வைப்பார்க்கு இல்லை பவம் - நந்திக்-:1 4/4

 TOP
 
  பட்ட (1)
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில் - நந்திக்-:2 75/1

 TOP
 
  பட்டவோ (1)
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை - நந்திக்-:2 96/3

 TOP
 
  பட்டு (2)
ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/1
முலைகள் தாம் பட்டு அசையா முன் - நந்திக்-:2 98/4

 TOP
 
  பட (1)
பட குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறிய - நந்திக்-:2 65/3

 TOP
 
  படர் (2)
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் - நந்திக்-:2 11/3
குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் - நந்திக்-:2 44/2

 TOP
 
  படர்ந்த (1)
நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த
 மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி - நந்திக்-:2 98/2,3

 TOP
 
  படி (2)
காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் - நந்திக்-:2 81/2
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம் - நந்திக்-:2 93/3

 TOP
 
  படிவம் (1)
பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளி படிவம் எலாம் - நந்திக்-:2 1/19

 TOP
 
  படுதிர்-கொல்லோ (1)
படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே - நந்திக்-:2 12/4

 TOP
 
  படும் (1)
சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே - நந்திக்-:2 16/4

 TOP
 
  படை (11)
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் - நந்திக்-:2 1/11
கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே - நந்திக்-:2 6/3
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு - நந்திக்-:2 10/3
படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே - நந்திக்-:2 12/4
ஆள் குலாம் கடல் படை அவனி நாரணன் - நந்திக்-:2 18/1
வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே - நந்திக்-:2 26/4
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் - நந்திக்-:2 29/3
படை ஆறு சாய பழையாறு வென்றான் - நந்திக்-:2 31/3
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/3
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே - நந்திக்-:2 54/4
மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில் - நந்திக்-:2 87/3

 TOP
 
  படைத்த (1)
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4

 TOP
 
  படையின் (1)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1

 TOP
 
  படைவீட்டுக்கு (1)
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம் - நந்திக்-:2 93/3

 TOP
 
  பண்டு (3)
இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை - நந்திக்-:2 12/2
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் - நந்திக்-:2 38/1
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
  பண்டை (1)
பண்டை மராமரம் எய்த பல்லவனே - நந்திக்-:2 84/3

 TOP
 
  பண்ணின் (1)
மா மத யானை பண்ணின்
 உதிரம் மன்னும் நின் எதிர் மலைந்தோர்க்கே - நந்திக்-:2 61/14,15

 TOP
 
  பண்ணும் (1)
பண்ணும் புகழ் எட்டு திசை ஏகம்பலவாணா பாப திறலோ நந்தி-தன் மறவோர்களிடத்தே - நந்திக்-:2 113/3

 TOP
 
  பணி (1)
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே - நந்திக்-:2 38/4

 TOP
 
  பணிகிலர் (1)
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - நந்திக்-:2 17/4

 TOP
 
  பணிலமும் (1)
வலம் வரு திகிரியும் இடம் வரு பணிலமும்
 மழை தவழ் கொடி போல - நந்திக்-:2 83/1,2

 TOP
 
  பணை (1)
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1

 TOP
 
  பதம் (2)
அரியின் மலர் பதம்
 உருகி நினைபவர் - நந்திக்-:1 3/2,3
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை - நந்திக்-:2 78/3

 TOP
 
  பதர் (1)
பதர் ஆக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே - நந்திக்-:2 105/4

 TOP
 
  பதி (3)
செருநர் சேரும் பதி சிவக்கும்மே - நந்திக்-:2 61/6
ஈகின்றது புனமும் தினை யாமும் பதி புகும் நாள் - நந்திக்-:2 67/1
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
  பதி-தொறு (1)
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1

 TOP
 
  பதியின் (1)
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை - நந்திக்-:2 45/3

 TOP
 
  பதியே (2)
சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே - நந்திக்-:2 16/4
தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே - நந்திக்-:2 95/4

 TOP
 
  பது (1)
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை - நந்திக்-:2 1/16

 TOP
 
  பந்தி (1)
அடி விளக்கும் துகில் ஆடை விளக்கும் அரசர் பந்தி
 பிடி விளக்கும் எங்கள் ஊரார் விளக்கும் பெரும் புகழால் - நந்திக்-:2 93/1,2

 TOP
 
  பந்தும் (1)
பூவையும் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே - நந்திக்-:2 79/3

 TOP
 
  பயந்த (1)
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் - நந்திக்-:2 53/1

 TOP
 
  பயம்கொள (1)
பயம்கொள புகுந்தது பருவ வாடையே - நந்திக்-:2 8/4

 TOP
 
  பயில் (2)
காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா - நந்திக்-:2 57/1
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டி - நந்திக்-:2 69/1

 TOP
 
  பயின்று (1)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1

 TOP
 
  பர (2)
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே - நந்திக்-:2 7/4
பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே - நந்திக்-:2 19/4

