<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

ஓ - முதல் சொற்கள்
ஓஒ 5
ஓஒதல் 1
ஓக்கம் 1
ஓக்கிய 1
ஓக்கினாள் 1
ஓக்கும் 1
ஓங்கல் 5
ஓங்கி 1
ஓங்கிய 3
ஓங்கு 6
ஓங்கும் 1
ஓச்சி 1
ஓச்சும் 2
ஓசை 5
ஓட்டலும் 1
ஓட்டி 1
ஓட்டு 3
ஓட்டுக்கொண்டு 1
ஓட்டுத்தலை 1
ஓட 4
ஓடா 6
ஓடார் 2
ஓடி 24
ஓடினும் 1
ஓடு 4
ஓடுக 1
ஓடும் 19
ஓடுமாறு 1
ஓடுமே 1
ஓடை 1
ஓத்தினால் 1
ஓத்து 3
ஓத்துடைமை 1
ஓத்தும் 1
ஓத 3
ஓதம் 10
ஓதலின் 2
ஓதாத 1
ஓதாதார் 1
ஓதாதும் 1
ஓதார் 2
ஓதி 7
ஓதிய 2
ஓதியும் 1
ஓதின் 1
ஓதுதல் 1
ஓதுவது 1
ஓதுவார் 1
ஓதை 2
ஓநாய் 1
ஓப்ப 1
ஓப்பின் 1
ஓப்பும் 1
ஓம்பப்படும் 1
ஓம்பல் 10
ஓம்பலின் 1
ஓம்பா 4
ஓம்பார் 2
ஓம்பி 18
ஓம்பின் 2
ஓம்பு 1
ஓம்புக 3
ஓம்புதல் 2
ஓம்பும் 2
ஓம்புவார் 1
ஓம்புவான் 2
ஓம்புவானேல் 1
ஓமை 3
ஓர் 64
ஓர்த்த 2
ஓர்த்தது 1
ஓர்த்து 6
ஓர்ந்து 3
ஓர்ப்பர் 1
ஓர்ப்பாரும் 1
ஓர்வமே 1
ஓரா 1
ஓராது 1
ஓராதே 1
ஓராமல் 1
ஓரார் 2
ஓரார்காண் 1
ஓரான் 2
ஓரும் 9
ஓரேன் 1
ஓரொன்று 1
ஓரோஒருவர்க்கு 1
ஓலை 5
ஓலைக்கு 1
ஓவா 5
ஓவாத 1
ஓவாதாள் 1
ஓவாது 5
ஓவாதே 4
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  ஓஒ (5)
உரவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே - நாலடி:9 8/2
ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே - கள40:36/1
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் - குறள்:109 8/1
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் - குறள்:118 6/1
ஓஒ உளரே அவர் - குறள்:121 4/2

 TOP
 
  ஓஒதல் (1)
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை - குறள்:66 3/1

 TOP
 
  ஓக்கம் (1)
கான் ஓக்கம் கொண்டு அழகா காண் மடவாய் மான்நோக்கி - திணை150:95/2

 TOP
 
  ஓக்கிய (1)
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் - நாலடி:13 9/1

 TOP
 
  ஓக்கினாள் (1)
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு - குறள்:109 2/1

 TOP
 
  ஓக்கும் (1)
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ - திணை150:10/3

 TOP
 
  ஓங்கல் (5)
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பு இடும்பை - நான்மணி:94/2
ஓங்கல் இறுவரை மேல் காந்தள் கடி கவின - திணை50:3/1
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன மக சுமந்து - திணை150:145/3
ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான் - முது:10 1/1
ஓங்கல் விழு பலவின் இன்பம் கொளீஇய - கைந்:4/1

 TOP
 
  ஓங்கி (1)
இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும் - பழ:78/1

 TOP
 
  ஓங்கிய (3)
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய
  அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் - நாலடி:18 6/1,2
ஓங்கிய செம் நீர் இழிதரும் கான் யாற்றுள் - ஐந்70:7/2
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப - ஐந்70:41/2

