<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

வ - முதல் சொற்கள்
வகை 2
வகையோ 1
வஞ்சனையால் 1
வஞ்சி 2
வஞ்சிக்கு 1
வட்ட 3
வட்டத்து 1
வட்டமான 2
வட்டிப்பனே 1
வட்டு 1
வடக்கு 1
வடபுலத்து 1
வடவரை 1
வடவேங்கடத்தார் 1
வடவேங்கடநாடு 1
வடவேங்கடமலை 1
வடிம்பு 1
வடிவமும் 1
வடிவோ 5
வடு 2
வடுவாய் 1
வண் 3
வண்டல் 1
வண்டினம் 1
வண்டு 3
வண்டுகாள் 1
வண்டோ 1
வதனம் 1
வந்த 2
வந்ததே 2
வந்திடில் 1
வந்திலார் 1
வந்து 3
வந்தோர்க்கு 1
வம்பு 2
வய 1
வயக்குவித்தான் 1
வயல் 3
வயிரம் 1
வயிரி 1
வயிற்றில் 1
வர 4
வரதுங்கன் 1
வரம் 1
வரம்பு 2
வரல் 1
வராது 1
வரி 1
வரு 6
வருகுது 1
வருடும் 2
வருந்தி 1
வருந்துவார் 1
வரும் 2
வருமே 1
வருவர் 2
வரை 7
வரை_மார்ப 1
வரையின் 1
வல் 1
வல்ல 1
வல்லனோ 1
வல்லி 1
வல்வினையேன் 1
வலத்து 1
வலம் 1
வலமே 1
வலயத்து 1
வலியால் 2
வழக்கு 2
வழங்கு 1
வழங்கும் 1
வழி 1
வழிகள்-தொறும் 1
வழிகொண்டு 1
வழியாம் 1
வள்ளல் 1
வள 7
வளர் 1
வளர்ந்த 1
வளவு 1
வளை 9
வளைகள் 1
வளைத்த 2
வளைந்து 1
வளையும் 2
வளையே 1
வறிதாக 1
வறியோர் 1
வன் 1
வன்மையால் 1
வன 1
வனத்து 1
வனம் 1
வனமும் 2
வனை 1
வனையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வகை (2)
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் - நந்திக்-:2 64/3
ஆகின்றது பருவம் இனி ஆகும் வகை அறியேன் - நந்திக்-:2 67/2

 TOP
 
    வகையோ (1)
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ
  தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் - நந்திக்-:2 42/2,3

 TOP
 
    வஞ்சனையால் (1)
வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர் காவகத்து - நந்திக்-:2 63/2

 TOP
 
    வஞ்சி (2)
கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/4
நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே - நந்திக்-:2 96/4

 TOP
 
    வஞ்சிக்கு (1)
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று - நந்திக்-:2 54/1

 TOP
 
    வட்ட (3)
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று - நந்திக்-:2 54/1
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/2
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/2

 TOP
 
    வட்டத்து (1)
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே - நந்திக்-:2 43/4

 TOP
 
    வட்டமான (2)
பொருப்பு வட்டமான முலை பூவையரே இந்த - நந்திக்-:2 111/3
நெருப்பு வட்டமான நிலா - நந்திக்-:2 111/4

 TOP
 
    வட்டிப்பனே (1)
மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே - நந்திக்-:2 63/4

 TOP
 
    வட்டு (1)
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1

 TOP
 
    வடக்கு (1)
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் - நந்திக்-:2 65/2

 TOP
 
    வடபுலத்து (1)
சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த - நந்திக்-:2 27/3

 TOP
 
    வடவரை (1)
வடவரை அளவும் தென்பொதி அளவும் - நந்திக்-:2 1/41

 TOP
 
    வடவேங்கடத்தார் (1)
வனையும் வடவேங்கடத்தார் தண் சாரலின் வார் புனமே - நந்திக்-:2 33/4

 TOP
 
    வடவேங்கடநாடு (1)
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான் - நந்திக்-:2 55/2

