<<முந்திய பக்கம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - தொடரடைவு

சீ - முதல் சொற்கள்
சீ 1
சீடை 1
சீத 4
சீதனையே 1
சீதை 5
சீதை-பொருட்டு 1
சீதை_மணாளனை 1
சீதை_மணாளா 1
சீதைக்கு 4
சீதையுமே 1
சீதையை 1
சீப்பால் 1
சீமாதவன் 1
சீமாலிகன்-அவனோடு 1
சீய்க்கப்பெற்றால் 1
சீய்த்து 1
சீயம் 4
சீயமாய் 1
சீயமுமாய் 1
சீயினால் 1
சீர் 189
சீர்-தனக்கு 1
சீர்க்க 1
சீர்க்கு 1
சீர்க்கும் 2
சீர்த்த 1
சீர்மை 2
சீர்மைத்தே 1
சீர்மையை 2
சீரணனை 1
சீரன் 1
சீராமவிண்ணகர் 1
சீராமவிண்ணகரே 9
சீராமா 2
சீரார்க்கு 1
சீரால் 4
சீராளா 1
சீரான் 2
சீரானை 3
சீரிய 5
சீரியரே 2
சீரில் 2
சீரினாய் 1
சீரினில் 1
சீரே 1
சீரை 3
சீல 2
சீலத்து 3
சீலம் 4
சீலம்கொள் 1
சீலமே 2
சீலன் 3
சீலனை 1
சீலை 1
சீவனும் 1
சீவனுமாய் 1
சீற்ற 3
சீற்றத்தால் 2
சீற்றத்தினை 1
சீற்றத்தோடு 1
சீற்றம் 5
சீற்றமிலாதானை 1
சீறடியால் 1
சீறல் 1
சீறா 1
சீறி 3
சீறிய 1
சீறியருளாதே 1
சீறுகின்றதே 1
சீறும் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சீ (1)
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை - நாலாயி:974/1

 மேல்
 
    சீடை (1)
கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு - நாலாயி:210/1

 மேல்
 
    சீத (4)
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி - நாலாயி:23/1
சீத நீர் புடை சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் - நாலாயி:370/1
சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1750/4
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி - நாலாயி:3235/1

 மேல்
 
    சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே - நாலாயி:2556/4

 மேல்
 
    சீதை (5)
மின் இடை சீதை பொருட்டா இலங்கையர் - நாலாயி:179/1
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே - நாலாயி:248/2
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற - நாலாயி:310/4
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று - நாலாயி:523/1
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து - நாலாயி:1862/1

 மேல்
 
    சீதை-பொருட்டு (1)
கொம்பு போல் சீதை-பொருட்டு இலங்கை நகர் - நாலாயி:3249/1

 மேல்
 
    சீதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற - நாலாயி:310/4

 மேல்
 
    சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே - நாலாயி:248/2

 மேல்
 
    சீதைக்கு (4)
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க - நாலாயி:329/3
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி - நாலாயி:743/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் - நாலாயி:1624/1
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு - நாலாயி:2688/4

 மேல்
 
    சீதையுமே (1)
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே - நாலாயி:326/4

 மேல்
 
    சீதையை (1)
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் - நாலாயி:2196/2

 மேல்
 
    சீப்பால் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:169/4

 மேல்
 
    சீமாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று - நாலாயி:3688/1

 மேல்
 
    சீமாலிகன்-அவனோடு (1)
சீமாலிகன்-அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் - நாலாயி:189/1

 மேல்
 
    சீய்க்கப்பெற்றால் (1)
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடு வினை களையலாமே - நாலாயி:3908/4

 மேல்
 
    சீய்த்து (1)
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் - நாலாயி:3792/2

 மேல்
 
    சீயம் (4)
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் - நாலாயி:265/3
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
  கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன - நாலாயி:1187/2,3
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் - நாலாயி:1489/1
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் - நாலாயி:2878/3

 மேல்
 
    சீயமாய் (1)
வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் - நாலாயி:774/1

 மேல்
 
    சீயமுமாய் (1)
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
  எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் - நாலாயி:409/1,2

 மேல்
 
    சீயினால் (1)
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும் - நாலாயி:372/1

