<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

வே - முதல் சொற்கள்
வேகம் 1
வேகின்ற 1
வேங்கை 2
வேட்டம் 1
வேண்டார் 1
வேண்டாவோ 1
வேண்டும் 1
வேணியும் 1
வேந்தர் 5
வேந்தர்-தம் 2
வேந்தரோ 1
வேந்தன் 6
வேந்தே 1
வேய் 2
வேர் 1
வேல் 11
வேலை 1
வேழம் 4
வேழமுகன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வேகம் (1)
வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே - நந்திக்-:2 107/4

 TOP
 
    வேகின்ற (1)
வேகின்ற பாவியேன் மெய் - நந்திக்-:2 104/4

 TOP
 
    வேங்கை (2)
புனத்து நின்ற வேங்கை மேல் புகைந்து எழுந்த ஆனையின் - நந்திக்-:2 34/1
ஈன்ற வேங்கை இரும் கணி சூழ்ச்சியே - நந்திக்-:2 36/4

 TOP
 
    வேட்டம் (1)
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான் - நந்திக்-:2 77/2

 TOP
 
    வேண்டார் (1)
வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய் அன்பு - நந்திக்-:2 71/1

 TOP
 
    வேண்டாவோ (1)
மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ - நந்திக்-:2 70/4

 TOP
 
    வேண்டும் (1)
கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண் - நந்திக்-:2 50/1

 TOP
 
    வேணியும் (1)
வனை வார் குழல் வேணியும் வாடை கண் நீர் - நந்திக்-:2 13/1

 TOP
 
    வேந்தர் (5)
கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே - நந்திக்-:2 5/2
விண்ட வேந்தர் தம் நாடும் வீர திருவும் எம் கோனை - நந்திக்-:2 5/3
கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே - நந்திக்-:2 5/4
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர்
  தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில் - நந்திக்-:2 15/1,2
வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய் அன்பு - நந்திக்-:2 71/1

 TOP
 
    வேந்தர்-தம் (2)
வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே - நந்திக்-:2 26/4
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில் - நந்திக்-:2 75/1

 TOP
 
    வேந்தரோ (1)
பாடிய நாவலரோ வேந்தரோ பல் புரவி - நந்திக்-:2 31/1

 TOP
 
    வேந்தன் (6)
மல்லை வேந்தன் மயிலை காவலன் - நந்திக்-:2 1/39
தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும் - நந்திக்-:2 5/1
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி - நந்திக்-:2 25/3
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் - நந்திக்-:2 39/1
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு - நந்திக்-:2 65/1
வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்
  தண் செங்கோல் நந்தி தனி குடை கீழ் வாழாரின் - நந்திக்-:2 72/2,3

 TOP
 
    வேந்தே (1)
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4

 TOP
 
    வேய் (2)
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை - நந்திக்-:2 60/3
வேய் காற்றினால் விளங்கும் வீர நந்தி மா கிரியில் - நந்திக்-:2 91/3

 TOP
 
    வேர் (1)
வேர் ஊரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்கு - நந்திக்-:2 110/2

 TOP
 
    வேல் (11)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை - நந்திக்-:2 1/9
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் - நந்திக்-:2 1/11
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு - நந்திக்-:2 10/3
செரு வேல் உயர்வு பாடினன்-கொல்லோ - நந்திக்-:2 23/4
வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே - நந்திக்-:2 26/4
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின - நந்திக்-:2 30/3
கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் - நந்திக்-:2 32/1
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் - நந்திக்-:2 39/1
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/3
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் - நந்திக்-:2 52/3
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் - நந்திக்-:2 53/2

 TOP
 
    வேலை (1)
காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/4

 TOP
 
    வேழம் (4)
சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம்
  கோ மறுகில் சீறி குருக்கோட்டை வென்று ஆடும் - நந்திக்-:2 2/2,3
சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்ப சிலர் திகைப்ப - நந்திக்-:2 16/1
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம்
  தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே - நந்திக்-:2 80/3,4
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட - நந்திக்-:2 89/2

 TOP
 
    வேழமுகன் (1)
தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன்
  செம்மை முளரி மலர் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே - நந்திக்-:1 1/3,4

 TOP