 TOP
 
  ஓங்கு (6)
உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் - நாலடி:1 9/1
ஒழியாமை கண்டாலும் ஓங்கு அருவி நாட - நாலடி:8 9/3
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் - நாலடி:29 3/1
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும் - கார்40:24/2
ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர் - திணை50:13/1
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே - பழ:19/3

 TOP
 
  ஓங்கும் (1)
தேம் கமழ் நாற்றம் இழந்த ஆங்கு ஓங்கும்
  உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் - நாலடி:20 9/2,3

 TOP
 
  ஓச்சி (1)
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் - குறள்:57 2/1

 TOP
 
  ஓச்சும் (2)
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன் - குறள்:55 4/1
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - குறள்:55 5/1

 TOP
 
  ஓசை (5)
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் - நாலடி:34 2/2
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா - இன்னா40:35/2
சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு - ஐந்50:7/3
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை
  அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் - ஐந்50:16/2,3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - குறள்:3 7/1

 TOP
 
  ஓட்டலும் (1)
செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக - நாலடி:24 5/2

 TOP
 
  ஓட்டி (1)
காட்டி களைதும் என வேண்டா ஓட்டி
  இடம்படுத்த கண்ணாய் இறக்கும் மை ஆட்டை - பழ:39/2,3

 TOP
 
  ஓட்டு (3)
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா இன்னா - இன்னா40:8/3
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள்:78 5/2
உண் ஓட்டு அகல் உடைப்பார் - பழ:28/4

 TOP
 
  ஓட்டுக்கொண்டு (1)
முன் ஓட்டுக்கொண்டு முரண் அஞ்சி போவாரே - பழ:28/3

 TOP
 
  ஓட்டுத்தலை (1)
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து - சிறுபஞ்:99/4

 TOP
 
  ஓட (4)
கடாஅவுக பாக தேர் கார் ஓட கண்டே - கார்40:32/1
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட
  புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள் படர் கூர்ந்து - ஐந்50:39/1,2
கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட
  தள்ளியும் செல்பவோ தம்முடையார் கொள்ளும் - திணை150:84/1,2
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா - கைந்:24/1

 TOP
 
  ஓடா (6)
ஓடா மறவர் துணிப்ப துணிந்தவை - கள40:22/3
ஓடா மறவர் உருத்து மதம் செருக்கி - கள40:28/1
ஓடா மறவர் எறிய நுதல் பிளந்த - கள40:31/1
ஒரு திரை ஓடா அளவை இரு திரை - திணை150:57/2
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும் - குறள்:50 6/1
நாவாயும் ஓடா நிலத்து - குறள்:50 6/2

 TOP
 
  ஓடார் (2)
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா - ஆசாரக்:56/2
பரந்தவர் கொள்கை மேல் பால் ஆறும் ஓடார்
  நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க - பழ:143/1,2

 TOP
 
  ஓடி (24)
பழியோடு பட்டவை செய்தல் வளி ஓடி
  நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 8/2,3
நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி - நாலடி:12 1/3
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி
  நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன் - நாலடி:16 5/2,3
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி
  தாக்கி எறிதர வீழ்தரும் ஒண் குருதி - கள40:17/1,2
எ வாயும் ஓடி வயவர் துணித்திட்ட - கள40:26/1
கேடகத்தோடு அற்ற தட கை கொண்டு ஓடி
  இகலன் வாய் துற்றிய தோற்றம் அயலார்க்கு - கள40:28/3,4
கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி
  வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் - ஐந்50:5/2,3
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் - ஐந்50:36/2
தொடி ஓடி வீழ துறந்து - ஐந்50:36/4
பாம்பு என ஓடி உரும் இடிப்ப கண்டு இரங்கும் - திணை50:3/2
உரும் உற்ற பூம் கோடல் ஓடி உரும் உற்ற - திணை150:107/2
உளர உளர உவன் ஓடி சால - திணை150:136/3
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
  தீவினை செய்யான் எனின் - குறள்:21 10/1,2
தன் குடிமை குன்றா தகைமையும் அன்பு ஓடி
  நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும் - திரி:41/2,3
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல் - பழ:219/3
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க தின்குறுவான் - பழ:257/2
காப்பு இறந்து ஓடி கழி பெரும் செல்வத்தை - பழ:320/1
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின் - பழ:375/3
மிக்கு ஓடி விட்டு திரியின் அது பெரிது - பழ:377/3
உக்கு ஓடி காட்டிவிடும் - பழ:377/4
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார் - சிறுபஞ்:53/2
உலையாமை உற்றதற்கு ஓடி உயிரை - ஏலாதி:40/1
உரை சால் மட மந்தி ஓடி உகளும் - கைந்:6/2
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி
  தழென மத எருமை தண் கயம் பாயும் - கைந்:37/1,2