 மேல்
 
    சீர் (189)
பேணி சீர் உடை பிள்ளை பிறந்தினில் - நாலாயி:15/1
பாய சீர் உடை பண்பு உடை பாலகன் - நாலாயி:19/3
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே - நாலாயி:138/4
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே - நாலாயி:161/4
சீர் ஒன்று தூதாய் துரியோதனன் பக்கல் - நாலாயி:176/1
மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற - நாலாயி:185/2
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து - நாலாயி:245/2
சீர் அணிந்து தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் - நாலாயி:321/4
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் - நாலாயி:325/3
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் - நாலாயி:327/2
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் - நாலாயி:332/2
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர்
  சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே - நாலாயி:338/3,4
செல்லாநிற்கும் சீர் தென் திருமாலிருஞ்சோலையே - நாலாயி:339/4
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
  செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் - நாலாயி:368/1,2
சீர் அணி மால் திருநாமமே இட தேற்றிய - நாலாயி:390/1
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே - நாலாயி:408/4
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள் - நாலாயி:474/3
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப - நாலாயி:491/7
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை - நாலாயி:500/1
மா மகன் மிகு சீர் வசுதேவர்-தம் - நாலாயி:536/3
தன் ஆக திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு - நாலாயி:580/2
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலா பன்றி ஆம் - நாலாயி:614/2
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:655/3
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே - நாலாயி:695/4
சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே - நாலாயி:723/3
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே - நாலாயி:740/4
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா - நாலாயி:751/2
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் - நாலாயி:753/2
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
  வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் - நாலாயி:760/2,3
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
  தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை - நாலாயி:769/2,3
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்
  புண்டரீக பாவை சேரும் மார்ப பூமிநாதனே - நாலாயி:773/3,4
ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர்
  நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு - நாலாயி:774/2,3
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்
  பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே - நாலாயி:784/3,4
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே - நாலாயி:801/4
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே - நாலாயி:840/4
வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்
  கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே - நாலாயி:848/1,2
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர்
  பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் - நாலாயி:852/2,3
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் - நாலாயி:859/1
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
  நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே - நாலாயி:864/3,4
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே - நாலாயி:891/4
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் - நாலாயி:916/3
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள் - நாலாயி:945/3
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் - நாலாயி:1017/3
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய - நாலாயி:1040/3
கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி - நாலாயி:1077/3
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா - நாலாயி:1127/3
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் - நாலாயி:1137/3
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1145/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று - நாலாயி:1147/2
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு - நாலாயி:1167/1
நான்முகன் நாள் மிகை தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் - நாலாயி:1179/1
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் - நாலாயி:1200/3
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் - நாலாயி:1227/2
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான் - நாலாயி:1245/1
சீர் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே - நாலாயி:1255/4
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார்தொகை மேல் - நாலாயி:1257/2
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1268/3
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே - நாலாயி:1281/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை - நாலாயி:1287/1
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே - நாலாயி:1287/4
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1315/3
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்
  குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் - நாலாயி:1318/1,2
சீர் ஆர் இன் சொல் மாலை கற்று திரிவார் உலகத்தில் - நாலாயி:1337/3
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1342/4
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் - நாலாயி:1407/2
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம் - நாலாயி:1452/2
சீர் கெழு நான்மறை ஆனவனே - நாலாயி:1453/4
காமரு சீர் கலிகன்றி சொன்ன - நாலாயி:1457/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த - நாலாயி:1463/3
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை - நாலாயி:1477/2
சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில் - நாலாயி:1534/1
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் - நாலாயி:1537/3
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1623/4
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர் சலசயனத்து - நாலாயி:1637/1
பெருகு சீர் கண்ணபுரம் என்று பேசினாள் - நாலாயி:1660/3
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் - நாலாயி:1667/3
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும் - நாலாயி:1676/2
காமரு சீர் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ் மாலை - நாலாயி:1677/3
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி - நாலாயி:1681/2
கண்ட சீர் வென்றி கலியன் ஒலி மாலை - நாலாயி:1687/2
கண்ட சீர் கண்ணபுரத்து உறை அம்மானை - நாலாயி:1747/1
கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை - நாலாயி:1747/2
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா - நாலாயி:1767/2
கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா - நாலாயி:1797/3
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் - நாலாயி:1877/1
நன்று உண்ட தொல் சீர் மகர கடல் ஏழ் மலை ஏழ்_உலகு ஏழ் ஒழியாமை நம்பி - நாலாயி:1899/3
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் - நாலாயி:1901/3
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் - நாலாயி:1907/3
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர் கலிகன்றி - நாலாயி:1921/3
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ - நாலாயி:1940/2
பண்டுபண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
  தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே - நாலாயி:1960/2,3
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து - நாலாயி:2056/1
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர்
  கண்ணன் நெடுமால் கடல் கடைந்த கார் ஓத - நாலாயி:2088/2,3
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ - நாலாயி:2091/3
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு - நாலாயி:2224/4
