<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூட்டினீர் 1
சூட்டு 1
சூடார் 1
சூடி 7
சூடினும் 1
சூடு 1
சூடும் 1
சூடே 1
சூத்திரம் 2
சூதர் 1
சூதர்க்கும் 1
சூதரை 1
சூதனும் 1
சூதின் 1
சூதின்கண் 2
சூதினை 1
சூது 8
சூதே 2
சூரல் 1
சூல் 4
சூலாமை 1
சூலார் 1
சூலி 1
சூலின் 1
சூழ் 19
சூழ்க 1
சூழ்ச்சி 2
சூழ்தல் 1
சூழ்ந்த 3
சூழ்ந்தவன் 1
சூழ்ந்து 3
சூழ்ந்தும் 1
சூழ்ந்துவிடும் 1
சூழ்வது 1
சூழ்வார் 2
சூழ்வாரை 1
சூழ்வான் 1
சூழ 2
சூழற்க 1
சூழா 1
சூழாது 3
சூழாமல் 1
சூழின் 1
சூழினும் 1
சூழும் 2
சூள் 1
சூளின் 1
சூன்றிட்டு 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  சூட்டினீர் (1)
காட்டிய சூட்டினீர் என்று - குறள்:132 3/2

 TOP
 
  சூட்டு (1)
சூட்டு அறுத்து வாயில் இடல் - பழ:329/4

 TOP
 
  சூடார் (1)
தலைக்கு இட்ட பூ மேவார் மோந்த பூ சூடார்
  பசு கொடுப்பின் பார்ப்பார் கை கொள்ளாரே என்றும் - ஆசாரக்:90/1,2

 TOP
 
  சூடி (7)
தக்கோலம் தின்று தலை நிறைய பூ சூடி
  பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும் - நாலடி:5 3/1,2
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி
  செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி - கார்40:31/2,3
கரும் குரல் நொச்சி பசும் தழை சூடி
  இரும் புனம் ஏர் கடிகொண்டார் பெரும் கெளவை - கார்40:39/2,3
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:28/1
சிரத்தையால் செங்கழுநீர் சூடி பரத்தை - திணை150:144/2
குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி
  தவளையும் மேற்கொண்டு வரும் - திணை150:147/3,4
நெல் போர்பு சூடி வரும் - திணை150:148/4

 TOP
 
  சூடினும் (1)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை - குறள்:132 3/1

 TOP
 
  சூடு (1)
நரை ஆன் புறத்து இட்ட சூடு - பழ:48/4

 TOP
 
  சூடும் (1)
கள்ளி மேல் கை நீட்டார் சூடும் பூ அன்மையால் - நாலடி:27 2/2

 TOP
 
  சூடே (1)
கரு நரை மேல் சூடே போல் தோன்றும் கரு நரையை - நாலடி:19 6/2

 TOP
 
  சூத்திரம் (2)
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை - நாலடி:32 4/2
சூத்திரம் செய்தலின் கள்வன் ஆதல் அறிப - முது:2 7/1

 TOP
 
  சூதர் (1)
சூதர் கழகம் அரவர் அறா களம் - ஆசாரக்:98/1

 TOP
 
  சூதர்க்கும் (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் - குறள்:94 2/1

 TOP
 
  சூதரை (1)
சூதரை சோர்தல் இனிது - இனிய40:23/4

 TOP
 
  சூதனும் (1)
நாள் கழகம் பார்க்கும் நயம் இலா சூதனும்
  வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர் - திரி:81/2,3

 TOP
 
  சூதின் (1)
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
  வறுமை தருவது ஒன்று இல் - குறள்:94 4/1,2

 TOP
 
  சூதின்கண் (2)
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும் - திரி:39/3
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
  பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும் - பழ:260/1,2

 TOP
 
  சூதினை (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் - குறள்:94 1/1

 TOP
 
  சூது (8)
நட்ட கவற்றினால் சூது - இன்னா40:25/4
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் - குறள்:94 6/1
அல்லல் உழப்பிக்கும் சூது - குறள்:94 8/2
பிறர் மனை கள் களவு சூது கொலையோடு - ஆசாரக்:37/1
கள்ளான் சூது என்றும் கழுமான் கரியாரை - சிறுபஞ்:19/1
கண்டு எடுத்து கள் களவு சூது கருத்தினால் - சிறுபஞ்:26/3
கொலை களம் வார் குத்து சூது ஆடும் எல்லை - ஏலாதி:12/1
சூது உவவான் பேரான் சுலா உரையான் யார்திறத்தும் - ஏலாதி:43/1

 TOP
 
  சூதே (2)
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் - குறள்:94 10/1
சோகம் படும் சூதே சொல்வன்மை சோக - ஏலாதி:18/2

 TOP
 
  சூரல் (1)
சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை - ஐந்70:35/1

 TOP
 
  சூல் (4)
கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி - கார்40:33/1
கரு விரல் செம் முக வெண் பல் சூல் மந்தி - திணை150:10/1
ஈன்று எடுத்தல் சூல் புறஞ்செய்தல் குழவியை - சிறுபஞ்:70/1
ஏன்று எடுத்தல் சூல் ஏற்ற கன்னியை ஆன்ற - சிறுபஞ்:70/2