 TOP
 
  ஓடினும் (1)
நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி - நாலடி:7 8/1

 TOP
 
  ஓடு (4)
ஊர் மேற்று அமணர்க்கும் ஓடு - பழ:231/4
உடை இட்டார் புல் மேய்ந்தார் ஓடு நீர் புக்கார் - சிறுபஞ்:39/1
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் - சிறுபஞ்:81/2
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ - கைந்:60/3

 TOP
 
  ஓடுக (1)
ஓடுக ஊர் ஓடுமாறு - பழ:392/4

 TOP
 
  ஓடும் (19)
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது - நாலடி:12 10/4
அலைப்பினும் அன்னே என்று ஓடும் சிலைப்பினும் - நான்மணி:23/2
வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும் - கள40:29/2
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி - ஐந்50:36/1
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் - ஐந்50:36/3
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன் - திணை50:31/3
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
  நாவாயும் ஓடா நிலத்து - குறள்:50 6/1,2
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும் எல்லில் - திரி:19/1
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென - திரி:22/2
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க - பழ:118/2
காம்பு அன்ன தோளி கலங்க கடித்து ஓடும்
  பாம்பு பல் கொள்வாரோ இல் - பழ:148/3,4
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு - கைந்:3/3
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை - கைந்:7/3
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் - கைந்:9/3
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும்
  நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே - கைந்:13/2,3
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும்
  தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு - கைந்:18/2,3
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும்
  இலை ஒலி வெம் கானத்து இ பருவம் சென்றார் - கைந்:23/2,3
சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும்
  பண்பு இல் அரும் சுரம் என்பவால் ஆய்தொடி - கைந்:24/2,3
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன் - கைந்:46/1

 TOP
 
  ஓடுமாறு (1)
ஓடுக ஊர் ஓடுமாறு - பழ:392/4

 TOP
 
  ஓடுமே (1)
அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே
  தொல் புகழாளர் தொடர்பு - நாலடி:17 6/3,4

 TOP
 
  ஓடை (1)
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
  மின்னு கொடியின் மிளிரும் புனல் நாடன் - கள40:31/2,3

 TOP
 
  ஓத்தினால் (1)
ஓத்தினால் என்ன குறை - சிறுபஞ்:81/4

 TOP
 
  ஓத்து (3)
ஓத்து இலா பார்ப்பான் உரை - இன்னா40:21/4
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் - குறள்:14 4/1
ஊனமே தீர்ந்தவர் ஓத்து - ஏலாதி:61/4

 TOP
 
  ஓத்துடைமை (1)
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே - இனிய40:7/1

 TOP
 
  ஓத்தும் (1)
ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும்
  ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின் - ஏலாதி:62/2,3

 TOP
 
  ஓத (3)
ஓத நீர் வேலி உரை கடியா பாக்கத்தார் - திணை150:37/1
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் - திணை150:37/2
ஓத நீர் வேலி உலகத்தார் இ நெறி - பழ:393/1