 TOP
 
    வடவேங்கடமலை (1)
வாழ்கின்றதொர் புகழ் நந்தி-தன் வடவேங்கடமலை வாய் - நந்திக்-:2 67/3

 TOP
 
    வடிம்பு (1)
போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி பூதலத்து வடிம்பு அலம்ப பூண்ட வில்லோன் - நந்திக்-:2 35/3

 TOP
 
    வடிவமும் (1)
குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும்
  இவையிவை கொண்டாயே - நந்திக்-:2 83/3,4

 TOP
 
    வடிவோ (5)
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ - நந்திக்-:2 1/3
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ - நந்திக்-:2 1/3
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ
  செவ் வடிவோ பொன் வடிவோ சிவனே நின் திருமேனி - நந்திக்-:2 1/3,4
செவ் வடிவோ பொன் வடிவோ சிவனே நின் திருமேனி - நந்திக்-:2 1/4
செவ் வடிவோ பொன் வடிவோ சிவனே நின் திருமேனி - நந்திக்-:2 1/4

 TOP
 
    வடு (2)
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் - நந்திக்-:2 37/2
பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே - நந்திக்-:2 37/4

 TOP
 
    வடுவாய் (1)
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4

 TOP
 
    வண் (3)
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ - நந்திக்-:2 43/3
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே - நந்திக்-:2 43/4
வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன் - நந்திக்-:2 72/2

 TOP
 
    வண்டல் (1)
வண்டல் இடும் கடல் மல்லை காவலனே - நந்திக்-:2 84/2

 TOP
 
    வண்டினம் (1)
கொண்டல் உறும் பொழில் வண்டினம் ஆம் மணி - நந்திக்-:2 84/1

 TOP
 
    வண்டு (3)
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் - நந்திக்-:2 45/2
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் - நந்திக்-:2 45/2
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
    வண்டுகாள் (1)
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே - நந்திக்-:2 97/2

 TOP
 
    வண்டோ (1)
போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ - நந்திக்-:2 76/2

 TOP
 
    வதனம் (1)
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1

 TOP
 
    வந்த (2)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட - நந்திக்-:2 89/2

 TOP
 
    வந்ததே (2)
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/3
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே
  கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே - நந்திக்-:2 97/3,4

 TOP
 
    வந்திடில் (1)
தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் - நந்திக்-:2 36/2

 TOP
 
    வந்திலார் (1)
கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே - நந்திக்-:2 97/4

 TOP
 
    வந்து (3)
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் - நந்திக்-:2 37/2
மொழி ஆர் தொண்டை பல் மலர் முற்றும் தெரு வந்து
  விழியாள் என்றும் மேனி வெளுத்து உற மெலிவாளே - நந்திக்-:2 43/1,2
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3

 TOP
 
    வந்தோர்க்கு (1)
வந்தோர்க்கு தந்தையும் நீ - நந்திக்-:2 1/30

 TOP
 
    வம்பு (2)
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா - நந்திக்-:2 78/2
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/4

 TOP
 
    வய (1)
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/3

 TOP
 
    வயக்குவித்தான் (1)
வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர் காவகத்து - நந்திக்-:2 63/2

 TOP
 
    வயல் (3)
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் - நந்திக்-:2 11/3
குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் - நந்திக்-:2 44/2
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் - நந்திக்-:2 101/3

 TOP
 
    வயிரம் (1)
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் - நந்திக்-:2 14/2

 TOP
 
    வயிரி (1)
காம வயிரி களங்கு அறுக்கும் சோமன் - நந்திக்-:2 94/2

 TOP
 
    வயிற்றில் (1)
நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே - நந்திக்-:2 96/4

 TOP
 
    வர (4)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2
வர வாதையுற்று இருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி - நந்திக்-:2 19/3
வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் - நந்திக்-:2 58/2
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா - நந்திக்-:2 78/2