 TOP
 
  சூலாமை (1)
சூலாமை சூலின் படும் துன்பம் ஈன்ற பின் - சிறுபஞ்:73/1

 TOP
 
  சூலார் (1)
ஈன்றார் ஈன்கால் தளர்வார் சூலார் குழவிகள் - ஏலாதி:55/1

 TOP
 
  சூலி (1)
பீலி பரப்பி மயில் ஆல சூலி
  விரிகுவது போலும் இ கார் அதிர ஆவி - ஐந்70:19/2,3

 TOP
 
  சூலின் (1)
சூலாமை சூலின் படும் துன்பம் ஈன்ற பின் - சிறுபஞ்:73/1

 TOP
 
  சூழ் (19)
அறை கடல் சூழ் வையம் நக - நாலடி:23 10/4
புணர் கடல் சூழ் வையத்து புண்ணியமோ வேறே - நாலடி:27 4/1
பாய் திரை சூழ் வையம் பயப்பினும் இன்னாதே - நாலடி:34 9/3
தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் - நாலடி:40 2/1
கரும் கடல் மேய்ந்த கமம் சூழ் எழிலி - கார்40:37/1
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல் - ஐந்70:30/2
சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை - ஐந்70:35/1
முள் உடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை - ஐந்70:36/1
எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன் - திணை50:10/2
கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான் - திணை50:41/2
வில்லார் விழவினும் வேல் ஆழி சூழ் உலகில் - திணை150:62/1
சுவர்க்கத்து உளராயின் சூழ் - திணை150:62/4
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப - பழ:68/3
மஞ்சு சூழ் சோலை மலை நாட யார்க்கானும் - பழ:254/3
வேழம் பிடி தழூஉம் வேய் சூழ் மலை நாட - பழ:265/3
ஈத்து உண்பான் ஆகும் இரும் கடல் சூழ் மண் அரசாய் - ஏலாதி:44/3
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ்
  நாவலம்தீவு ஆள்வாரே நன்கு - ஏலாதி:56/3,4
பொன் இணர் வேங்கை புனம் சூழ் மலை நாடன் - கைந்:10/1
கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை - கைந்:13/1

 TOP
 
  சூழ்க (1)
என்றும் உறுதியே சூழ்க எறி திரை - பழ:275/2

 TOP
 
  சூழ்ச்சி (2)
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு - குறள்:68 1/1
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான் - முது:10 5/1

 TOP
 
  சூழ்தல் (1)
கேடு பிறரொடு சூழ்தல் கிளர் மணி - பழ:81/2

 TOP
 
  சூழ்ந்த (3)
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த
  அரு வரை உள்ளதாம் சீறூர் வரு வரையுள் - திணை150:13/1,2
கண்டல் அம் தண் தில்லை கலந்து கழி சூழ்ந்த
  மிண்டல் அம் தண் தாழை இணைந்து - திணை150:61/3,4
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து - பழ:1/2

 TOP
 
  சூழ்ந்தவன் (1)
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள்:21 4/2

 TOP
 
  சூழ்ந்து (3)
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து - கார்40:41/4
சூழ்வாரை சூழ்ந்து கொளல் - குறள்:45 5/2
ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள்:47 1/2

 TOP
 
  சூழ்ந்தும் (1)
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர் - குறள்:64 10/1

 TOP
 
  சூழ்ந்துவிடும் (1)
சுற்றமா சூழ்ந்துவிடும் - குறள்:46 1/2

 TOP
 
  சூழ்வது (1)
அன்பு இன்மை சூழ்வது உடைத்து - குறள்:128 6/2

 TOP
 
  சூழ்வார் (2)
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் - குறள்:45 5/1
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே - குறள்:130 4/1

 TOP
 
  சூழ்வாரை (1)
சூழ்வாரை சூழ்ந்து கொளல் - குறள்:45 5/2

 TOP
 
  சூழ்வான் (1)
கொல்லாமை சூழ்வான் தலை - குறள்:33 5/2

 TOP
 
  சூழ (2)
தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால் - ஐந்50:37/1
பொல்லாத சூழ கெடும் - குறள்:18 6/2

 TOP
 
  சூழற்க (1)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் - குறள்:21 4/1

 TOP
 
  சூழா (1)
சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து - ஐந்70:31/3

 TOP
 
  சூழாது (3)
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ - நாலடி:6 5/3
வகை அற சூழாது எழுதல் பகைவரை - குறள்:47 5/1
சூழாது செய்யும் அரசு - குறள்:56 4/2

 TOP
 
  சூழாமல் (1)
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை - குறள்:103 4/1

 TOP
 
  சூழின் (1)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள்:21 4/1,2

 TOP
 
  சூழினும் (1)
சூழினும் தான் முந்துறும் - குறள்:38 10/2

 TOP
 
  சூழும் (2)
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள்:21 4/2
கொல்லாமை சூழும் நெறி - குறள்:33 4/2

 TOP
 
  சூள் (1)
பொய் சூள் என அறியாதேன் - ஐந்70:50/4

 TOP
 
  சூளின் (1)
கடும் சூளின் தான் கண்டு கானலுள் மேயும் - கைந்:50/3

 TOP
 
  சூன்றிட்டு (1)
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டு அன்ன - நாலடி:5 4/3

 TOP