 TOP
 
  ஓதம் (10)
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப - நாலடி:25 9/3
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம்
  நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - நாலடி:40 1/2,3
ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம் - ஐந்50:46/1
எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த - ஐந்50:48/1
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை - ஐந்70:52/2
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர - ஐந்70:60/3
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ - திணை50:43/1
இன மீன் இரும் கழி ஓதம் உலாவ - திணை50:44/1
நுரை தரும் ஓதம் கடந்து எமர் தந்த - கைந்:56/1
இறா எறி ஓதம் அலற இரைக்கும் - கைந்:58/2

 TOP
 
  ஓதலின் (2)
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை - முது:1 1/1
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
  அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக - ஏலாதி:68/2,3

 TOP
 
  ஓதாத (1)
இலங்கு நூல் ஓதாத நாள் - ஆசாரக்:47/4

 TOP
 
  ஓதாதார் (1)
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
  செந்தமிழ் சேராதவர் - ஐந்50:51/3,4

 TOP
 
  ஓதாதும் (1)
ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
  ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக - நாலடி:27 10/1,2

 TOP
 
  ஓதார் (2)
ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும் - நாலடி:27 10/1
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும் - ஆசாரக்:8/2

 TOP
 
  ஓதி (7)
ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக - நாலடி:27 10/2
பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத - நாலடி:32 6/1
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ் - திணை150:133/2
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா - குறள்:84 4/1
முற்ற பகலும் முனியாது இனிது ஓதி
  கற்றலின் கேட்டலே நன்று - பழ:61/3,4
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் - ஏலாதி:63/3
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான் - ஏலாதி:64/2

 TOP
 
  ஓதிய (2)
உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால் - நாலடி:39 6/1
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண் - திரி:75/2

 TOP
 
  ஓதியும் (1)
ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும் - நாலடி:27 10/1

 TOP
 
  ஓதின் (1)
ஓதின் புகழ் சால் உணர்வு - நான்மணி:101/4

 TOP
 
  ஓதுதல் (1)
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் - சிறுபஞ்:28/3

 TOP
 
  ஓதுவது (1)
உலக நூல் ஓதுவது எல்லாம் கலகல - நாலடி:14 10/2

 TOP
 
  ஓதுவார் (1)
நுண் கலப்பை நூல் ஓதுவார் - சிறுபஞ்:58/4

 TOP
 
  ஓதை (2)
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும் - ஐந்70:48/2
எருதோடு உழல்கின்றார் ஓதை குருகோடு - திணை150:139/2

 TOP
 
  ஓநாய் (1)
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப புலம் புகின் - பழ:139/3

 TOP
 
  ஓப்ப (1)
ஓப்ப படினும் உணங்கலை புள் கவரும் - பழ:259/2

 TOP
 
  ஓப்பின் (1)
கரும் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின்
  புகர் இல்லேம் யாம் இருப்ப பூம் கழி சேர்ப்பன் - கைந்:56/2,3

 TOP
 
  ஓப்பும் (1)
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர் - ஐந்50:47/3

 TOP
 
  ஓம்பப்படும் (1)
உயிரினும் ஓம்பப்படும் - குறள்:14 1/2

 TOP
 
  ஓம்பல் (10)
சிறை இல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா - இன்னா40:5/1
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள்:5 3/2
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா - குறள்:9 9/1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் - குறள்:39 10/1
வினைக்கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை - குறள்:62 2/1
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு - குறள்:65 2/2
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ - குறள்:82 10/1
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் - குறள்:116 5/1
குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி - திரி:13/2
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் - ஏலாதி:17/1

 TOP
 
  ஓம்பலின் (1)
நல் விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும் - திரி:64/1

 TOP
 
  ஓம்பா (4)
ஈன்றாளை ஓம்பா விடல் - இன்னா40:17/4
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
  மடமை மடவார்கண் உண்டு - குறள்:9 9/1,2
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
  மெலியார் மேல் மேக பகை - குறள்:87 1/1,2
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் - பழ:141/3