 TOP
 
    வரதுங்கன் (1)
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின் - நந்திக்-:2 90/2

 TOP
 
    வரம் (1)
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் - நந்திக்-:2 112/2

 TOP
 
    வரம்பு (2)
தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு
  முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு - நந்திக்-:2 3/2,3
உரை வரம்பு இகந்த உயர் புகழ் பல்லவன் - நந்திக்-:2 23/1

 TOP
 
    வரல் (1)
பாயல் மேல் வரல் பார்த்து நின்றாளுக்கே - நந்திக்-:2 88/4

 TOP
 
    வராது (1)
கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே - நந்திக்-:2 9/4

 TOP
 
    வரி (1)
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
    வரு (6)
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா - நந்திக்-:2 17/2
திரு வரு நெடும் கண் சிவக்குமாகின் - நந்திக்-:2 61/5
வலம் வரு திகிரியும் இடம் வரு பணிலமும் - நந்திக்-:2 83/1
வலம் வரு திகிரியும் இடம் வரு பணிலமும் - நந்திக்-:2 83/1
வரு நந்தி யானத்து மானாரை விட்டு - நந்திக்-:2 94/3
நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் - நந்திக்-:2 113/2

 TOP
 
    வருகுது (1)
கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே - நந்திக்-:2 106/2

 TOP
 
    வருடும் (2)
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என் - நந்திக்-:2 90/3
கால் வருடும் சேடியர்-தம் கை - நந்திக்-:2 90/4

 TOP
 
    வருந்தி (1)
மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே மான் கண்டால் மானுக்கே வாடி மாதர் - நந்திக்-:2 25/1

 TOP
 
    வருந்துவார் (1)
வர வாதையுற்று இருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி - நந்திக்-:2 19/3

 TOP
 
    வரும் (2)
கரியின் முனம் வரும்
  அரியின் மலர் பதம் - நந்திக்-:1 3/1,2
பெண் இலா ஊரில் பிறந்தாரை போல வரும்
  வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே - நந்திக்-:2 107/3,4

 TOP
 
    வருமே (1)
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே
  கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே - நந்திக்-:2 6/2,3

 TOP
 
    வருவர் (2)
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் - நந்திக்-:2 114/2
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் - நந்திக்-:2 114/2

 TOP
 
    வரை (7)
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப - நந்திக்-:1 2/2
அரு வரை அடி எழ முடுகிய அவுணனது - நந்திக்-:2 1/15
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை - நந்திக்-:2 38/2
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள் - நந்திக்-:2 46/1
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் - நந்திக்-:2 53/2
ஏம வரை சலிக்கும் ஏழ் ஆழியும் கலங்கும் - நந்திக்-:2 94/1
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் - நந்திக்-:2 101/1

 TOP
 
    வரை_மார்ப (1)
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப
  பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு - நந்திக்-:1 2/2,3

 TOP
 
    வரையின் (1)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5

 TOP
 
    வல் (1)
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4

 TOP
 
    வல்ல (1)
துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனி சொல்ல வல்ல
  அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட - நந்திக்-:2 89/1,2

 TOP
 
    வல்லனோ (1)
ஆடல் ஓதம் ஆர்க்குமால் என் ஆவி காக்க வல்லனோ
  ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் - நந்திக்-:2 9/2,3

 TOP
 
    வல்லி (1)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2

 TOP
 
    வல்வினையேன் (1)
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் - நந்திக்-:2 114/2

 TOP
 
    வலத்து (1)
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் - நந்திக்-:2 55/1

 TOP
 
    வலம் (1)
வலம் வரு திகிரியும் இடம் வரு பணிலமும் - நந்திக்-:2 83/1

 TOP
 
    வலமே (1)
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/4

 TOP
 
    வலயத்து (1)
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை - நந்திக்-:2 44/1

 TOP
 
    வலியால் (2)
ஆள் வலியால் கொண்ட அகன் ஞாலம் அத்தனையும் - நந்திக்-:2 62/3
தோள் வலியால் கொண்ட துயக்கு - நந்திக்-:2 62/4