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் - நாலாயி:2297/3
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் - நாலாயி:2307/2
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
  வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் - நாலாயி:2326/2,3
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய் - நாலாயி:2530/2
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த - நாலாயி:2557/1
செம் மேனி கண்வளர்வார் சீர் - நாலாயி:2599/4
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே சீர் ஆர் - நாலாயி:2609/2
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது - நாலாயி:2636/3
சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை - நாலாயி:2653/3
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த - நாலாயி:2670/2
சீர் ஆர் சுடர் சுட்டி செங்கலுழி பேர் ஆற்று - நாலாயி:2673/2
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று - நாலாயி:2674/3
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் - நாலாயி:2677/4
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே - நாலாயி:2677/7
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி - நாலாயி:2679/3
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா - நாலாயி:2682/2
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய - நாலாயி:2683/2
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் - நாலாயி:2685/3
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் - நாலாயி:2685/3
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை - நாலாயி:2685/6
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு - நாலாயி:2688/4
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் - நாலாயி:2690/4
சீர் ஆர் திருமார்பின் மேல் கட்டி செம் குருதி - நாலாயி:2692/1
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி - நாலாயி:2700/1
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே - நாலாயி:2706/3
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் - நாலாயி:2707/2
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் - நாலாயி:2707/5
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் - நாலாயி:2708/5
நல் நறும் சந்தன சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் - நாலாயி:2728/4
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
  ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் - நாலாயி:2793/2,3
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
  தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா - நாலாயி:2795/2,3
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து - நாலாயி:2803/2
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர்
  சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே - நாலாயி:2805/3,4
வெறி தரு பூ_மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
  நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர் - நாலாயி:2809/2,3
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர்
  நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி - நாலாயி:2834/2,3
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
  எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே - நாலாயி:2840/3,4
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
  அடியை தொடரும்படி நல்க வேண்டும் அறு சமய - நாலாயி:2853/1,2
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே - நாலாயி:2871/4
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே - நாலாயி:2872/4
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும் - நாலாயி:2873/1
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று - நாலாயி:2874/3
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர்
  அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2881/2,3
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே - நாலாயி:2884/4
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர்
  ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே - நாலாயி:2890/1,2
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய - நாலாயி:2894/2
சீர் தொடை ஆயிரத்து - நாலாயி:2920/3
நிற்கும் அம்மான் சீர்
  கற்பன் வைகலே - நாலாயி:2979/3,4
சீர் சடகோபன் - நாலாயி:2986/2
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் - நாலாயி:2989/1
தகும் சீர் தன் தனிமுதலினுள்ளே - நாலாயி:3024/1
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
  செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி - நாலாயி:3039/2,3
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை - நாலாயி:3061/2
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று - நாலாயி:3076/3
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி - நாலாயி:3079/3
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே - நாலாயி:3125/4
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து - நாலாயி:3127/3
பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே - நாலாயி:3139/3
தீது இல் சீர் திருவேங்கடத்தானையே - நாலாயி:3147/4
புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ - நாலாயி:3154/1
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ - நாலாயி:3155/2
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே - நாலாயி:3155/4
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ - நாலாயி:3157/2
முடியானே மூ_உலகும் தொழுது ஏத்தும் சீர்
  அடியானே ஆழ் கடலை கடைந்தாய் புள் ஊர் - நாலாயி:3198/1,2
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை - நாலாயி:3208/1
நலம் கொள் சீர் நன் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:3208/2
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் - நாலாயி:3217/2
நன்மை உடையவன் சீர் பரவ பெற்ற நான் ஓர் குறைவு இலனே - நாலாயி:3220/4
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே - நாலாயி:3225/4
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும் - நாலாயி:3241/3
வீற்றிருந்து ஏழ்_உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
  ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை - நாலாயி:3275/1,2
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் - நாலாயி:3331/2
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3351/3
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை - நாலாயி:3418/3
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி - நாலாயி:3517/3
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் - நாலாயி:3539/2
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ - நாலாயி:3612/1
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் - நாலாயி:3630/2
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே - நாலாயி:3652/4
சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன் கவி - நாலாயி:3653/1
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே - நாலாயி:3656/4
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
  இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ - நாலாயி:3657/1,2
சீர் உயிரேயோ மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவாவோ - நாலாயி:3675/3
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே - நாலாயி:3704/4
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் - நாலாயி:3709/3
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு - நாலாயி:3713/3
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா - நாலாயி:3719/2
சீர் வளம் கிளர் மூ_உலகு உண்டு உமிழ் தேவபிரான் - நாலாயி:3762/3
இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று - நாலாயி:3774/3
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே - நாலாயி:3787/4
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப - நாலாயி:3795/3
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர் - நாலாயி:3837/2
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன் - நாலாயி:3838/3
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே - நாலாயி:3844/4
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து - நாலாயி:3875/3