 TOP
 
  ஓம்பார் (2)
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார்
  தயிர் சிதைத்து மற்றொன்று அடல் - பழ:164/3,4
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார்
  நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் - சிறுபஞ்:53/2,3

 TOP
 
  ஓம்பி (18)
காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம் - நாலடி:36 1/2
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி - குறள்:9 1/1
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
  வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள்:9 1/1,2
வித்தும் இடல் வேண்டும்கொல்லோ விருந்து ஓம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள்:9 5/1,2
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் - குறள்:9 6/1
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி - குறள்:9 8/1
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
  வேள்வி தலைப்படாதார் - குறள்:9 8/1,2
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி - குறள்:14 2/1
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
  தேரினும் அஃதே துணை - குறள்:14 2/1,2
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப - குறள்:25 4/1
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல் - குறள்:55 9/1
சால மறைத்து ஓம்பி சான்றவர் கைகரப்ப - பழ:93/1
வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் - பழ:155/3
வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெம் சமத்து - பழ:175/1
இல்லாளே வந்த விருந்து ஓம்பி செல்வத்து - பழ:255/2
அ காலத்து ஓம்பி அமிழ்து கோட்பட்டமையின் - பழ:336/3
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும் - சிறுபஞ்:41/2
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி
  நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் - ஏலாதி:17/2,3

 TOP
 
  ஓம்பின் (2)
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் - குறள்:116 5/1
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் - ஏலாதி:48/3

 TOP
 
  ஓம்பு (1)
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் - குறள்:115 9/1

 TOP
 
  ஓம்புக (3)
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் - குறள்:51 6/1
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா - குறள்:87 1/1
முந்துற நாடி புறந்தரல் ஓம்புக
  அம் தண் அருவி மலை நாட சேண் நோக்கி - பழ:69/2,3

 TOP
 
  ஓம்புதல் (2)
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் - குறள்:33 2/1
ஓம்புதல் தேற்றாதவர் - குறள்:63 6/2

 TOP
 
  ஓம்பும் (2)
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை - குறள்:97 8/1
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி - ஏலாதி:17/2

 TOP
 
  ஓம்புவார் (1)
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல் எனின் - பழ:359/3

 TOP
 
  ஓம்புவான் (2)
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - குறள்:9 3/1
நல் விருந்து ஓம்புவான் இல் - குறள்:9 4/2

 TOP
 
  ஓம்புவானேல் (1)
மறுதலை சுற்றம் மதித்து ஓம்புவானேல்
  இறுதல் இல் வாழ்வே இனிது - ஏலாதி:16/3,4

 TOP
 
  ஓமை (3)
பொரி புற ஓமை புகர் படு நீழல் - ஐந்70:37/1
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை - திணை150:91/1
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல் - கைந்:19/1