 TOP
 
    வழக்கு (2)
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4

 TOP
 
    வழங்கு (1)
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர - நந்திக்-:2 107/1

 TOP
 
    வழங்கும் (1)
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று - நந்திக்-:2 80/2

 TOP
 
    வழி (1)
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் - நந்திக்-:2 114/2

 TOP
 
    வழிகள்-தொறும் (1)
நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த - நந்திக்-:2 98/2

 TOP
 
    வழிகொண்டு (1)
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை - நந்திக்-:2 81/1

 TOP
 
    வழியாம் (1)
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே - நந்திக்-:2 43/4

 TOP
 
    வள்ளல் (1)
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு - நந்திக்-:2 24/2

 TOP
 
    வள (7)
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு - நந்திக்-:2 10/3
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று - நந்திக்-:2 12/1
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா - நந்திக்-:2 17/2
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு - நந்திக்-:2 24/2
கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன் - நந்திக்-:2 28/1
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே - நந்திக்-:2 51/3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் - நந்திக்-:2 101/3

 TOP
 
    வளர் (1)
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் - நந்திக்-:2 40/3

 TOP
 
    வளர்ந்த (1)
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை - நந்திக்-:2 45/3

 TOP
 
    வளவு (1)
வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ் - நந்திக்-:2 48/2

 TOP
 
    வளை (9)
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ - நந்திக்-:2 1/3
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே - நந்திக்-:2 6/1
செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் - நந்திக்-:2 42/1
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ - நந்திக்-:2 42/2
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை
  குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் - நந்திக்-:2 44/1,2
போகிடுக சங்கு புறகிடுக சேரி பொரு புணரி சங்கு வளை மென் - நந்திக்-:2 51/2
கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே - நந்திக்-:2 57/4
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு - நந்திக்-:2 61/12
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/4

 TOP
 
    வளைகள் (1)
எங்கள் கோல் வளைகள் நில்லா விபரிதம் இருந்தவாறே - நந்திக்-:2 39/4

 TOP
 
    வளைத்த (2)
வாள் குலாம் கண்ணினால் வளைத்த மம்மர் நோய் - நந்திக்-:2 18/3
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் - நந்திக்-:2 42/3

 TOP
 
    வளைந்து (1)
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே - நந்திக்-:2 86/4

 TOP
 
    வளையும் (2)
எனதே கலை வளையும் என்னதே மன்னர் - நந்திக்-:2 2/1
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே - நந்திக்-:2 78/4

 TOP
 
    வளையே (1)
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே - நந்திக்-:2 84/4

 TOP
 
    வறிதாக (1)
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக
  அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் - நந்திக்-:2 1/10,11

 TOP
 
    வறியோர் (1)
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர்
  சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு - நந்திக்-:2 24/1,2

 TOP
 
    வன் (1)
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் - நந்திக்-:2 37/1

 TOP
 
    வன்மையால் (1)
ஆறா விறல் அடு போர் வன்மையால் அமர் ஆடி அப்பால் - நந்திக்-:2 40/1

 TOP
 
    வன (1)
செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு - நந்திக்-:2 47/1

 TOP
 
    வனத்து (1)
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே - நந்திக்-:2 34/4

 TOP
 
    வனம் (1)
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான் - நந்திக்-:2 77/2

 TOP
 
    வனமும் (2)
ஊரும் அரவமும் தாமரை காடும் உயர் வனமும்
  தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு - நந்திக்-:2 95/1,2
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும்
  தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே - நந்திக்-:2 95/3,4

 TOP
 
    வனை (1)
வனை வார் குழல் வேணியும் வாடை கண் நீர் - நந்திக்-:2 13/1

 TOP
 
    வனையும் (1)
வனையும் வடவேங்கடத்தார் தண் சாரலின் வார் புனமே - நந்திக்-:2 33/4

 TOP