 மேல்
 
    சீர்-தனக்கு (1)
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர்-தனக்கு ஓர் - நாலாயி:2879/2

 மேல்
 
    சீர்க்க (1)
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்க
  தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னை கொடுக்கும் - நாலாயி:3742/1,2

 மேல்
 
    சீர்க்கு (1)
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே - நாலாயி:693/4

 மேல்
 
    சீர்க்கும் (2)
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே - நாலாயி:2614/2
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் - நாலாயி:2665/3

 மேல்
 
    சீர்த்த (1)
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி - நாலாயி:476/6

 மேல்
 
    சீர்மை (2)
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே - நாலாயி:2506/4
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா - நாலாயி:3097/1

 மேல்
 
    சீர்மைத்தே (1)
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே - நாலாயி:3096/4

 மேல்
 
    சீர்மையை (2)
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ - நாலாயி:1936/3
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
  எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் - நாலாயி:3179/1,2

 மேல்
 
    சீரணனை (1)
சீரணனை ஏத்தும் திறம் - நாலாயி:2448/4

 மேல்
 
    சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை - நாலாயி:3277/2

 மேல்
 
    சீராமவிண்ணகர் (1)
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை - நாலாயி:1187/1

 மேல்
 
    சீராமவிண்ணகரே (9)
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1178/4
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1179/4
செய் அணைந்து களை களையாது ஏறும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1180/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1181/4
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1182/4
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1183/4
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1184/4
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1185/4
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1186/4

 மேல்
 
    சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ - நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ - நாலாயி:726/4

 மேல்
 
    சீரார்க்கு (1)
வண் துழாம் சீரார்க்கு மாண்பு - நாலாயி:2635/4

 மேல்
 
    சீரால் (4)
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் - நாலாயி:96/3
சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ - நாலாயி:151/2
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் - நாலாயி:1067/3
சீரால் பிறந்து சிறப்பால் வளராது - நாலாயி:2600/1

 மேல்
 
    சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் - நாலாயி:1897/3

 மேல்
 
    சீரான் (2)
சீரான் திருவேங்கடம் - நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
  திரு ஆகம் தீண்டிற்று சென்று - நாலாயி:2604/3,4

 மேல்
 
    சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை - நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை - நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் - நாலாயி:2708/4

 மேல்
 
    சீரிய (5)
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து - நாலாயி:496/2
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த - நாலாயி:496/7
சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே - நாலாயி:2793/4
சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த - நாலாயி:2801/1
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல் - நாலாயி:2830/1

 மேல்
 
    சீரியரே (2)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே - நாலாயி:2556/4
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே - நாலாயி:2800/4

 மேல்
 
    சீரில் (2)
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் - நாலாயி:2642/2
பலம் முந்து சீரில் படி-மின் ஓவாதே - நாலாயி:3091/4

 மேல்
 
    சீரினாய் (1)
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
  சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே - நாலாயி:766/3,4