 TOP
 
  ஓர் (64)
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று - நாலடி:1 1/3
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் - நாலடி:3 7/2
உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி - நாலடி:4 8/1
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் - நாலடி:5 1/2
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர்
  ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே - நாலடி:5 1/2,3
ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே - நாலடி:5 1/3
காக்கை கடிவது ஓர் கோல் - நாலடி:5 1/4
கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர்
  பண்டத்துள் வைப்பது இலர் - நாலடி:5 10/3,4
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் - நாலடி:10 10/2
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால் - நாலடி:12 9/1
இசையாதுஎனினும் இயற்றி ஓர் ஆற்றால் - நாலடி:20 4/1
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர்
  நல் புடை கொண்டமை அல்லது பொன் கேழ் - நாலடி:22 2/1,2
கல் என்று தந்தை கழற அதனை ஓர்
  சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல - நாலடி:26 3/1,2
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர்
  தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர் - நாலடி:26 10/2,3
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர்
  புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் - நாலடி:26 10/3,4
அறாஅர் சுடுவது ஓர் தீ - நாலடி:31 10/4
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர்
  அஞ்ஞானம் தந்திட்டு அது ஆங்கு அற துழாய் - நாலடி:32 1/1,2
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை - நாலடி:32 4/2
காண்டற்கு அரியது ஓர் காடு - நாலடி:37 1/4
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர்
  இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல் என்பவே - நாலடி:37 4/2,3
புல்லா புலப்பது ஓர் ஆறு - நாலடி:40 1/4
தமர் அனையர் ஓர் ஊர் உறைவார் தமருள்ளும் - நான்மணி:73/2
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ ஊரன் - ஐந்50:29/3
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர்
  பொய் சூள் என அறியாதேன் - ஐந்70:50/3,4
இணைத்தான் எமக்கும் ஓர் நோய் - திணை50:32/4
வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய் - திணை150:9/1
ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல் - திணை150:22/3
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது - திணை150:46/1
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் - திணை150:54/2
கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர்
  நாள் நாடி நல்குதல் நன்று - திணை150:54/3,4
வளமை கொணரும் வகையினான் மற்று ஓர்
  இளமை கொணர இசை - திணை150:85/3,4
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - குறள்:3 4/1
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள்:3 4/2
பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள்:47 5/2
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
  ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள்:59 8/1,2
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள்:64 9/1,2
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை - குறள்:65 5/1
உறுப்பு ஓர் அனையரால் வேறு - குறள்:71 4/2
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை - குறள்:80 6/1
நீட்டி அளப்பது ஓர் கோல் - குறள்:80 6/2
போஒம் அளவும் ஓர் நோய் - குறள்:85 8/2
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள்:106 3/2
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க - குறள்:110 8/1
பிரிவு ஓர் இடத்து உண்மையான் - குறள்:116 3/2
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது - குறள்:131 7/1
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் - திரி:79/4
ஓர் ஆறு செல்லும் இடத்து - ஆசாரக்:60/3
அயல் பகை தூண்டி விடுத்து ஓர் நயத்தால் - பழ:51/2
கல்லாதவரிடை கட்டுரையின் மிக்கது ஓர்
  பொல்லாதது இல்லை ஒருவற்கு நல்லாய் - பழ:64/1,2
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர்
  கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல் - பழ:96/1,2
கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான் - பழ:97/2
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் - பழ:165/4
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை அதுவே - பழ:172/3
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் - பழ:219/2
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால் - பழ:336/1
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும் - பழ:348/2
காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் - பழ:349/3
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர்
  வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை - பழ:394/1,2
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய் - சிறுபஞ்:27/4
தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது - முது:4 10/1
நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை - முது:6 7/1
இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை - முது:6 8/1
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும் - ஏலாதி:5/1
மு சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும் இன்னவை - ஏலாதி:12/3

 TOP
 
  ஓர்த்த (2)
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத - பழ:168/1
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த
  அறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண் - சிறுபஞ்:65/2,3

 TOP
 
  ஓர்த்தது (1)
ஓர்த்தது இசைக்கும் பறை - பழ:195/4

 TOP
 
  ஓர்த்து (6)
வேர்த்து வெகுளார் விழுமியோர் ஓர்த்து அதனை - நாலடி:7 4/2
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து - திணை150:73/4
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா - குறள்:36 7/1
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் - சிறுபஞ்:17/3
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த - சிறுபஞ்:65/2
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும் - கைந்:13/2

 TOP
 
  ஓர்ந்து (3)
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் - குறள்:55 1/1
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
  முறை நிலை கோடா அரசும் சிறைநின்று - திரி:34/1,2
ஏறுமாம் மேல் உலகம் ஓர்ந்து - ஏலாதி:65/4

 TOP
 
  ஓர்ப்பர் (1)
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை - பழ:179/2

 TOP
 
  ஓர்ப்பாரும் (1)
துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும்
  எளியாரை எள்ளாதார் இல் - பழ:287/3,4