 TOP
 
  பரடு (1)
பரடு திறப்ப தன்னால் பல் கடை - நந்திக்-:2 23/6

 TOP
 
  பரவுதும் (1)
ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன் - நந்திக்-:2 1/38

 TOP
 
  பரி (3)
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே - நந்திக்-:2 27/4
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானை பரு சுவடு - நந்திக்-:2 46/2
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை - நந்திக்-:2 96/3

 TOP
 
  பரிசு (2)
இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை - நந்திக்-:2 19/2
பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே - நந்திக்-:2 19/4

 TOP
 
  பரிந்து (1)
பாவையர் பரிந்து தாங்கும் பனி மலர் செறிந்த செந்தில் - நந்திக்-:2 79/1

 TOP
 
  பரியும் (1)
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/3

 TOP
 
  பரிவும் (1)
வினையின் சிலம்பன் பரிவும் இவள்-தன் மெலிவும் மென் பூம் - நந்திக்-:2 33/1

 TOP
 
  பரு (4)
பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு - நந்திக்-:1 2/3
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானை பரு சுவடு - நந்திக்-:2 46/2
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் - நந்திக்-:2 56/3

 TOP
 
  பருவ (2)
பயம்கொள புகுந்தது பருவ வாடையே - நந்திக்-:2 8/4
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
  பருவம் (1)
ஆகின்றது பருவம் இனி ஆகும் வகை அறியேன் - நந்திக்-:2 67/2

 TOP
 
  பல் (4)
பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் - நந்திக்-:2 15/3
பரடு திறப்ப தன்னால் பல் கடை - நந்திக்-:2 23/6
பாடிய நாவலரோ வேந்தரோ பல் புரவி - நந்திக்-:2 31/1
மொழி ஆர் தொண்டை பல் மலர் முற்றும் தெரு வந்து - நந்திக்-:2 43/1

 TOP
 
  பல்லவ (2)
பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே - நந்திக்-:2 37/4
பொது இன்றி ஆண்ட பொலம் பூண் பல்லவ
 தோள் துணை ஆக மா வெள்ளாற்று - நந்திக்-:2 61/2,3

 TOP
 
  பல்லவர் (8)
பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு - நந்திக்-:1 2/3
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி - நந்திக்-:2 1/40
பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் - நந்திக்-:2 15/3
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி - நந்திக்-:2 40/2
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே - நந்திக்-:2 54/4
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் - நந்திக்-:2 59/2
பகை இன்றி பார் காக்கும் பல்லவர் கோன் செங்கோலின் - நந்திக்-:2 70/1

 TOP
 
  பல்லவர்க்கு (1)
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை - நந்திக்-:2 45/3

 TOP
 
  பல்லவன் (2)
உரை வரம்பு இகந்த உயர் புகழ் பல்லவன்
 அரசர் கோமான் அடு போர் நந்தி - நந்திக்-:2 23/1,2
பட குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறிய - நந்திக்-:2 65/3

 TOP
 
  பல்லவனே (1)
பண்டை மராமரம் எய்த பல்லவனே
 தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே - நந்திக்-:2 84/3,4

 TOP
 
  பல (1)
பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளி படிவம் எலாம் - நந்திக்-:2 1/19

 TOP
 
  பலர் (2)
வர வாதையுற்று இருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி - நந்திக்-:2 19/3
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள் - நந்திக்-:2 98/1

 TOP
 
  பலர்க்கு (1)
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் - நந்திக்-:2 56/3

 TOP
 
  பவம் (1)
பங்கில் வைப்பார்க்கு இல்லை பவம் - நந்திக்-:1 4/4

 TOP
 
  பவள (2)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம் - நந்திக்-:2 101/2

 TOP
 
  பழம் (1)
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
  பழிகாரர் (1)
கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே - நந்திக்-:2 97/4

 TOP
 
  பழுதாக (1)
தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் - நந்திக்-:2 82/2

 TOP
 
  பழுது (2)
பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே - நந்திக்-:2 3/4
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/2

 TOP
 
  பழுப்பித்து (1)
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
  பழையாறு (1)
படை ஆறு சாய பழையாறு வென்றான் - நந்திக்-:2 31/3

 TOP
 
  பற்றாமல் (1)
பதர் ஆக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே - நந்திக்-:2 105/4

 TOP
 
  பற்றிய (3)
போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே - நந்திக்-:2 54/3
புரம் பற்றிய போர் விடையோன் அருளால் - நந்திக்-:2 112/1
சரம் பற்றிய சாபம் விடும் தனையே - நந்திக்-:2 112/4

 TOP
 
  பறித்து (1)
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் - நந்திக்-:2 38/1

 TOP
 
  பன் (1)
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் - நந்திக்-:2 56/3

 TOP
 
  பனி (4)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் - நந்திக்-:2 38/1
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் - நந்திக்-:2 56/3
பாவையர் பரிந்து தாங்கும் பனி மலர் செறிந்த செந்தில் - நந்திக்-:2 79/1

 TOP
 
  பனை (1)
நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் - நந்திக்-:2 113/2

 TOP