 மேல்
 
    சீரினில் (1)
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே - நாலாயி:2858/4

 மேல்
 
    சீரே (1)
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே - நாலாயி:2815/4

 மேல்
 
    சீரை (3)
ஓவா தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே - நாலாயி:2662/3
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் - நாலாயி:2808/3
சீரை பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால் - நாலாயி:2810/3

 மேல்
 
    சீல (2)
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே - நாலாயி:1436/4
கரும் சோதி கண்ணன் கடல் புரையும் சீல
  பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று - நாலாயி:2588/3,4

 மேல்
 
    சீலத்து (3)
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே - நாலாயி:2844/4
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து - நாலாயி:2879/1
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும் - நாலாயி:2897/1

 மேல்
 
    சீலம் (4)
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் - நாலாயி:2792/3
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே - நாலாயி:3296/4
சீலம் இல்லா சிறியனேலும் செய்வினையோ பெரிதால் - நாலாயி:3297/1
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி - நாலாயி:3813/1

 மேல்
 
    சீலம்கொள் (1)
சீரை பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால் - நாலாயி:2810/3

 மேல்
 
    சீலமே (2)
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம் - நாலாயி:3205/3
நாளும் என் புகழ்கோ உன சீலமே - நாலாயி:3812/4

 மேல்
 
    சீலன் (3)
நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமானதுங்கனை நாள்-தொறும் - நாலாயி:367/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே - நாலாயி:2830/4
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய - நாலாயி:2843/2

 மேல்
 
    சீலனை (1)
ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே - நாலாயி:3363/2

 மேல்
 
    சீலை (1)
சீலை குதம்பை ஒரு காது ஒரு காது செம் நிற மேல் தோன்றிப்பூ - நாலாயி:244/1

 மேல்
 
    சீவனும் (1)
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே - நாலாயி:2992/2

 மேல்
 
    சீவனுமாய் (1)
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ - நாலாயி:3642/3

 மேல்
 
    சீற்ற (3)
வெய்ய சீற்ற கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்து - நாலாயி:1724/2
சீற்ற தீ ஆவானும் சென்று - நாலாயி:2205/4
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு - நாலாயி:3472/1

 மேல்
 
    சீற்றத்தால் (2)
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
  கொன்றது இராவணனை கூறும்-கால் நின்றதுவும் - நாலாயி:2206/1,2
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக - நாலாயி:2695/1

 மேல்
 
    சீற்றத்தினை (1)
தனக்கு வேண்டு உரு கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் - நாலாயி:3490/2

 மேல்
 
    சீற்றத்தோடு (1)
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் - நாலாயி:3181/2

 மேல்
 
    சீற்றம் (5)
முனைத்த சீற்றம் விண் சுட போய் மூ_உலகும் பிறவும் - நாலாயி:1014/1
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் - நாலாயி:1420/3
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து - நாலாயி:1721/2
சீற்றம் நும் மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே - நாலாயி:1874/2
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள் - நாலாயி:2023/1

 மேல்
 
    சீற்றமிலாதானை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற - நாலாயி:310/4

 மேல்
 
    சீறடியால் (1)
சிதைக்கின்றது ஆழி என்று ஆழியை சீறி தன் சீறடியால்
  உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண் தார் - நாலாயி:2511/1,2

 மேல்
 
    சீறல் (1)
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம் - நாலாயி:2586/3

 மேல்
 
    சீறா (1)
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே - நாலாயி:3551/2

 மேல்
 
    சீறி (3)
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் - நாலாயி:899/2
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - நாலாயி:1075/3
சிதைக்கின்றது ஆழி என்று ஆழியை சீறி தன் சீறடியால் - நாலாயி:2511/1

 மேல்
 
    சீறிய (1)
துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் - நாலாயி:1643/1

 மேல்
 
    சீறியருளாதே (1)
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
  இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் - நாலாயி:501/7,8

 மேல்
 
    சீறுகின்றதே (1)
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே - நாலாயி:1955/4

 மேல்
 
    சீறும் (3)
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் - நாலாயி:1446/3
திங்கள் வெம் கதிர் சீறும் என் செய்கேன் - நாலாயி:1954/2
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியை - நாலாயி:2833/3

 மேல்