 TOP
 
  ஓர்வமே (1)
ஓர்வமே செய்யும் உலோபமே சீர்சாலா - ஏலாதி:61/2

 TOP
 
  ஓரா (1)
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் - குறள்:55 8/1

 TOP
 
  ஓராது (1)
ஓராது கட்டில் படாஅர் அறியாதார் - ஆசாரக்:44/3

 TOP
 
  ஓராதே (1)
உபகாரம் செய்து அதனை ஓராதே தங்கண் - நாலடி:7 9/1

 TOP
 
  ஓராமல் (1)
உற்றாரை அன்னணம் ஓராமல் அற்றார்கட்கு - ஏலாதி:9/2

 TOP
 
  ஓரார் (2)
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை - குறள்:70 5/1
சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று - ஆசாரக்:78/2

 TOP
 
  ஓரார்காண் (1)
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் நம்மை - திணை150:123/2

 TOP
 
  ஓரான் (2)
மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான்
  கொன்னே வெகுளான் கொலை புரியான் பொன்னே - ஏலாதி:20/1,2
என்னே இ காலன் நீடு ஓரான் தவம் முயலான் - ஏலாதி:37/3

 TOP
 
  ஓரும் (9)
தாரித்திருத்தல் தகுதி மற்று ஓரும்
  புகழ்மையா கொள்ளாது பொங்கு நீர் ஞாலம் - நாலடி:8 2/2,3
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும்
  குல மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர் - நாலடி:18 5/2,3
ஈரம் கிடையகத்து இல் ஆகும் ஓரும்
  நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும் - நாலடி:36 10/2,3
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு - குறள்:4 10/1
உயற்பாலது ஓரும் பழி - குறள்:4 10/2
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை - குறள்:37 6/1
வஞ்சிப்பது ஓரும் அவா - குறள்:37 6/2
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை - பழ:340/1
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும்
  வருவர் நம் காதலர் வாள் தடம் கண்ணாய் - கைந்:25/2,3

 TOP
 
  ஓரேன் (1)
தகவும் தகவு அன்று என்று ஓரேன் தகவேகொல் - திணை150:119/2

 TOP
 
  ஓரொன்று (1)
ஒல்காது ஓரொன்று படும் - சிறுபஞ்:25/4

 TOP
 
  ஓரோஒருவர்க்கு (1)
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோஒருவர்க்கு
  ஒல்காது ஓரொன்று படும் - சிறுபஞ்:25/3,4

 TOP
 
  ஓலை (5)
எழுத்து ஓலை பல்லார் முன் நீட்ட விளியா - நாலடி:26 3/3
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் - நாலடி:26 6/3
ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர் - நாலடி:40 7/1
பறி ஓலை மேலொடு கீழா இடையர் - திணை150:113/1
எழுதினான் ஓலை பழுது - பழ:29/4

 TOP
 
  ஓலைக்கு (1)
பச்சை ஓலைக்கு இல்லை ஒலி - நாலடி:26 6/4

 TOP
 
  ஓவா (5)
குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க - நாலடி:35 1/2
ஓவா கணை பாய ஒல்கி எழில் வேழம் - கள40:12/1
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் - குறள்:74 4/1
எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள்:121 5/2
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறா குப்பை - கைந்:49/2

 TOP
 
  ஓவாத (1)
ஓவாத வெம் கானம் சென்றார் - கைந்:20/1

 TOP
 
  ஓவாதாள் (1)
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள் - சிறுபஞ்:40/2

 TOP
 
  ஓவாது (5)
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது
  நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் - நாலடி:4 2/2,3
ஓவாது செல் பாண நீ - ஐந்70:48/4
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் - குறள்:94 3/1
ஓவாது உரைக்கும் உலகு - சிறுபஞ்:44/4
மேவது நன்று மேவாதாரோடு ஓவாது
  கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே - சிறுபஞ்:99/2,3

 TOP
 
  ஓவாதே (4)
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே - நாலடி:7 3/2
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே
  ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் - நாலடி:7 3/2,3
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள்:4 3/1,2
ஓவாதே திங்கட்கு உள - திரி:101/4

 TOP